மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 3 ஆகஸ்ட், 2024

வாத்தியார் விமர்சனக் கூட்டம் - வீடியோ

சென்ற சனிக்கிழமை மாலை துபையில் 'வாத்தியார்' சிறுகதைத் தொகுப்புக்கு முதல் விமர்சனக் கூட்டம் நடைபெற்றது. எதிர்சேவை, பரிவை படைப்புக்கள் போன்ற சிறுகதைத் தொகுப்புக்களுடன் ஒப்பிடும் போது இது சற்றே வித்தியாசமான தொகுப்பு என்று சொல்லலாம்.


ஆம்... கேலக்ஸியில் புத்தகம் கொண்டு வரலாமென பாலாஜி அண்ணன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தாலும் என் சூழலால் தள்ளிப் போக, கேலக்ஸியின் முதலாமாண்டு விழாவிற்குப் புத்தகம் கொண்டு வந்தே ஆக வேண்டும் எனச் சொன்னதுடன், சிறுகதைகள் கையிருப்பு இருக்கு அதைத் தர்றேன் என்றவனிடம் 'இல்லையில்லை... இந்த மாதிரி எழுது' என அண்ணன் கொடுத்த வேலைதான்... ஒரு கதாபாத்திரம் எல்லாக் கதையிலும் நடுநாயகமாக இருக்க வேண்டும் என்பது. இது சற்றே சவாலான விஷயம்தான் என்றாலும் முயற்சித்த்

அப்படியான கதாபாத்திரமாய் யாரை வைப்பது..? என்ற யோசனையில் வந்ததுதான் வாத்தியார் கதாபாத்திரம். கிராமங்களில் அரசு வேலையில் இருப்பவருக்கு, குறிப்பாக வாத்தியாருக்குப் பெரும் மரியாதை இருக்கும். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் எல்லாருடைய மனதிலும் இருக்கும். நான் அப்படியான மனிதரைப் பார்த்து வளர்ந்தவன் என்பதால் என் கதாபாத்திரத்தை வாத்தியார் என முடிவு செய்தேன். எழுதி, அவர் இதை மாற்று அதை மாற்று எனச் சொல்லி ஒரு வழியாக வாத்தியாரைக் கொண்டு வந்தோம்.

ஒரு வருடத்துக்குப் பின்னர்தான் முதல் விமர்சனக் கூட்டத்துக்கான வாய்ப்பு வாய்த்தது என்றாலும் கதைகள் எல்லோரையும் கவர்ந்திருக்கின்றன என்பது மகிழ்வுதானே. பேசிய அனைவரும் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். அன்றைய மாலை மகிழ்வான மாலையாக இருந்தது.

வாத்தியார் - அதற்கான இடத்தைக் கண்டிப்பாக அடைவார் என்பதை அன்று உணர்ந்தேன். இனி எழுதுவதை இதைவிடச் சிறப்பாக எழுத வேண்டும் என்பதையும் எனக்கு உணர்த்திய கூட்டம் இது. 

ழுத்தாளர் / விமர்சகர் பால்கரசு, 'கிராமத்து மண்ணில் பிறந்து வளர்ந்து அங்கு தங்களது வாழ்வின் பெரும்பகுதியை கழித்த பெரியவர்களை அந்த மண்ணில் இருந்து பிடுங்கி வேறு இடத்துக்குக் கொண்டு செல்வதென்பது நடக்காத காரியம். ' என்று பேசினார். 



மீரகத் திமுகவின் முக்கிய முகமான விமர்சகர் / வாசிப்பாளர் பிலால் அலியார், 'நீங்கள் நன்றாகப் படித்த மகளைப் படிக்க வைக்கவில்லையே என வாத்தியார் சொன்னதும் அந்த மனிதர் தன்னோட பேத்தியை நல்லாப் படிக்க வைப்பேன் எனச் சொல்வார். இதில் கல்வியின் முக்கியத்துவத்தை, அதுவும் பெண் கல்வியின் முக்கியத்துவத்துவம் சொல்லப்பட்டிருக்கும்.' என்று பேசினார். 



கொச்சியில் இருந்து வீடியோ விமர்சனம் அனுப்பியிருந்த எழுத்தாளர் ஹேமா, 'நிச்சயித்த திருமணங்கள் குறித்து தனது மகளுடன் பேசியபோது நிச்சயித்து திருமணம் பண்ணும் முறையை ஒழிக்க வேண்டும் என்றும் காதல் திருமணங்களை ஆதரிக்க வேண்டும். அவைதான் சமூக மாற்றத்தை ஏற்படும்' என்று பேசியிருந்தார். 



தீவிர வாசிப்பாளர் / விமர்சகர் ராஜாராம், 'வேரும் விழுதுகளும் நாவலில் வரும் கண்ணதாசனைப் பற்றியும், அந்த நாவலை வாசித்தபோது பல இடங்களில் தான் அழுததையும் சொல்லி, வேரும் விழுதுகளை கண்டிப்பாக வாசியுங்கள்' என்றார். 



ழுத்தாளர் / சமூக ஆர்வலர் / பேச்சாளர் / தொழிலதிபர் ஜெசிலா பானு, 'கதைகள் வட்டார வழக்கில் இருப்பதால், அதுவும் மதுரை வட்டார வழக்கு  என்பதால் புரிந்து கொள்வது தனக்கு மிகுந்த சிரமம்.  எதிர்சேவையை வாசிக்கும் போதெல்லாம் சுத்தமாப் புரியவில்லை. இப்போது கொஞ்சம் அந்த வார்த்தைகளைப் புரிந்து கொண்டுள்ளேன்' என்றார். 



ழுத்தாளர் சிவா, 'எந்த ஒரு நிகழ்வு குறித்து எழுதினாலும் விரிவாக, பேசியதை எல்லாம் அப்படியே எழுதுவார், எனக்கு வியப்பாக இருக்கும். அவரின் எழுத்தும் அப்படித்தான் வாழ்வியலைப் பேசும், எனக்கும் கூட சில இடங்களில் அயற்சியைக் கொடுத்தாலும் அதுதானே வாழ்வியல் அதை மிக அழகாகத் தன் எழுத்தில் கொண்டு வருவார்' என்றார். 



வாத்தியார் குறித்து தங்களது கருத்தைப் பகிர்ந்து கொண்ட,  விழாவுக்கு வந்திருந்து வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

இந்த விழாவை நடத்த முன்னெடுத்த கேலக்ஸி பதிப்பகத்தின் உரிமையாளரும், எனது அண்ணனுமாகிய பாலாஜி பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி.

இந்த விழாவுக்குத் தனது அலுவலகத்தில் இடமளித்த திருமதி. ஜெசிலா பானு அவர்களுக்கு நன்றி.

இந்த விழாவில் மிகச் சிறப்பான போட்டோக்களை எடுத்த எங்க பால்கரசுக்கும், சிறப்பாக வீடியோ பதிவு செய்த சகோதரர் ஸ்ரீஹரீஸ் அவர்களுக்கு நன்றி.

சிறப்பான நிகழ்வு. மகிழ்ச்சி.
----------------------------
வாத்தியார்
சிறுகதைத் தொகுப்பு
கேலக்ஸி பதிப்பகம்
விலை ₹. 180/-
வருடம் : 2023
----------------------------

-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாத்தியார் - சிறுகதைத் தொகுப்பு - பாராட்டுகளும் வாழ்த்துகளும் குமார்.