மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றம் - நிறைவுப் பகுதி)



முந்தைய பகுதிகள் படிக்காதவர்கள் படிக்க

தொகுதி-1                              

தொகுதி-2

தொகுதி-3

----------------------------------------------------------------------------------------

திருமணத்துக்குப் பின்பே அணியின் திரு. மதுக்கூர் ராமலிங்கள் அவர்கள் கடைசியாக பேச வந்தார்.  அவர் எத்தனை ராஜாக்கள் வந்தாலும் பட்டிமன்றத்தின் முடிசூடா மன்னன் என்று லியோனியைப் பார்த்துக் கூற, ஏய்யா வழுக்கத்தைத் தலையின்னு நேரடியாச் சொல்ல வேண்டியதுதான். இப்ப நாட்டுல ரொம்பப் பேரு இப்படித்தான் திரியிறான்... எனக்கு மட்டும்தான் வழுக்கையா அங்க பாரு எல்லாத் தலையையும் நம்ம பாரதி நட்புக்காக தலைவர் ராமகிருஷ்ணனுக்கும் இப்புடி ஏறிடுச்சு. முன்னாடி இழுத்து சீவியிருக்காரு என்று கலாய்த்தார்.

மதுக்கூர் ராமலிங்கம்: எம் பையன் இந்த வருசம் பத்தாவது எழுதுறான். அவனைப் படிக்க வைக்கணுமின்னு நைட்ல முழிச்சு எழுப்பினா அப்பா ஒரு நிமிசம் அப்படின்னு தூங்குறான். மறுபடியும் வந்து தட்டி எழுப்பி படிக்க வச்சி, அப்துல் கலாமைப் பாரு அவரு மாதிரி வரணுமின்னு சொன்னா, ஆமா நீ எவ்வளவு மார்க் வாங்கினேன்னு திருப்பிக் கேக்கிறான் என்றார்.

நடுவர் அவர்களே தம்பி செந்தில் பேசும் போது பட்டாம்பூச்சி அப்படியே பறந்து திரியுமின்னார். ஆனா பட்டாம் பூச்சி பூ மீது அப்படி ஜோடியா உக்காந்திருக்கும் போதுதான் அழகா இருக்கும் என்று சொல்ல, செந்தில் பட்டாம் பூச்சி தனியா பறந்து திரியுறதை ரசிச்சிருக்காரு. ஆனா இந்தாளைப் பாருய்யா எப்படி ரசிச்சிருக்காருன்னு என்று இடையில் புகுந்தார் லியோனி. அப்புறம் நடுவர் அவர்களே தண்ணிப்பால் (தனபால்) எம் பொண்டாட்டி அதைக் கேக்குறா, இதைக் கேக்குறான்னு அள்ளிவிட்டார். எந்தங்கச்சி எம்புட்டு நல்லவங்க தெரியுமா... ஒரு நா தனபால் வீட்டுக்குப் போறேன், நடு வீட்ல இந்த ஆளை உக்கார வச்சி எந்தங்கச்சி தேங்காய் பழமெல்லாம் வச்சி படச்சு இருக்கு. என்னம்மான்னு கேட்டா, நேரம் சரியில்லையின்னு சனீஸ்வரனை கும்பிடச் சொன்னாங்க... பக்கத்துல கோவில் இல்லை அதான் இந்தாளுக்கு படச்சு கும்பிடுறேன்னு சொன்னுச்சு என்றதும் அவையில் சிரிப்பொலி அடங்க நேரமானது.

நடுவர் அவர்களே திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு சந்தோஷமானது. அதுவும் பொண்ணு பாத்துட்டு வாரது... சிவாஜி தன் நண்பனுக்கும் நண்பன் சிவாஜிக்கும் பொண்ணு பாத்துட்டு வந்து குளிச்சிக்கிட்டு "பொண்ணோன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமோ' ன்னு பாடுவாரே என்று பாட, லியோனியும் சேர்ந்து சில வரிகள் பாடினார். பாடல் முடிந்ததும் இப்படி ஒரு டூயட்டை என் வாழ்க்கையில் இன்னைக்குத்தாய்யா பாடியிருக்கேன்னார்.

லியோனியைப் பார்த்து நடுவர் அவர்களே நீங்க ஒரு படத்துல நடிச்சீங்கள்ல... அந்த கொடுமையை ஏய்யா இப்ப கேக்குறேன்னு லியோனி கேக்க, சொல்லுங்க நடிச்சிங்களா இல்லையா... ஆமா நடிச்சேன்... அந்தப் படம் ஓடுச்சா... ஓடிச்சின்னு சொன்னாங்க... எங்க ஓடுச்சு தியேட்டர் தியேட்டரா ஓடுச்சு... அந்தப் படம் ஏன் ஓடலை தெரியுமா... ஏய்யா?... அதுல ஒங்களுக்கு ஜோடியில்ல... ஜோடியிருந்திருந்தா படம் சூப்பர் ஹிட்டாயிருக்கும் என்று சொல்ல, ஆமா என க்கு ஜோடியாப் போட்டிருந்தா காந்திமதியைப் போட்டிருப்பாங்க என்றதும் சிரிப்பொலி அடங்க நேரமானது.

இன்னும் நகைச்சுவையாய் பேசியவர், ஒரு ஊர்ல வயதான ஒருத்தர் செத்துப் பொயிட்டாரு... அவரை தூக்க ஏற்பாடு பண்ணினாங்க... அப்ப அவரு சம்சாரத்தைக் காணோம்... எங்கடான்னு பார்த்தா வீட்டுக்குப் பின்னால சுடுதண்ணி வச்சிக்கிட்டு இருக்கு. எல்லாரும் அதை திட்ட... அப்ப அது எப்பவுமே அவரு சுடுதண்ணியிலதான் குளிப்பாரு... இப்பவும் அதுலயே குளிப்பாட்டி அனுப்புங்கன்னு சொன்னுச்சாம் என்று சொல்லி திருமண வாழ்வின் மகோத்துவத்தை விளக்கினார்.


(பாரதி அமைப்பினர்)

திரு.லியோனி : மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் பேச்சுக்கு சில கருத்துக்களைப் பகிர்ந்த திரு. லியோனி, இப்படித்தாய்யா எங்கப்பத்தாவும் ஐயாவும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்க... ஆனா அவங்களுக்கு எங்கப்பாவையும் சேத்து 16 புள்ளைங்க... எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கியலே எப்படி தாத்தா 16 பெத்தியன்னு கேட்டா அட அத ஏன்டா, கேக்குறே..? காத்து வல்லையின்னு அப்படி போனேன்... உங்க பெரியப்பன் பொறந்தான்... கரண்ட் இல்லை உங்க அத்தை பொறந்தா... விசிறி எடுக்கப் போனேன் உங்கப்பன் பொறந்தான்னு சொன்னாருன்னு இன்னும் நகைச்சுவையாய் பேசினார்.

பட்டிமன்றப் பேச்சாளர்கள் எல்லாம் பேசி முடிச்சிட்டாங்க இப்ப நான் தீர்ப்பு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ரெண்டுந்தாய்யான்னு சொன்னா இதை வந்தவுடனே சொல்லியிருந்தா மழை நேரத்துல வீட்டுக்கு சீக்கிரம் போயிருப்போமுல்ல.... எதுக்கு மூணு மணி நேரம் உக்கார வச்சேன்னு நீங்க கேப்பீங்க... இந்த பட்டிமன்றத்தை மூன்று மணி நேரமாக ரசித்து, பலர் சீட் இல்லாமல் நிண்டு கொண்டு ரசித்தீர்கள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது நம் தமிழுக்கு கிடைத்த வெற்றி. நானும் நிறைய ஊருக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம் இவ்வளவு கூட்டம் வந்ததேயில்லை (சம்பிரதாய வார்த்தைகள்).

இப்படித்தான் ஒரு ஊருக்கு பட்டிமன்றம் நடத்தப் போனோம்... உக்காந்திருந்தவங்களெல்லாம் எந்திரிச்சுப் போக, ஊர்ப்பெரிசிடம் என்னய்யா கூட்டமே இல்லைன்னு கேக்க, எல்லா இடத்துலயும் குழாய் கட்டியிருக்கோம். வீட்ல இருந்தே கேப்பாங்கன்னார்... நாங்க கத்திக்கிட்டு இருக்கணுமாம். இவங்க போயி படுத்துக்கிட்டு கேப்பாங்களாம். இன்னம் சில பட்டிமன்றங்கள்ல முன்னாடி ஒரு பத்துப் பேரு வந்து உக்காந்துக்கிட்டு என்ன சொன்னாலும் சிரிக்கவே மாட்டாங்க... அப்படியெல்லாம் இல்லாம சந்தோஷமா சிரிச்சு ரசிச்சீங்க... ரெண்டு அணியினரும் தங்கள் கருத்தைச் சொல்லி அமர்ந்திருக்காங்க...

திருமணத்துக்கு முன்னான வாழ்க்கை என்ன சந்தோஷங்கிறீங்க... நம்மளை கேக்க யாரும் இருக்க மாட்டாங்க.... அது மாதிரி ஒரு வாழ்க்கை திரும்ப கிடைக்குமா? அந்த பருவத்து வாழ்க்கை குறித்து சிலாகித்து நிறைய பேசினார்...

அப்புறம் அதற்காக திருமணத்துக்கு பின்னான வாழ்க்கை சரியில்லைன்னு நினைச்சிடக்கூடாது. அதுல இருக்க சந்தோஷம் இருக்கே, வேலைக்குப் பொயிட்டு வாரப்போ வண்டியில வந்து ஒருத்தன் விழுந்துட்டு இவங்கூட சண்டைக்கு வந்திருப்பான். வீட்டுக்குள்ள வந்த உடனே என்னங்க ஏன் சோர்வா இருக்கீங்கன்னு கேக்கிறப்போ ஒண்ணுமில்லேம்மான்னு சொன்னா, இல்லே நீங்க சரியில்லைன்னு கேக்கிறப்போ, என்னைய தெருவுல ஒருத்தன் திட்டிட்டான்னு சொன்னவுடனே... அப்படியே கையை அமுக்கி விடுங்க தெரு நாய் கத்துனதையெல்லாம் பெரிசு படுத்திக்கிட்டு என்று சொல்லி , போய் முகங்கழுவிட்டு வாங்க காப்பி தாரேன்னு சொன்னதும் வேணாம்மா என்று மறுத்தால் காபிங்க என்று அழுத்தி சொல்லும் போது அதன் அர்த்தம் புரிந்து நம் மனதின் கவலைகள் பறந்து போகுமே... என்ற நடுவர்...

திருமணத்துக்குப் பின்னான புரிந்து வாழ்தலில் கிடைக்கும் சுகம் முன்னான வாழ்வில் கிடைப்பதில்லை என்று சொல்லி அதற்கு ஆதாரங்களாக நிறைய சொன்னார். இறுதியில் மகிழ்ச்சியான வாழ்க்கை திருமணத்துக்குப் பின்பே என்று தீர்ப்பு வழங்கினார்.

பேச்சாளர்கள் பேசும் போது அவர்களுக்கு அமைப்பின் நிறுவனர் ஜெகன் மற்றும் அவரின் துணைவியார் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.

பட்டிமன்றத்தின் தீர்ப்பை சொல்லிய பிறகு நன்றி நவிலல் நடந்தால் பேசுபவர மட்டும் நாற்காலிகளுக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கும் என்பதால் தீர்ப்பு சொல்லும் முன்பாக நன்றியுரையாற்ற லியோனி வாய்ப்பு வழங்கினார். அந்த வாய்ப்பில் திருமதி. சங்கீதாரத்தினச் சுருக்கமாக நன்றி சொல்லிச் சென்றார்.

******************

** எனக்கு போட்டோக்கள் உதவி எனது பட்டிமன்றத் தொகுப்பை பாராட்டியதுடன் பாரதி நட்புக்காக நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்த திரு. சுபஹான் அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

** நான்கு பதிவாக எழுதிய போது என்னை பாராட்டிய நண்பர்களுக்கும் 'எப்பா லியோனிய ஒரு பாடுபடுத்திடுவே போல' என்று சாட்டிங்கில் வந்து திட்டிய நட்புக்களுக்கும் நன்றி.

** இங்கு நான் தொகுத்தவை எல்லாமே என் மனதில் இருந்தவைதான் ஆடியோவோ, வீடியோவோ பார்த்து எழுதவில்லை. அதனால் என் தொகுப்பில் பேச்சாளர்களின் பேச்சுக்கள் தொகுப்பாக இருக்காமல் முன்பின் மாறி வந்திருக்கலாம்.

** முதன் முதலில் நான் தொகுப்பாக... தொடரும் போட்டு எழுதிய பதிவுக்கு வரவேற்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றிங்க....

லியோனி போட்டோவுக்கு நன்றி : நிலாச்சாரல்.காம்

-'பரிவை' சே.குமார்.

18 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு கலக்குங்க

Asiya Omar சொன்னது…

நல்ல நகைச்சுவையான பகிர்வு.

செங்கோவி சொன்னது…

நிறைவுப் பகுதி!....வீட்ல சந்தோசப்பட்டிருப்பாங்களே!

மோகன்ஜி சொன்னது…

குமார்! தொய்வில்லாத தொகுப்பு. ரசித்தேன் ரொம்பவே...

Philosophy Prabhakaran சொன்னது…

ரசிக்க வைத்தது... நன்றி...

தமிழ்க்காதலன் சொன்னது…

அன்பு தோழமைக்கு வழக்கம் போல அசத்தி இருக்கிறாய். லியோனியிடமிருந்து அடுத்த பட்டி மன்றத்தில் பேச உனக்கு அழைப்பு வரும் என்று நினைக்கிறேன். எது சொல்வதா இருந்தாலும் நேரா வந்து திட்டிட்டு போ குமார்... நாங்க ஒருநாள் பண்ண கூத்த நீ ஒரு வாரம் பண்ணிட்டு இருக்க .... தாங்க முடியல... இதுக்கு நீயே வந்து பேசிட்டு போய்டுன்னு உன்ன கூப்பிட்டாலும் ஆச்சரியமில்லை. பாராட்டுகள்.

ஒரு கேள்வி........ உங்களில் யாருக்காவது "லியோனி" அப்படிங்கிற வார்த்தை அல்லது பெயருக்கு என்ன பொருள் என்று தெரியுமா.....?

தெரிந்தால் தொடர்பு கொள்ள (thamizhkkaathalan@gmail.com )

Unknown சொன்னது…

ரொம்பவும் நால்லாவே எழுதியுள்ளீர்கள்---வாஹே குரு

சுசி சொன்னது…

நல்ல பகிர்வு. நிகழ்வுக்கு நேர்ல வந்தது போல இருந்தது.

Thenammai Lakshmanan சொன்னது…

அடேங்கப்பா குமார் மனசின் தொகுப்பு அபாரம்..:))

vanathy சொன்னது…

leoni - very funny man.

ksground சொன்னது…

your message and creativity is good..........

Priya சொன்னது…

நன்றாக தொகுத்து இருக்கிங்க.... சுவாரஸியமாக இருந்தது!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சதீஷ் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க ஆசியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க செங்கோவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மோகன்ஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க பிரபாகரன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க தமிழ்க் காதலன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

\வாங்க குரு...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க தேனம்மை அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க ksground...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க ப்ரியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ம.தி.சுதா சொன்னது…

உங்கள் பொறுமையும் முயற்சியும் பெரும் பாராட்டுக்குரியது சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

vidivelli சொன்னது…

நல்லாயிருக்குங்க

அண்ணா எனக்கு லியோனியின் பட்டிமன்றம் றொம்ப பிடிக்கும்
கலக்கிட்டிங்களே