மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 8 மார்ச், 2017

8.என்னைப் பற்றி நான் - வெங்கட் நாகராஜ்

'என்னைப் பற்றி நான்' என்று இந்த வாரம் தன்னைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார் பயணப் பகிர்வும் போட்டோக்களுமாக கலக்கும் வெங்கட் நாகராஜ் அண்ணன் அவர்கள். இவரின் புகைப்படங்கள் நம்மை ஈர்க்கும் என்றால் பயணப் பகிர்வுகள் நாம் பயணிக்காத இந்திய மாநிலங்களிடையேயும் அங்கிருக்கும் மக்களிடயேயும் நம்மையும் பயணிக்க வைக்கும் என்பதை இவரை வாசிக்கும் அனைவரும் அறிவோம்.

'சந்தித்ததும் சிந்தித்ததும்' என்ற வலைத்தளத்தில் எழுதும் வெங்கட் அண்ணா, பதிவர்கள் மத்தியில் பிரபலம். அனைவரும் விரும்பும் பதிவர். தில்லியில் பணி... வேலைப்பளுவுடன் பதிவும்... அதுவும் அவர் எடுத்த போட்டோக்கள், பயணக் கட்டுரைகள் என வித்தியாசமாய் கொடுத்துக் கொண்டிருப்பவர். இன்னுமொரு கூடுதல் விபரம் என்னவெனில் இதுவரை   இவரின் ஏரிகளின் நகரன் நைனிதால், மத்தியப் பிரதேசம் அழைக்கிறது, தேவ் பூமி - ஹிமாச்சல் பயணக் கட்டுரைகள், பஞ்ச துவாரகா என்ற நான்கு மின்னூல்கள் வெளிவந்திருக்கின்றன.

மேலும் இவரின் மனைவி திருமதி. ஆதி வெங்கட் அவர்கள் 'கோவை2தில்லி' வலைப்பதிவிலும் அன்பு மகள் ரோஷ்ணி 'வெளிச்சக்கீற்றுக்கள்' என்னும் வலைப்பதிவிலும் எழுதுகிறார். ரோஷ்ணி மிக அழகாக படம் வரைவார். ஆக மொத்தம் முக்கனிப் பதிவர்கள் இவர்கள். 

வெங்கட் அண்ணாவைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இனி அவரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.


ண்பர் பரிவை சே. குமார் அவர்கள்என்னைப் பற்றி நான்என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களிடம் எழுதி வாங்கி அவரது தளத்தில் பகிர்ந்து வருகிறார்என்னிடமும் கேட்டிருந்தார்என்னைப் பற்றி நானே எழுதித் தருமாறு கேட்டு, சில நாட்களாகிவிட்டது! உள்பெட்டியின் மூலம் ஒரு முறை நினைவூட்டிய பிறகும் எழுதி அனுப்ப கால தாமதமாகிவிட்டது! இதோ என்னைப் பற்றி நான்…. 

நான்…  நான்….  ஏனோ குணா பட கமல் நான், நான் என்று கடிதம் எழுதும் போது சொல்வது நினைவுக்கு வருகிறது! கூடவே இன்னுமொன்றும்அது பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் வந்த கவிதை

எனக்குள்ளே ஒரு மிருகம் உண்டு
அதை உன்னிடம் சொல்வதெப்போ…..
நாளை
நாளை மறுநாள்!” 

….என்று துவங்கும் அந்தக் கவிதை போல நம் எல்லோர் மனதிற்குள்ளும் மிருக குணம் ஒளிந்து கொண்டிருக்கிறதுமிருக குணம் மட்டுமல்ல, பல மனிதர்களின் மனதில் அழுக்குகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றன.    பெரும்பாலும் முயற்சி செய்து இந்த மிருக குணத்தினை தடைபடுத்தி, மனதுக்குள் பூட்டி வைத்திருந்தாலும், அவை அவ்வப்போது தலைகாட்டாது இருப்பதில்லை. எனக்குள்ளும் இப்படி அழுக்குகள் இருக்கலாம்எனக்குத் தெரிந்த ஒரு அழுக்கு/மிருகம்எனது கோபம்!

பதிவுலகில் எழுதும் பலரும் தங்களைப் பற்றிய செய்திகளை முழுவதுமாக, வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லைஇன்னும் பலர் தங்கள் பெயரைக் கூட வெளியிடாமல் புனைப்பெயரில் தான் எழுத வேண்டியிருக்கிறதுஅவர்களுக்கு அதற்கான பலமான காரணமும் இருக்கிறதுஇப்படி இருக்கையில் பதிவுலகம் மூலம் நட்பில் இருப்பவர்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நண்பர் குமார் அவர்களின் இத்தொடர் வழிவகுக்கிறது

சரி இப்போதைக்கு தலைப்புக்கு வருகிறேன்! அதாவது என்னைப் பற்றி நான்என்ன சொல்வதுஎன்னைப் பற்றிய பல விஷயங்கள் ஏற்கனவே எனது தளத்தில் எழுதி இருக்கிறேன்இருந்தாலும் இங்கே மீண்டும் ஒரு முறை……

பிறந்ததும் வளர்ந்ததும் நிலக்கரி நகரம் நெய்வேலியில்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போதே அரசு வேலைக்காக எழுதிய தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட, கல்லூரிப் படிப்பின் மூன்றாம் ஆண்டு தேர்வுகள் எழுதி முடித்த பத்தாம் நாளே தலைநகர் தில்லி வந்து அரசுப் பணியில் சேர்ந்தாயிற்றுஇதோ இருபத்தி ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டனஏதோ இன்று தான் வந்த மாதிரி இருக்கிறதுஇன்னும் பதினான்கு ஆண்டுகள் [அரசு ஓய்வு பெறும் வயதில் ஏதேனும் மாற்றம் கொண்டு வராமல் இருந்தால்] பணி புரிய வேண்டும்இப்பொழுதே வேலை செய்ய பிடிக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், வேலை செய்து தானே ஆகவேண்டும்……

படித்தது இளங்கலை கணிதம்படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை! இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு இப்படித்தான் அமைகிறதுஎன்னுடைய அலுவலகத்தில் சந்தித்த ஒரு மனிதர் நினைவுக்கு வருகிறார்கணேசன் என்று பெயர் – M.Sc Microbiology படித்தவர்அரசுத் துறையில் வந்து சேர்ந்தார்பிறகு வங்கிப் பணிக்கான தேர்வு எழுதி தமிழகத்தின் ஏதோ ஒரு வங்கியில் காசாளாராகப் பணியில் சேர்ந்தார்அவர் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை!

குடும்பத்தில் என்னையும் சேர்த்து மூன்று பேர்…. மூத்தவர் ஒருவரும் இளையவர் ஒருவரும்! நடுவில் நான்ஒரே மகன்! திருமணம் முடிந்து ஒரே ஒரு அன்பு மகள்….. மனைவி, மகள் இருவருமே வலைத்தளம் வைத்திருப்பவர்கள் என்பதால் இங்கே சொல்ல வேண்டியதில்லை

எந்த வேலையாக இருந்தாலும், ஈடுபாடுடன் செய்வது எனக்குப் பிடித்த விஷயம்பல சமயங்களில் குடும்பத்தினை மறந்து, வெளிநபர்களுக்காகவே பணி செய்திருக்கிறேன்இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டாஇவன் ரொம்ப நல்லவன் என்று சொல்லாமல், என்னைப் பலரும் பயன்படுத்திக் கொண்டது புரியவே பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்படி ஏமாளியாக இருந்திருக்கிறேனே என்று புரிந்து கொண்டபோது நாற்பதைத் தொட்டிருந்தேன்…..   

பெரும்பாலும் எந்த வம்புகளுக்கும் போவதில்லை, நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருப்பதே வழக்கமாகி இருக்கிறதுசெய்யும் வேலை பிடிக்கிறதோ, இல்லையோ, செய்யும் வரை அடுத்தவருக்குத் தொந்தரவு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

சிறு வயதிலேயே வேலைக்கு வந்துவிட்டதால், அதுவும் கல்லூரித் தேர்வு முடிந்த பத்து நாட்களுக்குள் வேலைக்கு வந்துவிட்டதால் மேலே படிக்க முடியவில்லை என்பதில் வருத்தமுண்டு. படிக்க முயற்சி செய்தாலும் அத்தனை முனைப்புடன் இருக்கவில்லை என்று இப்போது தோன்றுகிறது – “கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்என்ற கீதாசாரம் போல, எது நடந்தாலும் அதைப் பற்றி வருத்தப் படுவதில்லைநினைப்பதில்லை. எப்போதுமே Take it easy policy தான்எப்போதாவது ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து எட்டிப் பார்த்து கொஞ்சம் படுத்தினாலும் விரைவில் மீண்டு விடுவது வழக்கம்நன்கு பழகிய ஒரு நண்பர், முதுகில் குத்தியபோது, “சரி அவனுக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான் விடு, என்று இருந்திருக்கிறேன்அப்போது கூட எனது இல்லத்தரசி எல்லாத்தையும் எப்படி உங்களால ஈசியா எடுத்துக்க முடியுது?” என்று தான் கேட்டார்….. 

நம்மால் இயன்றவரை அடுத்தவர்களுக்குத் தொந்தரவில்லாமல் இருக்க வேண்டும், நல்லது செய்யாவிட்டாலும், மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் செய்யக் கூடாது என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்ல முடிந்த அளவில் என்னைப் பற்றி நான் சொல்லி இருக்கிறேன்! சொல்லாத விஷயங்கள், சொல்ல முடியாத விஷயங்களும் உண்டு என்றாலும் சொல்ல முடியாதே!

என்றும் நட்புடன்,
வெங்கட் நாகராஜ்.
தில்லி.
*****

'என்னைப் பற்றி நான்' வாராவாரம் எதிர்பாராத வலை ஆசிரியரைப் பற்றி அறியத் தருகிறது என்பதில் திருப்தியே... அடுத்த வாரம் இவர்தான் என்று அறியாமல் இந்த வாரம் பதியும் போதே அடுத்த வாரத்துக்கான வலை ஆசிரியர் பகிர்வு எனக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி. அதுவும் கேட்டதும் அனுப்பிக் கொடுக்கும் உறவுகளுக்கு உண்மையில் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தளவுக்கு இந்தப் பகிர்வு போகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. எல்லாப் புகழும் உங்களுக்கே.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

35 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்லும் உள்ளம் என்றும் சந்தோசமாக இருக்கும்... திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்...

KILLERGEE Devakottai சொன்னது…

திறந்த புத்தகமாய் மனது வாழ்த்துகள் ஜி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஒவ்வொருவரையும் சுயமதிப்பீடு செய்யவைக்கும் உங்களது முயற்சி பாராட்டத்தக்கது. வெங்கட் நாகராஜ் அவர்களை அறியாத நண்பர்கள் உண்டோ? இன்று அவரைப் பற்றி அவர் மூலமாக அறியவைத்தமைக்கு நன்றி.

Angel சொன்னது…

ஆஹா அருமை ! உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன் :) எனக்கும் அந்த கோபம் சில நேரம் இயலாமையால் சட்டுனு வெளிப்பட்டுவிடும் முன்பு .
.//முதுகில் குத்திய மனிதர்கள் // சில நேரங்கள் நாம்மனிதர்களை வாழ்க்கையை புரிந்து கொள்ளும்போது
ரொம்ப தூரம் டிராவல் செஞ்சு போயிருப்போம் .பெட்டர் திரும்பி பார்க்கமா போவது இப்படிப்பட்ட சூழலில் மட்டும் .
வாழ்த்துக்கள் உங்களுக்கும் பகிர்ந்த சகோதரர் குமாருக்கும் ..

M0HAM3D சொன்னது…

அருமை

Avargal Unmaigal சொன்னது…


மனதில் தோன்றியதை அழகாக சொல்லி இருக்கிறார் வெங்கட்......

Avargal Unmaigal சொன்னது…

ஒரே ஒரு அன்பு மகள் என்று சொன்ன வெங்கட் ஒரே ஒரு அன்பு மனைவி என்று சொல்லாதது ஏன்? ஆதி வெங்க்ட் நோட் திஸ் பாயிண்ட்

அபயாஅருணா சொன்னது…

நல்ல விவரமான பதிவு . படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்பது பெரும்பாலாருக்குக் கிடைப்பதே இல்லை . ம்வாஸ்தவமான பேச்சுதான் .

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஐயா பற்றி அதிகத் தகவல்களைஅறிந்து கொண்டேன்
நன்றி நண்பரே

Angel சொன்னது…

gatrrrrrrr :) உங்க ஆசை விருப்பம் எல்லாமே நல்லா தெரியுது :) பாவம் வெங்கட் ..அங்கேயும் பூரிக்கட்டை பறக்கணும்னு நீங்க தீயா வேலை செய்றாப்ல இருக்கு :)) this is not good :)

ADHI VENKAT சொன்னது…

அது சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை...:))

குழப்பம் வந்து பூரிக்கட்டை பறக்காது மதுரைத் தமிழன் சகோ..:)))

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாய்ப்பளித்த உங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி குமார்.

இப்பதிவிற்கு கருத்தளித்த அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி......

Geetha Sambasivam சொன்னது…

வாழ்த்துகள் வெங்கட்! மிக அருமையாகத் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இவரின் பதிவுக்கு நாம் சொல்லும் கருத்திற்கும் பதில் சொல்கையில் மிக நாசுக்காகத் தன் கருத்தைச் பதிலாகச் சொல்லிப் போவார். எந்தவிதமான வாத, விவாதங்களிலும் ஈடுபட மாட்டார்! மொத்தத்தில் diplomatic personality! :D பலமுறை இதைப் பின்பற்ற வேண்டும் என நினைத்தும் என்னால் முடியாமல் போய்விடும்! ஹிஹிஹி, இங்கேயும் அதே கதை தான்! :))))

Ajai Sunilkar Joseph சொன்னது…

அருமையான பதிவு...!!!!

ஸ்ரீராம். சொன்னது…

வெங்கட் பற்றித் தெரிந்த கதைதான் நிறைய! தெரியாதது அவருக்கு இன்னும் 16 ஆண்டுகள் பணிக்காலம் இருக்கிறது என்பது! வேலையின் அலுப்பு எனக்கும் இருக்கிறது! அவ்வப்போது ஒவ்வொரு ஊராகச் சுற்றி ரிலாக்ஸ் ஆகும் வெங்கட்டுக்கே அலுப்பு இருந்தால் கி.த எனக்கு இன்னும் அதிகம்!!!!

G.M Balasubramaniam சொன்னது…

வெங்கட்டின் பதிவுகளில் இருந்து அவரைத் தெரிந்து கொண்டதுவிட அதிகம் இல்லை. வெரி டிப்லொமாடிக் பெர்சன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அண்ணாவுக்கு கருத்துச் சொன்ன இருவருக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Geetha Sambasivam சொன்னது…

மிகச் சின்ன வயசில் வேலைக்குப் போகிறவர்களுக்கே உள்ள மனோநிலை இதுனு நினைக்கிறேன். என் கணவர், தம்பி இருவருக்கும் இப்படித் தான் அலுப்பு வரும். ஆனால் என் கணவர் பணிக்காலம் முழுமையும் நிறைவு செய்தார். தம்பி 50 வயது ஆவதற்குள்ளாக விருப்பப் பணி ஓய்வு பெற்று விட்டார்! :)

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
ஒவ்வொரு பதிலும் மிகத் திருப்பதியாக உள்ளது தொடருங்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

M0HAM3D சொன்னது…

வணக்கம்

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

தமிழ் வலையுலகிற்கு கிடைத்த ஒரு சிறந்த வலைப்பதிவர் நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்கள். இங்கே அவர் தனது கோபம் பற்றிக் குறிப்பிட்டார்; ஆனால் அவரது கோபத்தை நேரிலோ அல்லது அவரது எழுத்துக்களிலோ கண்டதில்லை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வெங்கட்ஜியைப் பற்றி ஓரளவு தெரியும் என்றாலும் தன்னைப் பற்றி அருமையாகச்சொல்லியிருக்கிறார்...

கீதா:ஜி எனக்கும் அந்தக் கெட்ட அரக்கன் கோபம் என்பவன் இருக்கிறான்...ஆனால் வெளியில் தெரியாமல்!!ஹஹஹ்...