மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 12 ஜனவரி, 2016

மார்கழிக் கோலங்கள் - 3

கோலம் என்பது எல்லாராலும் பொறுமையாகப் போட்டுவிடமுடியாது. அழகாகக் கோலம் போடும் ஒருவரே அவசர கோலத்தில் புள்ளிகளை வைத்து கோலமாக்க முயற்சித்தால் அது தெற்கு வடக்காக நீண்டோ அல்லது குறுகியோதான் காணப்படும்.  அதனால் கோலம் போடும்போது மனதையும் உடலையும் ஒருமைப்படுத்தி போட்டால்தான் கோலம் சிறப்பாக அமையும்.

பெண் குழந்தைகளுக்கு இயற்கையாகவே கோலத்தின் மீது ஒருவித ஈர்ப்பு வந்துவிடும். அவர்களின் பள்ளி நோட்டில் கோலம் வரைந்து பார்ப்பார்கள். பெண் குழந்தைகளின் கையில் இருக்கும் நோட்டில் கோலம் வரையவில்லை என்றால் அது உலக அதிசயமே. எல்லாருடைய நோட்டிலும்  ஒரு நாலு புள்ளி வைத்தாவது கோலம் போட்டிருப்பார்கள். கல்லூரியில் எங்களுடன் படித்த பெண்களின் நோட்டுக்களில் எல்லாம் கோலங்களின் ஊர்வலமாகத்தான் இருக்கும்.

கோலம் போடுவதில் மும்மரமாகிவிட்டால் மார்கழி மாதம் பனியாவது மழையாவது எப்படியும் கோலம் போட்டு விடுவார்கள். அதற்கு கலரும் ரசனையாக கொடுத்துவிடுவார்கள். கலர் கொடுக்கும் போது அது திட்டுத்திட்டாக தெரியக்கூடாது என அழகாக நேர்த்தியாக கலர் கொடுப்பார்கள். 

பொங்கலுக்கு முதல்நாள் இரவு வீட்டுக்குள் கோலம் போடுவார்கள். அரிசிமாவை அரைத்து கொஞ்சம் தண்ணீர் கலந்து வைத்துக் கொண்டு ஒரு சிறு துணியை நனைத்து விரல்களுக்கு இடையே வைத்து லாவகமாக இழுத்துக் கோலமிடுவார்கள். அது கொஞ்ச நேரத்தில் காய்ந்து அழகாக தோற்றமளிக்கும். சிமெண்ட் வீடுகளில் விரைவில் காயாது. யாரவது தெரியாமல் மிதித்துவிட்டால் அவர்களின் காலடித் தடத்தோடுதான் காட்சியளிக்கும். அதே கோலத்தை சாணம் போட்டு மெழுகிய மண்தரை வீட்டிலோ அல்லது செம்மண் சுவற்றிலோ வரைந்தால் அச்சுப் பதித்தது போல மிக அழகாக காட்சியளிக்கும். அடுத்து மெழுகும்வரை நடந்து நடந்து வெள்ளைக் கலர் கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கு கலருக்கு மாறினாலும் அப்படியே இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் வீட்டுத் தரைகளை கிரானைட், மார்பிள், டைல்ஸ் என ஆக்கிரமித்துவிடுவதால் வீடுகளுக்குள் போடும் கோலம் அரிதாகிவிட்டது. 

எங்க வீட்டு வாசலை அலங்கரித்த இந்த வருசத்து மார்கழிக் கோலங்கள் கீழே.... இவை அனைத்துமே என்னோட இல்லத்தரசியின் கைவண்ணமே... எப்படியிருக்குன்னு பார்த்துச் சொல்லுங்க...








கோலங்களை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

-'பரிவை' சே.குமார்.

26 எண்ணங்கள்:

கீதமஞ்சரி சொன்னது…

கண்களுக்கு விருந்தாய் அழகிய கோலங்கள். அழியாத கோலங்களாய் காட்சிப்படுத்திய உங்களுக்கும் கோலமிட்டக் கரங்களுக்கும் பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு கோலமும் அழகு...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கோலங்கள் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
நன்றி

UmayalGayathri சொன்னது…

மிகவும் அழகாய் இருக்கிறது கோலங்கள்....
தம +1

துரை செல்வராஜூ சொன்னது…

கண்கவரும் கோலங்கள்.. அழகு.. அருமை!..

Menaga Sathia சொன்னது…

aha sema asathal ...download the all kolam...

மாதேவி சொன்னது…

அழகிய கலங்கள். வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அனைத்தும் அழகான கோலங்கள்! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

migavum arumai.manaiviyin thiramayai paraatum ungallukku vazhthugal.

S.P.SENTHIL KUMAR சொன்னது…

கோலம் என்ற அழகியக் கலை கொஞ்சம் கொஞ்சமாக பெண்களை விட்டு விலகிக் கொண்டிருக்கிறது. படித்த நகரத்து பெண்கள் கோலம் போடுவதை மறந்து விட்டார்கள். தினமும் காலையில் குனிந்து கோலம் போட்டு வந்தால் வலியற்ற சுகப்பிரசவம் உறுதி என்கிறது ஒரு ஆய்வு.
த ம 5

KILLERGEE Devakottai சொன்னது…

கோலங்கள் அனைத்தும் நன்று
தமிழ் மணம் 5

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
கோலங்கள் ஒவ்வொன்றும் அழகு...வாழ்த்துக்கள். த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

படங்களை எடுத்துக்கொள்ளுங்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

எங்கள் பக்கம் இன்னும் கோலம் உயிர்ப்புடன் இருக்கிறது.
என் மனைவி கோலம் தொடர்ந்து போடுபவர்... அப்படியிருந்தும் இரண்டு குழந்தைகளுமே அறுவைச் சிகிச்சைதான்... ஆய்வு சொல்வது எங்களுக்குப் பொறுந்தவில்லை...

நிஷா சொன்னது…

கோலங்கள் அசத்தல், நித்யாவுக்கு அத்தனை பாராட்டும் சேரட்டும், கைவண்ணம் கலைவண்ணம் கண்ணைப்பறிக்கின்றது. அச்செடுத்து போட்டது போல் இதழ்களும் இலைகளும் அப்படியே ஒன்றுபோல் இன்னொன்று இருப்பது ஆச்சரியம் தான். நான் இந்தியா வந்தால் நித்யாவிடம் கோலம் போட கற்ருக்கொள்ள வேண்டும்.
என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிக மிக அழான கோலங்கள் கண்ணைக் கவருகின்றன, மனதையுக் அப்படியே லயிக்கவைத்துக் கட்டிப் போடுகின்றன. சகோதரிக்குப் பாராட்டுகள்!

Unknown சொன்னது…

நன்று, இனிய உழவர் தினநாள் வாழ்த்துக்கள் நண்பரே.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே,


ஒவ்வொரு கோலங்களும் மிக அருமை. கண்ணுக்கு விருந்தாய் அமைந்தன. ரசித்தேன். வாழ்த்துக்கள்.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.