இன்று தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. இப்போதெல்லாம் பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
இந்தப் பொங்கலுக்கு விஜய் தொலைக்காட்சியில் நடந்த கேவலமான ஒரு நிகழ்ச்சி குறித்து நம்ம முத்துநிலவன் ஐயா அவர்கள் தனது பகிர்வில் வருந்தியிருந்தார்கள். ஐயாவின் பகிர்வு பார்த்ததும் நானும் அந்த இணைப்பில் போய் பார்த்தேன். கேவலத்தின் உச்சம் அது. இன்று முகநூலில் கூட பல நண்பர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சி பார்த்தபோது எனக்குத் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்... இவ்வளவு கேவலமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்து கொள்ளும் இந்தப் பெண்களுக்கு குடும்பம் என்று ஒன்று இருக்கும்தானே... கூத்தடித்து விட்டுப் போனால் ஆஹா... மகளே குடும்பக் கௌரவத்தை காப்பாற்றிவிட்டாய் என உச்சி முகர்ந்து திருஷ்டி சுற்றிப் போடுவார்களோ என்பதுதான்.
ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று சொல்கிறோம். உண்மைதான் இங்கு பெண்களை அடிமைப்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற நிலை எல்லாம் இப்போது இல்லை. இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் ஜெயிக்கிறார்கள்... ஜொலிக்கிறார்கள். இந்த வளர்ச்சி... வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வீறு நடை போடும் இந்த எழுச்சி பாராட்டுதலுக்குரியது.
உலகமெங்கும் பார்க்கப்படும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவ்வளவு கீழ்த்தரமாக படிக்கும் பெண்களால் நடந்து கொள்ள முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறது சிவகார்த்திகேயனை வைத்து விஜய் தொலைக்காட்சி வழங்கிய எங்க வீட்டுப் பிள்ளை என்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி.
இந்தத் தொலைக்காட்சியில் அது இது எது என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமாக சினிமாவுக்குள் போய் தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ்ச் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் சிவகார்த்திகேயன். அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது என்பது எல்லாரும் அறிந்ததே. தங்கள் தொலைக்காட்சி மூலமாக மிகப்பெரிய இடத்தை அடைந்த ஒருவரை வைத்து நிகழ்ச்சி நடத்தி தங்களது டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்ளச் செய்யும் நிகழ்ச்சிதான் இது என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் சிவகார்த்திகேயனை கேவலப்படுத்தியதுடன் நமது கலாச்சாரத்தையும் கழுவி ஊற்றிவிட்டார்கள்.
எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகளில் பெண்கள் இன்று கலக்கி வருகிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெண் பொங்கல் ஊட்டிவிட்டு விட்டு தனக்கும் ஊட்டிவிடு என்று அடம்பிடிக்கிறாள். இங்கு இவர்களை ஒருமையில் சொல்லவே தோன்றுகிறது. எனக்கு ஒருமையில் சொல்வதென்பது பிடிக்காத ஒன்றுதான் இருந்தும் அவர்களில் அநாகரீகச் செயலுக்கு மரியாதையாய் எழுத மனம் வரவில்லை. இன்னொருத்தியோ முறுக்கு மீசை வைத்துப் பார்க்கிறாள். ஒருத்தியோ இவற்றிக்கெல்லாம் மேலாக கன்னத்தைக் கிள்ள வேண்டும் என்று சொல்லி கிள்ளி... தொகுப்பாளினியில் வேண்டுதலுக்காக மீண்டும் ஒருமுறை கிள்ளுகிறாள். உடனே நான் மட்டும் கிள்ளினேன்... நீங்க என் கன்னத்தைக் கிள்ளுங்க என்கிறாள். அவரும் நாணிக் கோணி கிள்ளுகிறார்.
இதற்கெல்லாம் உச்சமாக அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று இருந்தது. அதற்கு சிவகார்த்திகேயன் சொன்ன பதிலும் அதற்கு அவர்களும் தொகுப்பாளினியும் அளித்த பதில் என ஆபாசத்தின் உச்சம். அதை இங்கு சொல்ல விரும்பவில்லை. நிகழ்ச்சி பார்த்தவர்களுக்குத் தெரியும். பார்க்காதவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த சிறப்பு மிக்க கேள்வியை கேட்ட பெண் சிவகார்த்திகேயன் சரியான பதிலைச் சொல்லவில்லை எனச் சொல்லி அதற்குத் தண்டனையாக தன்னைத் தூக்கிக் கொண்டு சுற்றி வர வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறாள். அவர் மறுக்க உடனே ஒரு பனியனில் லிப்ஸ்டிக் உதடை பதிய வைத்து அதை அணிந்து கொள்ளச் சொல்கிறார்கள். அபத்தத்தின் அரங்கேற்றம் இது.
சிவாவைப் பொறுத்தவரை வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் தாய் வீட்டில் செய்யச் சொன்ன நிகழ்ச்சி என்பதால் மனம் வருத்தத்துடன் செய்திருக்கலாம் என்று தோன்றினாலும் இதெல்லாம் செய்வோம் என நிகழ்ச்சிக்கு முன்னரே அவரிடம் சொல்லியிருப்பார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் ஒரு குழந்தைக்கு தந்தையான அவர் எப்படி இதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் அவரும் என்னய வீட்டுக்குப் போக விடமாட்டீங்க போலவேன்னு எல்லாம் சொன்னார் என்றும் நாசூக்காக மறுத்தார் என்றும் நாம் அவருக்கு ஆதரவாகப் பேசலாம். சின்னக் குழந்தைகள் என்றால் பரவாயில்லை குமரிகளுடன் கூத்தடிப்பதற்கு நடிகனுக்கு சுதந்திரம் இருக்கிறது என்று நினைத்து கூத்தடித்தாரோ?
நடிகன் என்பவன் மனிதன் என்பதை ஏன் மறக்கிறீர்கள். ஒரு கூட்டம் நடிகனுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டு திரிகிறது. அதற்கு நடிகர் ஒருவரும் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். குடும்பம் குழந்தை குட்டி என்று ஆனாலும் இதுபோல் நடிகனின் பின்னால் அலையும் கும்பலை என்னவென்று சொல்வது? இதே நிலைதான் இன்று இந்தப் பெண்கள் மத்தியிலும்... அவனைப் பிடிக்கும் என்றால் அவனது படத்தைப் பாருங்கள்... ரசியுங்கள்... வேண்டாம் என்று சொல்லவில்லை... தெரு நாய்களாக பொதுவெளியில் நடக்காதீர்கள். அசிங்கம் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது உங்கள் வாழ்க்கையை அடியோடு பிய்த்துப் போட்டுவிடும்.
உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் கட்டிப்பிடிப்பதும் முத்தமிடுவதும் என்பது நம் பண்பாடா என்ன... இப்படி கூத்தடித்ததை நீங்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்... உங்கள் உறவுகளும் சந்தோஷப்படலாம். திருமண வாழ்க்கைக்குப் பின் உங்கள் துணை இந்த கிளிப்பிங்கைப் பார்த்தால் என்னவாகும் யோசித்தீர்களா? இதெல்லாம் இருந்தால்தான் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்கும் என்று அடித்துச் சொன்னீர்கள் என்றால் நாளை உங்கள் வாழ்க்கை நடுவீதியில் அல்லவா நிற்கும். சிந்தியுங்கள் பெண்களே... வெற்றி முழக்கமிடும் செயல்களில் முன் நில்லுங்கள்... நடிகனின் பின்னால் நாயாக அலையாதீர்கள்...இன்றைய சந்தோஷத்தைப் பார்க்காதீர்கள் நாளைய வாழ்க்கையையும் சேர்த்துப் பாருங்கள்.
இதே விஜய் தொலைக்காட்சியில் முன்பொருமுறை திவ்யதர்ஷிணி கமலஹாசனிடம் முத்தம் வேண்டும் என முத்தம் வாங்கினார். இங்கு நிகழ்ச்சியை நடத்தும் பெண்களுக்கு வேண்டுமானால் பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் கலந்து கொள்ளும் பெண்கள் வரம்பு மீறாமல் இருப்பதுதான் நல்லது. எந்த ஒரு காரியத்தையும் செய்துவிட்டு பின்னால் வருந்தி பலன் இல்லை.
சில தினங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர் பாடும்போது பார்வையாளர்கள் வரிசையில் இரண்டு குடும்பப் பெண்கள் ஆட்டம் போட்டார்கள். நிகழ்ச்சிக்காக சொல்லி ஆடினார்களா என்று தெரியாது. நடுவராக வந்திருந்தவர் சூப்பரா ஆடுனீங்கம்மா... குட் எண்டர்டெயின்மென்ட்... நான் ரொம்ப ரசிச்சேன் என்றார். அவர் ரசிக்கலாம்.... ஆனால் இதை பார்க்கும் உங்கள் சுற்றமும் நட்பும் கண்டிப்பாக ரசிக்காது.
பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை நல்ல செயல்களில் தட்டிக் கொடுங்கள்... இது போன்ற கேவலமான செயல்களுக்கு தடை போடுங்கள்... ஒரு போதும் ஊக்குவிக்காதீர்கள்... தொலைக்காட்சிகளே தயவுசெய்து உங்கள் டி.ஆர்.பிக்காக நமது கலாச்சாரத்தையும் கன்னியத்தையும் கொச்சைப்படுத்தாதீர்கள்.
முத்து நிலவன் ஐயா அவர்களின் இடுகையைப் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்.
நம்மை உலகுக்கு காட்டிய அந்த உன்னத நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள்..
-'பரிவை' சே.குமார்.
17 எண்ணங்கள்:
நல்லவேளை, நான் பார்க்கவில்லை. இணைப்புக்கும் செல்லவில்லை!
வெட்கக்கேடு!!!! வேறென்ன சொல்றதுக்கு இருக்கு?
விஜய் தொலைக்காட்சி தான் கொஞ்சம் தரமான தோலியக்காட்சி என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்புக்கு ஆப்பு வைத்துவிட்டார்களே !!!!
என்னத்தை சொல்ல...உங்கள் வேதனை நன்றாக புரிகிறது குமார்.
நன்றி நண்பர் குமார் அவர்களே, என்கோபம் நியாயமானதே என்று உங்களின் கோபத்தைக் காட்டி, அதில் என் வலைப்பக்க இணைப்பையும் தந்தமைக்கு மிக்க நன்றி. குறைந்த பட்சம் இதுபோலும் எதிர்ப்புகள் வரும் என்பதையாவது இதுபோலும் தொலைக்காட்சிகளும், தொ.கா.நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்களும் தெரிந்துகொண்டால் நல்லது. தங்களின் பகிர்வுக்கு நன்றி.
நன்றி நண்பர் குமார்,
எனது இந்தப் படைப்பை இரண்டே நாளில் இரண்டாயிரம் பேருக்கும் மேல் படித்திருக்கிறார்கள். இதில், தமிழ்மணம், தமிழ்வெளித் திரட்டிகளுக்கு எனது முதல் நன்றியென்றால், உங்கள் வலைப்பக்கத்தில் தந்த இணைப்பின் வழியாக மட்டும் சுமார் 150பேர் வந்திருக்கிறார்கள் என்று என் ப்ளாக்கர் நண்பன் சொல்கிறான். தங்கள் உணர்வுப் பகிர்வுக்கும் என் தனிப்படட நன்றி நண்பரே. நம் நட்பு தொடரட்டும். நன்றி,வணக்கம்
அவர்களின் பெற்றோர்களை நினைத்து வருத்தப்படுகிறேன்...
முன்ன சன் டி.வி.ல ஒரு நிகழ்ச்சில பணம் பண்றதுக்காக கணவன் மனைவியான ஆசிரியர்கள் டப்பாங்குத்து ஆடினதைப் பார்த்தும் (ஸ்கூல்ல பசங்ககிட்ட என்ன மரியாதை கிடைக்கும் இதுங்களுக்கு?), பல நிகழ்ச்சிகள்ல சின்னஞ்சிறு குழந்தைகள் வயசுக்குப் பொருந்தாத ஆபாசப் பாடல்களுக்கு ஆடறதப் பார்த்தும் நொந்து போனதுண்டு நான். இப்ப ஆபாசத்தின் உச்சம் தொட்டுப் பார்க்க முனைகிறார்கள். நம்மைப் போல ஆசாமிகள் புலம்பி நொந்துக்கறதத் தவிர என்ன செய்யறது? ஒண்ணே ஒண்ணு செய்யலாம்.... தொலைக்காட்சியைப் புறக்கணிக்கலாம். (நான் பழைய படப் பாடல்கள், செய்தி சேனல்கள் மட்டுமே பார்க்கற பழக்கம் வெச்சிருக்கேன்)
டிவி காரங்கதான் இப்படி ஒரு கேவலமான நிகழ்ச்சியை நடத்துறாங்கன்னா அதில் கலந்து கொள்ளும் பெண்கள் மிக கேவலமாக நடந்து கொள்கிறார்கள் இப்படியே போனால் வருங்ககால நிகழ்ச்சியில் நடிகனின் பேண்டுக்குள் கைவிட்டு அதை தொட்டு பார்க்க ஆசைபடுவார்கள் நீளம் அறிய முற்படுவார்கள் தனக்கு அந்த நடிகன் புடவை கட்டிவிடனும் என்றும் இருக்கும் ஆடைகளை களைந்து அவன் முன்னால் நிற்பார்கள் இன்னும் பல கேவலங்களை எல்லாம் பார்க்கலாம் அதற்கு தூரம் அதிகமில்லைதான்
சூப்பர் குமார்..நான் நினைச்சதை அப்படியே எழுதிட்டீங்க..இதுகளையும் ஒருத்தன் கட்டி, குடும்பம் நடத்தவா?
வணக்கம் குமார்!அந்த நிகழ்ச்சி பார்க்கவில்லை.உங்கள் பகிர்வுக்குப் பின் பார்க்க வேண்டாமே என்றே தோன்றுகிறது......திருந்திட்டாலும்!?
நானும் நிகழ்ச்சி பார்த்து அருவருப்படைந்தேன்.
வேதா. இலங்காதிலகம்.
நானும் நிகழ்ச்சி பார்த்து அருவருப்படைந்தேன்.
வேதா. இலங்காதிலகம்.
சாட்டையடி பதிவு.. இதே மாதிரி ரேட்டிங்கிற்காக நாமலும் நடத்துவோம்னு எல்லா டிவியும் ஆரம்பிச்சா ... ? ! FB பயனாளிகளை முடக்க நினைக்கும் அரசு ,அரசியல் கட்சிகள் இதை கண்டுக்காதா ?
இது முதன் முறையாக நடப்பது போல கொதித்து இருக்கீங்க. பாகவதர் காலத்தில் அவரது வசீகர குரலில்,முகத்தில் மயங்கி தினமும் பெண்கள் ஓடி வருவார்களாம். இப்ப சமீபமா மெட்ரோ பிரியா கமலுடன் நடத்திய கூத்தை பார்க்கவில்லயா? ஒரு சென்னை கல்லூரியே சூர்யா முன்னாடி ஜொள்ளோ ஜொள்ளு ஊத்துது. இதுக்கு கல்லூரி முதல்வர் அம்மாவே தலமை!! இந்த பெண்களை, பெத்தவங்களை தான் சொல்லணும். பகுத்தறிவே இல்லாம பெண்களை வளர்த்து , நடிகன் பின்னாடி நாயை விட கேவலமா அலையா விட்டதற்க்கு. விஜய் டீவீ ஒரு வியாபாரி. அவங்களை நாம் குறை சொல்ல கூடாது. புறக்கணிக்கணும்.
தொடர்ந்து இப்படி நடந்து கொண்டே தான் இருக்கிறது..... இதில் பெருமை கொள்ளும் இவர்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது...
சூப்பர் ஜி
விஜய் டிவி பல நல்ல நிகழ்ச்சிகளைத் தருகிறது. கூடவே இம்மாதிரி கேவலமான தரங்கெட்ட நிகழ்ச்சிகளையும்... நல்லவேளை, நீங்கள் பதிவில் சொல்லியிருக்கும் இரண்டையும் நான் பார்க்கவில்லை...
கருத்துரையிடுக