மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 31 மார்ச், 2015கூடிழந்த பறவையாய்...


குளத்தங்கரை படித்துறையும்...
குளுகுளுக்கும் வேப்பமரமும்...
இன்றும் சுமக்கின்றன
நம் காதலின் சுவடுகளை..!

கருப்பர் கோவில் பூவரசு
கண்ணியமாய் சுமக்கிறது
மடி சாய்ந்த பொழுதுகளின்
நினைவுகளை..!

ஆவாரம் செடி தாலாட்டும்
ஒற்றையடிப் பாதை..
இன்னும் இசைக்கிறது
நீயும் நானும் கைகோர்த்து
நடந்த நாட்களின்
சந்தோஷங்களை..!

பிள்ளைகள் ஆடும்
ஆலமர விழுதுகள்
ஆராவாரமாய் சுமக்கின்றன
முதல் முத்தத்தின் ஸ்பரிசத்தை..!

கடக்கும் ஒவ்வொன்றும்
கடத்தாமல் வைத்திருக்கின்றன
நம் காதலின் தாக்கத்தை..!

நீயும் நானும் கடத்தி விட்டோம்...
காதலின் வாழ்க்கையை
காலத்தின் பாதையில்..!

எப்போதாவது சந்திக்கிறோம்...
எதாவது பேசுகிறோம்...
இதயம் மறந்த புன்னகையோடு..!

சிநேகமாய் சிரிக்கிறார்கள்
இதயத்தில் இடை புகுந்தவர்கள்...
கூடி விளையாடுகின்றன
வாழ்வின் வசந்தங்கள்..!

எல்லாம் சந்தோஷமாக...
எல்லாரும் சந்தோஷமாக...
ஏனோ மனசு மட்டும்
தவிக்கிறது...
கூடிழந்த பறவையாய்...!
-'பரிவை' சே,குமார்.

12 கருத்துகள்:

 1. அனைத்தும், அருமையான வரிகள் நண்பரே....
  உண்மைகள் வெளிவரட்டும் எவ்வளவு நாட்களுக்குதான் மூடி வைப்பது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
   இது முழுக்க முழுக்க கற்பனையே... உண்மை அல்ல...
   ஹா... ஹா...

   நீக்கு
 2. மனம் ஆழ்ந்து ரசித்தோம் வரிகளை! மனம் ஏனோ சிறிது கனத்தது...அந்த வரிகள் அத்தனை அழுத்தம்...அருமை! நண்பரே!

  பதிலளிநீக்கு
 3. இவ்வளவும் இருந்தும் ஏன் தவிக்கிறது?

  பதிலளிநீக்கு
 4. புரிகிறது...!

  எப்ப வர்றீங்க ஊருக்கு...? ஹிஹி...

  பதிலளிநீக்கு
 5. மனம் லயித்துப் போனது வரிகளில். அருமை சகோ.

  பதிலளிநீக்கு
 6. எல்லாம் சந்தோஷமாக...
  எல்லாரும் சந்தோஷமாக...
  ஏனோ மனசு மட்டும்
  தவிக்கிறது...
  கூடிழந்த பறவையாய்...!
  அருமையான வரிகள், அழகு, நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அருமையான நினைவுகளில் கடைசி வரிகளில் கனம்.....

  பதிலளிநீக்கு
 8. உங்களைத் தேற்றுவதற்கு இதோ என்னாலான உதவி ..த ம 7:)

  பதிலளிநீக்கு
 9. கூடிழந்த பறவை - மனதைத் தொட்டது.....

  பதிலளிநீக்கு
 10. சிறப்பான் கவிதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...