மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 6 மார்ச், 2015

மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்

கோதரர் ரூபன் மற்றும் திரு. யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய சிறுகதை மூன்றாம் பரிசுக்குரிய கதையாக தேர்வாகியிருக்கிறது. அடிக்கடி போட்டிகள் நடத்தினாலும் மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள். நடுவர்களாக சிறப்பாக பணியாற்றிய திரு. ரமணி ஐயா, திரு.புவனேந்திரன், திண்டுக்கல் தனபாலன் அண்ணா ஆகியோருக்கும், கில்லர்ஜி அண்ணன், திரு. அ.பாண்டியன், திரு. இராஜமுகந்தன், திருமதி. அ,இனியா உள்ளிட்ட ஆலோசனைக் குழுவுக்கும் வாழ்த்துக்கள். மேலும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


சென்றவார பாக்யா மக்கள் மனசு பகுதியில் எனது கருத்து இடம் பெற்றுள்ளது. பத்திரிக்கையில் தொடர்ந்து நான்காவது வாரமாக எனது எழுத்து இடம் பிடித்திருக்கிறது. மக்கள் மனசு பகுதியை சிறப்பாகத் தொகுத்துவரும் எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு வாழ்த்துக்கள். 



மீண்டும் அபுதாபிக்கு வந்தாச்சு... அலைனில் இருக்கும் போது ஏழு மணிக்கு அலுவலகம் சென்றால் மூணு மணிக்கெல்லாம் அறைக்குத் திரும்பிவிடுவேன். நிறைய நேரமிருந்தது. இங்கு இந்த இரண்டு மாதத்தில் ஒரு பாகிஸ்தானியும் மலையாளியும் சேர்ந்து எல்லாத்தையும் மாற்றி வைத்துவிட்டார்கள். இங்கும் காலை 8 மணி முதல் 5 மணி வேலை செய்கிறோம் என்று சொல்லித் தொலைத்து விட்டார்கள். அங்கிருந்து வந்த முதல் நாள் எப்பவும் போல் 7 மணிக்குச் சென்றால் எவனையும் காணோம். நம்ம பயலுக 8 மணிக்கு மேல் வர, எகிப்துக்காரனுங்க எல்லாம் 9 மணிக்குத்தான் வந்தானுங்க. வந்ததும் அவனிடம் கேட்டால் இங்கு 8 மணி முதல் 5 மணி வரை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றான். மதியம் சாப்பிடப் போனால் என்றதும் 6 மணி வரைக்கும் இருக்கணும் என்றான். எனக்கும் அவனுக்கும் சண்டை... முடிஞ்சதைப் பாருடா என்று சொல்லிவிட, பின்னர் மெதுவாக சமாதானம் ஆனான். 

அவனது பணிகளையும் கடந்த இரண்டு வருடமாக நான் செய்வதால் இப்போது என்னிடம் மட்டும் கொஞ்சம் குழைந்து பேசுவான். சென்ற வாரத்தில் ஒரு நாள் சான்றிதழ் பணிக்காக அபுதாபி கல்வி அமைச்சகம் சென்று வந்தேன். எங்கே போனாய் என்றான். இண்டர்வியூ போனேன்... தேர்வாகிவிட்டேன். வேலை ஓகேதான்... கத்தாராச்சும் சவுதியாச்சும் போகச் சொல்றான் என்றதும் ஏன் போறே... அங்கெல்லாம் செலவு அதிகம்... அப்படியிப்படின்னு புலம்பித் தீர்த்துட்டான். எனக்கு மேலே இருக்கும் எகிப்துக்காரன் கொஞ்சம் நல்லவன்... கொஞ்சம் கெட்டவன்... சில நேரம் அவனுக்காக பரிவு தோணும்.. சில நேரம் நம்ம பிறவிக்குணம் அவனுக்கிட்ட எகிறும். உடனே உனக்கு ரொம்பக் கோபம் வருது. குறைச்சிக்க என்று வந்து தடவிக் கொடுப்பான். இப்படித்தான் ஓடிக்கிட்டு இருக்கு.

டந்த ஒரு வாரகாலமாக விஷாலுக்கு காய்ச்சல்... மதுரை வந்திருக்கிறார்கள்... மருத்துவமனையில் காட்டியும் 101-ல் இருந்து குறையவேயில்லை. நேற்று மருத்துவமனையில் சேர்த்தாச்சு. மருத்துவ பரிசோதனையில் டைபாயிடு காய்ச்சல் என்பது உறுதியாக நேற்று முதல் மருத்துவமனையில் குளூக்கோஸ் ஏறி வருகிறது. மருந்துகளை எல்லாம் நரம்பில் செலுத்தி வருகிறார்கள். அவனுக்கு முடியாமல் வந்ததில் இருந்து வலைப்பக்கமும் முகநூல் பக்கமும் அதிகம் வரவில்லை. இன்று காலை என்னிடம் பேசினான். இப்போது பரவாயில்லை.

ஜீத்துக்கு ஆண் குழந்தை பிறந்த அன்று சகோதரர் ஒருவர் போன் பண்ணி பேசினார்... நீங்க தல ரசிகருல்ல ட்ரீட் கொடுங்க என்றார். ஒன்றும் சொல்லாமல் நான் எதுக்கு ட்ரீட் தரணுமின்னு சில வார்த்தைகளைச் சொல்லிட்டு விட்டுட்டேன். அன்று மாலை ஒரு நண்பர் போன் பண்ணி ட்ரீட் எப்போ என்றார். எதுக்கு என்றேன்.... என்ன உங்க தலக்கு பிள்ளை பிறந்திருக்கு... அதுவும் ஆம்பளைப் பிள்ளை... பெரிய ட்ரீட்டாக் கொடுங்க என்றார். என்னோட பிள்ளைங்க ஸ்கூல் போகுதுங்க... அதுகளுக்கு இப்போ பிறந்தநாளும் இல்லையே என்றேன் சிரிக்காமல்... நீங்க தலயோட தீவிர ரசிகர்... அவரோட படத்துக்குத்தான் போவீங்க... அப்ப குழந்தை பிறந்ததுக்கு டீரீட் கொடுக்கலைன்னா எப்படி என வசனம் பேசினார்... ஏலே... நீ திங்கணுமின்னா வா... போயி தின்போம்... எவனுக்கோ பிள்ளை பொறந்துக்கு எனக்கிட்ட ட்ரீட் கேக்குறே... கொய்யால... என்னவோ எனக்குப் பிள்ளை பிறந்த மாதிரின்னு கொஞ்சம் சப்தமாகப் இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை இறக்கவும்... ஐயா... எனக்கு ட்ரீட்டே வேண்டாம்.. தெரியாமக் கேட்டுட்டேன்... ஆளை விடுங்க சாமி என்று போனை வைத்தவர்தான் அதன் பிறகு கூப்பிடவேயில்லை.


காக்கிச் சட்டை படம் பார்த்தேன். இணையத்தில் வந்த நல்லாயிருக்கு என்ற விமர்சனங்கள்தான் படத்தைப் பார்க்க வைத்தது. விறுவிறுப்பு இல்லாத கதை... நர்ஸாக இருக்கும் நாயகி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். இந்தளவுக்கு விவரமான நர்ஸை எந்தப் படத்திலும் பார்த்ததில்லை. சிவகார்த்திகேயன் இந்தக் கெட்டப்பு, இந்தப் பேச்சு, இந்த நடனம் என எல்லாவற்றையும் எப்போ விட்டொழித்து தன்னாலும் இன்னும் சிறப்பாக நடிக்க முடியும் என்று காட்டப் போகிறாரோ தெரியவில்லை. அதிலும் சட்டையில் பட்டன் போடாமல் பாடலுக்கு ஆடுவதை நிறுத்தவே மாட்டாரு போல... முடியலை... விஜய் சேதுபதி மிகச் சிறந்த நடிகன்... ஆனால் எல்லோரும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது சிவகார்த்திகேயனைத்தான் என்பது வருத்தமான விஷயம் என்பதை இந்தப் படம் பார்க்கும் போது உணர்ந்தேன்.  என்னை அறிந்தால்படத்தின் கதையை ஒத்த கதையாக இருந்தாலும் அதில் இருந்த ஒரு விறுவிறுப்பு இதில் இல்லை. சிவகார்த்திகேயன் தன்னை மாற்றிக் கொண்டால் நிலையான இடத்தைப் பிடிக்கலாம்.

நான் மிகவும் ரசிக்கும் பாடல்... உங்கள் ரசனைக்காக...

-'பரிவை' சே.குமார்.

43 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

விஷால் நலமாக வேண்டுகின்றேன். கவலை வேண்டாம்..

UmayalGayathri சொன்னது…

விஷாலுக்கு விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். நாம் இங்கும் குழந்தைகள் அங்கும் எனும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக,தவிப்பாக இருக்கும். சரியாகி விடும் சகோ.

Unknown சொன்னது…

பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்!

Yarlpavanan சொன்னது…

சிறந்த நடுவர்களின் தீர்ப்புச் சரியானதே!
ஏனெனில்,
தங்கள் கதை தரமானது
அதற்கு
தங்கள் பதிவுகள் சாட்சியாக மின்னுகிறதே!
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்
பாக்கியா இதழில் தங்கள் பதிவுகள் வெளியானதும்
தங்கள் தகுதிக்குச் சான்றே!
மேலும்
பல வெற்றிகளைக் குவித்து
உலகில் சிறந்த பதிவராக மின்ன
எனது வாழ்த்துகள்!

Yarlpavanan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஊமைக்கனவுகள் சொன்னது…

விஷால் நலமடைய என் வேண்டுதல்கள்.
தம 3

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விஷால் பூரண குணமடைய எனது பிரார்த்தனைகளும்......

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா.

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் மற்றத் தகவல்களையும் படித்தேன் அதில் விஷால் குணமடைய வேண்டுகிறேன் த.ம5

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

RAMA RAVI (RAMVI) சொன்னது…

குழந்தை விஷால் சீக்கிரமே குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விஷால் விரைவில் நலமடைவார்கள்... கவலை வேண்டாம்...

நண்பருக்கு இன்னும் கொஞ்சம் "ட்ரீட்" கொடுத்திருக்க வேண்டும்...

ஸ்ரீராம். சொன்னது…

போட்டியில் வென்றதற்கு வாழ்த்துகள் குமார்.

பாக்யாவில் இடம் பெற்றிருப்பதற்கும் வாழ்த்துகள்.

மகன் சீக்கிரம் குணமாகப் பிரார்த்தனைகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மகன் உடல்நலம் தேற பிரார்த்தனைகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே
மகன் நலம் பெறுவார் கவலை வேண்டாம்
தம +1

சாரதா சமையல் சொன்னது…

விஷால் பூரண குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை பண்ணிக்கொள்கிறேன். கவலை வேண்டாம் குமார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
விஷால் இப்போது நலமாக இருக்கிறான்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா..
விஷால் தற்போது நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாவாணன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
விஷால் தற்போது நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
விஷால் தற்போது நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்..
விஷால் தற்போது நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா..
விஷால் தற்போது நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா..
விஷால் தற்போது நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
விஷால் தற்போது நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
விஷால் தற்போது நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா..
விஷால் தற்போது நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா..
விஷால் தற்போது நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

KILLERGEE Devakottai சொன்னது…

விஷால் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் நண்பரே..

துபாய் ராஜா சொன்னது…

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள். குழந்தை உடல்நிலை விரைவில் பூரண குணமடைய வேண்டுதல்கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

மகன் விரைவில் பூரண நலன் பெறப் பிரார்த்தனைகள்.

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பாராட்டுகள். பத்திரிகையில் தொடர்ந்து தங்கள் கருத்துகள் இடம் பெற வாழ்த்துகள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சிறுகதைப் போட்டியில் உங்கள் கதை நிச்சயம் இருக்கும் என்று நினைத்தேன் வாழ்த்துக்கள் குமார்.பாக்யாவில் வெளியான எழுத்துக்கும் பாராட்டுக்கள்.

கோமதி அரசு சொன்னது…

சிறுகதை போட்டியில் மூன்றாவது பரிசு வென்றதற்கு வாழ்த்துக்கள்.பாக்யாவில் உங்கள் கருத்துக்கள் தொடர்ந்து இடபெறுவது மகிழ்ச்சி. செல்வன் விஷால் நலமடைந்து விட்டான் எனபது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் பாடல் பகிர்வு அருமை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

போட்டியில் வென்றதற்கும், பாக்யா இதழில் தங்கள் கருத்து வெளியானதற்கும் வாழ்த்துக்கள்!

விஷாலுக்குவிரைவில் குணமாக எங்கள் பிரார்த்தனைகள்! .இப்போது டைஃபாய்ட், ஸ்வைன் ஃப்ளூ பரவலாக இருக்கிறது இங்கு.

ம்ம்தல - அந்தப் பாட்டு அருமை....கேட்டிருக்கின்றோம் இப்போதும் கேட்கின்றோம்...பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே.!

அனைத்தும் படித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். தற்சமயம் தங்களது மகன் நலமா.? அவர் உடல் நலம் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சிறுகதை போட்டியில் பரிசு பெற்றமைக்கும். பாக்யா இதழில் தங்கள் கருத்தை வெளியிட்டு தங்களை சிறப்பித்ததற்கும், என் வாழ்த்துக்கள்

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா..
இப்போ நலம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராஜா...
இப்போ நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா..
இப்போ நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
விஷால் இப்போது நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.,

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
விஷால் இப்போது நலமாக இருக்கிறான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.,

balaamagi சொன்னது…

தங்கள் தளம் முதல் வருகை இது. மகிழ்ச்சியும், பதற்றமும் கலந்து. போட்டியில் வென்றது, குழந்தையின் உடல் நிலை. வாழ்த்துகள். குழந்தை நலம் பெநுவான். கவலை வேண்டாம். கவலையின்றி பணியாற்றுங்கள்.