பேத்தி வைத்த மருதாணியில்
சிவந்து சிரிக்கிறது
நீ வைத்து விட்ட
மருதாணி நினைவுகள்...
மருதாணி இலை பறித்து
கொட்டைப்பாக்கு தானெடுத்து
ஏழு வீட்டு கூரையும்
எதுத்த வீட்டு கோழிக் கழிவுமாய்...
எங்க வீடு ஓடிவந்து
அம்மியில நீ அரைக்க...
மருதாணி அரைக்கிறேன்னு
மனசை அரைச்சிப் போவியே...
வேண்டான்னு மறுத்தாலும்
விடாமல் வைத்துவிட்டு
மறக்காம மறுநாளு
கைபிடித்துப் பாப்பியே...
மருதாணி சிவப்பான
விரல்கள் வீணை மீட்ட
கண்ணுக்குள் காதல் காட்டி
கள்ளச் சிரிப்பு சிரிப்பாயே...
தீபாவளி, பொங்கல்ன்னு
எல்லாத்துக்கும் நீ அரைச்சே...
ரசிச்சு வச்சிக்கிட்டு
அழகி நீ அலையவிட்டே...
பேத்தி வச்ச மருதாணி
அழகா சிவந்திருக்கு...
எனக்கு மட்டும் உன் முகம்
அதுல தெரியுதடி...
நீ பறிச்ச மருதாணிச்செடி
நின்ன இடம் தெரியலையே...
வச்சிவிட்ட கையழகு
மனசை விட்டுப் போகலையே...
வீட்டுலயே வளத்தாலும்
யாரு இப்ப வைக்கிறாக...
நம்மூரும்கூட இப்ப
மெஹந்திக்கு மாறிடிச்சு..
மருதாணி மறைஞ்சாலும்
மறையாம நீ இருக்கே...
அழுதுகிட்டு நீ போன
பாதை மறக்கலையே...
பாவி மனசு இப்போ
வாழத்தான் பழகிருச்சு...
கட்டையில போகும் வரை
கலையாது உன் நினைவு...
-'பரிவை' சே.குமார்.
26 எண்ணங்கள்:
வணக்கம்
அண்ணா.
அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்.
தங்களுக்கு கட்டுரைப்போட்டிக்கான சான்றிதழ் வந்ததா....
த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை. மிக அழகு கவிதை.
அழகு....
மருதாணி பற்றிய கவிதை அற்புதம்.
நீ பறிச்ச மருதாணிச்செடி
நின்ன இடம் தெரியலையே...
வச்சிவிட்ட கையழகு
மனசை விட்டுப் போகலையே...
வீட்டுலயே வளத்தாலும்
யாரு இப்ப வைக்கிறாக...
நம்மூரும்கூட இப்ப
மெஹந்திக்கு மாறிடிச்சு..
மருதாணி மறைஞ்சாலும்
மறையாம நீ இருக்கே...
அழுதுகிட்டு நீ போன
பாதை மறக்கலையே...
பாவி மனசு இப்போ
வாழத்தான் பழகிருச்சு...
கட்டையில போகும் வரை
கலையாது உன் நினைவு...//
மருதாணிக் கனவுகள் இனிக்கின்றது!
மருதாணிக்கு தாவிய மனசின் வரிகள்.
ஒவ்வொரு வரியும் அருமை! வாழ்த்துக்கள்!
மருதாணி வைத்த கையில் அதை அழித்த அன்று சில்லென்ற பழைய சாதம் கையில் போடும்படிச் சொல்லிச் சாப்பிட்டால்! அந்த மணம்! ஆஹா! அதைவிட வேறு சொர்க்கம் உண்டானு கேட்கும்.
கட்டையில போகும் வரை
கலையாது உன் நினைவு...
அருமை அருமை நண்பரே
நன்றி
தம +1
வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அது சிறுகதைப் போட்டிதானே? வந்து விட்டது... அது குறித்து ஒரு பகிர்வில் சொல்லியிருந்தேனே...
பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.
பரிசை அனுப்பிய தங்களுக்கு நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மருதாணி மலரும் நினைவுகளை கிளருகிறது! பள்ளி வயதில் அம்மா வைத்துவிடுவார்! அருமையான கவிதை அண்ணா!
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தங்கை...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
// கட்டையில போகும் வரை
கலையாது உன் நினைவு...//
எப்படிக் கலையும்?
அருமை
தம7
கவிதை முழுவதும் மருதாணி மணக்கிறது!
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மருதாணி நினைவுகளை பின்னோக்கி செல்லவைத்தது...எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன மருதாணியை ஆசையாசையாக வைத்து....ஊருக்கு போகும் போது வைக்க வேண்டும். அருமையான கவிதை சகோ.
தம +1
மருதாணி நினைவுகள் என்றுமே மறக்கமுடியாதவை. இன்னும்கூட நான் மருதாணி வைத்துக்கொள்கிறேன். பலர் கிண்டல் செய்வதுண்டு. மருதாணி வைத்திருக்கும்போது மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு சுகத்தை நான் உணர்கின்றேன்.
கருத்துரையிடுக