மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 3 பிப்ரவரி, 2011

சேரட்டும் நம் காதல்



மஞ்சள் வெயில் மாலையில
மாடக்கரை ஓரத்தில
மயிலிறகு பொறக்கயில
மனதிழந்து போனேனே..!

பூத்தபின் புதுப்பொலிவாய்
புன்னகைக்குள் வெட்கம் வைத்து
தோழியுடன் நீ போக...
சொக்கித்தான் போனேனே..!

களத்து மேட்டு காவலுக்கு
தனியாய் நான் போகயிலே
நீ சுழிக்கும் உதட்டசைவில்
உருகித்தான் போனேனே..!

தண்ணி எடுக்க வரும்போது
தள்ளி நிற்கும் என்மீது
நீர் இறைத்து நீ சிரிக்க
சிலிர்த்துத்தான் போனேனே..!

அம்மன் கோவில் வாசலிலே
திருவிழா கூட்டத்திலே
என்னை நீ தேடயிலே
கசிந்துருகிப் போனேனே..!

எப்போதும் உன் வாசம்
என் இதயக் கூட்டுக்குள்...
தப்பேதும் நேராமல்
தழைக்கட்டும் நம் காதல்...

நீ இருக்கும் நெஞ்சமது
உன்னுடனே சிரிக்கட்டும்...
பாழப்போன மேடுபள்ளம்
பாழுதாகிப் போகட்டும்.

எங்கப்பன் உங்கப்பன்
எச்சில் சோறு தின்னட்டும்...
எல்லாரும் ஒன்றாக
எப்போதும் இருக்கட்டும்...!

சாதி மத பேதமெல்லாம்
தள்ளி நின்று வாழ்த்தட்டும்...
போதி மத புத்தன் வந்து
புதுக்கவிதை எழுதட்டும்..!

-'பரிவை' சே.குமார்.

30 எண்ணங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமையான கவிதை குமார்.. வாழ்த்துக்கள்

செங்கோவி சொன்னது…

குமார்..கவிதையில் பின்றீங்க...எச்சில் சோறு அருமை!

நிலாமதி சொன்னது…

எப்போதும் உன் வாசம்
என் இதயக் கூட்டுக்குள்...
தப்பேதும் நேராமல்
தழைக்கட்டும் நம் காதல்


அழகான் வரிகள்.பாராட்டுக்கள். .

ஹாய் அரும்பாவூர் சொன்னது…

சாதி மத பேதமெல்லாம்
தள்ளி நின்று வாழ்த்தட்டும்...
போதி மத புத்தன் வந்து
புதுக்கவிதை எழுதட்டும்..!

சிறப்பான வரிகள் நன்றாக இருந்தது உங்களில் எழுத்து நடை

Philosophy Prabhakaran சொன்னது…

காதலா...? நடத்துங்க... நடத்துங்க...

Chitra சொன்னது…

அருமை....

பெயரில்லா சொன்னது…

பாடல் நடை நல்லாயிருக்கு சேகர்..
ஏங்க ஒரு விஷயம் நல்லா புரியுது புள்ளைய விடாமா ஃப்ளோ பண்றீங்கன்னு நினைக்கிறேன்..

Vidhya Chandrasekaran சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு..

ரேவா சொன்னது…

ரசித்த வரிகள்

நீ இருக்கும் நெஞ்சமது
உன்னுடனே சிரிக்கட்டும்...
பாழப்போன மேடுபள்ளம்
பாழுதாகிப் போகட்டும்.

சாதி மத பேதமெல்லாம்
தள்ளி நின்று வாழ்த்தட்டும்...
போதி மத புத்தன் வந்து
புதுக்கவிதை எழுதட்டும்..!
கவிதை அருமை...வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

கிராமத்து சொல்லாடல்களில் கவிதை மெருகேறுகிறது குமார்!

தமிழ்க்காதலன் சொன்னது…

அன்பு தோழா... உள்ளே கிடக்கும் உணர்வுகளை தட்டி எழுப்புகிறாய்...... கவிதை இது..... காதல் இரசம் சொட்டுகிறது. இங்கும் உன்னோட எதார்த்தம் தெரிகிறது.... வாழ்க்கைய இரசிச்சவன்டா நீ....

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

அடடா... என்னமா எழுதுறீங்க.. ஒரு ஒரு பத்திலயும், உருகி உருகி காதலை சொல்லியிருக்கீங்க..

ரொம்ப அழகா இருக்குங்க..உங்க காதல். :)

r.v.saravanan சொன்னது…

அருமை குமார்

தினேஷ்குமார் சொன்னது…

அருமை நண்பரே ஆமாம் பொண்ணு யாரு தல

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

நல்ல வார்த்தை கோர்வை... நல்லா இருக்குங்க

Sriakila சொன்னது…

//..சாதி மத பேதமெல்லாம்
தள்ளி நின்று வாழ்த்தட்டும்...
போதி மத புத்தன் வந்து
புதுக்கவிதை எழுதட்டும்..!
//


என்ன சொல்ல? சொல்வதற்கு வார்த்தையே வரவில்லை. அவ்வளவு அருமையாக உள்ளது கவிதை வரிகள்.

Super!Super!Super!

சுசி சொன்னது…

நல்லா இருக்கு குமார்.

Asiya Omar சொன்னது…

அருமை.அழகான கவிநடை.

Asiya Omar சொன்னது…

உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.
http://asiyaomar.blogspot.com/2011/02/blog-post_06.html

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>எங்கப்பன் உங்கப்பன்
எச்சில் சோறு தின்னட்டும்...
எல்லாரும் ஒன்றாக
எப்போதும் இருக்கட்டும்...!

சாதி மத பேதமெல்லாம்
தள்ளி நின்று வாழ்த்தட்டும்...
போதி மத புத்தன் வந்து
புதுக்கவிதை எழுதட்டும்..!

wonderfull lines kumar

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

//எங்கப்பன் உங்கப்பன்
எச்சில் சோறு தின்னட்டும்...//

உறவின் பலத்தை, நெருக்கத்தைச்
சொல்லிவிட்டது, இந்த வரி!
அருமையான ஆக்கம்!

அகமது சுபைர் சொன்னது…

நேரம் கிடைச்சா கால் பண்ணுங்க

050-1378267

அன்புடன்,
சுபைர்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரஷா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செங்கோவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நிலாமதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அரும்பாவூர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க பிரபாகரன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழரசி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க வித்யாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ரேவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பாலாஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தமிழ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஆனந்தி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தினேஷ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க தங்கமணி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீஅகிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஆசியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
விருதுக்கு ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சி.பி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நிஜாமுதீன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சுபைர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ம.தி.சுதா சொன்னது…

/////தண்ணி எடுக்க வரும்போது
தள்ளி நிற்கும் என்மீது
நீர் இறைத்து நீ சிரிக்க
சிலிர்த்துத்தான் போனேனே..////

நானும் தாங்க....

நம்ம ஊரில மழை கொட்டுது....