இந்த வாரம் இரண்டு படங்கள் பார்த்தோம். சங்கரின் உதவியாளர் என்ற அடைமொழியுடன் தனது முதல் படத்தை இயக்கிய இயக்குநர் அட்லியின் ராஜாராணி மற்றும் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்... இரண்டு படங்களும் பார்க்கலாம் என்ற மனோநிலைக்கு கொண்டு செல்லும் படங்களே.
ராஜாராணி - நாயகனுக்கு ஒரு காதல்... நாயகிக்கு இரு காதல்... இரண்டும் சூழலால் கலைந்து போக... காதலை இழந்த இருவருக்கும் சர்ச்சில் திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணக்காட்சியே படத்தின் ஆரம்பம். கதாநாயகன் மனசில்லாமல் நண்பர்களைப் பார்க்க.... அவர்கள் தலையசைக்க சம்மதம் தெரிவிக்கிறார். ஆனால் நாயகி எல்லாம் பார்த்து எனக்கு இன்னாரை திருமணம் செய்ய சம்மதம் என்று சொல்லும் போது இன்னாருக்குப் பதில் சூர்யா என்று சொல்ல அப்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழ, பதறிய நாயகி மன்னிப்புக்கேட்டு சரியாக சொல்லும் போதே அவருக்கு ஒரு கதை இருப்பது நமக்குத் தெரிய வருகிறது.
திருமணம் முடிந்ததும் ஒரே அறைக்குள்... ஒரே கட்டிலில்... ஒரே போர்வைக்குள்... படுத்திருந்தாலும் தனித்தனித் தீவாய் வாழ்க்கை.... நாயகியை வெறுப்பேற்ற ராஜேந்தர் பாடலை சத்தமாக வைப்பது ரொம்ப ஓவர்... காரணம் நாயகிக்கு அந்த குடும்பத்தை உண்மையிலுமே பிடிக்காது... அப்படியிருக்க அவரது பாடலை வைத்தால் அவர் கோபம் கொள்ளாமல் என்ன செய்வார்.... நாயகனின் செய்கைக்கு அழுகிறார்... நாயகன் ரசிக்கிறார்.... குடித்து விட்டு வந்து அலம்பல் செய்கிறார்.... நாயகி அப்பாவுக்காக திருமணம் செய்து கொள்வதால் நாயகனை தூக்கியெறிந்து பேசுகிறார்.... இப்படிப் போகும் கதையில் இருவருக்குள்ளும் உள்ள காதல் கதை என்ன...? இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதை நகைச்சுவை கலந்து தந்திருக்கிறார்கள்.
நாயகனாக ஆர்யா நாயகியாக நயன்தாரா, ஆர்யாவின் காதலியாக நஸ்ரியா, நயனின் காதலனாக ஜெய்... சந்தானம், சத்தியராஜ், சத்யன்...
படத்தின் கதையை சுவராஸ்யமாகக் கொண்டு செல்வது நயன்-ஜெய் காதல் காட்சிகளே.. குறிப்பாக ஜெய்யை நயனின் தோழிகள் கலாய்க்கும் இடத்தில் மனிதர் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிடுகிறார். ஜெய் அருமையாக நடித்திருக்கிறார். ஜெய்யின் அப்பாவால் இவர்களது காதல் முடிவுக்கு வருகிறது.
ஆர்யா-நஸ்ரியா காதல் கதை அவ்வளவு சுவராஸ்யமாக இல்லை. தேவையில்லாமல் இழுப்பது போல் தெரிகிறது. நஸ்ரியாவை பார்க்கும் போதெல்லாம் ஆர்யா கேனத்தனமாக இளித்துக் கொண்டு நிற்பதுபோல் காட்டி வெறுப்பேற்றுகிறார்கள். நடிக்க அதிகம் வேலை இல்லை என்றாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் நஸ்ரியா.
சந்தானம், இரட்டை அர்த்த வசனங்கள்... அப்பாவாகவோ சித்தப்பாவாகவோ ஒரு கதாபாத்திரம் வைத்து வாடா, போடா என தரக்குறைவாகப் பேசுவது ... என வழக்கமான பாணியிலேயே இதிலும் வருகிறார். குணச்சித்திர வேடம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அப்படியெல்லாம் தெரியவில்லை. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். சத்தியராஜ் வழக்கமான அப்பாவாக வருகிறார். சத்யன் அடிக்கும் காமெடிகள் சிரிக்கவைக்கவில்லை.
படத்தின் இறுதிக் காட்சி விமான நிலையத்தில்.... பல படங்களில் பார்த்துப் பழகிய காட்சி என்பதால் நயன் செல்லும் போது பதட்டத்துடன் பயணிக்க வைக்கவில்லை.
மௌனராகம் படத்தின் கதை என்றும்... திருமணமானவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய கதை என்றும் சொன்னார்கள் ... அந்தளவுக்கு இல்லை என்றாலும் ஒரு முறை ரசித்துப் பார்க்க வைக்கும் கதை...
இளம் இயக்குநர் அட்லிக்கு வாழ்த்துக்கள்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்... மிஷ்கினின் வித்தியாசமான இயக்கத்தில் உருவான படம்... இரவு நேர சென்னை வீதிகளில் பயணிக்கும் கதை... விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை... ஓநாயாக வரும் மிஷ்கின் குண்டடிபட்டுக் கிடக்க அவரைக் காப்பாற்றப் போராடி தானே ஆபரேசன் செய்து, பின்னர் போலீஸில் சிக்கி ஓநாயைக் கொல்லப்புறப்பட்டு அவரிடம் ஆட்டுக்குட்டியாக மாட்டிக் கொள்ளும் ஸ்ரீக்கு வழக்கு எண் கொடுத்த புகழை இது கொடுக்காது என்பது உண்மை.
மிஷ்கினைத் தேடும் போலீஸ், கொல்லத் துடிக்கும் வில்லன், போலீஸ் தூண்டுதலில் கொலை செய்ய வந்து அவருடன் பயணிக்கும் நாயகன், மிஷ்கின் காப்பாற்றத் துடிக்கும் கண் தெரியாத குடும்பம் என கதை பயணப்படுகிறது. முடிவில் ஓநாயை ஆட்டுக்குட்டி கொன்றதா இல்லையா? ஓநாய் ஆட்டுக்குட்டியின் மனதில் இடம் பிடித்ததா இல்லையா... கண்தெரியாத அந்தக் குடும்பம் என்னவாயிற்று என்பதே கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் ராசாவின் பின்னணி இசைதான்... மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். குறிப்பாக கார் பார்க்கிங்கில் கதை பயணிக்கும் போது மனிதர் இசையால் நம்மை கதையுடன் மட்டுமின்றி ராசாவுடனும் பயணிக்க வைக்கிறார்.
மிஷ்கின் படங்களில் வழக்கமாக வரும் சட்டையை பாதி கழற்றி வைத்துக் கொண்டு ஓரு மாதிரி ஓடி வந்து பின்னர் திரும்பி மீண்டும் வந்து அடிப்பது போன்ற ஒரு சில காட்சிகள் இதிலும் வருகின்றன. கண் தெரியாத குடும்பத்தை இவர் ஏன் காப்பாற்றுகிறார் என்பதை தனிக்கதையாகக் காட்டாமல் மிஷ்கின் குழந்தைக்கு கதையாக சொல்வது சிறப்பு. இந்தப் படத்தை எடுத்திருக்கும் விதத்துக்காகவும் வித்தியாசமான கதைக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்
21 எண்ணங்கள்:
இரண்டும் வேறுபட்ட கதைக்களம்...இரண்டும் தங்களுக்கு பிடித்திருப்பது...தாங்கள் வித்தியாசமான ரசிகர்தான்.....நண்பரே
வணக்கம்
விமர்சனம் நன்று
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தலைப்பில் இரண்டையும் கலந்து,தனித்தனியாக அருமையாக விமரிசனம் செய்து விட்டீர்கள்
தலைப்பு சிரிக்கவைத்தது.
விமர்சனத்துக்கு நன்றி.
அருமையான விமர்சனப் பகிர்வுகள்..
தலைப்பைக் கலந்து தந்தது புதுசு.
டெக்னிக்கல் கலக்காத இயல்பான விமர்சனம்.
விமர்சனங்கள் அருமை ...
இரண்டு படங்களும் பார்க்கும்படி இருப்பதாகத் தான் பேசிக் கொள்கிறார்கள்.ராஜா ராணி பாக்குறேன்.ஓ.ஆ குட்டி பாக்கணும்.விமர்சனத்துக்கு நன்றி!!!
நல்லது...
இரண்டு படங்களும் இரண்டு விதமான திசை நோக்கிய படங்கள்..
நானும் முதல் நாள் முதல் ஷோ...
ராஜா ராணிக்கு நல்ல கூட்டம்....
அன்றே மாலை ஓநாய் படம்...
வெறும் 16 பேர் தான்....
நல்ல படங்களுக்கு ரசிகர் மத்தியில் கொஞ்சம் வரவேற்பு குறைச்சலாக இருப்பது வருத்தமே...
விமர்சனத்திற்கு நன்றி
இரு படங்களுக்கு ஒரு பகிர்வில் விமர்சனம்...
நன்று.
மிஷ்கின் தனித்துவமான இயக்குநர். இங்கே படம் ரிலீஸ் ஆகாததால், பார்க்கவில்லை.
ராஜா (ஓ)நாயும் ராணி (ஆட்டு)க்குட்டியும்.
வாங்க பரிதி அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோ.ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மாதேவி அக்கா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சகோதரி. ஸ்ரவாணி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கவிதை வீதி...
உண்மைதான் நண்பரே... நல்ல படங்களுக்கு மதிப்பு இல்லை என்பது வருத்தமே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வெங்கட் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செங்கோவி...
அப்படியா? டோரண்ட் இருக்க கவலை எதற்கு?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சேக்காளி....
உங்க தலைப்பும் சூப்பர்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
விமர்சனங்கள் அருமை.
the review is good
2 in 1 ;-))
the still selection is very good
arumai kumar anna...padam parthutu vanthu meethi comment podaren
கருத்துரையிடுக