மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 26 ஜூன், 2015

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி...கிடைத்ததா?

ண்ணாம் நம்பர் பெல்ட்டின் அருகில் நின்ற நான் வேகவேகமாக ஆறாம் நம்பர் பெல்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் ஒருவித பதட்டம் கலந்த பயத்துடன்...

அங்கே ஒரு சிறிய அலுவலகம்... நடுநாயகமாக சூடான் பெண் ஒருவர் அமர்ந்திருக்க அவருக்கு அருகே பிலிப்பைனைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் பக்கத்தில் ஒரு அரபிப்பெண் அமர்ந்திருந்தார்கள். நான் நேராக சென்று சூடானியிடம் என்னோட பெட்டி காணாமப் போச்சு... யாரோ மாத்தி எடுத்துக்கிட்டுப் பொயிட்டாங்க... அதே மாதிரி பெட்டி ஒண்ணு அங்க இருக்குன்னு சொன்னேன். உடனே இப்பத்தானே வந்தே... பதட்டப்படாதே... புகார் கொடுத்துட்டுப் போ... வந்துரும் என்றார். புகார் கொடுத்துட்டுப் போறது பிரச்சினை இல்லை... அதுல என்னோட சான்றிதழ் இருக்கு... நான் அபுதாபி போகணும்... திரும்ப எப்ப வந்து... எப்ப வாங்குறது என்றேன். உடனே இங்க யாராவது சொந்தக்காரங்க இருந்தா புகார் பேப்பரைக் கொடுத்துட்டுப் போ... அவங்க வாங்கிக் கொடுத்துருவாங்கதானே என்றார். சரி என ஆமோதித்தேன்.

மீண்டும் அவர் ரெண்டும் ஒரே மாதிரி பேக்கா? என்று கேட்டு ஒண்ணு செய்யி வெளியில போயிப் பாரு... யாராவது வச்சிருப்பாங்க... இல்லேன்னா திரும்பி வா என்றார். உடனே வெளியே ஓடினேன். அந்தக் கடைசியில் இருந்து இந்தக் கடைசி வரைக்கும் ஓடினேன்... எல்லோரும் நிக்கிறானுங்க.. என்னோட பெட்டியை எடுத்த புண்ணியவானை மட்டும் காணோம். சரி இனி இங்க நின்னு வேலையில்லையென மறுபடியும் சூடானியை தேடிப் போனா செக்யூரிட்டி உள்ள போகமுடியாதுன்னு சொல்லிட்டான். அப்புறம் அவனுக்கிட்ட விவரம் சொல்ல, அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இருந்த போனைக்காட்டி அதை போயி எடுத்தியன்னா அவங்களுக்கு ரிங்க் போகும். உன்னைய வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க என்றார். 

அங்கிருந்து அவன் காட்டிய இடத்துக்கு ஓடி போனெடுக்க அவர்கள் பேச, அவர்களிடம் மீண்டும் கதை சொல்ல கொஞ்ச நேரத்தில் அதற்கு அருகில் இருந்த வாயிலின் வழியாக ஒருவர் வந்து கூப்பிட மீண்டும் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்து உள்ளே சென்றேன். அப்போது அந்த தமிழர் வந்து என்ன இல்லையா என்றார். இல்லைங்க மறுபடியும் ஒரு பார்வை பார்க்கட்டுமா என்றேன் ஒரு நப்பாசையில்... இல்லைங்க நான் உள்ளயே போயிப் பார்த்துட்டு வந்துட்டேன். உங்க பேக் இல்லை. நீங்க புகார் கொடுத்துட்டுப் போங்க என்றார்.

சரி ஆனது ஆச்சு... இனி என்ன செய்ய புகார் பண்ணிட்டுப் போவோம் என அவர்களிடம் சென்றேன். என்னைப் பார்த்ததும் என்ன கிடைக்கலையா என்றவர், சரி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆபீசுக்கு போன் பண்ணி தொடர்பு எண் இருக்கான்னு கேட்போம் என்றார். அருகிலிருந்த பெண்ணிடம் சொல்ல அவரோ டேக் (Tag) நம்பர் வேண்டும் என்று சொல்லி என்னை அந்தப் பெட்டியில் இருக்கும் நம்பரைக் குறித்து வா என்றார். உடனே ஒண்ணில் இருந்து ஆறுக்கு ஓடினேன். பேரையும் நம்பரையும் எழுதிக் கொண்டு ஓடிவந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். அவர் ஏர் இந்தியாவுக்கு அழைத்து விசாரிக்க அவர்களோ இன்னொரு நம்பர் அதாவது Sequential Number வேணுமின்னு சொல்லிட்டாங்க. உடனே ஓடிப்போயி பேக்கையே தூக்கிக்கிட்டு வந்தேன். போன் செய்த பெண்ணைக் காணோம். அங்கே ஒரு லெபனானி அதிகாரி அமர்ந்திருந்தார்.

நான் சொல்லும் முன்னே பிலிப்பைனிப் பெண் விவரம் சொல்ல, அவர் ஏர் இந்தியாவுக்கு அழைத்தார். அவர்கள் துபாய் தொடர்பு எண் இல்லை என்றும் இந்தியா எண்தான் இருக்கு என்றும் சொல்லி நம்பரைக் கொடுத்தார்கள். என்னிடம் உனது போனில் இருந்து தொடர்பு கொள் என்றார். ஐயா சாமி ஊருக்குப் போயி நாப்பது நாளைக்கு மேலாச்சு. போன்ல இங்க கூப்பிடத்தான் காசிருக்கு.. ஊருக்கெல்லாம் கூப்பிடணுமின்னா கார்டு போட்டாத்தான் முடியும்ன்னு சொல்ல, அப்ப புகார் கொடுத்துட்டுப் போ என்றார். பின்னர் என்ன நினைத்தாரோ அவரே போன் பண்ணிட்டு சுவிட்ச் ஆப்ல இருக்கு... புகார் கொடுத்துட்டு போ என்று சொல்லி அதில் என்னென்ன இருந்தது என விவரமாகக் கேட்டு  எனது போன் நம்பர் விவரம் எல்லாம் போட்டு புகார் பதிவு பண்ணி ஒரு பேப்பரைக் கொடுத்து உங்க பெட்டி வந்ததும் போன் பண்றோம். வந்து வாங்கிக்கிட்டுப் போங்க என்றார்.

சரி என தலையாட்டிவிட்டு கிளம்ப, அந்த சூடானி வெளியில மறுபடியும் போய்ப்பாரு... ஒருவேளை அவங்க வந்திருந்தா கூட்டிக்கிட்டு வா... என்று சொல்லி அனுப்பினார். என்னடா இப்படி ஆச்சே... சான்றிதழ் எல்லாம் இருக்கேன்னு கவலையோட வந்தேன். வெளியே வந்து எவனாவது நிக்கிறானான்னு தேடினா ரெண்டு பேரு நம்ம பேக்கை வச்சிக்கிட்டு திருவிழாவுல காணாமப் போன பிள்ளைங்க மாதிரி நின்னானுங்க... போயி புடிச்சி ஏன்யா நீ பாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் பொயிட்டே... ரெண்டு மணி நேரமா நாயா அலையிறேன்னு சொன்னதும் இல்லைங்க எந்தம்பி அவசரத்துல மாத்தி எடுத்துக்கிட்டு வந்துட்டான்... சாரிங்க என்றான் அண்ணன்காரன். ஏங்க உங்க தம்பிதான் கொட்டையெழுத்துல பேரெழுதி வச்சிருக்காரே பின்ன எப்படிங்க... நல்ல ஆளுங்க... சரி விடுங்க... நல்ல நேரத்துல வந்தீங்க... இல்லேன்னா கவலையோட அபுதாபி போயிருப்பேன்னு சொல்ல எப்படி உள்ள போறதுன்னு கேட்டானுங்க... வாங்கன்னு மீண்டும் போன்... அந்தத் தமிழர் வந்து சொன்னேன்ல கெடச்சிருச்சு பாருங்க என்று கூட்டிச் சென்றார்.

அந்த சூடானி பாத்துட்டு கிடைச்சிருச்சா... சேம் சேம் பேக்கா... என்று சொல்லிச் சிரித்தவர். உம்பேரை எழுதிட்டு இப்படி எடுத்துக்கிட்டுப் பொயிட்டியே என்று அவனைப் பார்த்து சத்தம் போட்டார். சாரிங்க அவசரத்துல மாறிடுச்சு என்றான். இனிமே வரும் போது அவசரப்படாம உன்னோட பேக்கை எடுத்துக்கிட்டுப் போகணும் அடுத்தவங்க பேக்கை எடுக்கக்கூடாது என்றார் சிரித்துக் கொண்டே. பின்னர் புகாரை திரும்பப் பெற்று கையொப்பம் இட்டுக் கொடுக்க, அவனிடம் பேக்கை திறந்தியா என்று அந்த சூடானி கேட்க இல்லை என்றான். உடனே நீ திறந்து உன்னோட பொருட்கள் இருக்கான்னு பாரு... குறிப்பா சான்றிதழ் பைல் இருக்கான்னு பாரு என்றார். 

நானும் திறந்து பார்த்து இருக்கு என்று சொல்லவும் அவனைப் பார்த்து நீ போ என்றார். உடனே அவன் நன்றி சொல்லிக் கிளம்ப, எங்களுக்கு நன்றி சொல்றது இருக்கட்டும் அவருக்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டுப் போ... ரெண்டு மணி நேரத்துக்கு மேலாச்சு இந்நேரம் அபுதாபியே போயிருப்பாரு...  என்று சொல்லி என்னிடம் எங்கிருந்து வாறீங்க என்று கேட்டார். இந்தியா, தமிழ்நாடு என்றதும் மத்த ஆளுங்க மாதிரி கிருகிருன்னு (பேசிக்கிட்டே இருப்பது) கத்தாமல் ரொம்பப் பொறுமையா இருந்தாரு... இவரு ரொம்ம்ம்ம்ப்ப்ப நல்லவருன்னு சொல்ல அவனும் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றான். 

இதுக்கு இடையில ஊருக்கும் வேற சொல்லியாச்சா... மனைவியிடம் இருந்து போன் மேல போன் பெட்டி கிடச்சிருச்சும்மான்னு சொன்னதும்தான் அவருக்கு நிம்மதி. பின்னர் நான் பஸ் மாறி.. மாறி... அபுதாபி வந்து சேர பதினோரு மணி ஆயிருச்சு... வந்ததும் குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடினேன்.

நம்ம நிலைதான் இப்படின்னா... ஊருக்கு வந்திருந்த அண்ணன் சிங்கப்பூருக்கு திங்கள்கிழமை போச்சு... அதோட பெட்டியும் இதே கதையில மாறி, புகார் பண்ணி... இவனுக வந்து வாங்கச் சொன்னானுங்க... அவனுங்க அழகா அன்று மாலையே அலுவலகத்துக்குக் கொடுத்து விட்டுட்டானுங்க... நான் என்னண்ணே போயாச்சான்னு கேட்டா உன்னைய மாதிரியே நானும் பெட்டியை தொலச்சிட்டேம்ப்பான்னு சொல்லிச் சிரிக்கிறார். இது எப்படியிருக்கு...

-'பரிவை' சே.குமார்.

37 எண்ணங்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்ல வேளையாகப் பெட்டியும் சான்றிதழ்களும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நாம் எவ்வளவு உஷாராக இருப்பினும் இதுபோல சமயத்தில் ஆகிவிடுவது உண்டு. எனக்கே ஒரு முறை இது வேறு விதமாக சமீபத்தில் நள்ளிரவில் திருச்சி ஏர்போர்டில் நடந்தது. என் பயணம் துபாய் >>>>> திருச்சி.

சுற்றிக்கொண்டே வரும் நமது லக்கேஜ்களில் ஒன்றை சிலர் தவறுதலாக தன்னுடையது என நினைத்து கையில் கப்புன்னு பிடித்து எடுத்துக்கொள்வார்கள். பிறகு தன்னுடையது இல்லை என்றதும் அதை சுற்றிச்சுழலும் இடத்தில் திரும்பவும் வைக்காமல் கீழே எங்கேயாவது தனியாக தரையில் வைத்துவிடுவார்கள்.

அதுபோன்று என் 12 லக்கேஜ்களில் ஒன்றை மட்டும் ஒருவர் அவ்வாறு செய்து விட்டார். பிறகு எல்லோரும் விமான நிலையத்தை விட்டுச் சென்ற பிறகு, நான் அந்த மிஸ்ஸிங் ஒன்றைத் தேட, அதைக்கையில் பிடித்தபடி விமான நிலய சிப்பந்தி ஒருவர் என்னைத் தேட, ஒரு வழியாக நான் அதனையும் பெற்றுக்கொண்டு வெளியே வர நீண்ட நேரம் ஆகிவிட்டது.

அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள்.

Avargal Unmaigal சொன்னது…

ஆமாம் சான்றிதழை விட கையில் கொண்டுப் போகும் பெட்டியில் அப்படி என்னதானய்யா முக்கியமான ஐட்டத்தை வைத்து இருந்தீர்கள். உண்மையை சொல்லுங்க....இல்லைன்னா நீங்க கேர்ள் ப்ரெண்டுக்குதான் ஏதோ ஒன்றை வாங்கி வைத்து இந்த சான்றிதழை செக்கிங்க் பேக்கில் வைத்து சென்றதாக உங்கள் ஊருக்கு தகவல் அனுப்ப போகிறோம்

ப.கந்தசாமி சொன்னது…

//இது எப்படியிருக்கு//

நல்லாருக்கு.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பெட்டி என்ன பாடு படுத்திவிட்டது
பெட்டி மீண்டும் கிடைத்ததில் மகிர்ச்சி நண்பரே

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கமலஹாசன் திரைப்படம் பார்த்த மாதிரி இருக்கு. நாம் சரியா இருந்தா கூட நாம் அதிர்ஷ்டம் மத்தவனும் சரியா இருக்கணும் . அனுபவம் ஒரு பாடம்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

conveyor belt-லிருந்து பொருட்களை எடுக்க இவர்கள் காட்டும் அவசரம் பல சமயங்களில் தவறான பெட்டியை எடுக்க காரணமாகி விடுகிறது. Tag ஒட்டியிருந்தாலும், பெயரை படிக்காது எடுத்துக் கொண்டு போகிறார்களே எனத் தோன்றும்.

நல்ல வேளை பெட்டி திரும்ப கிடைத்ததே......

இரண்டு பகுதிகளையும் படித்து மொத்தமாய் இங்கே எழுதிவிட்டேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்பாடா...! சந்தோசம்...

அங்கும் அதே திண்டாட்டமா...?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்ல வேளை. தீர்வு கிடைத்ததறிந்து மகிழ்ச்சி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தாங்கள் சொல்லியிருப்பது உண்மையே...
இங்கு ஆபீசர்கள் மிகவும் உதவியாக இருந்தார்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
கொண்டு வந்ததே ஒரு பெட்டிதானய்யா...
அதைத்தான் எடை கூட இருக்குன்னு லக்கேஜ்ல போடச்சொன்னான்.
பேக்கில் ஐட்டங்களை அடுக்கியதே மனைவிதான்...
அதுபோக நம்ம வீட்ல போட்டுக் கொடுத்தாலும் கதைக்கு ஆகாது...
ஹா... ஹா.... நம்ம மேல அம்புட்டு நம்பிக்கை போங்க...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....
அப்போ கஷ்டமாத்தான் இருந்துச்சு... ஆனா இப்ப நல்லாத்தானிருக்கு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
அனுபவம் கண்டிப்பாக ஒரு பாடம்தான்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
பெயரெழுதி ஓட்டி வைத்து விட்டு எடுத்துக் கொண்டு போகிறார்களே அப்படி என்ன அவசரமோ அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
எல்லா இடத்திலும் இந்த திண்டாட்டம் இருக்கு அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

விமான நிலையத்தில் பெட்டி தொலைப்பு நல்ல அலைச்சல் கதை.
இதோ எனது கதை. 1987ல் முதன் முதலில் டென்மார்க் வந்தோம் நானும் 2 பிள்ளைகளும்.
கொப்பென்கேகன் விமான நிலையத்தில் பெட்டி வரவில்லை முறைப்பாடு எழுதிக் கொடுத்து விட்டுக் கவலையோடு வீடு வந்தோம்.முதலாவது மாடி எமது வீடு.
கீரே வீட்டக்கார ஆச்சி (டெனிஸ்) இருந்தார். அடுத்த நாள் காலை ஏதோ நினைவாகக்
வீட்டுக் கதவைத் திறந்து கீழே வந்தால் எமது பெட்டி பெரிதாக எம்மை வரவேற்றது.
அதாவது தபால்காரர் வைத்திட்டுப் போய்விட்டார். ஒரே ஆனந்தம் போங்க.
மிக நேர்மையானவர்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிங்கப்பூரில் இந்த வாரம் அண்ணனுக்கு அப்படித்தான் அலுவலகத்துக்கு அனுப்பிட்டாங்க...

சாரதா சமையல் சொன்னது…

பெட்டியும், சான்றிதழ் களும் கிடைத்தது அறிந்து மிகிழ்ச்சி குமார். தொடர்ந்து எழுதுங்கள்.

துரை செல்வராஜூ சொன்னது…

அவசரக்குடுக்கைகளால் எத்தனை அவதி!..
பெட்டி கிடைத்தவரைக்கும் மகிழ்ச்சி..

வாழ்க நலம்..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

பெட்டி கிடைத்ததில் மகிழ்ச்சி! அந்த ரெண்டு மணி நேர டென்சனை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை! நீங்க ரொம்ப பொறுமை சாலிதான்! வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

அப்பா.....டி! என்ன ஒரு அலைச்சல்? புண்ணியவான்கள் அங்கேயே கொண்டு வந்து தந்தார்களே.....

balaamagi சொன்னது…

அண்ணன் தம்பி இரண்டு பேரும் இப்படி தானா?
சரி அதையும் சொல்லூங்க, ஆமா பேக் கிடைத்த மகிழ்ச்சி,,,,,,,,
எப்படி?
நன்றி.

Tamizhmuhil Prakasam சொன்னது…

முக்கியமான சான்றிதழ்களை தனியாக சிறிய பெட்டியில் வைத்து நீங்கள் hand luggage ஆக உங்களுடனே வைத்திருக்கலாம்.

நல்ல வேளை. கிடைத்து விட்டது. மகிழ்ச்சி.

தங்களது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோதரரே. பலருக்கு இது ஓர் முன்னெச்சரிக்கை பதிவாக அமையும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
ம்ம்ம்... டென்சனான நிமிடங்கள் அண்ணா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

அப்பாடா ,இப்போதான் எனக்கும் நிம்மதி :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி..
ஹா... ஹா... ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி நிகழ்ந்தது ஆச்சர்யமே.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
ஒரே பெட்டி... வெயிட்டும் கம்மிதான்... அதனால கையில கொண்டு போயிடலாம்ன்னு நினைச்சது தப்பாப் போச்சு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நிஷா சொன்னது…

லக்கேஜ் ஒரு பெட்டி மட்டும் தான் கொண்டு வந்தீர்களா? உணவுப்பொருட்கள் எதுவும் கொண்டே வரலையா? காணாமல் போன பெட்டி திரும்ப கிடைத்தது என்றறிந்த பின் தான் மனசு அமைதியானது.

ம.தி.சுதா சொன்னது…

உங்கள் மனத்துக்கு கடவுள் என்றைக்கும் உங்களை கை விடமாட்டார் அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
கொண்டு செல்லவில்லை அக்கா...
தங்கள் கருத்துக்கு கண்டு சந்தோஷம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மதி சகோதரா...
ரொம்ப நாளைக்கு அப்புறம் வருகை... ரொம்ப சந்தோஷம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.