மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 21 ஜூன், 2015விடுமுறையும் திருவிழாக்களும்...

 ணக்கம்.
இறையருளால் உறவுகள் நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். விடுமுறை சந்தோஷங்களில் திளைத்து மீண்டும் பாலை மண்ணில் பாதம் பதித்து ஒரு வாரம் ஆனாலும் கண்ணில் ஆடும் மனைவி மக்களின் நினைவில் இருந்து இன்னும் மீள முடியாத துயரம். என்ன செய்வது...? வாழ்க்கை இப்படி ஒரு பாதையில் பயணிக்கிறதே... 


மே மாதம் ஊருக்குச் செல்வதில் இரட்டிப்புச் சந்தோஷம்... ஒண்ணு குழந்தைகளோட நேரம் செலவிடலாம்... இரண்டாவது திருவிழாக்கள்... குழந்தைகளோட நேரம் செலவிட்டதால் எங்கு சென்றாலும் நானும் வருவேன் என்று நின்றதால் உள்ளூரிலே கூட நிறையப் பேரைப் பார்க்க முடியவில்லை... அப்புறம் எப்படி நிலவன் ஐயா, தனபால் அண்ணா, கரந்தை ஐயா, சரவணன் அண்ணாவை எல்லாம் பார்ப்பது... எல்லாரும் மன்னிக்கனும்... எப்படியும் பார்க்கலாம் என்று எழுதியிருந்தால் கண்டிப்பாக ஒருநாள் சந்திப்போம்.

எங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா வைகாசி மாதம் நடந்தது. திருவிழா அன்று இரவு சன் டிவி புகழ் தேவகோட்டை ராமநாதன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. அவர் சொன்ன எல்லா நகைச்சுவைகளுமே பத்திரிக்கையில் வந்தவைதான் என்றாலும் கிராமத்து மக்கள்தானே என்று சொன்னார் போல... அதேபோல் பேசியவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள்தான்... அருமையாகப் பேசினார்கள். ஆனால் தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு குழந்தையை மேடை ஏற்றினார்கள். அதற்காகவே பேச்சாளர்களின் வரிசை மாற்றி பேச வைத்தார். அதனால் நல்லா பேசுபவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை... இதையும் ராமநாதன் அவர்கள் கிராமத்து மக்களுக்கு நாலு நகைச்சுவை சொன்னால் போதும் என்று நினைத்துத்தான் செய்தார்.


அந்தக் குழந்தை அம்மா சொல்லச் சொல்ல அப்படியே பேசினாலும் அதற்கு வளமான எதிர்காலம் உண்டு. ஒண்ணாம் வகுப்பு படிக்கும் போதே மேடையில் பயமின்றி அழகாய் அம்மாவின் வாயசைப்பைப் பார்த்துப் பேசும் அந்தக் குழந்தை பிற்காலத்தில் மிகச் சிறந்த பேச்சாளராக வரும் என்பதில் சந்தேகமே இல்லை. சிறிய கிராமம்... அவ்வளவாக கூட்டம் இல்லை என்றாலும் ஆரம்பத்தில் இருந்த கூட்டம் கடைசி வரை அப்படியே இருந்தது.

பால்குடம், கரகம் என திருவிழா மிகச் சிறப்பாக நடந்தது. ஸ்ருதியும் விஷாலும் மிக அழகாக முளக்கொட்டினார்கள் என்பது கூடுதல் சந்தோஷம். இதேபோல் இன்னும் சில திருவிழாக்கள், திருமணங்கள், விருந்துகள் என மே மாதம் அழகாய் கரைந்தது.


மீண்டும் அபுதாபி திரும்பிய போது ஏர்போர்ட்டில் பெட்டியை மாற்றி எடுத்துக் கொண்டு போன கதை அடுத்த பதிவாய்...

அப்புறம் இன்னொன்னு இன்று காலை ஸ்ருதியும் விஷாலும் போன் செய்து தந்தையர் தின வாழ்த்துச் சொன்னார்கள்... ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது..

மன ஆறுதலுக்காக மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்துத்தான் இந்தப் பகிர்வு... அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதுவேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார். 

27 கருத்துகள்:

 1. ஹாஹாஹா பெட்டி கை மாறியது எனக்கு நேரடியாக சொன்னாலும் பதிவில் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் ஆவலுடன்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. நீண்ட நாட்களுக்கு பிறகு...வாருங்கள் சகோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. மனதில் இருப்பதை மனம்விட்டு எழுததானே இந்த தளம் அதனால் நேறம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள் நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து படித்து செல்கிறேன் எனக்கு முத்துநிலவன் என்ற இளைஞரையும் திண்டுக்கல் தன்பாலன் என்ற பண்பாளரையும் மற்றும் வேறு சிலரையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. தந்தையர் தின வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. ஒண்ணாம் வகுப்பு குழந்தை மிகவும் சிறப்பாக வருவார்கள்...

  மனதில் உள்ளதை அவ்வப்போது கொட்டி விடுங்கள்... சிறிது ஆறுதல் கிடைக்கும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. விழாப் பகிர்வு அருமை. பெட்டிக் கதையை எதிர்பார்க்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. தங்கள் பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரி...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் திருவிழா பதிவை அருமையாக கொடுத்திருக்கீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 9. தொடர்ந்து எழுதுங்கள்! தவிர்க்க வேண்டாம்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. நல்வரவு. பகிர்வு அருமை. தந்தையர் தின வாழ்த்துகள்.

  தொடர்ந்து எழுதுங்கள். மனதுக்கும் ஆறுதல் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 11. மீண்டும் அபுதாபி.. அனல்காற்று.. அலுவலகம்.. அலுப்பு.. களைப்பு!..

  நல்வரவு தங்களுக்கு!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 12. ஏசியை விட்டு வெளியில் வரவேண்டாம் ...
  நல்ல பதிவு தோழர்
  தம+

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மது சார்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 13. வரவு நல்வரவாகுக! விடுமுறை முடிந்து வந்தது கண்டு மகிழ்வு.....தொடர்கின்றோம் நண்பரே! எழுதுங்கள் ! எப்போது நேஃப்ரம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம்...எழுத்து ஒரு வடிகால் மட்டுமல்ல நம் சிந்தனைகளை வளர்க்கும், மனதை ஒருமுகப் படுத்தும் நல்ல ஒரு கலையும் கூட...பதிவும் அருமை! இதோ பெட்டிக் கதைக்குச் செல்கின்றோம்....

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...