மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 3 ஜூலை, 2015

செந்தூர் அழகா...1


ம்ம குடந்தை சரவணன் அண்ணன் அவர்கள் தனது குடந்தையூர் தளத்தில் திருச்செந்தூர் சென்று அழகன் முருகனைத் தரிசித்து வந்த அனுபவத்தை அழகான பதிவாக்கி இருந்தார். அதைப் பார்(டி)த்ததும் நம்மளும் செந்தூர் முருகனை தரிசித்து வந்த அனுபவத்தை எழுதலாமே என்று நினைத்ததில் தொன்றியதே இந்தப் பகிர்வு...

சென்ற வருடம் விடுமுறைக்குச் சென்ற போதே மனைவி பழனிக்கு கூட்டிப் போகச் சொன்னார். சில காரணங்களால் தள்ளிப் போக, நீங்க ஆறு வருசம் நடந்தே போயி முருகனைப் பார்த்துவிட்டதால் எங்களைக் கூட்டிப் போக மாட்டேங்கிறீங்க என்றார் வருத்தமாய். சரி இந்த வருடம் போகலாம் என்று தள்ளி வைத்து சமாதப்படுத்திவிட்டு அபுதாபிக்கு வந்தாச்சு.

இந்த வருடம் ஊருக்குப் போனதும் தம்பிக்கு முருகன் கோவில்ல மொட்டை போடணும் பழனிக்கு போகலாங்க என்று சொல்லிக் கொண்டிருந்தார். நானும் பழனி பொயிட்டு அப்படியே திண்டுக்கல் வந்து நம்ம தனபாலன் அண்ணன் அவர்களைப் பார்த்துட்டு வந்துடலாம்ன்னு கணக்குப் போட்டேன். திருவிழாக்கள், திருமணங்கள், குழந்தைகளின் பள்ளி மாற்றம் என தினம் ஒன்றாய் தொடர, பழனி போகும் திட்டம் இந்த முறையும் அமையாது போல என்று நினைத்த போது மனைவி எதாவது ஒரு முருகனுக்குத்தான் மொட்டை போடணும் இங்க இருக்க மலைக்கோயில் முருகனுக்கே போட்டு விடுறேன் என்று கோபமாகச் சொல்லிவிட்டார்.

இந்த வருடம் வந்து எங்கும் போகவில்லை, குலதெய்வம் கோயிலுக்கு கூட போகவில்லை... வீட்டுக்குள்ளே பிள்ளைகளோட இருந்தா சரியாப் போச்சா என்று அம்மணி ஆரம்பிக்க... ஊருக்கு வருவதற்கு ஒரு வாரம் முன்னர் சரி இனியும் செல்லவில்லை என்றால் எப்படி... எங்கு போகலாம்... என்று யோசித்து இதுவரை பார்க்காத திருச்செந்தூர் முருகனையே போய் தரிச்சிக்கலாம். அடுத்த முறை பழனி செல்லலாம் என்று தீர்மானித்தோம். திருச்செந்தூர் என்றதும் அம்மா என்னிடம் ஒருமுறை திருச்செந்தூர் கூட்டிக்கிட்டுப் போடா என்று சொன்னது நினைவில் ஆடியது. என்னிடம் கேட்டு நான் கூட்டிச் செல்லவில்லை (நானே போகவில்லை) என்றாலும் இரண்டு மூன்று முறை அம்மா போய் வந்துவிட்டார். இருப்பினும் அவரையும் அழைத்துச் செல்லலாம் என்றபோது அப்படியே நம்ம குடும்பத்தில் எல்லாரையும் கூட்டிப் போகலாம் என மனைவி சொன்னார்.


உடனே முடிவெடுத்து அப்பா, அம்மாவைக் கேட்டு சிங்கையில் இருந்து வந்திருந்த சின்ன அண்ணனிடம் பேசி, பெரிய அண்ணி, சின்ன அண்ணன் குடும்பம், பெரியக்கா, சின்னக்கா, நடு அக்கா மகள், தம்பி மனைவி, மாமியார், மனைவியின் தங்கை, எல்லாருடைய குழந்தைகள் என 20 பேருக்கு மேல் சந்தோஷமாக முருகனை தரிசிக்கச் செல்வது என முடிவெடுத்து அதற்கான வேலைகளையும் பார்த்து உறவினர் ஒருவரின் வேனையும் ஏற்பாடு செய்தோம்.

அதன்படி திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கெல்லாம் தேவகோட்டையில் இருந்து வேன் எங்கள் ஊருக்குச் சென்று அப்பா, அம்மா, பெரியண்ணி, குழந்தைகள், ஊருக்கு வந்திருந்த சின்ன அக்கா என எல்லாரையும் ஏற்றி, வரும் வழியில் தம்பி மனைவி, சின்ன அண்ணன் குடும்பம், எங்கள் குடும்பம், அக்கா மகள், பெரியக்காவும் அக்கா பேரனும் என ஒவ்வொரு இடமாக ஆள் ஏற்றி விடியலுக்கு முன்னே தேவகோட்டையில் இருந்து இராமநாதபுரம் நோக்கிப் பயணித்தது.

காலை, மதிய சாப்பாட்டுக்கு இட்லி, சட்னி, புளியோதரை, தயிர்சாதம், மண்டி என சமைத்து எடுத்துச் சென்றுவிட்டோம். தண்ணீரும் இரண்டு பெரிய கேனை வாங்கி வைத்துவிட்டோம். காபியும் இரண்டு பிளாஸ்க்கில் போட்டு எடுத்துச் சென்றுவிட்டோம். வேனுக்குள் தெய்வீக ராகங்கள் ஒலிக்க, எங்கள் பயணம் விடியும் முன்னர் இராமநாதபுரத்தை நெருங்கியது. அங்கிருந்து ராமேஸ்வரம் தூத்துக்குடி நெடுஞ்சாலையில் திருச்செந்தூர் நோக்கிப் பயணிக்கவும் விடியும் காலையின் அழகை ரசித்தபடி பயணப்பட, ரோட்டில் வந்த கார்களையும் லாரிகளையும் பார்த்த பயலுக எல்லாம் வேனின் சந்தோஷத்தில் முன்பக்கம் வந்து நின்று ரசிக்க ஆரம்பித்தார்கள்.


ஏர்வாடிக்கு அருகில் வேன் சென்றபோது ரோட்டோரத்தில் நிறுத்தி காபி சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பினோம். வேனில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கவும் படம் போடுங்கள் என்று சில குரல்கள்... சிகரம் தொடு படத்தை ஓடவிட,  இடையில் எங்கும் நிறுத்தாமல் பயணப்பட்ட வேன் ஒன்பது மணிக்கு மேல் திருச்செந்தூர் கடலோரத்தை அடைந்தது.

பசி வயிற்றைக் கிள்ள வேனில் வைத்து இட்லியைச் சாப்பிட்டுவிட்டு முருகனின் கோபுரத்தை ரசித்தபடி விஷாலுக்கு மொட்டை போட்டுவிட்டு கடலுக்குச் சென்று குளித்து நாழிக் கிணற்றில் நிராடி அழகன்  முருகனை தரிசிக்கலாம் என்று முடிவு செய்து முடிகாணிக்கைக்கான சீட்டு வாங்க சென்றால் விஷால் முரண்டு பிடிக்க ஆரம்பித்தான்... மொட்டை அடிக்க அவன் கேட்டது என்ன? அறியக் காத்திருங்கள் இதன் தொடர்ச்சியாய் வரும் மற்றொரு பகிர்வுக்காக...
-'பரிவை' சே.குமார்.

23 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

இனிய பயணம்.

KILLERGEE Devakottai சொன்னது…

Arumai...

சென்னை பித்தன் சொன்னது…

காத்திருக்கிறேன்

சாரதா சமையல் சொன்னது…

திருச்செந்தூர் பதிவு அருமையாக இருக்கு. திருச்செந்தூர் எங்கள் ஊரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவு தான். நாங்கள் குடும்பத்துடன் அடிக்கடி செல்வோம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய பயணம்...

காத்திருக்கிறேன்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

காத்திருக்கிறேன் நண்பரே
தம4

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
முருகனை தரிசனம் செய்தது போல ஒரு உணர்வு... பகிர்வுக்கு நன்றி த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

துபாய் ராஜா சொன்னது…

பக்திப் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

Manimaran சொன்னது…


தெய்வீக பயணம். வாழ்த்துக்கள் .தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பயணங்கள் என்றுமே இனிமையானவை... தொடர்ந்து பயணிப்போம்....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தேவகோட்டை போயாச்சா?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

r.v.saravanan சொன்னது…

கோவில்களுக்கு செல்வது என்பது ஒரு இனம் புரியாத அமைதியை தரும் அதுவும் குடும்பத்துடன் என்றால் இன்னும் சுவாரசியம் வாழ்த்துக்கள்

ஊமைக்கனவுகள் சொன்னது…

நானும் சென்றிருக்கிறேன் என்றாலும் தங்களோடு இப்போது .........ஒரு இனிய அனுபவம்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

என்ன ஒரு இனிய அனுபவம்...தமிழ் கடவுள் அழகன் முருகன் நாங்கள் வணங்கும் தெய்வம்...அந்தச்க் செந்தூரான்....நாங்கள் இருவருமே சென்றிருக்கின்றோம்....

கீதா: எனது மகனுக்கும் இரண்டாவது மொட்டை திருச்செந்தூரில்தான் போட்டோம். உங்கள் பதிவு உங்கள் மகனின் மொட்டை எனது நினைவுகளை மீட்டது....பகிர்வுக்கு மிக்க நன்றி