மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 15 ஜூலை, 2020

திங்கள், 13 ஜூலை, 2020

மனசின்பக்கம் : செம்மொழியும் எம்மொழியும்

மனதில்பட்டதை எழுதி ரொம்ப நாளாச்சு... நிறைய கதைகளை வாசித்து அது குறித்தெல்லாம் எழுதியாச்சு... 2016-ல் மங்கையர் சிகரத்தில் எழுதிய சிறுகதையான 'நேசம் சுமந்த வானம்பாடி' நேற்று சிறுகதைகள்.காம் தளத்தில் பகிரப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லி, மனதில்பட்டதைப் பேசப் போகலாம் வாருங்கள்.

புதன், 8 ஜூலை, 2020

வாசிக்க சில கதைகள்

நேரில் சந்தித்ததில்லை... போனில் பேசிக் கொண்டதில்லை... ஆனாலும் என் பதிவுகளில் கருத்துச் சொல்வார்... அவரின் இழப்பு வலையுலகுக்கு பேரிழப்பு... புலவர் சா. இராமானுசம் ஐயா😭 அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

புதன், 1 ஜூலை, 2020

'ஈழ இலக்கியத்தைப் புரிந்து கொள்ளல்'-குணா கவியழகன்

கடந்த வெள்ளியன்று நடந்த, நந்தா அவர்கள் முன்னெடுத்த ஜூம் கலந்துரையாடல் டாக்டர். சென் பாலன் அவர்களின் 'மாயப் பெருநிலம்' என்னும் நூல் குறித்த அறிமுகமும், எழுத்தாளர் குணா கவியழகன் அவர்களின் 'ஈழ இலக்கியத்தைப் புரிந்து கொள்ளல்' என்னும் தலைப்பிலான உரையுமாய் மிகச் சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது.

ஞாயிறு, 28 ஜூன், 2020

சினிமா : Krishna and his Leela (தெலுங்கு)

மோகன் நடித்த இரட்டை வால் குருவி பார்த்திருப்பீங்கதானே... அது மாதிரி ஒரு படம்தான் இது... அதில் ரெண்டு மனைவி...  இதில் முன்னாள், இந்நாள் காதலிகள்... அவ்வளவே வித்தியாசம்.. இங்கும் அங்கும் பயணித்தல் இரண்டிலும் ஒன்றே... அதுவும் ரெ.வா.குவில் மருத்துவமனையில் மாறிமாறி அலைவானே அதேபோல் இதில் தங்கையின் திருமணத்தில்... இருவருடனும்  ஜோடி போட்டு ஆட வேண்டிய நிலையில் பேச்சு வார்த்தையில்லாத அப்பனால் இரட்சிக்கப்படுகிறான். மொத்தத்தில் மத்தளத்துக்கு அடிவிழுவது இரண்டிலுமே ஒன்றுதான்.

சனி, 27 ஜூன், 2020

சினிமா : கப்பேள (kappela - Malayalam)

மலையாளத்தில் கப்பேள என்றால் மேரி மாதாவை மட்டும் வைத்து வழிபடும் ஒரு சிறிய இடம் என்று சொல்கிறார்கள். அப்படியானதொரு மேரி மாதாவின் சிலையொன்று நாயகியின் வீட்டினருகே இருக்கிறது. அதுவே அவள் அடிக்கடி போய் வழிபாடு செய்யுமிடமாகவும் இருக்கிறது.