நகர்ந்து கொண்டிருக்கிறது
நாட்களை தின்றபடி..
வருத்தப்பட்டு பொதி
சுமக்கப் பழகிய மனசு
இப்போதெல்லாம்
வருத்தமின்றி சுமக்கிறது
பொதியை மட்டுமின்றி
ரணங்களையும் சேர்த்து...
ஆறுதல் தேடிய இதயம்
தேடுதல் துறந்து
தேவைகள் துறந்து
நொறுங்கிய பின்பும்
துடிப்பை அடக்கவில்லை...
இரவுகள் வராமல்
பகல்கள் நீளக்கூடாதா
என்ற எண்ணம்
இப்போதெல்லாம்
நீள்வதேயில்லை....
இச்சைக்காக இம்சித்த
இரவுகள் கொடுத்த
வலி இப்போதெல்லாம்
இச்சையிலும் தெரிவதில்லை...
இரவின் இருட்டு
ஒருவகையில் பாதுகாப்பே...
பட்டதும் பெற்றதும்
பகல்போல் வெளியில்
வருவதில்லையே...
இரவில் ராவணனாய்...
இந்த வாழ்க்கையும்
பழகிப் போனது
இருவருக்கும்...
-'பரிவை' சே.குமார்.
13 எண்ணங்கள்:
நல்ல கவிதை.துயர் வாழ்க்கை.
வேதனைதான்.
திடீரென்று சோக கீதம் இசைத்துவிட்டீர்களே நண்பரே
tha/ma.3
மனதை கனக்க செய்த கவிதை
வரிகளில் உள்ள துயரம் புரிகிறது...
மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html
இருவருக்குமான வலி உணர முடிகிறது.
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
வலி தந்த கவிதை.....
பல சமயங்களில் வாழ்க்கை வலி மிகுந்தது.....
//வருத்தப்பட்டு பொதி
சுமக்கப் பழகிய மனசு
இப்போதெல்லாம்
வருத்தமின்றி சுமக்கிறது
பொதியை மட்டுமின்றி
ரணங்களையும் சேர்த்து...//
அற்புதமான வரிகள் இல்லை வலிகள்
கவிதை அருமை குமார்
வாழ்த்துக்கள்
வாழ்வில் வலி மறைந்து வசந்தம் பிறக்கட்டும் !
த.ம 7
+வோட் போட்டால் _ வோட்டும் சேர்ந்தே விழுகிறது ,ஏனென்று தெரியவில்லை!
வசந்தமில்லாத வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருக்கிறது
நாட்களை தின்றபடி..//
வசந்தம் விரைவில் வரட்டும்.
வாழ்க வளமுடன்.
கருத்துரையிடுக