மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

மனசு பேசுகிறது : கறுப்பி புவனாவுடன் செல்வம்

லக்கல் ட்ரீம்ஸில் வெளிவந்து கொண்டிருக்கும் 'கறுப்பி' தொடருக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகச் சகோதரர் தசரதன் சொன்னார். பார்வதி டீச்சர் உள்ளிட்ட சிறுகதைகள் எல்லாம் அதிகமானோர் படித்ததாகக் காட்டும் வேளையில் கறுப்பியை வாசித்தவர்கள் அந்தளவுக்கு இல்லையே என்று கேட்டபோதுதான் தசரதன் அப்படிச் சொன்னார். மேலும் அதிகமான வாட்ஸப் பகிர்வும், தினமும் பகிரலாமே என்ற எண்ணப் பகிர்வுகளும் வருவதாய்ச் சொன்னது மகிழ்ச்சியே... கறுப்பி மூன்று பெண்களின் வாழ்க்கை... முடிந்தால் வாசியுங்கள்... உங்கள் கருத்தைச் சொல்லுங்க.

யாவரும்.காமின் சிறுகதைப் போட்டியில் முதல் சுற்றில் இருந்து அடுத்த சுற்றுக்குத் தேர்வான கதைகளில் எனது கதையும் ஒன்று... இதுவே பெரும் மகிழ்வான விஷயம்தான்... வெற்றி... பரிசு என்பதைவிட வந்திருந்த முன்னூறுக்கும் மேலான கதைகளில் முதல் சுற்றில் வென்று நாற்பதில் ஒன்றாய் நிற்பதே நம் எழுத்தின் மீதான நம்பிக்கையை விதைத்திருக்கிறது. சமீபமாய் எழுத்து அதன் உயரத்தை நோக்கி மெல்ல நகர ஆரம்பித்திருப்பது மகிழ்வே.

வியா பதிப்பகம் திரு. வதிலை பிரபா அவர்களின் மகாகவி இதழ் மீண்டும் மலர ஆரம்பித்திருக்கிறது. இங்கு ருவைஸில் இருக்கும் சகோதரர் சிவமணி அவர்கள் எழுதிய 'மௌன ஒத்திகைகள்' என்னும் கவிதைத் தொகுப்பு ஓவியா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. அது குறித்து வலைப்பூவில் எழுதிய கட்டுரை... அவர்களுக்குப் பிடித்துப் போனதால் மகாகவி இதழில் அக்கட்டுரை வெளிவந்திருக்கிறது. கட்டுரையை வெளியிட்ட மகாகவி இதழ் ஆசிரியர் குழுவுக்கு நன்றி. 

வீராப்பு போல இப்போதெல்லாம் கதை எழுதுவதில்லையா என்றொரு கேள்வி... வீராப்பு என்பது ஒருமுறைதான் எழுத முடியும்... அதற்கு முன்னே முழுக்க முழுக்க பேச்சு வழக்கில் எழுதி, காற்றுவெளியில் இருமுறை வெளியான  'நெஞ்சக்கரை' இன்னும் சிறப்பாய் இருக்கும்... அதேபோல் அகலில் வெளியான 'சாமியாடி', மின்கைத்தடியில் வெளியான 'இணை', யாவரும்.காமில் வெளியான 'பனைமரம்' என வாழ்க்கையுடன் எங்கள் மண்ணின் பேச்சு வழக்கும் இணைந்து எழுதிய கதைகள் ஏராளம் இருக்கத்தான் செய்கின்றன. வீராப்பின் வீச்சு மற்ற கதைகளுக்கு கிடைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம்... சாமியாடிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது என்பதே உண்மே. மத்யமரில் பகிர்ந்தபோது பலரைக் கவர்ந்தது.  அந்த வகையில் வீடு, வசந்தி, நாகர், நினைவுத்திரட்டி, சலூன், பட்டாம்பூச்சி என சமீபமாய் இணையத்தில் வெளியான கதைகள் எல்லாமே பலரின் பாராட்டைப் பெற்றன. அதிலும் குறிப்பாக கலக்கல் ட்ரீம்ஸில் ஆசிரியர் தினத்துக்கு எழுதிய  'பார்வதி டீச்சர்' மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது... சமீபத்தில் எழுதி முடித்த பின் மிகுந்த மனநிறைவைக் கொடுத்த கதை இது எனலாம். 

ன் கதைகளில் பெரும்பாலும் புவனா என்ற பெயர் இருக்கும்... அதேபோல் செல்வமும் இருக்கிறது. செல்வம் என்ற ஒரு கதை எங்கள் பிளாக்கில் வெளியானதென நினைக்கிறேன்... நண்பனைத் தேடி போதல்தான் கதை... சமீபத்தில் வாசகசாலையில் வெளியான வசந்தியிலும் செல்வம்தான் நாயகனாய்... இன்று ஒரு போட்டிக்கென 2020 எழுதிய கதை ஒன்றை எடுத்துத் திருத்திய போது அதன் நாயகன் பெயரும் செல்வம்தான். செல்வமும் புவனாவும் ஏனோ தெரியவில்லை... கதைகளில் பயணிக்கும் பெயர்களாய் மாறிப் போயிருக்கின்றன. இங்கிருக்கும் பாலாஜி அண்ணன் வசந்தியை வாசித்து விட்டு நீதாய்யா செல்வம்... போடாத ஆட்டமெல்லாம் ஊருல போட்டுட்டு வந்துட்டு இங்க வந்து எழுத்தாளனா மாறி நல்லவனா உக்காந்துட்டே எனச் சிரித்ததுடன் 'செலுவம் நித்யாகுமார் வணக்கம்' என முகநூலிலும் பகிர்ந்திருந்தார். இந்தச் செல்வமும் புவனாவும் பிடித்த பெயராகிப் போய்விட்டது என்பதுதான் உண்மை... இன்னும் பல கதைகளில் இவர்கள் உலா வரலாம்... நான் தொடர்ந்து எழுதும் பட்சத்தில்.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கண்டிப்பாக தொடருங்கள்... இரு பெயர்களை எங்கு வாசித்தாலும் 'மனசு பரிவை குமார்' என்று ஞாபகம் வர வேண்டும்... வாழ்த்துகள்...

ஸ்ரீராம். சொன்னது…

சுவையான கதம்பம். நண்பனைத் தேடிப்போகும் கதை நினைவில் இருக்கிறது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வரவேற்கத்தக்க உத்தி. வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள்....