மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 3 மார்ச், 2015விதியின் பிடியில்...


பிரிந்தவர் கூடினால்
பேசவும் கூடுமோ...?
எங்கோ படித்தது...
நீண்ட பிரிதலுக்குப் பின்
நீயும் நானும்
ஒரு பொங்கல் நாளில்
சந்தித்தபோது
நமக்குள்ளும் நிகழ்ந்தது...

எப்போதும் போல்
இல்லாவிட்டாலும்...
கொஞ்சம் பேசினோம்
என்றாலும்
புன்னகை பூக்காத
உதடுகள் போலியாய்....

எத்தனை வலி...
எத்தனை நிகழ்வு...
இரண்டு பக்கமும்
இழப்புக்கள்
இல்லையென்றாலும்
நம்மில் நம்மை
இழந்ததை அறியாத 
சொந்தங்களுடன்
இணைந்தே 
பயணிக்கிறோம் இன்று...

எல்லாம் மறந்தோமோ..
மரிக்கச் செய்தோமோ...
தத்தம் துணையுடன்
சந்தோஷமாய்
நகர்த்துகிறோம் நாட்களை....

துளிக்கும் கண்களைச்
சூனியமாக்கி...
விலகி நகர்கிறோம்...
விதியின் பிடியில்
விதிக்கப்பட்ட வாழ்க்கைப்
பயணத்தில்...
மீண்டும் சந்திக்கலாம்
இன்னும் பக்குவப்பட்ட
மனதுடன்...
-'பரிவை' சே.குமார்.

35 கருத்துகள்:

 1. /// எல்லாம் மறந்தோமோ..
  மரிக்கச் செய்தோமோ...
  தத்தம் துணையுடன்
  சந்தோஷமாய்
  நகர்த்துகிறோம் நாட்களை///

  வாழ்க்கையின் உண்மையை சொல்லும் அருமையான வரிகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. "மீண்டும் சந்திக்கலாம்
  இன்னும் பக்குவப்பட்ட
  மனதுடன்..." என்ற அடிகள்
  நம்பிக்கை தருகின்றது!
  தொடருங்கள்
  நாமும்
  தொடருகிறோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. "மீண்டும் சந்திக்கலாம்
  இன்னும் பக்குவப்பட்ட
  மனதுடன்..." என்ற அடிகள்
  நம்பிக்கை தருகின்றது!
  தொடருங்கள்
  நாமும்
  தொடருகிறோம்!

  பதிலளிநீக்கு
 4. அருமை.

  மறக்கச் செய்து விட்டோம் என்றுதான் பெருமிதப் படுகின்றன சொந்தங்கள், மரத்துப் போய்விட்டோம் என்று அறியாமல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. அருமை. அதிலும் கடைசியாக முடித்த விதம் மிக அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. // எல்லாம் மறந்தோமோ... மரிக்கச் செய்தோமோ... // வேறு வழியில்லை...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. சிறுகதைப்போட்டியில் பரிசுப்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  அண்ணா.

  கவிதையில் தெரிகிறது வலியின் உச்சம்.. மனதை கனக்க செய்தது...
  சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கா எனது வாழ்த்துக்கள் வந்து வாழ்த்துக்கள்.மற்றவர்களை.
  த.ம 4

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே...
   சிறப்பாக போட்டியை நடத்திய தங்களுக்கு வாழ்த்துக்கள்.
   தாங்கள் கருத்திடும் முன்னரே வெற்றி பெற்றவர்களை வாழ்த்தியாச்சே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. தத்தம் துணையுடன்
  சந்தோஷமாய்
  நகர்த்துகிறோம் நாட்களை///உண்மையான காதல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. வாங்க அம்மா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 11. பதில்கள்
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. கவிதை அருமை நண்பரே மீண்டும் மீண்டும் படித்தேன்
  கதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. #இன்னும் பக்குவப்பட்டமனதுடன்...# முத்தான முத்தாய்ப்பு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 14. மிக அழ்கான கவிதை நண்பரே!

  சிறுகதை போட்டியில் வெற்றி!!! பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளசி சார் / கவிதா மேடம்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 15. பக்குவப்பட்ட மனது நம்பிக்கை தருகிறது.

  உலகளாவிய சிறுகதைப் போட்டியில் 3 ஆம் இடம் பெற்றதற்கு வாழ்த்துகள். ( முகநூலில் இரண்டாம் இடம் பெற்ற சரஸ்வதி பகிர்ந்திருந்தார்கள் )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 16. விதிக்கப்பட்ட வாழ்க்கைப்
  பயணத்தில்...
  மீண்டும் சந்திக்கலாம்
  இன்னும் பக்குவப்பட்ட
  மனதுடன்...//

  உண்மை, வலியை மறக்க பக்குவபட்ட மனம் வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 17. பக்குவப்பட்ட மனதுடன் என்ற சொற்கள் கவிதையின் அழகை மேம்படுத்திவிட்டன. கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றதை அறிந்தேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு ஐயா... தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

   நீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...