தேர்தல் வருது...
தேர்தல் வருது...
சேதி தெரியுமா..?
தெய்வானை சேதி தெரியுமா...?
தேடி வருவாங்க...
தெய்வானை ஓடி வருவாங்க...
கூடி வருவாங்க
தெய்வானை நாடி வருவாங்க...
அம்மா தாயின்னு
கால்ல விழுவாங்க...
நம்மகூட களையும்
எடுப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
குடிசைக்குள்ளாற
வந்து குந்தி
கஞ்சி குடிப்பாங்க...
நம்மகூட கல்லும்
சுமப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
பக்கத்துல உக்காந்து
பாசத்தோடு
பேசுவாங்க...
நம்மகூட பல்லாங்குழியும்
ஆடுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
ரோடு... தண்ணி...
தேடிவரும்பாங்க...
உன்னை தெய்வம்ன்னு
சொல்லுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
இலவசம் தருவாங்க...
கைச் செலவுக்கு
காசும் கொடுப்பாங்க...
கௌரவம் பாக்காம
காலில் விழுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
எம்.எல்.ஏ.வும் எம்.பியும்
சேர்ந்து வருவாங்க...
நிறைய சேதி
சொல்லுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
கோரிக்கை எழுதி
கேட்பாங்க...
கொண்டு போய்
குப்பைத் தொட்டியில்
போடுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
பல்லை இளிப்பாங்க
பசங்க குண்டியும்
கழுவுவாங்க...
பாலுக்கு அழும்
குழந்தையை தோளில்
சுமப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!
பணத்துக்கும்
இலவசத்துக்கும்
மயங்கிக் கிடந்தது
போதும் தெய்வானை
நாம் மதி கெட்டதும்
போதும் தெய்வானை..!
அடிமையாய் கிடந்து
போதும் தெய்வானை...
அடங்கிக் கிடந்ததும்
போதும் தெய்வானை...
பொய்யர்களை விரட்ட
பொதுவாய் சிந்திப்போம்
வாடி தெய்வானை...
வேலு நாச்சியாராய்
வீறு கொண்டு
விரட்டியடிப்போம்
வாடி தெய்வானை....
'பரிவை' சே.குமார்
18 எண்ணங்கள்:
சாட்டையடி.. ஆனாலும், மக்களுக்கு உரைக்க வேண்டுமே!?..
அடிமையாய் கிடந்து
போதும் தெய்வானை...
அடங்கிக் கிடந்ததும்
போதும் தெய்வானை...////
அருமை குமார்...
சிறப்பான விஷயம் சொல்லும் கவிதை. பாராட்டுகள்.
அற்புதமான கவிதை! தேர்தல் நேரத்தில் சிந்திக்க வைக்கும் கவிதை. அரசியல்வாதிகளை தோலுரித்துக்காட்டிய கவிதை. என் முகநூளில் பகிர்ந்து கொள்கிறேன்.
த ம 3
அற்புதமான கவிதை! தேர்தல் நேரத்தில் சிந்திக்க வைக்கும் கவிதை. அரசியல்வாதிகளை தோலுரித்துக்காட்டிய கவிதை. என் முகநூலில் பகிர்ந்து கொள்கிறேன்.
த ம 3
அழகான அற்புதமான கவிதை குமார்.
தெய்வானை இதை கண்டிப்பாக படித்தால் ஏமாறமாட்டாள்.....
அருமையான சவுக்கடி வார்த்தைகள் நண்பரே உரைக்க வேண்டியவர்களுக்கு......
அருமை. குமார். தெய்வானை தெளிவாக இருக்கிறாள். ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறாள் எல்லாக் கட்சியிடமிருந்தும்.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செந்தில் சார்...
தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தலைவரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சார்...
ரொம்பத் தெளிவா பணத்தை வாங்கிட்டு நல்லவங்களுக்கு ஓட்டுப் போடட்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அடிமையாய் கிடந்து
போதும் தெய்வானை...
அடங்கிக் கிடந்ததும்
போதும் தெய்வானை...// அருமை அருமை!!!! குமார்...சரி இது நம்ம தெய்வானைங்களுக்கு மட்டுமா இல்லை முருகன்களுக்கும்தானே!!! ம்ம் படிச்சு ஏமாறாம இருந்தா சரிதான்...தேர்தல் சமயத்தில் தேராய் வந்திருக்கும் கவிதையை வடம் இழுப்பது போல் எல்லோரும் சேர்ந்து இழுத்தால் நல்லது நடக்காதா என்ற ஏக்கம் வருகின்றது...
கருத்துரையிடுக