நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர்-1-ல் அவரின் பாடல்களைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. இவர் ஒரு பிறவிக் கலைஞன். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி நடிக்க கூடிய நடிகர். இன்றைய சினிமா நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி. இவரின் நடிப்பைப் பின்பற்றாத நடிகர்களே இல்லை எனலாம். அவரைப் பற்றிய சிறு குறிப்புக்களோடு அவரின் பாடல்கள் சிலவற்றைக் காணலாம்.
* செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் விழுப்புரத்தில் 01/10/1928 அன்று சின்னையாப்பிள்ளை - ராஜாமணி அம்மா அவர்களின் மகனாப் பிறந்தார்.
படம் : திருவிளையாடல்
பாடல் : பாட்டும் நானே பாவமும் நானே...
* சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் இவரது நடிப்பைப் பார்த்து வியந்த பெரியார் அவர்கள் 'சிவாஜி' கணேசன் என்று அழைக்க அதுவே நிலையானது.
* சிவாஜியின் முதல் படம் கலைஞரின் கதை வசனத்தில் வெளியான 'பராசக்தி'.
படம் : கர்ணன்
பாடல் : உள்ளத்தில் நல்ல உள்ளம்...
* சிவாஜி தமிழில் 270 படங்களிலும். தெலுங்கில் 9, இந்தியில் 2, மலையாளத்தில் 1 என மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். 19 படங்களில் கௌரவத் தோற்றத்தில் வந்திருக்கிறார்.
*நல்ல குரல் வளமும் தெளிவான உச்சரிப்பும் இவரின் சிறப்பு அம்சங்களாகும்.
படம் : கௌரவம்
பாடல் : கண்ணா நீயும் நானுமா...
* வீரபாண்டிய கட்டபொம்மன், மனோகரா போன்ற படங்கள் வசனத்திற்குப் புகழ் பெற்றவை.
* இவரின் நடிப்பு மிகையானது என்று கூட சொல்லுவார்கள். ஒருவேளை நாடகத்தில் இருந்து வந்ததால் அந்த நடை, மிகை எல்லாம் வந்திருக்கலாம்.
படம் : ராஜபார்ட் ரங்கதுரை...
பாடல் : அம்மம்மா தம்பி என்று நம்பி...
* தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சி ஆரம்பித்து அரசியலில் ஜெயிக்க முடியாமல் ஒதுங்கினார்.
* பிலிம்பேர், பத்ம ஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதா சாகேப் பால்கே, கெய்ரோ சிறந்த நடிகர் போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
படம் : பாபு
பாடல் : இதோ எந்தன் தெய்வம்...
* இந்தியக் கலாச்ச்சாரத் தூதுவாராக அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். இவரைக் கவுரப்படுத்தும் விதமாக நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒருநாள் மேயராக நியமிக்கப்பட்டார்.
* தமிழ் சினிமாவில் முதன் முதலாக பெரிய அளவில் கட் அவுட் வைக்கப்பட்டது இவருக்குத்தான். வணங்காமுடி படத்துக்காக முதல் கட் அவுட் வைக்கப்பட்டது.
படம் : படித்தால் மட்டும் போதுமா
பாடல் : பொன் ஒன்று கண்டேன்...
* தந்தைப் பெரியார் வேடத்தில் நடிக்க விரும்பினார் ஆனால் கடைசி வரை அந்த ஆசை நிறை வேறவில்லை.
* கமலஹாசனை தனது மகனாகத்தான் பார்த்தார். தனது கலையுலக வாரிசாக கமலைத்தான் குறிப்பிட்டார்.
படம் : வியட்நாம் வீடு
பாடல் : உன் கண்ணில் நீர் வழிந்தால்...
* கலைஞரை 'மூனா கானா' என்றும் எம்.ஜி.ஆரை 'அண்ணன்' என்றும் ஜெயலலிதாவை 'அம்மு' என்றும் அழைப்பாராம்.
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் 'கூண்டுக்கிளி'.
படம் : தாய்க்கு ஒரு தாலாட்டு
பாடல் : ஆராரிரோ பாடியதாரோ...
* இவரது வாழ்க்கைத் துணைவியார் பெயர் கமலா, ராம்குமார், நடிகர் பிரபு, சாந்தி மற்றும் தேன்மொழி என நான்கு மக்களைப் பெற்றவர்.
* 2001 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று தனது 72 வது வயதில் மறைந்தார்
படம் : முதல் மரியாதை
பாடல் : பூங்காற்று திரும்புமா...
சிம்மக்குரலோனின் பாடல்களை ரசித்திருப்பீர்கள். மீண்டும் சிறப்பான பாடல் பகிர்வில் சந்திப்போம்.
குறிப்புக்கள் திரட்ட உதவிய தமிழ் விக்கிபீடியா, ஆனந்த விகடனுக்கு நன்றி.
பாடல்களைக் கொடுத்த யூடிப்புக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.
12 எண்ணங்கள்:
அருமை நண்பரே அருமை
சிவாஜி போற்றுவோம்
tha ma 2
என்றும் இனியவை.
நடிப்பிற்கு இலக்கணம்
படைத்த
பிறவிக் கலைஞனுக்கு
நீங்கி மறைந்தாலும்
நீங்காத இடத்தை
மனதினில் ஊன்றியவர்..
நல்ல குறிப்புகளோடு நல்ல பாடல்களும் அருமை நண்பரே,,,,
நடிகர் திலகம் அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
பூங்காற்று திரும்புமா ?பாடலைக் கேட்டதும் அவர் மீண்டும் வர மாட்டாரா என்று தோன்றியது .அவருக்கு நிகர் அவரே !
த ம 5
என்றும் மாறா இனிய ரசிக்கத்தக்கவை! இனிய நினைவுகள் சிவாஜி பற்றி! அருமையான பதிவு! நண்பரே!
சிறந்த பதிவு
தொடருங்கள்
கேட்கத் தெவிட்டாத பாடல்கள்... மீண்டும் கேட்க வேண்டும்.... பொறுமையாக!
அருமை.
பகிர்வுக்கு நன்றி
என்றும் இனியவை நீங்கள் பகிர்ந்த பாடல்கள்.
கேட்டு மகிழ்ந்தேன்.
நன்றி.
கருத்துரையிடுக