மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோம்

ணக்கம் உறவுகளே...!

ரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன்... அலுவலகத்தில் கொஞ்சம் வேலை அதிகம்... அதனால் உங்கள் பதிவுகளை எல்லாம் இன்றில்லாவிட்டாலும் நாளை என்ற நிலையில் வாசித்து விடுகிறேன். ஆனால் கருத்து இடுவது ரொம்ப குறைந்து விட்டது. காரணம் அலுவலகத்தில் இருந்து வந்து சமைத்துச் சாப்பிட்டு பெரும்பாலும் இரவு பத்து மணிக்கு மேல் படுத்துக் கொண்டே வாசிப்பதாலும் மற்றவர்கள் உறங்கும் காரணத்தால் லைட் ஆப் செய்து விடுவதால் கருத்து இடுவதில் சிரமமாகி விடுகிறது. மற்றபடி உங்கள் பதிவுகளை எல்லாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். வார விடுமுறையில் கண்டிப்பாக வாசிக்கும் பதிவுகளுக்கு கருத்து இட்டுவிடுவேன். கொஞ்ச நாள்தான்... பின்னர் எல்லாம் சரியாகும் என்ற  நம்பிக்கை இருக்கிறது.

கைச்சுவையில் வைகைப்புயல் வடிவேலு களத்தில் இல்லாததால் விஜயகாந்தை வைத்து பெரிய காமெடி தர்பாரே முகநூலில் நடக்கிறது. இது அம்மாவுக்காக சிலர் செய்யும் செயல் என்று கூட என் நண்பர் என்னிடம் வாதிட்டார். விஜயகாந்த் நின்றால்... உக்கார்ந்தால்... சிரித்தால்... முறைத்தால்... என எல்லாமே நகைச்சுவையாகிறது. ஒரு மனிதரை கேலி பண்ணும் சுதந்திரம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதே ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபைக்குள் குரல் கொடுத்த ஒரே ஆம்பளை விஜயகாந்த்தான்.... தன்னால் முடிந்த நல்ல செயல்களை செய்பவரும் விஜயகாந்த்தான்... தான் செய்ததை வெளியில் சொல்லாதவரும் அவர்தான்... ஆனால் சமீபகாலமாக தனது கட்சிக்கான முகநூல் பக்கத்தில் அவருக்காக தமிழில் டைப் செய்யும் நபர், விஜயகாந்த் செய்த செயல்களைப் பதியும் போது நான் இன்று இவருக்கு இவ்வளவு கொடுத்தேன் என்று  எழுதி வைக்கிறார். இங்கே நான் என்பது விஜயகாந்தைக் குறிக்கும்... ஒரு கை செய்வது மற்றொரு கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்லுவாங்க.... ஆனால் இங்கு 'நான்...' 'நான்...' என்ற பெருமையே தலை தூக்கி நிற்கிறது. அதை மாற்றினால் நல்லது. சரி விஷயத்துக்கு வருவோம். விஜயகாந்த்  அரசியலில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். தனி மனிதராப் பாருங்கள்.... எதற்காக அவர் மீது அப்படி ஒரு வன்மம்... விஜயகாந்த் பிறந்தநாள் அன்று ஒரு பெரிய கட்டுரை எழுதலாம் என்று நினைத்து வேலைச் சோர்வினால் முடியாமல் போக இங்கு ஒரு பாராவிற்குள் சுருக்கியிருக்கிறேன். என்னடா இவன் விஜயகாந்துக்கு சொம்பு தூக்குறானேன்னு நினைக்காதீங்க... அரசியல்வாதியாய் நான் விஜயகாந்தைப் பார்க்கவில்லை... காரணம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று நினைத்தாலும் அங்கும் மாமன் மச்சான்தானே இருக்கானுங்க.... சரி விடுங்க... கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த ஒரு நடிகனாய்... நல்ல மனிதனாய்... எனக்குப் பிடிக்கும்... அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



ரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன்.... ஒரு நல்ல நடிகராய் விஜய் சேதுபதியைப் பிடிக்கும். குறைந்த செலவில் தானே படத்தை எடுத்து பாடல்களும் பாடி வெளியிட்டிருக்கிறார்.  ஆனால் அழுத்தமில்லாத கதையோட்டமும்.... உப்புச்சப்பில்லாத பாத்திரப் படைப்புக்களும் படத்தை பார்க்கும் போது நமக்கு ஒரு அயற்சியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் வளர்ந்து வரும் போது நல்ல பாத்திரங்களை எடுத்து செய்ய நினைப்போர் மத்தியில் இரண்டு கதாநாயகர்கள் கதை... இது போன்ற வீணாப்போன கதைகளை எடுத்து நடிப்பதைவிட அவரது திறமையை வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்களில் நடித்தால் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். இல்லையேல் அடுத்த சூப்பர் ஸ்டார் நாங்கள்தான் என சிவகார்த்திகேயர்கள் அவரைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள் என்பது சர்வ நிச்சயம். மாற்றங்கள் செய்து மீண்டும் மலர்வாரா பார்ப்போம்.

ம்மா அம்மான்னு நம்ம டவுசர் ராஜன் மதுரையில கூவியிருக்காரு கூவு எப்பா நம்மளாலே பாக்க முடியலை... எல்லாருக்கும் ஒரு அம்மா... ஆனா தமிழகத்துல இருக்க ஆறுகோடி மக்களுக்கும் அம்மாவாம் மக்கள் முதல்வர்.... அப்துல்கலாம் அவர்களின் இறுதி அஞ்சலிக்குக் கூட போகாத அம்மா ஒருவாரம் அரசு அலுவல்களை எல்லாம் அஞ்சலிக்காக நிறுத்திவைத்தாராம்...  சசிபெருமாள் ஐயா, டிராபிக் இராமசாமி ஐயா, இளங்கோவன், விஜயகாந்த், குஷ்பு என எல்லாரையும் கேவலமாகப் பேசுகிறார். கொடுத்த காசுக்கு நல்லா கூவியிருக்காரு.. ஆனா சினிமாவில் அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக... அம்மாவுக்காக ஒரு தனிப் பாடல் என நடித்தவர் இன்று கேடுகெட்ட அரசியலுக்காக அம்மாவைப் புகழ்கிறார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகன்... பல அம்மாக்களின் மனம் கவர்ந்த நாயகன்... இவ்வளவு கேவலமாக... எல்லாம் அரசியல்... இதை வேற அம்மா புகழ் பாடும் தினமலர் 'மதுரையில் ராமராஜன் டமால் டுமீல்' அப்படின்னு போட்டு விடியோ பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார்கள். என்ன டமால் டூமீலு.... இவனுக கலாம் ஐயா செத்தப்பவே 'காலமானார் கலாம்' அப்படின்னு போட்டவனுங்கதானே.... என்ன இருந்தாலும் எனக்கு கிராமத்து ராஜாவான ராமராஜனை ரொம்பப் பிடிக்கும். இப்ப இல்லைங்க நாயகனாய் ஜொலித்த காலத்தில்.... அதே மாதிரி அம்மாவையும் ரொம்பப் பிடிக்கும்... ஆமா என்னைப் பெற்ற அம்மாவையும்... என்னை மகனாகப் பார்த்த அம்மாக்களையும்...

வேரும் விழுதுகளும் தொடர்கதையை 33 அத்தியாயங்களோடு முடித்து விட்டேன். இன்னும் இழுக்கலாம்... கலையாத கனவுகள் போல் நீண்டு கொண்டே போய்விடுமோ என்பதால் சரியான சமயத்தில் முடித்தேன். முதல் தொடருக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை பேராசியர்களும். பெருந்தகைகளும், அம்மாக்களும் அக்காள் தங்கைகளும், அண்ணன் தம்பிகளும், தோழர் தோழிகளும் வாசித்து கருத்துச் சொல்லியிருந்தது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இந்தக் கதையை புத்தகமாக கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. எனது நலம் விரும்பும் அண்ணன் ஒருவர் வாசித்துச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். பார்க்கலாம்... அவரின் மனதை எனது கதை கவர்ந்தால் புத்தகம் ஆக்கும் எண்ணத்தை பூர்த்தி செய்யலாம். பார்ப்போம்... சகோதரி மேனகா அவர்கள் க்ரைம் தொடர் எழுதுங்கள் என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார். சரி ஒரு குறுநாவல் எழுதலாம் என்று யோசித்தால் கொலை செய்யவே வரமாட்டேங்குது... :( எப்படி சஸ்பென்ஸாக் கதை எழுதுறது... ரொம்பக் கஷ்டம்... இப்போதைக்கு தொடர் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை... பார்க்கலாம். சொல்ல மறந்துட்டேனே... என்னை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி.

ல்கி சிறுகதைப் போட்டிக்கு குறுநாவல் எழுத எண்ணம்.... ஆனால் இன்னும் ஒன்றும் தோன்றவில்லை... எதாவது வித்தியாசமான கரு தோன்றினால் நானும் போட்டியில் கலந்து கொள்வேன். நீங்களும் எழுதுங்கள் நண்பர்களே...

ன்னைச் சகோதரனாகப் பாவிக்கும் சகோதரிகளில் 'தம்பி எப்படியிருக்கே?' என்று விசாரித்துக் கொண்டே இருக்கும் காயத்ரி அக்காவைப் போல் சேனைத் தமிழ் உலா என்ற இணையப் பக்கத்தின் மூலமாக எனக்கு அறிமுகமாகி... (அவருக்கு என்னை அதற்கு முன்னே எனது எழுத்துக்கள் மூலமாகத் தெரியும் என்பதை பின்னர்தான் சொன்னார்) இன்று இரவு பத்து, பதினோரு மணிக்கெல்லாம் முகநூலில் இருந்தால் 'தம்பி என்ன பண்ணுறே...? மருமக்கள் நலமா?' என இலங்கைத் தமிழில் டைப்பும் அன்பு அக்கா நிஷா அவர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன் திருமண நாள்... திருமண நாளுக்கு முன்னர்  அக்காவுக்கு கையில் சிறிய காயம்... காயம் குணமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அக்காவின் திருமண நாளுக்கு... இந்தச் சந்தோஷம் என்றும் தொடரட்டும் என வாழ்த்துவோம். 

ண்பர் ஆவியின் தலைவாரி பூச்சூடி என்ற குறும்படத்தைப் பற்றி தில்லையகத்து துளசி சார் தனது பதிவில் சொல்லியிருந்தார். உடனே அதிகாலை முதல் வேலையாக படத்தைப் பார்த்தேன். அஞ்சரை நிமிடங்கள் ஓடும் படம். இருவரை வைத்து எடுத்திருக்கிறார். மிக நல்லதொரு கருத்து அதுக்கு ஆவிக்கு ஒரு சபாஷ். அம்மாவாக வரும் சகோதரி அனன்யா மகாதேவன் சிறப்பா செய்திருக்கிறார்கள்.  பேசுவதற்கு முன்னரே வரும் ஆங்கில சப்டைட்டில்... மொபைலை கையில் எடுத்த பின்னரே ரிங்க் ஆவது... பின்னணி இசையும் இன்னும் சரிபார்த்திருக்கலாம்.... என்ற எண்ணங்களை எனக்குள் விதைத்தது. என்னடா இவன் குறை சொல்றானேன்னு நினைக்காதீங்க... குறை அல்ல... ஒரு நல்ல கரு... அழகான படப்படிப்பு... எல்லாம் இருந்தும் இதுபோன்ற சின்ன விஷயங்கள் கொஞ்சமாய் சொதப்பிவிடுகின்றன... எனக்குப் பிடிச்சிருக்கு... நீங்களும் பாருங்கள்.


கொஞ்சம் ரிலாக்ஸாக ஒரு பாட்டுக் கேட்கலாம்... எவ்வளவு அருமையா இருக்கு பாருங்க...


மனசின் பக்கம் மீண்டும் மலரும்...
-'பரிவை' சே.குமார்.

23 எண்ணங்கள்:

ஸ்ரீமலையப்பன் சொன்னது…

உங்கள் மனதை புரிந்துகொண்டேன்...

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் நண்பரே
வெசயகாந்து தனியொரு மனிதனாக நான் பார்த்த வரையில் பழகிய வரையில் நல்லதொரு மனிதன் 80ல் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை
அரசியலில் அவர் கோமாளியாகத்தான் நடந்து கொ(ல்)கிறார் 80 உண்மையே... சும்மா கிடந்த வாய்க்கு அவ(ள்)ல் கிடைத்தால் விடுவாங்களா ? நம்ம பயலுக...
அவர் சட்டசபையில் வீரன் வீராசாமி போல்தான் பேசினார் ஆனால் ? சினிமா டயலாக் விட்டது தவறே... அவர் எனது நண்பர் 80தற்காக வேறு மா3 பேசமாட்டேன் 80தை புரிந்து கொள்ளவும் நண்பரே...

ஐயோ பாவம் இப்பத்தான் எனது இனிய நண்பர் வடிவேலு வெளியே வருகிறார் அவரை உள்ளே பிடித்து போட்டால்தான் உங்களைப் போன்றவர்களுக்கு சந்தோஷமாக இருக்குமோ ?
பதிவு அருமை.
கடைசி காணொளி அதிகம் ரசித்தேன்
தமிழ் மணம் 1

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யம்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அனைத்துமே சுவாரஸ்யம்!

ஆவியின் தலைவாரிப்பூச்சூடி உன்னை யைப் பகிர்ந்ததற்கு நன்றி...ஆம் அதனால்தான் பதிவிலெயே சொல்லியிருக்கின்றோம்..குறைகள்,கருத்துகள் மனதில் கொள்ளப்பட்டு அடுத்த படத்தில் மேம்படுத்தப்படும்..ஆவியின் சார்பிலும் எங்களது நன்றிகளும் நண்பரே! நண்பர் ஸ்ரீராம் நேற்றே பகிர்ந்துவிட்டார். ஆவியும், சீனுவும் நேற்று காலையிலேயே தளத்தில் போட்டுவிட்டார்கள் நண்பரே!
கடைசி காணொளி . அருமை!

நிஷா சொன்னது…

அம்மாடியோவ்! ஒரு வார நினைப்பும் வெளிவந்து விட்டது போல!

வேலைப்பழு... நல்லதே நடக்கணும்.

விஜயகாந்த்.. நானும் அவரின் நல்ல மனதும் செய்கைகளும், அஞ்சாத குணம் குறித்தும் அறிந்திருக்கின்றேன். விஜயகாந்த் என்றாலே சின்னக்கவுண்டர் போலவும் தட்டிக்கேட்கும் போலிஸ் அதிகாரி போலவும் தான் நினைவுக்கு வருவார்கள். அது அந்தக்காலம். இப்ப அவரையே நகைச்சுவை நாயகனாக்கி சிவந்த கண்ணும் நாக்கை நீட்டி பல்லை கடித்து விரலாய் எச்சரிப்பதும் தான் நினைவுக்கு வருகின்றது. ஒரு மனிதனை அரசியல் எத்தனை சாக்கடையாக்கும் என்பதற்கு விஜயகாந்த் நல்ல உதாரணம்.

வேரும் விழுதுகளும் படித்து விட்ட்டேன். பின்னூட்டம் இடல்ல. இடணும். கொஞ்சம் நீண்ட பின்னூட்டமாய் இடணும் பார்ப்போம் கை சரியாகட்டும்.

சினிமாப்படம் குறித்து நோகாமெட்ன்ஸ். நான் பார்ப்பதில்லை என தெரியும் தானே! இருப்பினும் ஆவி எனும் உங்கள் நண்பருக்கு என் வாழ்த்துகள்.

அம்மா ... அம்மம்மா தாங்க முடியல்லம்மா! ராமராஜனுக்கு வேற வேலை இல்லை. என்ன இருந்தாலும் அப்துல்கலாம் மறைவுக்கு செல்லாதது ஜெ .ஜெ வுக்கு ஒரு கறுப்பு முத்திரை தான்.

சிறுகதை போட்டிக்கு எழுதுங்க.. எழுதுங்க வெல்லுங்க வெல்லுங்க..

கிரைம் கதை எனில் கொலையாய் இருக்கணுமா. கொள்ளையாயும் இருக்கலாமே.. கிராமியச்சூழலில் ஒரு கோயில் கொள்ளை. அட அதான் நம்மூரில் கோயில் அம்மன் சிலையை வெளினாட்டுக்கு கடத்த திட்டம். அதை நம்ம குமாரு சார் டிகெக்டிவ் போட்டு கண்டு பிடிக்கின்றார். அதுக்கு உதவியாளர் நிஷாக்கா.. ஹாஹா! என்னப்பா எல்லா கிரைம் எழுத்தாளரகளும் டிகெட்டிவ்வில் வேலை செய்யும் அசிஸ்டென்னை சின்ன பெண்ணா அவனுக்கு தோழியா, அல்லது காதலியா தான் போடுகின்றார்கள். நீங்க தான் கிராமிய ரசிகராச்சே!கொஞ்சூண்டு மாத்திருங்க!.... ஹேஹே! நம்ம குமாருக்கு அசிஸ்டெண்ட அவங்க அக்கா ... அதும் சுவிஸ் சிட்டிசன் இருந்தால் அது பெருமை தானே.. இது எப்பூடி இருக்கு?

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நேரமில்லை என்று கூறிக்கொண்டே அதிக விஷயங்களை விவாதித்துள்ளீர்கள். உங்களின் குறுநாவல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா சொன்னது…

அனைத்தும் அருமை.

// அம்மாவையும் ரொம்பப் பிடிக்கும்... ஆமா என்னைப் பெற்ற அம்மாவையும்... என்னை மகனாகப் பார்த்த அம்மாக்களையும்... //

அனைத்திலும் அருமை.


Unknown சொன்னது…

தனி மனித விமர்ச்சனம் தேவையற்றது! என்பதே என் கருத்து!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
நானும் வெசயகாந்தை அரசியல் வாதியாக பிடிக்கும் என்று சொல்லவில்லை.. ஒரு மனிதராக அவர் மீது நமக்கு ஏன் இத்தனை காழ்ப்புணர்ச்சி என்றுதான் கேட்டேன்.

அப்புறம் உங்க நண்பர் வடிவேலு கொஞ்சம் அலட்டலாக இருப்பதால் அசால்ட் ஆறுமுகம் ஆவது சிரமமே... நல்ல நடிகர்... ஆனா... நம்ம அவரை உள்ளே பிடித்துப் போட வேண்டாம்... அவரே விலங்கிட்டுக் கொள்கிறார் ... :(
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அண்ணாவுக்கு பதில் மேலே இருந்து காப்பி பண்ணிய நண்பரே வந்திருச்சு அண்ணா... மன்னிக்கவும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
உண்மைதான் தவறுகள் அடுத்தடுத்த நகர்த்தலில் திருத்திக் கொள்ளப்படும் என்பதுதானே உண்மை.

மனதில்பட்டதைச் சொன்னேன். இதே போன்ற ஒரு கருத்தை சரவணன் அண்ணன் 'அகம் புறம்' எடுக்கும் முன்னரும் சொல்லியிருக்கிறேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
மிக நீண்டதொரு பின்னூட்டம்...
நான் எழுதிய ஒவ்வொரு பத்திக்கும் அழகான கருத்துக்களை கை வலியோடு தந்திருக்கும் தங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை அக்கா....

சிறுகதை அல்ல... குறுநாவல் எழுதணும்... பார்ப்போம்.

கிரைம் கதைக்கான கரு நல்லாத்தான் இருக்கு.... அதான் நீங்களே கதையைச் சொல்லிட்டிங்களே... :)

அப்ப அடுத்த கதையில் முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் நிஷா அக்காதான்....

இன்னைக்கு ஒரு கதை எழுதினேன்.... ரொம்ப நாளைக்குப் பிறகு அதில் நாயகிக்கு நிஷான்னுதான் பேர் தோணிச்சு... அப்புறம் மாத்திட்டேன்.

தொடர்ந்து பெரிய பெரிய பின்னூட்டமாக் கொடுத்தால் தம்பியும் வளருவேனுல்ல... தொடர்ந்து எழுதுங்க..

கை பரவாயில்லையா? காயம் ஆறிடுச்சா? பார்த்துக் கொள்ளுங்கள்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....
நேரமில்லை என்பதுதான் உண்மை ஐயா...
நேற்று வியாழன் வார இறுதி நாள்... இன்றும் நாளையும் விடுமுறை...
எனவே எழுத வாசிக்க, கருத்திட முடிந்த நாட்கள்...
முன்னெல்லாம் வாரம் முழுவதும் பகிர்வு... இப்ப 2 இடுவதே அரிது...
வாழ்த்துக்கு நன்றி ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
உண்மைதான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நிஷா சொன்னது…

ஏற்கனவே வேண்டிய அளவு வளர்ந்து தானே இருக்கீங்க! இன்னும் வளர்ந்தால் பனைமரம் போலாகிருவிங்களே! முடியும் போது பின்னூட்டமே ஒரு சிறுகதையா எழுதிரலாம் குமார். நேரம் , சூழல், மன நிலை எல்லாம் வாய்க்கணுமோ. நீங்க சொன்ன கை பிரச்சனை தான் ஓடிட்டே ஹோட்டல் வீட்டு என இருந்த எனக்கு பெரிய பிரேக்கை தந்து கொஞ்சம் சிந்தனையை தூண்டியது..

ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் கதையில் நிஷாஅக்கா வந்தேனா? வாய் சூப்பர்ல!.. பார்த்துப்பா நம்ம பேரை டெமேஜாக்காம சொர்ணாக்கா ரேஞ்சுக்கு வராமல் பார்த்துக்கங்க. ஹாஹா.

கை ஆறிட்டே இருக்கு. அடுத்த வாரம் தையல் பிரித்து விட்டபின் தான் தெரியும்.

நிஷா சொன்னது…

ஆ.வி அவர்களிந்தலைவாரிப்பூச்சூடி பார்த்தேன். சூப்பர் டாபிக். பட் எல்லா பேரண்ஸும் இப்படித்தான் இருக்காங்க. சினிமா கதா நாயகிகளை அம்மாவாக்காததுக்கு அவருக்கு என் ஸ்பெஷல் சல்யூட்!

நான் என் பசங்களை படிப்பு விடயத்தில் ரெம்ப திணிக்கல்லை. அவர்களால் முடிந்ததை செய்ய சொல்லியாச்சு. அதே நேரம் நன்கு படித்தால் நன்மையும் அவர்களுக்கு எனவும் புரிய வைத்தாச்சு. என்ன பழக்க வழக்கங்கள் நல்லதாய் இருக்கணும் எனும் விடயத்தில் மட்டும் என் கண்டிப்பு இருக்கும். நம்ம பசங்க மேல ரெம்ப எதிர்பார்க்காமல் இருந்தாலே போதும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அக்கா...
கை சரியானதும் நிறைய எழுதுங்க அக்கா...
இன்னும் எழுத்தில் வளரணும் அக்கா...
நிஷா அக்காதான் நந்தினி ஆயிருக்காங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மைதான் அக்கா...
பசங்களை அவங்க போக்குலயே விடணும் அதுதான் சரி...