மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 17 ஜனவரி, 2014

விஷாலை வாழ்த்துங்க...

மாட்டுப் பொங்கல் அன்று எங்கள் ஊரில் ஓய்வின்றி பயங்கரமான ஆட்டம் போட்டு விட்டு வந்த விஷாலுக்கு உடல்வலி கொடுத்த சோர்வில் தூக்கம் வந்துவிட்டது. என்னுடன் மனைவியும் பாப்பாவும் ஸ்கைப்பில் பேசும்போது சோர்ந்து படுத்துவிட்டான். அவன் படுத்திருப்பதை நான் பார்த்தேன்.

அப்போது "என்னங்க... அவனைப் பாருங்களேன்... கை ரெண்டையும் தலைக்கு வச்சிக்கிட்டு உங்கள மாதிரித்தான் படுக்கிறான். எப்ப படுத்தாலும் இப்படித்தான் படுக்கிறான்" என்று மனைவி சொன்னார்.

(எனக்கு கைலி கட்டிக் காண்பித்தபோது ஸ்கைப்பில் எடுத்தது)

உடனே பாப்பா " அவன் அப்படியெல்லாம் படுக்கலையே... எங்கப்பா இப்படி படுக்க மாட்டாங்க" என்று கத்தினார். பாப்பாவுக்கு எப்பவுமே அப்பாவை தம்பியுடன் பங்கிட்டுக் கொள்வதில் விருப்பம் இருப்பதில்லை.

"இல்லையே உங்கப்பா இப்படித்தான் படுப்பார். அங்க பார் எப்படி படித்திருக்கிறார்ன்னு..." என்று மனைவி சொல்லும் போது நானும் அவனைப் போல் படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தேன்.

"இல்ல எங்கப்பா ஒரு பக்கம்தான் கை வச்சிருக்காங்க" என்றார் பாப்பா.

உடனே விஷால் ஒரு கையை எடுத்து விட்டு ஒரு பக்கமாக திரும்பி நான் படுப்பதுபோல் படுத்தான்.

"இதெல்லாம் ரொம்ப ஓவருடா" என்று பாப்பா சொன்னதும் "நா குமாரு மகன்தானே... அப்படித்தான் படுப்பேன்" என்றான்.

நானும் "அப்பனைப் போலத்தானே பிள்ளை இருப்பான்" என்றதும் "பாத்தியா குமாரு மகன்னு அப்பா சொல்லிட்டாங்க" என்றான்.

"இல்ல நீ நித்யா மகன்" என்றார் பாப்பா.

"இல்ல குமாரு மகன்" என சண்டை ஓட நான் பேசி முடிப்பதற்குள் சண்டையோடு தூங்கிவிட்டான்.

காலையில் எழுந்து பள்ளிக்குச் செல்ல இருவரும் குளிக்கும் போது "ஏய் நீ அப்பா புள்ள அப்பா புள்ளன்னு சொல்லுறியே எதாவது அப்பா மாதிரி செய்யிறியா... நாந்தான் எல்லாமே அப்பா மாதிரி செய்யிறேன். அப்ப நா மட்டுந்தான் அப்பா புள்ள..." என்று மீண்டும் வம்பை ஆரம்பித்திருக்கிறான்.



பொங்கல் அன்று அவங்க அம்மா ஊரில் இருக்கும் குடும்பக் கோவிலுக்கு பொங்கல் வைக்கப் போனபோது அங்கு இருக்கும் எங்க அக்கா விஷாலைப் பார்த்திருக்கிறார்.

அவன் முடியை ஓட்ட வெட்டி இருந்ததால் பின்புறமாக பார்க்கும் போது என்னை மாதிரியே தெரிய...

"அப்புடியே எந்தம்பியை உறிச்சி வச்சிருக்கு பாரு... ஆளு... தலை... நடை... எல்லாம் அப்படியே அவன மாதிரியே இருக்கு" என்று சொல்ல...

"ஏய் கோதை (இந்த அக்காவை மட்டும் எங்க வீட்டு வாண்டுகள் எல்லாம் வெளியில் அத்தை என்று சொன்னாலும் நேரில் பார்த்தால் பெயர்தான்) என்ன குமாரு... குமாருன்னு சொல்றே... நான் விஷால்... விஷாலுன்னு சொல்லு..." என்று மிரட்டியிருக்கிறான்.

"அவனை மாதிரியே இருக்கே.... அப்புறம் என்ன விஷால் போடச் சொல்றே... நீ குமார்தான்..."

"சொல்றேன்... குமாரு... குமாருன்னு சொல்றே... நீ கேக்க மாட்டே... உனக்கு..." என கோபத்தில் கல்லை எடுத்திருக்கிறான்.

"எந்தம்பிக்கு இப்படி கோபம் வராது... உனக்கு என்ன கோபம் இப்புடி வருதுன்னு" சொல்லியிருக்கிறார். உடனே கோபமாக நடந்து போயிருக்கிறான். இதை மனைவி சொன்னதும் சிரிப்புத்தான் வந்தது. பின்னர் அக்காவிடம் பொங்கல் அன்று பேசியபோது சொல்லிச் சொல்லி சிரிக்கிறார்.

இப்படி தனது பேச்சாலும் செயலாலும் எங்களை எல்லாம் கவர்ந்து சிரிக்கும் எங்கள் அன்பு மகன் இன்று நான்கு வயதில் இருந்து ஐந்தாவது வயதில் நுழைகிறான். அவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... நீங்களும் அவனை வாழ்த்துங்கள்... உங்கள் ஆசிகளுக்காக அவனுடன் நானும்...

-'பரிவை' சே.குமார்.

18 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யக் குறும்புகள்! உங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

ராஜி சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நல்லா படிச்சு நல்லவனா வாழ்ந்து நல்ல பேர் எடுக்கட்டும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கிறது சின்ன குமாரின் செயல்கள்... செல்லத்திற்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

ஜோதிஜி சொன்னது…

என் இனிய வாழ்த்துகள். நான் சொன்னதற்குப் பிறகு ஸ்கைபேயில் முயற்சித்தீர்களோ?

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

ஐந்தாம் வயதில் அடியெடுத்து வைக்கும் அரும்பு விஷால் மொட்டாகி மலராகி, பற்பல சாதனை புரிந்து, சான்றோர் வரிசையில் புகழ்மணக்க வாழவேண்டுமென்று அன்புடன் வாழ்த்துகிறேன்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

Menaga Sathia சொன்னது…

விஷாலுக்கு இனிய பிற்ந்தநாள் வாழ்த்துக்கள்!!

Unknown சொன்னது…

பையனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!(அவரும் பதினேழு!)

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
குமார்(அண்ணா)

சின்னத்தம்பியின் குறும்பு.என்னை கவர்ந்துள்ளது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
குமார்(அண்ணா)

சின்னத்தம்பியின் குறும்பு.என்னை கவர்ந்துள்ளது.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு சொன்னது…

விஷாலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆசீர்வாதங்கள். வாழ்க வளமுடன்.
விஷாலின் குறும்புகள் ரசிக்க வைக்கிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்திய அனைத்து சொந்தங்களுக்கும் விஷால் சார்பாக நன்றி.


அன்பின் ஜோதி அண்ணா...

கடந்த இரண்டாண்டுகளாக ஸ்கைப்பில்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆறுமாதமாக கணிப்பொறியில் வீடியோ பிரச்சினை இருந்தது. 2014-ல் புதிய லேப்டாப் வாங்கி கொடுத்து விட்டுவிட்டேன். இப்போ மீண்டும் பார்த்துப் பேச முடிகிறது. நன்றி அண்ணா...

நீங்கள் எல்லாம் சொன்ன பிறகுதான் கணிப்பொறி வேலைக்கு ஆகாது என்பதால் புதிதாக வாங்கியாச்சு... உங்கள் அன்பிற்கு நன்றி.

Unknown சொன்னது…

ஒரு டஜன் நாட்களுக்கு முன் அம்மாவின் பிறந்த நாளைக் கொண்டாடி ,இன்று பிறந்த நாள் காணும் விசாலுக்கு வாழ்த்துகள் !

Asiya Omar சொன்னது…

விஷாலுக்கு (இல்லை இல்லை குமாருக்கு) இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.இப்ப என் மேல் கல் வந்து விழுந்தாலும் விழும்.வீசப் போறது யாரு? பாப்பாவா? விஷாலா?புத்திசாலிப் பிள்ளைங்க,பாவம் அம்மா நித்யா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆஹா...
உண்மைதான் அக்கா... என் மனைவிதான் இருவரிடமும் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்... சில நேரங்களில் முடியலை என்று புலம்புகிறார்...

அத்தைக்கு கல் எடுக்க வேண்டும் என்றால் மாப்பிள்ளைதான் முன்னணி... அம்புட்டுக் கோவம் வருதுக்கா...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி அக்கா....


நன்றி பகவான்ஜி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

குறும்பு.... ரசித்தேன்....

விஷாலுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

ezhil சொன்னது…

குழந்தைகளின் குறும்புகள் எப்போது நினைத்தாலும் ரசிக்கக்கூடியவையே..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஷாலுக்கு...பொதுவாக அப்பாவிற்கு பெண் குழந்தைகளைத்தான் மிகவும் பிடித்தமாக இருப்பர்...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விஷாலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....