மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 25 மார்ச், 2015

ஸ்ருதி... வாழ்வின் வசந்தம்

2004 ஆம் ஆண்டு மார்ச்-26... எங்கள் வாழ்வில் மிகச் சிறந்த நாள்.



மதுரையில் தல்லாகுளத்தில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் மனைவியை பிரசவத்திற்காக சேர்த்திருந்தோம். ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு செக்கப்புக்கு சென்றதில் இருந்து பத்தாவது மாதம் வரை சுகப்பிரசவம் ஆகும் என்று சொன்னவர்கள்... ஏன் வலி வந்து சேர்த்த அந்த இரவு இட்லி சாப்பிடச் சொன்னவரை அதையேதான் சொன்னார்கள். அதன்பிறகு திடீரென மீண்டும் ஸ்கேன் எடுத்தார்கள்... உடனே ஆபரேசன் பண்ணனும் என்று சொல்லிவிட்டார்கள்.

நாங்களும் அவர்களுடன் சண்டையிட்டு முடியாமல் தோற்று ஒத்துக்கொள்ள, அப்பா, அம்மா, அத்தை என எல்லாரும் பதட்டத்துடன் காத்திருக்க... மாமாவுக்கு விவரம் சொல்லி அவர் ஹோட்டலில் இருந்து வரும் முன்னரே ஆபரேசன் அறைக்குள் கொண்டு சென்றுவிட்டார்கள். நமக்கு ஒரு குழந்தை என்ற சந்தோஷம் நீங்கி... மனைவிக்கு ஆபரேசன் என்ற பயம் கவ்விக்கொள்ள என்னையறியாமல் கண்ணீர் ஓட, மாடிப்படியில் சென்று அமர்ந்துவிட்டேன்.

குழந்தை அழுகும் சத்தமும் எல்லோரும் சந்தோஷமாக பேசும் சத்தமும் கேட்க, என் மகள்... என் செல்லம் பிறந்ததை அறிந்து சந்தோஷித்தாலும் மனசு மனைவியை நாடியது. வெளியில் கொண்டு வந்து பின்னர் குளிரும் காய்ச்சலும் வர, மருத்துவர்கள் ஒன்றுமில்லை என்று சொல்லியபடி மீண்டும் ஐசியூவுக்குள் கொண்டு செல்ல, குழந்தையைக் கூட பார்க்க மனமின்றி மனைவிக்காக வேண்டுதலோடு காத்திருந்த அந்த நிமிடங்கள் இன்னும் மனசுக்குள் தடக்.. தடக்கென்று கடக்காமல் நின்று கொண்டேயிருக்கிறது.

மனைவி நினைவு திரும்பி, கொஞ்சம் பேச ஆரம்பித்ததும் மகளைக் கொஞ்சுவதே வேலையானது. அப்போது தேவகோட்டை கல்லூரியில் பணி, வார வெள்ளி மாலை கிளம்பிப் போய் மகளுடன் இருந்து திங்கள் காலை கிளம்பி வருவேன். நமக்குன்னு ஒரு வாரிசு என்ற சந்தோஷம் துள்ளலாட்டம் போட்டது. சின்ன பிள்ளையாக இருக்கும் போது கைலிக்குள் போட்டு விளையாடியது பசுமையாய்...

பின்னர் அவரும் வளர வளர... சேட்டைகளும் வளர ஆரம்பித்தது. நான் கல்லூரிக்குச் செல்லும் போது எனது பைக்கில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு விட்டுச் செல்ல வேண்டும். அதேபோல் மதியம் சாப்பிட வரும்போது கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டாலே சிமெண்ட் தரையின் சூட்டைப் பற்றி அறியாமல் தத்தக்கா... பித்தக்கான்னு நடந்து வரும் அழகே தனிதான்... கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னம் வாய் என எச்சில் வடிய முத்தம் கொடுக்கும் செல்லத்துக்கு எப்பவும் அப்பா வேணும்... ஆம்... அப்பா செல்லமாக வளர்ந்தது. விஷால் வரும் வரை தனிக்காட்டு ராணிதான்.

சென்னையில் இருக்கும் போது என்னோடுதான் படுக்கை... பெரும்பாலும் வயிற்றில் ஏறித்தான் படுத்துக் கொள்ளும். இறக்கிப் போட்டாலும் மீண்டும் ஏறிப்படுத்து விடும். இல்லையேல் கழுத்தைக் கட்டிக் கொண்டு தூங்கும்... முகப்பேர் வேலம்மாளுக்கு எல்.கே.ஜி. போகும் போது இரவு வேலை பார்த்துவிட்டு வந்து படுத்தாலும் குளிக்கவும்... சாப்பாடு ஊட்டவும்... பள்ளியில் கொண்டு சென்று விடவும் அப்பா வேணும்... அப்பா இப்பத்தான் வந்தாக... தூங்கட்டும் பாப்பா என்று அம்மா சொன்னாலும் பக்கத்தில் உக்காந்து அப்பா... அப்பான்னு கிளப்பிக் கொண்டு செல்லும்.

காரைக்குடி வந்து பள்ளிக்குச் சென்ற நேரத்தில் நான் அபுதாபி வந்தாச்சு... பின்னர் வருடம் ஒருமுறைதான் என்றாலும் அந்த ஒரு மாதமும் அப்பாதான் எல்லாம்... அப்பா... அப்பா.... எப்பவும் அப்பா பிள்ளை.... விஷாலும் அப்பாவுக்கு போட்டி போட ஒரே களபரம்தான். இந்த சண்டை இன்று வரை தொடருது. அதுவும் ஒரு சந்தோஷம்தானே,

எல்லாருக்கும் பாப்பா ஆகிப்போன எங்கள் செல்லத்துக்கு வயது பதினொன்று ஆச்சு.... டேய் பாப்பான்னு சொல்லாம அக்கான்னு சொல்லுடா என்று விஷாலிடம் அம்மா மிரட்ட, அப்பா பாப்பான்னு சொல்லாம அக்க்க்க்க்க்கான்னு சொல்லணுமாம் என்று சொல்லிச் சிரிக்கிறான். இப்பவும் பாப்பாதான் போடுறான்.

படிப்பு விஷயத்தில் திட்டும் போது என்னையவே திட்டுங்க என்று அழுதாலும் கத்தினாலும் அடுத்த நிமிடமே அப்பா என்று ஒட்டிக் கொள்ளும் அந்த அன்பு பெண்பிள்ளைகளுக்கே உரியது. அது இன்னும் கூடுதலாய்....

ஸ்ருதி... 

இதுதான் எங்கள் செல்லத்தின் பெயர்... ஆனா எல்லாருமே பாப்பான்னுதான் கூப்பிடுறோமா... ஸ்ருதிங்கிறது பள்ளியில் மட்டுமே கூப்பிடும் பெயராகிவிட்டது. வீட்டில் பெரிசு முதல் சிறுசு வரை எல்லாருக்கும் பாப்பாதான்... பாப்பா ஐயாவின் (மனைவியின் அப்பா) செல்லம். அவருக்கு காலையில் பேத்தியிடம் பேசவில்லை என்றால் வேலையே ஓடாது... அதே போல் அவர் பேசவில்லை என்றால் இவங்க போன் பண்ணி பேசிட்டுத்தான் பள்ளிக்குப் போவாங்க...

மார்ச் -07 என்னோட பிறந்தநாள்... மார்ச் - 15 தங்கை (நண்பனின் மனைவி) பிறந்தநாள்... மார்ச் - 21 பேராசான். மு.பழனி இரகுலதாசன் (எங்க ஐயா) பிறந்தநாள்... அந்த வரிசையில் மார்ச் - 26  எங்க செல்லத்தோட பிறந்தநாள்... 

நாளைக்கு எங்க செல்லத்துக்கு பிறந்தநாள்... கைகளில் தவழ்ந்த எங்க செல்லம் பதினோறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்... உங்கள் ஆசிகளையும் அன்பையும் வழங்குங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

40 எண்ணங்கள்:

Angel சொன்னது…

உங்க அன்பு செல்ல இளவரசிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ..

Menaga Sathia சொன்னது…

Happy birthday to ur princess !!

Yarlpavanan சொன்னது…

உணர்வுகள் கொப்பளிக்க
குடும்பக் கதைக் கூறி
எம் உள்ளத்தை உரசினீர்..

தங்கள் செல்லத்துக்கு
எங்கள் பிறந்தநாள்
வாழ்த்துகள்!

துபாய் ராஜா சொன்னது…

'பாப்பா' ஸ்ருதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

மகளுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

செல்லத்திற்கு எனது அன்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

balaamagi சொன்னது…

ஆபரேஷ்னள்ன் தியேட்டர் மனைவிக்காய் பரிதவித்த இதயத்துக்கு ,,,,,,,,,,,,,,,,
குட்டி செல்லம் ஸ்ருதிக்கு வாழ்த்துக்கள்.

RajalakshmiParamasivam சொன்னது…

ஸ்ருதிக்கு என் வாழ்த்தும் ஆசிகளும்.!
ஸ்ருதிக்கும் , விஷாலிற்கும் எல்லா வளமும், நலமும் இறைவன் அருள பிரார்த்திக்கிறேன்.

சசிகலா சொன்னது…

எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் செல்லம்மாவிற்கு.

துரை செல்வராஜூ சொன்னது…

தங்கள் அன்பின் செல்ல மகள் - ஸ்ருதி நலம் யாவும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!.. என்று வாழ்த்தி மகிழ்கின்றேன்..

மனோ சாமிநாதன் சொன்னது…

ஸ்ருதிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!

RAMA RAVI (RAMVI) சொன்னது…

குழந்தை ஸ்ருதி க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும், ஆசிகளும்..

ஸ்ரீராம். சொன்னது…

ஸ்ருதிக்கு எங்கள் வாழ்த்துகளையும் சொல்லி விடுங்கள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உங்கள் செல்ல மகளுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஸ்ருதி செல்லத்திற்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
தங்களின் செல்ல மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்..த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…

ஸ்ருதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
நண்பரே 30 ம்தேதி எமது பதிவுக்கு வரவும.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாவாணன் ஐயா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராஜா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு மகளுக்கு என் வாழ்த்துக்களும் ஆசியும்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
SHRUTHI : Thanks.