மென்டலாக யோசித்து யோசித்து உருவாக்கும் இசை இதயத்தைத் தொடாது. இசை என்பது தானாக வரவேண்டும். அதுதான் மனசைத் தொடும் என்றார் இசையமைப்பாளர் இளையராஜா.
லண்டன் மாநகரில் முதல் முறையாக இளையராஜாவின் 'ராஜா தி ராஜா' என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 24-ஆம் தேதி லண்டனின் புகழ் பெற்ற "ஓ 2' அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜெயச்சந்திரன், எஸ்.பி.சைலஜா, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக்ராஜா, மது பாலகிருஷ்ணன், சுசித்ரா, சின்மயி, பவதாரணி உள்ளிட்ட பாடகர்களும் 75-க்கும் அதிகமான இசைக் கலைஞர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் இளையராஜா கூறியது:
லண்டன் வாழ் தமிழர்களுக்கு மிகச் சிறந்த இசை நிகழ்ச்சியாக இது அமையும் என நினைக்கிறேன். மொத்தம் 43 பாடல்கள் இந்த நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐந்து மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சிக்குத் தேவையான பாடல்கள் அதில் இடம்பெறும்.
அந்த காலத்தில் அரை மணி நேரத்தில் மெட்டுப் போட்டு 2 மணி நேரத்தில் உருவான பாடல்கள் இவை. அதே பாடல்களை இப்போது இந்த நிகழ்ச்சிக்காக இசைத்தும், பாடியும் பயிற்சி எடுக்கும் போது 2 நாள்கள் தேவைப்படுகின்றன.
பின்னணி இசைக்காக 3 நாள்களுக்கு மேல் எந்தப் படத்துக்கும் நான் எடுத்துக் கொண்டதில்லை. அப்படித்தான் இதுவரை 750-க்கும் அதிகமான படங்களை முடித்திருக்கிறேன்.
இன்றைக்கு மின்னணு சாதனங்கள் இசையில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த பிறகு, அந்த வேகம் குறைந்து விட்டது. இசை நிகழ்ச்சிக்காக குறிப்பிட்ட சில பாடல்களை இசைத்துப் பார்க்கும் இசைக் கலைஞர்கள் எப்படி இது போன்ற பாடல்களை உருவாக்கினீர்கள் என ஆச்சரியப்படுகிறார்கள். அது தானாக வந்தது... அதை அப்படியே தந்துவிட்டேன். யோசித்து யோசித்து மென்டலாக செய்தால் மென்டலாகத்தான் போகணும்...
ப்ரியா இசை
நான் இசை அமைத்த ப்ரியா படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது போன்று பத்து நிமிடங்களுக்கு காட்சி வைத்திருப்பார்கள். தெருவில் நடப்பது, ஷாப்பிங் பண்ணுவது, டால்பின் ஷோ பார்ப்பது, இப்படி அந்த காட்சிகள் இருக்கும். இதற்கு பத்து நிமிடம் தொடர்ந்து பின்னணி இசை அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஷாட்டுக்கும் அது தனித்தனியாக இருக்க வேண்டும். அதற்கு நான் ஒரு மணி நேரத்தில் இசை அமைத்தேன். இப்போதுள்ள இசை அமைப்பாளர்கள் ஏன் உலகத்தில் உள்ள எந்த இசை அமைப்பாளரிடமும் இந்தக் காட்சியை கொடுங்கள்; குறைந்தது ஒரு மாதம், இரண்டு மாதம் எடுத்துக் கொள்வார்கள்.
மின்னனு சாதனங்களின் வருகையால் இசையமைப்பாளர்கள் சோம்பேறிகளாக்கிவிட்டது. எல்லா வேலையையும் கம்ப்யூட்டரே செய்வதால், இவர்கள் சோம்பேறிகளாகி விட்டார்கள்," என்றார்.
செய்திக்கு நன்றி : தட்ஸ்தமிழ்படங்களுக்கு நன்றி : கூகிள்
-'பரிவை' சே.குமார்.
5 எண்ணங்கள்:
லண்டன் வாழ் தமிழர்களுக்கு மிகச் சிறந்த இசை நிகழ்ச்சியாக இது அமையும் என நினைக்கிறேன். மொத்தம் 43 பாடல்கள் இந்த நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐந்து மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சிக்குத் தேவையான பாடல்கள் அதில் இடம்பெறும்.
எனது அபிமான இசைமைப்பாளர் இளையராஜாதான் .இவரது இந்த நிகழ்வு நினைத்த வெற்றியை ஈட்ட வாழ்த்துக்கள் இப்போதே .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
எது எப்படியோ ரசிக்க வைத்த பல பாடல்களை தந்திருக்கார். அதுவரை பாராட்டத்தக்கவர். இன்னிக்கும் பேர்ந்து பயணங்களில் அவரைவிட வழித்துணை ஏதுமில்லை
என்னைப் போன்ற இளையராஜாவின் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கவலை லண்டன் இசை நிகழ்ச்சியில் ஏடாகூடமாக அதையாவது பேசி பெயரை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே.
கமலஹாசன் மன்மதன் அம்பு படதுல்ள சொல்வாரு திமுறு வேணும்ன்னு அது இவார்த்ட ரொம்ப இருக்கு பா
" ஒரே கவலை லண்டன் இசை நிகழ்ச்சியில் ஏடாகூடமாக அதையாவது பேசி பெயரை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே."
எனக்கு சந்தேகமேயில்லை. இவர் வாய் நிச்சயம் சும்மா இருக்காது. ஏதாவது உளறி கெட்ட பெயர் வாங்கத்தான் போகின்றார்
கருத்துரையிடுக