வணக்கம்...
வாத்தியார் பாலகணேஷ் அவர்களின் 'டூ இன் ஒன்' புத்தகமான சரிதாயணம் ('சிரி'தாயணம்) + நான் இருக்கிறேன் அம்மாவை அண்ணன் கில்லர்ஜி அவர்களின் உதவியால் படித்தேன். அலைனில் இருக்கும் போதே வாசித்தாகிவிட்டது. இங்கு வந்ததும் வேலை மற்றும் சொந்த அலுவல்களால் எழுத்து மற்றும் வாசிப்பு குறைந்து போனதால் படித்ததை பகிர்வதற்கு நாளை... நாளை என தள்ளிப்போட்டு சென்ற வாரத்தில் புத்தகத்தை திருப்பிக் கொடுத்தாச்சு. அதனால் விரிவாக எழுதவில்லை என்றாலும் ரசித்துச் சிரிக்கும்படியான கதைகளுடனும் கொஞ்சம் வித்தியாசமான கதைகளுடன் அருமையாக இருக்கிறது. ரசித்து வாசிக்கக் கூடிய புத்தகங்களில் வாத்தியாரின் இந்தப் புத்தகமும் முக்கிய இடம் பிடிக்கும். நீங்களும் வாசித்துப் பாருங்கள்... ரசிப்பீர்கள்.
கோவை ஆவி அவர்களின் ஆவிப்பா என்னும் கவிதைகளின்... இல்லையில்லை நஸ்ரியாவை நினைத்து எழுதிய அழகிய வரிகளின் தொகுப்பையும் புத்தகங்களை வாசிக்கக் கொடுக்கும் அண்ணன் கில்லர்ஜியே கொடுத்தார். நஸ்ரியாவுக்கும் கவிதைகளுக்கும் தொடர்பில்லை என்று சொல்லியிருந்தாலும் வாத்தியார் பாலகணேஷ் அவர்கள் வரிக்களுக்கு பொருத்தமாய் நஸ்ரியா படங்களை வைத்து அழகாய் வடிவமைத்திருக்கிறார். பக்கத்துக்கு பக்கம் கலரில் நஸ்ரியா... வாவ்... அழகு. அப்புறம் கவிதைகள் வாசிக்க ஆரம்பித்து கடகடவென முடித்துத்தான் வைக்கவிட்டன... பின்னூட்டமே பக்கம் பக்கமாய் அழுத்தமாய்... அழகாய்... ரசனையாய்... எழுதும் மஞ்சுபாஷினி அக்கா முன்னுரையில் கலக்கலாய் எழுதியிருக்கிறார். அவர் ரசித்துச் சொன்னதைப் போலவே அழகான வரிகள்... ஆவிப்பா குட்டியூண்டு புத்தகமாய் இருந்தாலும் நிறைவாய்...
கதம் கதம் படம் பார்த்தேன்... பரவாயில்லை ரகம்தான் என்றாலும் நட்ராஜ் மனுசன் கலக்கியிருக்கிறார்... வசனங்கள் அருமை... படத்தின் கதையின் போக்கும்... முடிவும் அலுப்பை ஏற்படுத்தினாலும் வசனங்களுக்காகவும் நட்ராஜ்க்காகவும் பார்க்கலாம்.
கமலின் உத்தம வில்லன் பாடல்கள் வெளியீட்டு விழாவை யூடியூப்பில் பார்த்தேன். எல்லாரும் கமலின் புகழ் பாடினாலும்... இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் கமலுக்கு எழுதிய லெட்டர்,... கமல் பாலச்சந்தருக்கு எழுதிய மடல்... நாசரின் உருக்கமான பேச்சு... பார்த்திபனின் தொகுப்பு... வித்தியாசமான முறையில் பாடல் வெளியீடு... என அருமையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை பார்க்கலாம்.
அப்புறம் முக்கியமான சமாச்சாரங்க... நாளை இரவு எனது மனைவியும் குழந்தைகளும் ஒரு மாத காலத்திற்கு இங்கு தங்கும் விதமாக வருகிறார்கள்... மே மாதம் நான் அவர்களுடன் ஊருக்குப் போகிறேன்... அதனால் மனசு தளத்திற்கு மட்டுமல்ல நண்பர்களின் எழுத்துக்களை வாசிப்பதற்கும் விடுமுறை... விடுமுறை... அவர்களுடன் ஊர் சுற்றவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் இங்கு வரமுடியாது. சில நேரங்களில் சும்மா எட்டிப் பார்ப்பேன். முடிந்தால் 'வேரும் விழுதுகளும்' தொடர்கதை மட்டும் பதியப்படும்... மற்றவை இரண்டு மாத விடுமுறைக்குப் பின்னரே... அதுவரை...
இருங்க... இருங்க... போயிடாதீங்க... ஆங்... சொல்ல மறந்துட்டேனே... மனசு தளத்தில் இது 800-வது பகிர்வு... முன்பு கிறுக்கிய மற்ற மூன்று தளங்களிலும் (கிறுக்கல்கள் + நெடுங்கவிதைகள் + சிறுகதைகள்) சேர்த்து 1000-த்தை எட்டிப் பிடிக்க 5 குறைவாக 995 பகிர்வுகள்... எல்லாம் தங்கள் அன்பால்தான்... அதற்கு ஒரு...
நன்றி.
-'பரிவை' சே.குமார்.
23 எண்ணங்கள்:
T.M 2
Coming after
இரண்டு மாத விடுமுறையா?
பரவாயில்லை - ஆனால்
இடையிடையே
தலையைக் காட்டும் வேளை
வருவோமே!
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
வணக்கம்
அண்ணா
பல1000 பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள் எங்களின் தொடர் வருகை இருக்கும் பகிர்வுக்கு நன்றி த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
குடும்பத்துடன் விடுமுறையினை மகிழ்வாய் கழிக்க வாழ்த்துக்கள் நண்பரே
தம+1
வாழ்த்துக்கள் இந்த எண்ணூறாவது பதிவுக்கும் தொட இருக்கும் 1000 மாவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்
உங்களது விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். விடுமுறைக்குப் பின்னர் உங்களது பதிவுகளைக் காணக் காத்திருக்கிறோம்.
அடேங்கப்பா... பத்துசதத்தை விரைவில் எட்ட இருக்கிறீர்களா குமார்? எனக்கெல்லாம் ஐந்து சதத்தை எட்டுவதுஎன்பதே மலைப்பான விஷயம். என் புத்தகத்தைப் படித்து ரசித்து அதை சிறப்பாக பகிர்ந்துள்ளதற்கு சிறப்பு நன்றியும் அன்பும். குடும்பத்துடனான விடுமுறை இனிதாய் அமைய மகிழ்வான நல்வாழ்த்துகள்.
வலைத்தளம் கிடக்கட்டும் விடுங்க... குடும்பத்தோடு "மனசு" மகிழ்ச்சியில் திளைக்கட்டும்...
Congrats for 800th post.. Thanks for your compliments on Aavippa.
அன்புள்ள அய்யா,
ஆயிரத்திலும் ஒருவராக வாழ்த்துகள்.
குடும்பத்தோடு விடுமுறையைச் சிறப்பாய்க் களிக்கவும்...!
நன்றி.
த.ம.9.
அருமை.
விடுமுறை குடும்பத்துடன் சந்தோஷமாகவும், சிறப்பாகவும் இருக்க வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் !!! 1000 த்தைத் தொடப்போகின்றதற்கு!!! நாங்களும் வலைத்தளங்களும் இங்குதானே இருக்கப் போகின்றோம்! மனச சந்தோஷமா குடும்பத்தோட எஞ்சாய்! நண்பரே! புத்தக விமர்சனம் அழகு! நாங்களும் வாசித்திருக்கின்றோம் இரண்டையும். கமல் உத்தமபுத்திரன் பாடல் வெளியீட்டைப் பார்க்கின்றோம். பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே! எஞ்சாய் யுவர் ஹாலிடேய்ஸ்!!!
விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
விடுமுறையைக் கொண்டாட வாழ்த்துக்கள்! வலைதளம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்! குடும்பத்துடன் நேரம் செலவிடுவது என்பது உங்களைப்போல வெளிநாடு வாழ்பவர்களுக்கு மிகவும் அரிது! எனவே குடும்பத்துடன் கொண்டாடி மகிழுங்கள்! நாங்கள் காத்திருக்கிறோம்!800வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!
1000த்தை தொட்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே... தவறாது எம்மையும் குறிப்பிட்டமைக்கு நன்றி குடும்பத்துடன் சந்தோஷமாக கழிக்க வாழ்த்துகள்.
800 ஆம் பதிவிற்கு வாழ்த்து
வாழ்த்துகள்
8000 வது பதிவுக்கும்
முன்னதாக சேர்த்து.
குடும்பத்துடன் விடுமுறையை சிறப்பாக கொண்டாட எனது வாழ்த்துகள். வலை எங்கே போய்விடப் போகிறது..... பொறுமையாக வாருங்கள்.
800-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பல நூறு பதிவுகளை உங்கள் தளத்தில் எழுதிடவும், உங்கள் ஆக்கங்கள் அச்சில் வெளி வரவும் எனது வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் தோழர்
தம +
வியப்புடனும் மகிழ்வுடனும் வாழ்த்துகிறேன்.
த ம 13
அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!
நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!
மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!
தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!
பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!
புதுவை வேலு
அருமை குமார். :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)
வணக்கம் சகோதரரே.!
அனைத்தும் அருமை! விடுமுறையில் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ந்து சந்தோஷமாயிருந்து விட்டு தங்கள் எழுத்துக்களை தொடரவும். வாழ்த்துக்கள்.
800 வது பதிவுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய பதிவுகள் எழுதி எழுத்துலகில் சிறக்க இறைவனை மனமாற பிராத்திக்கிறேன். நன்றி
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அஹா அதான் காணோமா என்னடா ரொம்ப நாளா காணலையேன்னு வந்தேன்
ஹாப்பி ஹாலிடேஸ் தம்பி என்ஜாய் பண்ணுங்க விடுமுறையை குடும்பத்தோட. ரிஃப்ரெஷ் ஆகி வாங்க.
இதுக்கு அப்புறம் எழுதி இருக்க சிறுகதையும் அற்புதம். வாழ்த்துகள் பா :)
கருத்துரையிடுக