மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 5 செப்டம்பர், 2019

மனசு பேசுகிறது : என்னைச் செதுக்கிய சிற்பிகளில் சிலர்

(பேராசிரியர். டாக்டர். மு.பழனி இராகுலதாசன்)
பிக்பாஸ் பதிவுகள் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறேன்... கிறான்... கிறார்... என்றெல்லாம் நண்பர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போதைய சூழல்... நகரும் வாழ்க்கை... உடல் நலம் என எல்லாமும் எதிலும் ஒட்டாத மனநிலையிலேயே வைத்திருக்கிறது. 

எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பேன்... சமீபமாக அது கூட இல்லை... இந்த வலைப்பூவை வாடாமல் வைத்திருக்க வேண்டும்  என்பதாலும்... கிட்டத்தட்ட 11 ஆண்டுகால உழைப்பு இதில் இருக்கிறது என்பதாலும் பொழுது போக என்பதைவிட என் எழுத்தை தொலைக்காமல் இருக்க எழுத ஆரம்பித்ததே பிக்பாஸ்... 

தற்போது பிரதிலிபியில் இதற்கு வரவேற்பு இருப்பதாலும் வாசிக்கும் சிலர் இதைத் தொடர்ந்து எழுதச் சொல்வதாலும்... சின்னச் சின்ன விவாதங்கள் செய்வதாலும் தினமும் ஒரு குறள் போல பிக்பாஸ் வருகிறது. இந்த எழுத்தைக் கொடுத்தது என் ஆசிரியர்கள்தான்... இந்நாளில் அவர்களை நினைத்துப் பார்ப்பதே சிறப்பு.

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் என்பது மிகப்பெரிய கடல்... அதில் எல்லா முத்துக்களையும் எழுத முடியாது என்றாலும் அந்த முத்துக்களில் சில தனித்த முத்துக்கள் இருக்கும் அல்லவா... அவர்களைப் பற்றி மட்டும் இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன். 

என்னைத் தன் பிள்ளையாகப் பார்த்த ஆசிரியர்களையே நான் அதிகம் பார்த்திருக்கிறேன். விவசாயக் குடும்பத்திலிருந்து சத்துணவுக்கு தட்டையும் பாடப் புத்தகத்துடன் தூக்கிக் கொண்டு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து பள்ளிக்குப் போகும் பையனாகத்தான் பள்ளி வாழ்க்கை இருந்தது. மழை நேரத்தில் மகிழ்ச்சியை கொடுத்த நாட்கள் நடந்து பள்ளிக்குச் சென்ற நாட்கள். 

மறக்க முடியுமா எட்டாவது வரை படித்த முருகானந்தா நடுநிலைப்பள்ளியையும் பணிபுரிந்த ஆசிரியர்களையும் சத்துணவு சமைத்த ராஜாத்தி மற்றும் புவனேஸ்வரி அக்காள்களையும்... கூடப் படித்தவர்களையும்... தோழர் தோழியரையும்.

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராய் மறைந்த மரியம்மை டீச்சர் அவர்கள். கனிவான முகம் அவருக்கு கடவுள் கொடுத்தது... அதில் சிறு புன்னகை எப்போதும் இழையோடியபடி இருக்கும்... ஒண்ணாவதிலேயே நான் டீச்சரின் செல்லப்பிள்ளை... என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்... அருகில் அமர்த்திக் கொள்வார். 

அம்மா டீச்சரிடம் அவன் ஆளு ரொம்ப பொசுக்குன்னு இருக்கான்... ரெண்டாப்பு போகவேண்டாம்... ஒண்ணாப்புலயே இந்த வருசமும் இருக்கட்டும் எனச் சொன்னதும் ரெண்டாப்புலயும் நாந்தான் டீச்சர்... நல்லாப் படிக்கிற பிள்ளையை ஏன் மறுபடியும் ஒண்ணாப்புல போட்டு ஒரு வருசத்தை வீணாக்கணும். அதெல்லாம் வேண்டாமென மறுத்துவிட்டு என்னை இரண்டாம் வகுப்பிற்கு கொண்டு போய் தன் பிள்ளைபோல் பார்த்துக் கொண்டார். அவர் போட்ட விதையே MCA வரை போக வைத்தது என்பதே உண்மை. Miss U Teacher.

நாலாவதுல பாக்கியம் டீச்சர்... மதியம் தவட்டாங்கம்பு (மரக்குரங்கு) விளையாண்டவங்களை வேடிக்கை பார்க்கப் போய் ஆறாவது படித்த மரியதாஸ் குதிச்சி என் மீது விழுந்ததில் சுவரில் போய் விழுந்து கை ஒடிந்து போக, அது ஒடிந்தது தெரியாமல் அடிபட்டிருக்கென மருந்தெல்லாம் தேய்த்து வைத்துப் பார்த்து வலியும் வீக்கமும் கூட உடனே ஊர்ப் பையனை அழைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தவர். 

அதன் பின் குன்றக்குடியில் கட்டுக்கட்டி கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பின் சட்டையை பாதி அணிந்தும் பாதி அணியாமலும் பள்ளிக்குப் போன போது தனியே அமர வைத்து பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர். நாலாவதில் இருந்து ஐந்தாவது போன போது நல்லாப் படிக்கணும்டா எனச் சொல்லி அனுப்பி வைத்தவர்... கல்லூரியில் படித்த போது எதேச்சையாக பார்த்த போது படிப்புத்தான்டா முக்கியம் நல்லாப்படி என்று பெயரை ஞாபகம் வைத்து வாழ்த்தியவர்.

தே பிரித்தோவில் ஒன்பதாவது முதல் பனிரெண்டாவது வரை படித்த போது வகுப்பாசிரியர்கள் பலருக்குப் பிடிக்கும் என்றாலும் அதிக நெருக்கம் ஜோசப் சாருடனும் குண்டுராவ் சாருடனும்தான்... ஜோசப் சாரிடம் டியூசன் படித்ததாலும் குண்டுராவ் சாரிடம் மதிப்பெண் எடுப்பதாலும் மட்டுமேயான நெருக்கமாய்த்தான் அமைந்தது. 

தமிழாசிரியர்களான சவரிமுத்து, தாசரதி மற்றும் அருள்சாமி ஐயாக்களிடம் எல்லா மாணவர்களையும் போல்தான் பழக்கமிருந்தது. பின்னாளில் அதாவது கல்லூரியில் படிக்கும் போது பழனி ஐயாவின் மூலமாக தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தில் உறுப்பினரான பின் மூவருக்கும் மகனானேன். இப்பவும் பள்ளிக்குப் பேரனைக் கூட்ட வரும் சவரிமுத்து ஐயா என் மனைவியிடம் மருமகளே மகன் போன் பண்ணுச்சா..? எப்ப என் மகன் வரும்..? (வா, போ என்று இதுவரை சொன்னதில்லை) போய் ரொம்ப நாளாச்சே... என்று கேட்கத் தவறுதில்லை. 

தேவகோட்டை SSA கல்லூரிதான் என்னை பல விதத்தில் வார்த்தெடுத்தது.... அதற்குக் காரணம் நல்ல ஆசிரியர்கள்... 

எங்க கேவிஎஸ் சார்தான் செமஸ்டரை ஆங்கிலத்தில் எழுதச் சொன்னவர், அடிதடி நடக்கும் போதெல்லாம் எங்களை வெளியில் நிக்காம வகுப்பிற்குள் உட்கார் இல்லேன்னா வகுப்புகளை கான்சல் பண்ணுறேன் வீட்டுக்குப் போயிடு எனச் சொல்லி சண்டைகளுக்குள் போக விடாமல் காத்தவர். பிரின்ஸ்பால் முன் வகுப்பே செல்ல வேண்டிய சூழலில் எங்களுக்காகப் பேசி அந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தவர்... 

அதேபோல் நாலு செமஸ்டரில் முதலாவதாய் நிற்க வைத்த வெற்றிக்கு இடையூராய் அதுவரை இல்லாத அரியர் ஐந்தாவது செமஸ்டர் மேஜர் பேப்பரில் வந்தபோது என் மீது நம்பிக்கை வைத்து எனக்காக மறு கூட்டலுக்குப் பணம் கட்டியவர்... அது விஷயமாக என்னுடன் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் வந்தவர். மேல்படிப்பாய் இதைப்படி என என்னைக் கட்டாயப்படுத்தி அதற்காக விடுமுறை நாளில் வீட்டுக்கு வரவைத்துச் சொல்லிக் கொடுத்தவர். அவரின் ஆசைப்படி அதில் சேர்ந்து சில காரணங்களால் தொடர முடியாமல் போய் வேறு பாதைக்கு மாறிவிட்டேன் என்றபோது வாய்ப்பைக் கெடுத்துட்டியே என வருத்தப்பட்டார்.

என்னை எழுத வைத்து அழகு பார்த்த, என்னைத் தன் மகனாய் உள்ளத்தில் வைத்து... மருமகள், பேரன், பேத்தி என உறவுமுறைக்குள் தான் மட்டுமின்றி தன் குடும்பத்தையும் கொண்டு வந்து வைத்திருப்பவர் எனது பேராசான்.

கல்லூரி பிரிவு உபச்சார விழாவில் என் மகன் எனச் சொல்லி, திருமண வாழ்த்தில் கூட எங்கள் மகனென எழுதி, எனக்காக வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி ஹோமியோபதி ஆஸ்பத்திரிக்கு அலைந்து, மருத்துவர் சொன்ன உணவுக் கட்டுப்பாட்டின்படி அவரது வீட்டில் கூடும் பதினைந்து பேரில் எனக்கு மட்டும் காபிக்குப் பதில் பால் கொடுக்கச் சொல்லியவர் என் பேராசன். அதை இன்றுவரை கடைபிடிக்கிறார் என் அம்மா.

என் முதல் கவிதையை தாமரைக்கு அனுப்பி, அது வெளியானதும் மிகுந்த மகிழ்வோடு எல்லோரிடமும் சொல்லி, இப்பவும் எப்பவும் என் எழுத்தை ரசித்து, இன்னும் எழுதுங்க என உத்வேகம் கொடுப்பவர் என் பேராசான். 

சென்ற முறை ஊருக்குச் சென்ற போது எனது 'வேரும் விருதுகளும்' நாவலை வாசிக்கக் கொடுக்க, வாசித்துவிட்டு குமாருக்குள்ள இப்படி ஒரு எழுத்து இருந்துச்சா... இதைப் பற்றி பத்துப்பக்கத்துக்கு நான் எழுதித்தாறேன் எனச் சொல்லியிருக்கும் என் அன்பு ஐயா... ஐயா என்பதை விட, பேராசான் என்பதை விட, அவரை அப்பா என்று சொல்லுதலே பொறுத்தமாகும்... 

ஆம் என் அப்பாவைப் பற்றி நிறைய எழுதிவிட்டேன்... இன்னும் எழுத நிறைய இருக்கிறது... பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன்தான் என்னைச் செதுக்கியவர்களில் முக்கியமானவரும் முதன்மையானவரும் கூட. அவர் கற்றுக் கொடுத்த காலம் தவறாமையை இதுவரை கடைபிடிக்கிறேன்.

மேலும் ஆறுமுக ஐயா, அமலசேவியர் சார், சேவியர் சார், வெங்கடாசலம் சார், பெரிய திருவடி சார், தேனப்ப ஐயா, சுந்தரமூர்த்தி ஐயா, பிச்சைக்குட்டி சார், சுந்தரமூர்த்தி சார், முருகன் சார், எம்.எஸ் எனப்படும் எம்.சுப்பிரமணியன் சார், பட்சிராஜன் சார், சந்திரமோகன் சார், விஜயன் சார், நாவுக்கரசு சார், மாணிக்கம் சார், இராஜமாணிக்கம் சார், பிச்சம்மை டீச்சர், விஜி டீச்சர், சுப்புலெட்சுமி டீச்சர், ஜான் சார், ஜோசப்ராஜ் சார், செல்லம் சார், சுப்பு சார் இன்னும் இன்னுமாய் எத்தனையோ பேர் ஏற்றிய விளக்குத்தான் இப்போது எரிந்து கொண்டிருக்கிறது.

என்னைச் செதுக்கிய ஆசிரியர்களுக்கும் எனதன்பு நண்பன் பேராசிரியர் முருகன் மற்றும் உறவுகள் நட்புக்கள் என எல்லா ஆசிரியர்களுக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 4 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : மீண்டும் சாக்சி கூடவே அபியும் மோகனும்

Image result for biggboss 03 september 2019 images hd
வின் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள்... அவர்கள் வலி தெரியுமா..? அவங்க ஜெயிக்கணும்...? என்று சொன்னதன் காரணமாய் நிகழ்ந்த 70ம் நாளின் பிரச்சினையின் தொடர்ச்சிதான் ஆரம்பமாய்...

தனக்கான வெற்றிக்காக மற்றவர்களின் வலியை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் கவின் குறித்து ஏராளமாகப் பேசியாச்சு.. அவன் இதற்காகத்தான் பண்ணுகிறான் என திரும்பத் திரும்ப எழுதுவது எழுத்துக்கு அயற்சியைக் கொடுக்கும். மேலும் கவின் தேடும் அனுதாபம் அவனுக்கானதே... நட்புக்காக சசிக்குமார் மாதிரி கவின்னு மக்கள் மனசுல பதிய வச்சிட்டாப் போதும். இறுதியில் வெற்றி நமக்கே என்பதான காய் நகர்த்தல் ஆரம்பத்திலிருந்தே இருக்கு... பத்தாததுக்கு அவன் நட்புக்காக உயிரையே கொடுப்பான்னு லாஸ்லியா பின்பாட்டு வேற... இதையே எழுதுவது எனக்கு வெறுப்பாகவும் இருக்கு. அதனால இதை இத்தோட தொலைச்சிருவோம்.

பிரச்சினையின் காரணமாக ஐவர் அணி வெளியிலும் மூவர் அணி உள்ளேயுமாக இருந்தனர். ஷெரினுக்கு தன்னை கவின் நாமினேட் பண்ணியதில் மிகப்பெரிய கோபம்... இது யாருக்கான விளையாட்டு... யார் விளையாடணும்... அடுத்தவன் வெற்றிக்காக இவன் ஏன் இங்கிருக்கணும்... எனப் புலம்பிக் கொண்டிருந்தார்.

'நீ இங்க ஏன் திரும்ப வந்தேங்கிறது பிக்பாஸ்க்கும் உனக்குமான ஒப்பந்தம்... அதைப் பற்றிப் பேச இவங்க யாரு..? இதைப் பற்றிய விளக்கத்தை அவங்களுக்கு பிக்பாஸைச் சொல்லச் சொல்லு' எனச் சேரன் போட்ட தூபம் நல்லாவே வேலை செய்ய, இந்த பிக்பாஸ் வீடுதான் எனக்கு முக்கியம்ன்னு எல்லாம் இல்லை... எனக்கு ரொம்ப முக்கியமானவங்க வெளியில இருக்காங்க... அதுதான் எனக்கு வாழ்க்கை... இந்தப் பயலுவ பேசினதுக்கு முடிவு தெரியாம நான் விளையாட மாட்டேன்னு மைக்கைக் கழட்டி கேமராவுக்கு மாலையாப் போட்டுட்டு உக்கார்ந்து விட்டார் வனிதாக்கா...

வெளியில் இவதான் ரொம்ப நல்லவ... எனக்கு என்னோட நண்பர்கள் ஜெயிக்கணும் அதனால சேரனையும் ஷெரினையும் சொன்னேன்... இவளுக்கு என்னன்னு கவின் தன் வாதத்திறமையை சாண்டி, தர்ஷன் முன் காட்டிக் கொண்டிருந்தார். அஜீத் சொன்ன மெல்லிய கோடு போல இருவருக்கும் இடையே ஒரு கண்ணாடிக் கதவு மட்டுமே... 

அனுதாபம் தேடுபவன் அடித்து ஆட நினைத்திருந்தால் நேரடியாக மோதியிருக்கலாம்... கைப்புள்ளையாட்டம் வெளிய நின்னு வீரவசனம் பேசிக்கிட்டிருந்தான். நேருக்கு நேருன்னா நமக்கும் நிகழ்ச்சி சுவராஸ்யமாக இருந்திருக்கும்.

கவினிடம் 'என்னை ஏன் நாமினேட் பண்ணுனே..? உன்னோட பிரச்சினைகளுக்கு எல்லாம் நான்தான் உன் கூட நின்னிருக்கேன்...' என ஷெரின் நேரடியாகக் கேட்டார். 

'அவங்க என்னோட பிரண்ட்... அது போக வேற நாட்டுல இருந்து வந்த மூணு பேர்ல ஒருத்தவங்க ஜெயிச்சா நம்ம நாட்டுக்கு பெருமை... மக்களுக்குப் பெருமை... எடப்பாடிக்குப் பெருமை... பன்னீருக்குப் பெருமை... ஸ்டாலினுக்குப் பெருமை... மோடிக்குப் பெருமை... அப்படியே ராகுல் காந்திக்குப் பெருமை... கமலுக்குப் பெருமை... நடிகர் விமலுக்கும் பெருமை... உனக்குப் பெருமை... எனக்குப் பெருமை... மக்களுக்குப் பெருமை... தமிழுக்குப் பெருமை... நம்ம தமிழிசைக்கும் பெருமை... நட்புக்கும் பெருமை... நடிகர் சசிகுமாருக்கும் பெருமை.... பிக்பாஸ்க்குப் பெருமை... பால் குடிக்கும் பிள்ளைக்கும் பெருமை'ன்னு அனுதாப நாயகன் அனல் பறக்க வசனம் பேசினான்.

எல்லாத்தையும் கேட்ட ஷெரின் 'போடா எருமை... என்னை ஏன் நாமினேட் பண்ணுனே... நான்தான் சிறந்த போட்டியாளர்ன்னு சொல்லுறே... பின்ன ஏன் நாமினேட் பண்ணுறே... அதை சொல்லுவியா... பெருமை... எருமை... போடுறே என சற்றே கோபமாய்க் கேட்டார்.

உடனே 'நீ வெற்றி பெறக்கூடிய போட்டியாளர்தான்... ஆனா அவங்க என் நண்பர்கள்... அவங்களுக்காக உன்னை முதுகில் குத்தினேன்... ஏன்னா அவங்க வெளிநாட்டுல இருந்து வந்திருக்காங்க'ன்னு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் ரோபோ சங்கர் 'பளபளன்னு விடிஞ்சிச்சா... கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு'ன்னு பசுபதிகிட்ட கதை சொல்ற மாதிரித் திரும்ப ஆரம்பிக்க, ஷெரின் ஷெர்க் ஆகி எந்திரிச்சிப் போயாச்சு.

வனிதா மைக்கை மாட்டிக்கிட்டு ரகசியம் மட்டுமே பேசும் தனியறைக்கு வாங்கன்னு சொன்னார் பிக்பாஸ். அக்கா உடனே மைக்கை மாட்டிக்கிட்டு அவரை உண்டு இல்லைன்னு பண்றேனா இல்லையா பாருன்னு போக, என்னதான் உன்னோட பிரச்சினை எனக்கேட்டு 'இங்க பாரு தாயி... நீ சொன்ன மாதிரித்தான் இவங்க யாரையும் போங்கன்னு சொல்லி முடிவெடுக்க முடியாது... மக்கள்தான் முடிவு செய்யணும்... அதனால் நீங்க தைரியமா இருங்க'ன்னு வரலாற்று சிறப்பு மிக்க முடிவைச் சொன்னார் பிக்பாஸ். 

அட அரை லூசு பிக்காலிபாஸ்... வாரவாரம் அவனுக டார்கெட் இந்த மூணு பேருன்னா... ஒவ்வொரு ஆளா வெளிய போக மாட்டாங்களா... லாஸ்லியா, கவினுக்கு எல்லாம் கள்ள ஓட்டுப் போட நீங்களே இருக்கும் போது இவங்கதானே வெளியாகணும் என நமக்கே கடுப்பாகும் போது அக்கா கடுப்பை அடுப்பில் வைத்துக் காய்ச்சிய முகத்துடன் வெளியில் வராம என்ன பண்ணும். கடுப்போட வெளியில வந்துருச்சு கண்ணம்மாக்கா.. ச்சை...வனிதாக்கா.

பிள்ளையார் சதுர்த்திக்கு முறுக்குச் சுட்டு தின்னுங்கடான்னு பார்ச்சூன் எண்ணெய்காரன் எண்ணெய்யும் முறுக்குமாவும் கொடுக்க, பிரச்சினையெல்லாம் பின்னால மூட்டை கட்டிப் போட்டுட்டு ஒண்ணாக்கூடி முறுக்குச் சுட்டுச் சாப்பிட்டாங்க... திங்கிறதுக்கு மட்டும் சண்டையாவது... பிரச்சினையாவது... வனிதாக்கா எல்லாருக்கும் ஒருவரி ஆசியுடன் குங்குமம் வைத்து விட்டார். ஆப்பிள் பிள்ளையார் அழகாக இருந்தார். முகனின் கை வண்ணம் போல.

71-ம் நாள் காலையில ரங்கு ரங்கம்மா பாட்டுத்தான் திருப்பள்ளி எழுச்சியாய்... ஷெரினும் சாண்டியும் ஆடினாங்க... மற்றவர்கள் கண்டுக்கலை.

சாண்டி தோசை ஊற்றிக் கொண்டு, தோசைக்கல்லை அப்படியிப்படி எல்லாம் மாற்றி ரஜினி ஸ்டைல் பண்ணிக் கொண்டிருந்தார்... 'மாஸ்டர் மாஸ்டர்ன்னு சொன்னாங்க.... டான்ஸ் மாஸ்டர்ன்னு நினைச்சா தோசை மாஸ்டர்தானா'ன்னு சேரன் ஜோக்கடித்தார். லாஸ்லியா கீரைக்கு வலிக்காமல் உருவிக் கொண்டிருந்தார்.

கவின் சொன்ன காரணம் ஷெரினுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை... 'என்னோட விளையாட்டை யார் விளையாடுவது..? அவன் ஜெயிக்கணும் அவன் ஜெயிக்கணும்ன்னா இவன் ஏன் இங்க இருக்கான்.. இவன் சூப்பராக் கேம் விளையாடுறான்' என வனிதாக்காவிடம் புலம்பி அழுதார். 

உடனே வனிதாக்கா 'அதுதான் நான் ஆரம்பத்துலயே சொன்னேன்.. இது கேம்... தர்ஷனை நம்பாதே'ன்னு சொல்லி மெல்ல மிஷன் தர்ஷனைக் கையிலெடுக்கலாம்ன்னு நினைக்க, 'ஏய் லூசு.. தர்ஷனா இப்ப பிரச்சினை... கவின்தான்.. இங்க யாரையும் நான் பகைச்சிக்க விரும்பலை... அது எனக்கு வேண்டாம்... புரிஞ்சிக்க... சின்னக் கேப்புல கெடா வெட்ட நினைக்காதே'ன்னு கத்த, ஆஹா... நம்ம எதுக்கு தர்ஷனுக்குப் போறோம்ன்னு புரிஞ்சிக்கிட்டாலேன்னு அக்கா ஆறுதலாய் அணைத்துக் கொண்டு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சரி... சண்டையெல்லாம் முடிச்சிட்டீங்களா..? இப்ப நான்தான் பட்ஜெட் டாஸ்க்.... மறுபடியும் அடிச்சிக்கங்கன்னு சொல்லி தலகாணி செய்யுங்க.... ரெண்டு  அணியாப் பிரிச்சிருக்கேன் பாருங்கன்னு சொன்னார் பிக்பாஸ். 

புருஷன் பொண்டாட்டியோட கொழுந்தனும் வலி மிகுந்த மலேசியாவும் ஒரு அணி, அடுத்து அக்காவும் அப்பாவும் அவங்ககூட வலி மிகுந்த இலங்கை அண்ணனும் லாஸ்லியாவோட அண்ணியும் ஒரு அணி, தற்காலிகமாக போடப்பட்டிருக்கும் கன்வேயர் பெல்ட் மூலமாக தலகாணி உறை, பஞ்சு, நூல், ஊசியெல்லாம் தருவேன்... மணி அடிச்சதும் ஓடிப்போய் எடுத்துச் செய்ய ஆரம்பிக்கணும். தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளா அக்காவும், காதல் மைனாவும் இருப்பாங்கன்னு சொல்லிட்டுப் பொயிட்டார் பிக்பாஸ்.

போட்டின்னு வந்துட்டா தர்ஷனை எதிர்ப்பது கஷ்டம்... தர்ஷன் எல்லாத்தையும் எடுக்க, முகன் முயற்சித்துக் கொஞ்சம் எடுத்தார். தைக்க ஊசியில்லை என்றதும் தர்ஷன் ஒரு டப்பாவைத் தூக்கிக் கொடுத்தார். சாண்டி வனிதாக்கா அணிக்குத் தெரியாமல் அவங்க எடுத்து வைத்திருந்த பஞ்சை மூன்று முறை ஆட்டையைப் போட்டார். ஷெரின் பார்த்துட்டு சண்டைக்கு போக காதல் கவின் அதுக்கும் கதை சொன்னான். பஞ்செடுக்கல்லாம் போகாம பிஞ்சு போன செருப்பு மாதிரி நின்றான் காதல் கவின்.

லாஸ்லியாக்கிட்ட எதையும் தேர்வு பண்ணாதே... சரியில்லைன்னு சொல்லி அள்ளி போட்டுடுன்னு சொல்லிக் கொடுத்தது காதல் கவின்தான்.. கூடவே சாண்டியும். தர ஆய்வில் வனிதாக்கா ஒன்பதில் ஏழை தேர்வு செய்து வைத்து உண்மையிலேயே சரியான விளையாட்டை விளையாட, கணவரே கண் கண்ட தெய்வம் என்பதால் அவர் சொன்னபடி இருபத்தி ஒன்றில் பதினாலை சரியில்லை என ஒதுக்கி, ஏழு மட்டுமே சரி என்றார்.

லாஸ்லியாவுடன் தர்ஷனும் ஷெரினும் நேரடியாக மோதினார். சேரன் இதெல்லாம் சரியில்லை என்பதாய் தலை ஆட்டினார். வனிதா நானும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரியே எனக்கு கேட்க உரிமை இருக்கு என்று மோத, லாஸ்லியா உன்னோட வேலையைப் பாரு போன்னு சொல்லிட்டு எழுந்து போய்விட்டார். வனிதாக்கா விடுவாரா... ஒன்பதில் மூணே சிறந்தது என தன் தரக்கட்டுப்பாட்டை மறு ஆய்வு செய்தார்.

இதற்கிடையே தர்ஷனுக்கும் கவினுக்கும் காரசார விவாதம்... வலி நிறைந்தவன் ஜெயிக்கட்டும்ன்னு விட்டுக்கொடுங்க சேரன்... விட்டுக்கொடுங்க ஷெரின்... எனச் சொன்ன காதல் கவின், இப்ப விட்டுக் கொடுத்திருக்கலாமே... ஆனால் தன் துணைவி செய்தது சரியே என பலமாக வாதாட, தர்ஷனிடம் 'நீ அவனுக்கிட்ட பேசாதே... அவன்தான் துணை தரக்கட்டுப்பாட்டு அதிகாரி போல அதான் இணைக்காக இவ்வளவு பேசுறான்'னு வனிதாக்கா சொல்ல, மறுபடியும் மீன் மார்க்கெட்... 

கிச்சனில் தின்னபடியே 'உனக்கு நான் ஆதரவுக் குரல் கொடுத்ததாலேயே தூக்கிக்கிட்டு வந்துட்டாங்க... நீ எதையும் செலெக்ட் பண்ணாதே...' என காதல் கவின் கத்திக் கொண்டிருக்க, 'நான் உண்மையாத்தானே இருந்தேன்' என கண்ணைக் கசக்கினார் லாஸ்லியா. ஆமாம் உண்மையாத்தான் இருந்தீங்க... ஆனா யாருக்கு உண்மையான்னு யோசிச்சீங்களா மிஸஸ் கவின்?

வெளிய ஷெரினிடம் 'நான் அவனிடம் பேசயில நீ ஏன் குறுக்க வர்றே..?' என வனிதாக்கா கேட்டதும், 'எடப்பாடி பேரைக் கேட்ட தினகரன் மாதிரி அவனைப் பற்றி எங்கிட்ட எதுக்குப் பேசுறே... அவன் அடுத்தவங்களுக்காக வாழ்றவன்... அதுக்காக நல்லா விளையாடுறேன்னு என்னை நாமினேட் பண்ணியவன்'னு ஷெரின் திரும்பிக் கத்த, 'அடேய் அப்பா பிக்பாஸூ மணி அடிச்சி விடுப்பா போய் சாப்பிட'ன்னு சொன்ன சேரன், 'வனிதா ஏன் அதையே குத்திக்குத்தி விளையாடுறே... விடுவே'ன்னு வேற சொல்ல, 'அண்ணே உங்களுக்குத் தெரியாது'ன்னு கிரீஷ் டப்பாவை சேரன் முகத்துலயே உதைக்க, கருத்துப் போன முகத்தோட கம்முன்னு உக்காந்துட்டார்.

போட்டியின் போது மூன்று பொம்மைகளைக் கொடுத்து மந்திரப் பொம்மை பத்திரமா வச்சிக்கங்கன்னு சொன்ன பிக்பாஸ், அதை ரகசியம் பேசும் அறையில் வைக்கச் சொல்லி, கொஞ்ச நேரத்துல உங்க மந்திரங்கள் பலித்ததுன்னு சொல்லி பாட்டுப்போட்டு சாக்சி, அபி, மோகனை உள்ளே அனுப்பினார்.

கவினுக்கு கண்ணுக்குள்ள மரண பயம்...

லாஸ்லியாவுக்கு ஆத்தாடி.. வந்துட்டாளேன்னு நெஞ்சுல வலி...

எல்லாரிடமும் சகஜமாய்ப் பேசி மகிழ்ந்த சாக்சி, கவினையும் லாஸ்லியாவையும் மதிக்கவேயில்லை... ஆஹா சூப்பரு... 

மோகனை அள்ளிக் கொண்டு போனது ஐவர் குழு.

'ஷெரினிடம் நீதான் ஜெயிக்கணும்... உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்'ன்னு பாசம், நேசம்ன்னு கவிதை சொன்னார் சாக்சி. அதை ரசித்தார் ஷெரின்

தன்னோட ஜட்டியையும் டவுசரையும் தாங்கடான்னு கேட்டார் மோகன்.

'எனக்கும் சாக்சிக்கும் கிடைக்காத வாய்ப்பு உனக்கு கிடைக்கணும்.... நான் பார்த்த லாஸ்லியா இப்ப இல்லை... மீண்டும் நீ பழைய பன்னீர்ச்செல்வமா வரணும்'ன்னு அபி சொன்னார்.

'கவின் என் காதலன்... அவன் சொல்லே எனக்கு மந்திரம்'ன்னு பதில் சொன்னார் லாஸ்லியா.

'உன்னிடம் சாக்சி பேசலையில்ல' என கவினிடம் கேட்டான் தர்ஷன்.

'நல்ல நேரத்துல நீ வந்திருக்கே' என எண்ணெய் ஊற்றினார் வனிதாக்கா.

இன்னைக்கு அடிச்சாடுவாங்கன்னு எதிர்பார்க்கலாம்.. ஒருவேளை எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வாக்கியத்தின்படி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டில் 63 பந்துகளில் 6 ரன் எடுத்த ராகுலைப் போல நின்னு விளையாடினாலும் ஆச்சர்யமில்லை.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : கவினை வறுத்தெடுத்த வனிதா

Related image
சேரன், லாஸ்லியா பிரச்சினையில் கவின் ஏன் கவிழ்ந்து போன படகு மாதிரி இருந்தான் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவனைப் பொறுத்தவரை ஒரு மெகா சீனை அரங்கேற்றணும்... அவ்வளவே. அப்படிச் சோகமாயிருந்த வீட்டின் 69 வது நாளின் தொடர்ச்சியாய்...

பாத்திரம் கழுவிக்கிட்டு இருந்த ஷெரின்கிட்ட தட்டை எங்க வைக்கட்டும் என கவின் வம்பிழுத்துக் கொண்டிருக்க, சாண்டியும் இணைந்து கலகலப்பாக்கினார்கள். வெளியே லாஸ்லியா தனியாகப் படுத்து 'வெண்ணிலவே... வெண்ணிலவே...' என நிலாவோடு குலாவிக்கிட்டிருந்தார். 

'லாஸ் சாப்பிடலையா..?' என்றபடி சேரன் வந்தார். சாப்பிட வா... காத்திருக்கேன் என்றெல்லாம் சொல்லவில்லை... அவரிடமிருந்து வந்த கேள்வியில் இருந்தே அவர் சாப்பிட்டு விட்டுத்தான் வருகிறார் என்பது தெரிந்தது. நேற்றும் சிக்கன் வந்திருக்குமோ..?

சேரனுக்கு இது தேவையில்லாத ஆணி... வேண்டான்னு கழட்டிப் போட்ட இடத்துல மறுபடிக்கும் ஆணியை அடிப்பது தேவையில்லாததுதானே... ஒதுங்கிப் போறவங்களை விரட்டிப் போவது வயதுக்கு உரிய மரியாதையல்ல... இதை ஏன் அவர் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சர்யம். 

கவினைப் பொறுத்தவரை சேரனுடன் லாஸ்லியா பேசுவதும், சேரன் வீட்டுக்குள் இருப்பதும் பாவக்காயில வேப்பெண்ணையை ஊற்றி அதுல கொஞ்சம் சுண்டக்காயையும் போட்டுச் சாப்பிடுவது போல.. ஆரம்பத்தில் இருந்து அவன் அதிகமாக நாமினேட் பண்ணினது சேரனைத்தான்... அப்படியிருக்க பக்கத்து வீட்டுக் காமாட்சிக்கிட்ட ஒரு ரகசியம் சொன்னா மூனாவது வீட்டு லெட்சுமிக்குத் தெரியுற மாதிரி லாஸ்லியாக்கிட்ட எது சொன்னாலும் அடுத்த நிமிடமே கவினுக்குப் போகும்ன்னு தெரிஞ்சும் இந்தாளு எதுக்கு இந்த ஆணியைப் புடுங்கணும்... அப்புறம் மனசு சரியில்ல.... வயிறு சரியில்லன்னு புலம்பணும்...

உங்ககிட்ட கதைக்கணும் என்ற லாஸ்லியா, நாயகனில் கமலிடம் பேரன் நீங்க நல்லவரா கெட்டவரான்னு கேக்குற மாதிரி உங்க பாசம் உண்மையானதா... கேமராவுக்கானதான்னு ஒரு கேள்வியை முன் வைக்க... சேரனின் விளக்கம் சிறப்பே என்றாலும் இதெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள்..? இதைச் சொல்லி என்னாகப் போகிறது..? என்றே தோன்றியது. 

கவின் பேசக்கூடாது என்று சொன்னதால் சேரனுடன் பேசாமல் இருந்தவர்தான் லாஸ்லியா... கவின் சொன்னதால் நாமினேட் பண்ணியவர்தான் லாஸ்லியா... ஸோ கவினுக்கு கமிட் ஆயிட்ட லாஸ்லியா, சேரனின் பேச்சுக்கு எவ்வளவு தூரம் மரியாதை கொடுப்பார்..?

உங்ககிட்ட வச்சிருக்க அன்பு கேமராவுக்கானது அல்ல... நீங்க கவின்கிட்ட பேச ஆரம்பித்தபின் என்னைக் கண்டுக்கலை... பெரும்பாலும் அவனுடனேயே இருப்பதால் இந்த தத்து அப்பனையும் கண்டுக்கலை... போட்டியையும் சீரியஸா எடுத்துக்கலை.... உங்க சிகப்புக் கதவு காதல் வெளியில சிரிப்பா சிரிக்குது... உங்க மேல பாசம் இருந்ததாலதான் ரெண்டு பேர்க்கிட்டயும் பேசினேன்... அதுல உங்க நிலைப்பாடு என்னன்னு தெரிஞ்சாச்சு... அதுக்கு அப்புறம் நான் அதுல தலையிட்டேனா... இல்லையில்ல... அதுதான் எனக்கு மரியாதை... உங்களோட தத்து அப்பனா எனக்கு ஒரு எல்லை இருக்கு... உங்களைக் கண்டிக்கும் உரிமை எனக்கில்லை... ஆனாலும் அப்பான்னு சொல்லிட்டே பொண்ணு போற இடம் சரியில்லைன்னு சொல்றதில் தப்பில்லைன்னு தோணுச்சு. அதே மாதிரி ஒரு சக போட்டியாளனா... ஓரு மனிதனா நீ இதுக்குப் பின்னால எதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படலாம்ன்னு தோணுது என நீண்ட லெக்சர் கொடுத்தார்.

லாஸ்லியா ஏற்றுக் கொண்டதாய் சிரித்து, மன்னிப்புக் கேட்டு அதன் பின் நீங்க உங்க விளையாட்டை விளையாடுங்க... நான் என் விளையாட்டை விளையாடுறேன்... நீங்க எப்பத் தப்புன்னு தெரியுதோ அப்பக் கேள்வியோட வர்றேன்னு சொன்னார். பாசமெல்லாம் இருக்குய்யா... எல்லாம் சரிதான்... ஆனா இப்ப நீங்க கொடுக்குற லெக்சர் போக வேண்டிய இடத்துக்குப் போகும்... அதனால கவின் இன்னும் தீவிரமாத்தான் எதிர்ப்பான்.. இது தேவையா சேரன் சார்..?
 லாஸ்லியாவிடம் முன்னைப் போலில்லாமல் அப்பா - மகளா அதாவது கமல், ஸ்ருதி போலில்லாமல் வனிதா, விஜயகுமார் மாதிரி இருப்போம்ன்னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருந்திருக்கணும் சேரன் சார். மறுக்கா மறுக்கா பாசத்துல வழுக்கி விழுறதெல்லாம் மக்களிடம் உங்கள் நேர்மைக்குக் கிடைத்த இடத்தை மெல்ல இறக்கி வைத்துவிடும் என்பதை எப்போது உணர்வீர்கள்..?

அடுத்த காட்சியில் விளக்கணைத்த பின் கவினிடம் சேரப்பாவிடம் பேசினேன் என்று சொன்னவுடனேயே அவன் தன் பக்கத்துக் கதையை அள்ளிவிட ஆரம்பித்தான். உனக்காக அவரை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் உனக்காக உன் அப்பா, அம்மா, தோழி, அண்ணன், தம்பி, உங்க வீட்டு ஆடு, மாடு, கோழி, நாய் எல்லாத்துக்கு முன்னாலயும் எதையும் விட்டுக் கொடுப்பேன்... மண்டியிடுவேன்... ஆனா இந்தாளுக்காக எதையும் விட்டுக்  கொடுக்கமாட்டேன்.. இவன் யார் எனக்கு...? என்பதாய்ப் பேசினான். மேலும் நான் சொன்னதை நீ கேட்டியா (சேரனுடன் பேசாதே) இப்ப நீ சொல்றதை (சேரனை வெறுக்காதே) எப்படி நான் கேக்கணும்ன்னு நினைக்கிறேன்னு சொல்லி நீ நீயா இரு... நான் நானாயிருக்கேன்... இடையில இந்த நைனா நல்லாயிருக்கட்டும் என்றான்.

மேலும் அவன் சொன்ன இன்னொரு வார்த்தைதான் மகா மட்டரகமானது... ஆம் நம்ம உறவைத் தப்பாத்தான் பார்ப்பாங்க... ஆனா அப்பா மகள்ன்னா தப்பாப் பாக்க மாட்டாங்கதானே... அதான் என்றான்... இதுதான் வக்கிரத்தின் உச்சம்... சேரனின் உறவைக் கொச்சைப்படுத்தும் பேச்சு... கவின் நல்லவன் என சொம்பு தூக்கி அவனை நாமினேசனில் ஓட்டுப் போட்டுக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நம்ம மக்களின் பாசத்தை எங்கே கொண்டு போய்த் தொலைப்பது..?

சாண்டியும் லாஸ்லியாவும் வெளியில் பேசிக்கிட்டு இருந்தாங்க... கவின் - லாஸ்லியா பிரச்சினைதான் பேச்சாய் இருந்தது. சேரனுடன் பேசுவது அவனுக்குப் பிடிக்கலை என்பதைப் பார்வையாளர்களாய் நாம் உணர்ந்து வைத்திருப்பதையே லாஸ்லியாவும் சொன்னார். இவர் பாசத்தைக் காட்டுறார்... அவனுக்கு இவரோட பேசினாலே கோபம் வருது... இப்ப நான் என்ன செய்வது எனப் புலம்பினார். சாண்டியிடமும் அதற்கு சரியான பதில் இல்லை.

சேரனைப் பொறுத்தவரை கவினுக்கு லாஸ்லியா வாழ்க்கைப் போக்கில் எந்த விதத்திலும் பிரச்சினையாக இருக்கவில்லை என்றாலும் கவினைப் பொறுத்தவரை தன் காதலுக்கு சேரன்தான் பிரச்சினையே என்பதாய் மனசுக்குள் மதுரை மீனாட்சி கோபுர உயரத்துக்கு முடிவு பண்ணி வச்சிருக்கான். அதிலிருந்து அவன் மீளவே முடியாது. லாஸ்லியாவுக்குள் மீண்டும் பாசப் போராட்டமா அல்லது நடிப்பான்னு வரும் நாட்கள் சொல்லிவிடும்.

70வதாவது நாள் விடியல் 'ஆ முதல் அக்குத் தானடா...' பாடலுடன்... சாண்டி, முகன், தர்ஷன் ஆடினார்கள். தன்னிடமிருந்து ஒதுங்கியே இருக்கும் கவினிடம் சாண்டி பேச, என்னை விட்டுடுண்ணே... நான் இப்படியே இருக்கேன் என ஒரு மல்டி டாஸ்க் சீனைப் போட்டான். சோகமாய் இருப்பது போல் காட்ட தாடி ஒரு ப்ளஸ் பாயிண்ட்தான் இல்லையா..?

நாமினேசன் வந்தாச்சு... லாஸ்லியா வாங்கன்னு சொன்னதும் எப்பவும் போல அறைக்குள்ள போயி கதை சொல்லி அழுதுட்டு வரலாம்ன்னு போக, இது ஓபன் நாமினேசன் பிளாஸ்மா முன்னால நின்னு யார் அந்த ரெண்டு பேருன்னு சொல்லுங்க அப்படின்னு பிக்பாஸ் தன் ஆயுதத்தை மெல்ல இறக்கினார். லாஸ்லியா அப்படியே உக்கார்ந்து யோசித்தார். முகத்துக்கு நேர நீ இதைப் பண்னலைன்னு சொல்றதுல நிறையச் சிக்கல் இருக்கு... ஆனாலும் இனி வரும் வாரங்கள் இப்படித்தான் நாமினேசன் இருக்க வேண்டும்... அதுவே சரியானதாகவும் இருக்கும். இப்படியான நாமினேசனில் தலைவி என்ற முறையில் வனிதாக்கா இல்லாதது வருத்தமே...

ஜவர் குழுவுல சின்ன உடைப்பு என்பதால் சேரன், ஷெரினுக்கு அதிக ஓட்டு விழவில்லை... கவினுக்கும் லாஸ்லியாவுக்குமே பெரும்பாலான அடி... முகனும் இதில் மூழ்கினார்... அஞ்சு பேர் நாமினேசனில் இருக்கிறார்கள். கவின், லாஸ்லியாவை பிக்பாஸே காப்பாற்றி விடுவார்... எதுவுமே இல்லாத சந்தையில இந்தத் தக்காளியாச்சும் விலை போகட்டுமேன்னு இன்னேரம் ஆளுகளை வைத்து ஓட்டுப் போட ஆரம்பிச்சிருப்பார்... உலக நாயகனும் மக்களே இந்த முடிவெடுத்தார்கள்... நீங்க காப்பாற்றப்பட்டீர்கள் என கவனமாய் பொய்யை கனிவாய்ச் சொல்வார். அதானால் இந்த வாரம் வெளியேறுபவர்களுக்கான போட்டியில் ஷெரின், சேரன், முகன் மட்டுமே நிற்பார்கள். என்னைப் பொறுத்தவரை சேரன் போவதே நலம்.

சேரன் நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கார், சிறந்த இயக்குநர், பல வெற்றிகளைப் பார்த்தவர் அதேபோல் ஷெரினும் என கவின் பேசியது தேவையில்லாதது. இங்க என்ன பண்ணுனாங்கன்னு நாமினேட் பண்ணுனுங்கிறது பிக்பாஸ் விதி.. வெளியில ட்ரம்போட கூட சினிமாப் பார்த்திருக்கட்டும்... மோடியோட ஆப்கானிஸ்தானுக்கு அஞ்சு தடவை போனாயிருக்கட்டும் அதெல்லாம் நாமினேசனுக்குத் தேவையில்லைன்னு வனிதாக்கா கம்பு சுற்றி பிக்பாஸையும் யோவ் என்னய்யா ஆட்டோகிராப் பார்க்கப் போனப்போ கூட்டத்துல என்னோட செருப்பு அந்து போச்சு அதுக்கு காரணம் சேரனுங்கிறான்.. நீயும் பேசாமா இருக்கேன்னு கேட்டு சண்டைக்கு முதல் விதை போட, எனக்குப் பிடிக்காது அதான் நாமினேட் பண்ணுறேன்னு சொல்லிட்டான்.

இங்க சாண்டிதான் டுவிஸ்ட்... எதிர்பாராததை எதிர்பாருங்கள்ன்னு கமல் சொன்ன மாதிரி, கவின் லாஸ் எனச் சொல்லி, கவின் இப்ப ஒரு போட்டியாளனாய் இங்கில்லை.. லாஸ்லியாவை யாரும் கொத்திக்கிட்டுப் போயிருவாங்களோன்னு பாதுகாவலனாய்த்தான் இங்கிருக்கான்... இவங்க காதல் செய்ய இது இடமில்லை... வெளிய போயி பண்ணித் தொலைக்கட்டும் என்றார். இதுவரை தன்னுடன் ஜாலியாய் இருந்தவன் இப்ப ஒரு பொண்ணுக்காக எல்லாம் தொலைத்து சிவப்புக் கேட்டுக்கிட்டயே கிடந்து மக்கள் மத்தியில் சிரிப்பாய் சிரிக்கிறானேன்னு மனசுக்குள்ள ஒரு வலி... அது அழுகையாய் வெடித்தது... அதில் நடிப்பெல்லாம் இல்லை... உண்மையான வருத்தமே இருந்தது.

சாண்டியும் தர்ஷனும் தன்னைச் சொல்லியதும் கவின் அழுதான்.... இவன்தான் சேரனின் அழுகை ட்ராமா என்றவன் இப்போது அழுவது உண்மையான வலியால் என்றாலும் பார்ப்பவர்களுக்கு இது ட்ராமா இல்லையா என்றே தோன்றும்... ஏனென்றால் விதைத்ததைத்தான் நாம் அறுக்க முடியும். இந்த இடத்தில் இது ஒரு போட்டி, இங்க அழுது அனுதாபம் தேடத் தேவையில்லை என்பதை எடுத்து வைத்தார் வனிதாக்கா... இதனால் பிரச்சினை சூடு பிடித்தது. 

இங்க ஒவ்வொருத்தரும் விளையாடத்தான் வந்திருக்கிறோம்... இதுல அவனுக்கு விட்டுக் கொடுப்பேன்.. இவனுக்கு விட்டுக் கொடுப்பேன்னு சொல்றவனெல்லாம் எதுக்கு இங்க வரணும்... நீங்க ஒரு குழுவா இருந்துக்கிட்டு நல்லா வெளையாடுறவங்களை நாமினேட் பண்ணுவீங்க... மக்களும் அவங்களை வெளியே அனுப்பிடுவாங்க... விளையாட மாட்டேன்னு சொல்றவங்க இங்க இருப்பீங்க... எதுக்கு இருக்கணும்... நானெல்லாம் விளையாட்டை விளையாட்டாத்தான் விளையாடுறேன்... டு பி ஹானஸ்ட்... உங்களுக்கு நேருக்கு நேராத்தான் பேசுறேன் என சிக்ஸராய் விளாசிக் கொண்டிருந்தார் வனிதாக்கா. குறிப்பாக 'முஸ்தபா... முஸ்தபா' பாடும் கவினை வச்சிச் செய்தது சிறப்பு... 

நான் நண்பர்களுக்காக விட்டுக் கொடுப்பேன்... அவங்க எவ்வளவு வலியைச் சுமந்துக்கிட்டு வந்திருக்காங்க தெரியுமா என்றெல்லாம் பேசியது தேவையில்லாதது. எத்தனை வலி என்றாலும் இந்தப் போட்டிக்குள் ஒரளவு பிரபலங்களுக்குத்தான் வாய்ப்புக் கொடுக்கப்படும்... ஏன் வறண்டு போன விளைநிலம் பார்த்து தூக்குப் போட்டுச் சாகுறானே விவசாயி, அவனுக்குள் இருக்கும் வலிக்காக அவனில் ஒருத்தனுக்கு பிக்பாஸ் வாய்ப்புக் கொடுப்பாரா..? தினக்கூலியாய் வெயிலில் பாரம் சுமக்கிறானே அதில் ஒருத்தனுக்கு பிக்பாஸ் வாய்ப்புக் கொடுப்பாரா..? விளையாட வந்த பின் என்ன வலி.. மண்ணாங்கட்டின்னு... திறமையுள்ளவன் வெல்லட்டும்... இவன் யார் விட்டுக் கொடுக்க..?

மேலும் ஒருவேளை லாஸ்லியா, கவின், சாண்டி, தர்ஷன்னு நாலு பேர் மட்டுமே உள்ளிருக்கும் சூழல் வரும் போது கவின் யாரையும் நாமினேட் பண்ணாமல் போட்டியில் இருந்து விலகுவானா..? அவங்க ஜெயிக்க நீங்க போங்கன்னு யார்யார் கடினமான போட்டி கொடுப்பார்களோ அவர்களை எல்லாம் வெளியாக்கி, இந்த முஸ்தபாக்களை வைத்து தனக்கான வெற்றியைத் தேடிக்கொள்ள மிக அழகாக 'வலி நிறைந்தவர்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விளையாட ஆரம்பித்திருக்கிறான்.

கவினுடனான வனிதாவின் சண்டையில் பல விஷயங்கள் சரியே எனப்பட்டது. மனம் கவர்ந்தவனுக்காக லாஸ்லியா வனிதாவுடன் மல்லுக்கட்டினார். தர்ஷனும் இடைபுக, மற்றவர்கள் என்றால் உடனே வரும் நீ உன் நண்பர்களை இதுபோல் கேட்டிருக்கிறாயா..? என்ற கேள்வி மிகவும் சரியே... தர்ஷன் மற்றவர்களிடம் குரலை உயர்த்துவதில் காட்டும் வேகத்தை கவின், சாண்டியிடம் மட்டும் அது தவறே என்றாலும் காட்டுவதில்லை.

தன்னை நாமினேட் பண்ணிய போதிலும் கவினிடம் உங்க காதல்தான் நல்லாயிருக்கே... பின்ன என்னத்துக்கு இப்படி ஒரு டிராமா... மத்தவங்க என்னமோ பேசட்டும்... அதுக்காக எதுக்கு ரெண்டு பேரும் முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்கீங்க... பேசுங்க... விளையாடுங்க.. எப்பவும் போல இருங்க... வெளியில போயி மத்ததைப் பாத்துக்கங்க என ஆறுதலாய்ப் பேசினார் ஷெரின்.

வனிதா, கவின் சண்டையில் சாண்டியும் தர்ஷனும் எப்போதேனும் இடை புகுந்தார்கள். லாஸ்லியா மட்டுமே தனியாகக் களமாடினார். முகன், சேரன், ஷெரின் நேரடி ஆட்டமில்லை. சேரன் ஏனோ மது பிரச்சினையில் வெண்டக்காய் வெட்டியது போலவே தனியே அமர்ந்திருந்தார். கேமரா அவரையே படம் பிடித்தது... ஆனாலும் அவர் பேசமாட்டேன்னு அடம் பிடித்தார்.

இருந்தாலும் அனுதாபம் தேடுறது... விட்டுக் கொடுப்பேன்னு சொல்றதையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்தார். சண்டை போடுறது பிரச்சினையில்லை ஆனா சொந்தப் பிரச்சினைகளுக்குள்ள போகாதீங்கப்பா என்றார். மேலும் வனிதாவிடம் ஏதோ பேச முயற்சித்தார்... அக்கா எப்போ அடுத்தவரைப் பேச விட்டிருக்கு... இருங்கண்ணா நான் பேசிக்கிறேன்னு அது பாட்டுக்கு சிக்ஸ் அடிச்சிக்கிட்டு இருந்துச்சு... நீ என்னைய எப்ப விளையாட விடப்போறேன்னு தோனியைப் பார்த்துக் கொண்டு நிற்கும் அஸ்வினைப் போல எதிர்முனையில் நின்று வேடிக்கையே பார்த்தார்.

சேரன் எதுவும் பேசாததற்குக் காரணம் வனிதா பேச இடம் கொடுக்காது என்பதாலும் எதிராளி வலியை வைத்து வெற்றிக்கு வழி தேடும் அனுதாபத்தை ஆயுதமாக்கும் கவினுடன் பிரச்சினை என்பதாலும் தன்னைப் பொறுத்தவரை வெற்றி என்பது அடுத்தவர் தூக்கிக் கொடுத்துப் பெறுவதல்ல... தானே போராடிப் பெறுவதுதான் என்பதாலும் அந்த இடத்தில் யோகா செய்து கொண்டிருந்தார். ஆனாலும் ரொம்பக் கடினமய்யா அப்படி அமர்ந்திருப்பது.

சார் உங்க மேல நிறைய மதிப்பு வச்சிருக்கான் சார் என சேரனிடம் கவின் பற்றி சாண்டி சொன்னதெல்லாம் சுத்தப் பொய்... சைக்கிள் எனப் பேர் வைத்து, இவனெல்லாம் பெரிய இயக்குநரா எனப் பேசி, அப்பன்னு எதுக்கு உள்ள வர்றான்னு சொல்லி, ட்ராமான்னு சொல்லி, அவரோட பேசினால் என்னோட பேசாதேன்னு சொல்லி, அப்பா மகள் உறவுன்னா மக்கள் பார்வையில் தப்பாத் தெரியாதுன்னு சொல்லி... இப்படி நிறையப் பேசிய கவின் எப்படி... எப்போது இவரை நல்லவர்ன்னு சொல்லியிருப்பான்., ஒருவேளை சேரன் ரொம்ப நல்லவருன்னு சொன்னதை மட்டும் பிக்பாஸ் வெட்டிட்டாரோ...?

இந்தப் பிரச்சினையெல்லாம் முடியட்டும்ன்னு திண்ணையில பாயைப் போட்டு படுத்திருந்த பிக்பாஸ் மெல்ல எழுந்து இன்னார் இன்னார் வெளியில் போற போட்டியில் இருக்கீங்கன்னு சொன்னார். கவின் சொன்ன காரணங்கள் தவறென்றோ... வனிதாக்கா கம்பு சுற்றியதிலும் தவறிருக்கு என்றோ எதுவும் சொல்லவில்லை.

குருநாதான்னு சாண்டி சொல்றதால ஐவர் அணிக்கு குருநாதான்னு போட்ட கருப்பு டீசர்ட் கொடுத்திருக்கார் பிக்பாஸ்... நடத்துங்க பிக்பாஸ்... நடத்துங்க.. உங்க காட்டுல மழைதான்... பார்க்கிறவங்களுக்குத்தான் வறட்சியா இருக்கு.

சாக்சியைக் கொண்டாந்து விட்டுட்டு நீ வெளிய போடான்னு வனிதாக்கா சொன்னதுதான் நேற்றைய சண்டையில் ஹைலைட்... செம சண்டை... அக்கா விடாமல் சிக்ஸர்தான்... கவின்தான் தண்ணிக்குள்ள விழுந்த கோழிக்குஞ்சி மாதிரி ஆயிட்டான். இன்னைக்கு சாக்சி வேற உள்ள... அவங்களைப் பார்த்ததும் கவின் லாஸ்லியா கூட அதீத காதல் செய்வது போல் நடிக்கிறான்... அப்ப செமத்தியான ஆட்டம் இன்னைக்கு காத்திருக்கு.

டிஸ்கி : சில நாட்களாக 'ர்' என இருந்த கவின் மீண்டும் இன்றைய பதிவில் 'ன்' ஆகியிருப்பது... அவரின் செயல்பாடுகள் பிடிக்காததாலேயே... ஆம் எனக்கு ஆரம்பம் முதல் கவினைப் பிடிக்கவில்லை... அதனால் சேரன் ஆதரவாளன் இல்லை.. :) ஒரு இயக்குநராய் அவரைப் பிடிக்கும், பிக்பாஸ் இல்லத்தில் அல்ல.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 2 செப்டம்பர், 2019

மனசின் பக்கம் : செப்டெம்பர் 2019 படைப்புக்கள்

செப்டெம்பர் மாத காற்றுவெளியில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து என் கதைகளுக்கு இடம் அளிக்கும் திரு. முல்லை அமுதன் மற்றும் ஆசிரியர் குழுவுக்கு நன்றி. 






தேபோல் முத்துக்கமலத்தில் காதல் அனாதைகள்  கவிதையும் கொலுசு மின்னிதழில் சிலைகள் கவிதையும் வெளியாகியிருக்கிறது. வாய்ப்புக் கொடுத்த ஆசிரியர் குழுவுக்கு நன்றி. இவை இரண்டு கவிதையும் முன்னரே இங்கு பகிர்ந்த கவிதைகள்தான்.

** தலைப்பைச் சொடுக்கி வாசியுங்கள்.

பாக்யா மக்கள் மனசு பகுதியில் தொடர்ந்து என் கருத்தும்... நன்றி பூங்கதிர் சார்.

-'பரிவை' சே.குமார்.

பிக்பாஸ் : சேரன் - லாஸ்லியா - கவின்

Image result for biggboss-3 01 september 2019 images
ந்தவாரம் புறம் தள்ளுதல் இல்லை என்பதால் ஆண்டவர் ஞாயிற்றுக்கிழமை என்ன பண்ணப் போறாரோன்னு யோசனையாக இருந்தது. சனிக்கிழமை வேற மரண மொக்கையா இருந்ததால் இன்றும் மொக்கைதான் தொடரும் என்பதாகவேபட்டது. 

இந்த வீட்டுக்குள்ள ஆண்கள் பெண்களை அடிமைப் படுத்துறாங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க... ஆனா நம்ம பெண்கள் எல்லாம் பதக்கங்களை வாங்கிக் குவிக்கிறாங்க... அவங்களை யாரும் அடிமைப்படுத்த முடியாது என சின்னதாய் ஒரு பிரசங்கம் முடிச்சிட்டு கமல் அகம் டிவி வழியே அகத்துக்குள் புகுந்தார்.

எட்டுப் பேரும் வரிசையா இருந்தாங்க... சில வாரமாக கர்ணனும் கவசகுண்டலமுமாக இருந்த கவின் லாஸ்லியாவின் நெருங்கமான அமர்தலுக்குள் சாண்டி வரப்பாய் அமர்ந்திருந்தார். 

இந்த வாரம் யாரு தப்புச் செஞ்சாலும் 'ஐ மேட் எ மிஸ்டேக்'குன்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே அது ஏன்..? அப்படியென்னய்யா தப்புப் பண்னுனீங்க... அப்ப யாருமே சரியா விளையாடலையா... அதெதுக்குச் சொல்றீங்கன்னு டுவிட்டர் கமலாய் பேசினார்... அது யாருக்கெல்லாம் புரிந்ததோ தெரியலை. 

அப்படியே 'காலர் ஆப் த வீக்' போன் காலுக்குப் போனார்.

கேள்வி லாஸ்லியாவுக்கு...

சேரன் உங்கள் மீது பாசமாக இருக்கிறார்... நீங்களும் இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.... இருந்தாலும் உங்களிடம் கவின் சேரனின் பாசத்தை டிராமா என்று சொல்லும் போது நீங்க ஏன் பேசாமல் இருந்தீர்கள்..? எனச் சரியான கேள்வியை முன் வைத்தார் ஈரோட்டில் இருந்து பேசிய பெண்.

லாஸ்லியா ஆடிப் போனாரோ இல்லையோ கவின் ஆடிப் போயிட்டார்... என்னைக்கோ பேசியதை இன்னைக்குத் தூக்கி வருவாங்கன்னு இருவரும் எதிர்பார்க்கலை... மொக்கைத்தனமான கேள்விகள் என சில வாரத்துக்கு முன் எழுதியிருந்தேன்... நேற்று கேட்கப்பட்டது மொரட்டுத்தனமான கேள்வி. 

அன்னைக்கு மனநிலையில் கவின் சொன்னது உண்மையாக இருக்குமோ எனத் தோன்றியது அதனால் எதுவும் பேசவில்லை... அதன்பின் சேரப்பாவிடம் பேசி எல்லாத்தையும் சரி பண்ணியாச்சு.. இப்ப நாங்க அப்பா மகள்தான் உங்களுக்குக் காட்டப்படும் ஒரு மணி நேரத்தில் எங்களின் பாசத்தை பொரியலாகத்தான் காட்டமுடியும்... முழு பதார்த்தத்தையும் காட்ட முடியாதுல்ல என்பதாய்ப் பேசி முடித்திருக்கலாம்.

ஆனால் நாங்க இப்ப கவினின் ஆள்... அவரிடம் மடக்கிப் பேசும் வித்தையைக் கற்றிருக்கிறோம் அல்லவா... அதானால் மூணு வாரத்துக்கு முன்னாடி நிகழ்ந்த பிரச்சினைக்கு முந்தாநாள் ராத்திரி சிக்கன் சாப்பிட்டதில் ஆரம்பித்தார். அதாவது குழப்பமான மனநிலையில் எது சரி..? எது தவறு..? எது உண்மை...? எது போலி...? எது அன்பு...? எது வீம்பு...? என தனக்கு இன்னும் புரியவில்லை... நிறைய விஷயங்களை மண்டைக்குள்ள போட்டு குழப்பிக்கிட்டு இருக்கேன்... இதெல்லாம் பேசாமல் தீராது... எப்பவும் எனக்காக காத்திருப்பேன்னு சொல்வார் ஆனா சிக்கன் வந்தா உடனே சாப்பிட்டிருவார். டாஸ்க்கின் போது எனக்கு உதவுவார்ன்னு பார்த்தா திட்டுவார் என்றெல்லாம் ஏதேதோ பேசி கண்ணைக் கசக்கி சரோஜாதேவியை மிஞ்சினார்.

யாரிடம் உண்மையான பாசம் இருக்கு, சேரனிடமா அல்லது லாஸ்லியாவிடமா..? என்பதுதான் முக்கியமாய் யோசிக்கப்பட வேண்டிய விஷயம். சேரனைப் பொறுத்தவரை பாசத்தில் துளி கூட வேசமில்லை... ஆனால் லாஸ்லியாவுக்கு இப்போது சேரனைவிட தானே முக்கியம் என்பதாய் கவின் ஆக்கி வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட கக்கூஸ் போகும் நேரம் தவிர்த்து எல்லா நேரமும் கவின்தான் அரணாய் நிற்கிறார்... இது லாஸ்லியாவுக்கான பாதுகாப்பு அல்ல... கவினுக்கான பாதுகாப்புக்காக என்பதை லாஸ்லியா உணரவில்லை. சேரனிடம் லாஸ்லியா முன்பு போல் இருக்கும் பட்சத்தில் கவினுடனான உறவு பெவிக்கால் போட்டு ஒட்டப்பட்டிருந்தாலும் விரிவு ஏற்படும் என்பதை அவர் நன்றாகவே அறிந்திருப்பதாலே இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சி. தனக்கான துணை என வரும் போது லாஸ்லியா தன்னையே முன்னிறுத்த வேண்டும் என்ற காய் நகர்த்தலில் கவின் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். 

சேரனைப் பொறுத்தவரை உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனிதராய் இருக்கிறார். லாஸ்லியா இந்த வீட்டுக்குள் இருக்கும் வரைதான் மகள்... வெளியில் போனதும் கவினையே தூக்கி வீசினாலும் வீசக்கூடும் என்ற நிலையில் சேரனெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார். 

சாப்பாட்டு விஷயத்தைக் கையில் எடுத்ததைத்தான் சேரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருமுறை சாண்டி அவர் காத்திருக்கார் என்று சொன்னபோது இருக்கட்டும் என்பதாய் கவினுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தவர்தான் லாஸ்லியா. சில வேளைகளில் குளித்து மேக்கப் போட்டுக் கொண்டு வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் எல்லா நாளும் காத்திருக்க, சமீபத்திய லாஸ்லியாவின் நடவடிக்கை இடம் கொடுத்திருக்காதுதான். 

வனிதா சொன்னதைப் போல் அப்பா என்ற இடத்தைக் கொடுத்திருக்கும் நிலையில் அவருக்கு முன்னே நாளெல்லாம் சிகப்புக் கேட்டுக்கிட்டே கவினுடன் காதல் லாவணி பாடுவதென்பது அவருக்குக் கொடுக்கும் மரியாதை இல்லைதான் என்றாலும் அப்பா என்பது வேறு... அப்பா ஸ்தானம் என்பது வேறு... சேரனுக்கு லாஸ்லியா கொடுத்திருப்பது அப்பா ஸ்தானம்தான்... அதை எப்போது வேண்டுமானாலும் அவர் தூக்கிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பார். பெத்த அப்பனையே யார் நீன்னு கேக்க வைக்கும் காதல் சில நாள் உறவில் அப்பாவாய்த் தெரிகிறாய் என்று சொன்னவரைத் தூக்கி எறிய எவ்வளவு நேரமாகும்..? 

இதற்குள் உடைந்து பாசத்தில் உருகி நிற்பதெல்லாம் தேவையில்லாது...  இது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி... இதில் வெற்றியை நோக்கித்தான் நகரணுமே ஒழிய பாசத்தில் படுத்துக் கொண்டு பகல் கனவு காணக்கூடாது. வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்த சேரன் லாஸ்லியாவை சக போட்டியாளராய்ப் பார்த்து உறவுக்குள் இருந்து விலகி நிற்பது தொடர்ந்து வெற்றியை நோக்கிப் போராட உந்துதலாக இருக்கும்... அதைச் சேரன்தான் செய்ய வேண்டும்.

முன்பொரு பதிவில் சொன்னது போல் உடைந்த மண் பானை ஒட்டாது என்பதை சேரன் உணர வேண்டும். சேரனுடன் பேச நேரமே இல்லாதது போல் லாஸ்லியா பேசியதெல்லாம் என்ன வகையில் சேர்த்தி என்று புரியவில்லை... விளக்கணைத்த பின்னும் மணிக்கணக்கில் கவினுடன் பேச முடியும் போது பத்து நிமிடம் நேரம் ஒதுக்கி தன் கேள்விகளைக் கேட்க முடியாதா என்ன.. கேக்குறவன் கேனையன்னா கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்வாங்களாம்.

பார்வையாளர்களின் கேள்விகள்... போட்டியாளர்களின் பதில்கள்... பழைய சேரனாய்த் திரும்பி வருவீங்களா..? ஷெரின் எப்ப உங்க விளையாட்டை விளையாடுவீங்க...? தர்ஷன் உங்க நண்பர்களிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை எப்போ கேட்பீங்க..? கவின் எல்லாப் பெண்களிடமும் வெளியே போய் பேசுவோம்ன்னு சொல்றீங்க... அப்படி என்ன பேசுவீங்க...? லாஸ்லியா நீங்க வந்த நோக்கம் நிறைவடைந்ததா..? கவின் கேம் நல்லா விளையாடுறீங்க... எப்ப சாண்டிக்கு சொல்லிக் கொடுப்பீங்க..? சாண்டி நீங்க மற்றவர்களைக் கலாய்க்கிறீங்க... அதை அவங்க ஏத்துக்கணும்ன்னு நினைக்கிறீங்க... ஆன உங்க பிரண்ட்சை யாராச்சும் கலாய்ச்சா உன்னை டார்கெட் பண்றாங்கன்னு சொல்றீங்க... அது ஏன்..? முகன் தமிழ்நாட்டுலயே தங்குவீங்களா..? லாஸ்லியா காதலைப் பற்றி வேறென்ன உங்களிடம் கேட்பது..? வனிதாக்கா தர்ஷன் ஈசி டார்க்கெட்டுன்னு முடிவு பண்ணிட்டீங்க... அடுத்த டார்கெட் யாரு..? கொசுவையே அடிச்சி விரட்டுன நீங்க யானைகளை ஒன்றும் செய்யாதது ஏன்..? என்பதாய்க் கேள்விகள்... ஒரளவுக்கு நல்ல பதில்கள்.

வனிதா மட்டுமே ஈசின்னா என்னன்னு விளக்குங்க என்றார். உடனே கமல் இப்ப கேள்வி கேட்ட நீங்கதான் டார்க்கெட் என அடித்தாரே பார்க்கலாம். செம. அப்புறம் லாஸ்லியாவிடம் இது பாண்டி கிடையாது... இது போட்டி... சேரப்பா.. தர்ஷன் அண்ணன், கவின் தம்பி.... என்னோட தம்பின்னு சொன்னேன்... அப்படின்னு கைகளைப் பற்றிக்கப் பார்க்காதீங்க... உங்களுக்கு கையைப் பிடிச்சிக்கணும்ன்னா என்னைப் பாலோப் பண்ணுங்க... உங்க கையை நீங்களே பற்றிக்கங்க என ஆறுதல் சொன்னார். சேரனிடம் இது மட்டுமே வாழ்க்கையில்லை... மகளுக்கு பொறந்த வீட்டை விட புகுந்த வீடு பெரிது... புரிஞ்சிக்கிட்டு அவங்களுக்கான சுதந்திரத்தை கொடுத்துடுங்க என்றார்.

அப்புறம் காடு, பாசம், வாழ்க்கை, நட்பு, போட்டி என சில வார்த்தைகளை வைத்துக் கதை சொல்லச் சொன்னார். எல்லாரும் சொல்ல சேரன் மட்டும் இதுல உண்மை, பொய்ங்கிற வார்த்தை இல்லை சார்... அது இருந்தாச் சொல்லலாம்.... இப்ப அந்த மனநிலையும் இல்லை என்றார். உடனே கமல் கதை சொல்வதை விரும்புபவர் இப்பச் சொல்ல விரும்பவில்லை. எல்லாரும் கதை சொல்ல பயிற்சி செய்யும் போது அவர் தனியே இருந்தார்... வனிதா மட்டுமே அவருடன் பேசிக் கொண்டிருந்தார் என்று சொன்னார். வனிதா சுற்றிவிட்டு வேடிக்கை பார்ப்பவர் என்றாலும் அந்த நேரத்தில் அவரின் பேச்சு உண்மையிலேயே சரியானதாகவே இருந்தது.

சேரனிடம் உண்மை பொய் இணைத்துச் சொல்லுங்களேன் என்ற போதும் மறுக்க, சரி வெளியில் வந்து என்னிடம் சொல்லுங்க என்றதும் தேவர்மகன்-2 சொல்லுறேன் சார் என்றார். பாசத்துக்கு இவ்வளவு இடம் கொடுத்தல் மோசமானது மிஸ்டர் சேரன்... நீங்க கதை சொல்லியிருக்கணும்... அதைத் தவறவிட்டுட்டீங்க.

இந்த வாரம் வெளியேற்றம் இல்லை எனக் குறும்படம் போட்டுக் காட்டி கமல் வெளியேற, சேரன், லாஸ்லியா, கவினுக்குள் புயல் அடிக்க ஆரம்பித்தது. கஜாவில் வேரோடு சாய்ந்த தென்னை போலானார் சேரன். லாஸ்லியாவைப் பொறுத்தவரை சேரனைவிட கவினே முக்கியம் என்ற நிலையில்தான் இருக்கிறார் என்பதால் கவின் ஆறுதல் சொல்லவில்லையே என்ற வருத்தமே மனசுக்குள் அதிகமாய். கவின் கிடைத்த வாய்ப்பில் மிக அழகாக காய் நகர்த்தி விளையாட ஆரம்பித்தார்.

எல்லாரிடமும் விலகி இருப்பது போல் ஒரு நடிப்பை அழகாக அரங்கேற்ற ஆரம்பித்தார். போன வாரம் கமல் சொன்னவுடன் இனிப் பாருங்க என் விளையாட்டை எனச் சீனைப் போட்டுவிட்டு லாஸ்லியாவை எப்படிப் படிய வைப்பது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். இந்த வாரம் கமல் வேறு நட்புக்காக விட்டுக் கொடுப்பதாய் சொல்லும் அந்தப் பொய்யான வார்த்தைகளுக்கு மாலை போட்டு மரியாதையும் செய்துவிட்டார். இப்போது அடுத்த நாடகத்துக்குத் தயாராயிட்டார்.

சேரன் இடையில் வருகிறார்... அப்பா மகள் நடிப்பெல்லாம் எதற்கு... அவளுக்கு விட்டுக் கொடுத்துட்டுப் போவாரா இவர்... என சேரனை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டுகிறார்... கவினுக்கு இப்போதைய பிரச்சினை சேரனே. எங்கே அப்பா மகள்ன்னு ஆரம்பிச்சிருவாங்களோன்னு பயம் மனசுக்குள்... இந்த வாரம் சேரனை நாமினேசனில் கொண்டு வர முயற்சி எடுக்க ஆரம்பித்து விட்டார். ஷெரினிடம் பேசும் போது மெல்லத் தர்ஷனையும் இழுத்ததெல்லாம் சேரனைக் கெட்டவர் என்று முன்னிறுத்தவே... லாஸ்லியாவிடம் பேசாதிருப்பது அவரை சேரனிடம் பேச விடாமல் செய்யவே... எல்லாமே முன்முடிவுகளுடன் நகர்த்தப்படும் காய்கள்தான். கவின் ரகுவரனுக்கெல்லாம் அப்பன் என்பதை இனி வரும் வாரங்கள் சொல்லும்.

சேரன் மனசு வலிக்கிதுன்னு உட்கார்ந்து யோசிப்பதும் வனிதா மற்றும் தர்ஷனுடன் பேசுவது தேவையில்லாதது. அவரின் மகள்கள் அப்பாவை கவினெல்லாம் கேலி பண்ணுவதையும் கேவலமாகப் பேசுவதையும் வெளியில் பார்த்து அழக்கூடும்... அதுவே உண்மையான பாசம்... இவரோ தனது பாசம் உண்மையில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஒருத்திக்காய் அழுவதெல்லாம் தேவையில்லாதது. உணர்ச்சிகளுக்கு இவ்வளவு தூரம் அடிமையாகக் காரணமென்ன... உறிச்சிப் போட்ட பாம்புச் சட்டையை மீண்டும் அணிய முடியாது... லாஸ்லியா உறிச்சிப் போட்ட பாம்புச் சட்டைதான் தான் என்பதை உணர்தல் நலம். கவின், சேரனில் ஒருவர் வெளியேறும் வரை இப்பிரச்சினை தொடரத்தான் செய்யும். சேரன் வெளியேறினால் பிக்பாஸ் காதல் பாஸாவார்... கவின் வெளியேறினால் மீண்டும் அப்பா - மகள் அவ்வளவு முக்கியத்துவம் பெறாது... விளையாட்டு விளையாட்டாய் நகரும்.

வனிதாவுக்குள் ஒரு வேகம்... யாரு வெளிய போகனும்ன்னா என்னையச் சொல்றாங்க... அப்புறம் சாப்பாடு நாந்தான் செய்யணுங்கிறாங்க... வக்கிறேன் ஆப்புன்னு தினம் ரெண்டு பேருன்னு சட்டம் போட்டுட்டாங்க... ஆஹா... இது சூப்பரு... செல்லப் பிள்ளையா சுத்துற லாஸ்லியாவுக்கெல்லாம் செம ஆப்பு.... வனிதாக்கா எப்பவாச்சும் இப்படியெல்லாம் செஞ்சு கலக்கிடுறாங்க.

லாஸ்லியா இப்போது வனிதாவுக்கு சாமரம் வீச ஆரம்பிக்கிறார்... இது எதற்கான ஆரம்பம் என்று தெரியவில்லை... 

சாண்டி, தர்ஷன் சொல்லியும் சேரனிடம் மன்னிப்புக் கேட்கத் தோன்றவில்லை லாஸ்லியாவுக்கு... அவரின் கவலையெல்லாம் கவின் முகத்தைத் தூக்கி வைத்திருப்பதுதான்... அதற்காக வெயிலில் கிடக்கிறார். 

அப்படியே லாஸ்லியா மன்னிப்புக் கேட்டாலும் அதற்கு பதிலளித்துவிட்டு சேரன் தன் வேலையைப் பார்ப்பது நலம் பயக்கும்... மகளேன்னு கட்டிக்கிட்டா சேரன் எப்போதும் திருந்தப் போவதில்லை என்று மக்கள் மனசுக்குள் தோன்றும் என்பதே உண்மை.

நீங்க பண்றதையெல்லாம் பார்த்து மக்கள் சிரிக்கிறாங்கன்னு நினைக்காதீங்க... நீங்க சிரிச்சா இவங்க அழுவாங்க.... நீங்க அழுதா இவங்க சிரிப்பாங்கங்கிறதை மனசில் வச்சிக்கங்க என்றார் கமல். அதுதான் உண்மை.

நேற்றைய நிகழ்ச்சியில் சேரனுக்குச் சேதாரம் அதிகம்... இந்த வார நாமினேசனில் சேரனும் ஷெரினும் கூடவே கவினும் வரலாம்... சேரன் வெளியேறவே வாய்ப்பு அதிகமிருக்கும்... இத்துடன் வெளியேறுதல் அவருக்கும் நலம்... பாச, நேச உறவுகளுக்கும் நலம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : சுவராஸ்யமில்லாத சனி

Image result for biggboss 31st august 2019 kamal images
பிக்பாஸில் கமலின் வருகைக்கு முன் மேடைக்கு வந்த இந்த வாரம் நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுக் கொடுத்து, எங்களைவிட திறமையாகச் செய்தீர்கள் எனத் தரச் சான்றிதழ் கொடுத்த கலைஞர்கள் நாட்டுப் புற பாடலுடன் 'போற்றிப் பாடடி' பெண்ணே என கமலின் புகழும் பாடினார்கள்.

வந்தார் கமல்... ஏனோ நடையிலும் முகத்திலும் உற்சாகமில்லை... கமலுக்கே உரித்தான கம்பீரக் குரல் இல்லை... சோர்வாகவே இருந்தார். இந்தியன் 2 படப்பிடிப்புக் கொடுக்கும் அயற்சி போலும். அப்போதே தெரிந்தது இன்றைக்கு நிகழ்ச்சியில் மொக்கைதான் போடுவார்கள் என்பது.

கலைஞர்களை வாழ்த்தி தன்னுடைய படங்களில் எப்பவுமே நாட்டுப்புறக் கலைஞர்களைப் பற்றிப் கொஞ்சமாவது தொட்டுச் செல்வதாகவும்... கலாச்சாரம் கலாச்சரம் என்று பேசுகிறோம் அதுலயே கலையும் இருக்கு பாருங்க அதுதான் கலாச்சாரம்... இன்று இருக்கும் சினிமாவுக்கெல்லாம் இவர்கள் மூதாதையர்கள்... என்றெல்லாம் பேசி வெள்ளிக்கிழமைக்குள் போனார்.

69ம் நாள் காலை பத்துமணி 'மேலே ஏறி வாரோம்' பாடல் திருப்பள்ளி எழுச்சியாய்... முகன், லாஸ்லியா, சாண்டி என எப்பவும் போல ஆட்டம், வனிதாக்காவையும் இழுத்து வந்தார்கள்... அக்காவும் ஒரு ஆட்டத்தைப் போட, படுத்துக்கிட்டே பார்த்துக் கொண்டிருந்த சேரன், ஆஹா எல்லாரும் ஆடுறாங்க நாமளும் சீனுல இல்லைன்னா ஏய்யா நீ ஆடலைன்னு கமல் சார் கேட்டுட்டாருன்னான்னு வேகவேகமா ஓடியாந்து ஒரு ஆட்டத்தைப் போட்டார். கவின் மட்டும் இப்பல்லாம் ஆடுவதில்லை... பின்னே ஆத்துக்காரி ஆடுறதை ரசிக்கணுமோ வேண்டாமோ... காலையில இல்லாள் நானே எல்லாத்தையும் பண்றேன்... எனக்குத்தானே வந்திருக்குன்னு ஆடுறதை விட கண்ணுக்கு அழகா ஆடுறதைப் பார்ப்பதில் ஒரு தனி சுகம்தானே.

ஆட்டம் முடிந்த பின்னர் ஷெரின் கக்கூஸ்லில் ஆடிக் கொண்டிருந்தார் கூடவே சாண்டியும். எப்படியும் நாம போயிருவோம்ங்கிற நம்பிக்கையா இல்லை ஒன்பது வாரம் நாமினேசனில் வராமல் கின்னஸ் ரெக்கார்ட் இருக்கு... இந்த வாரம் கண்டிப்பா மக்கள் அனுப்பமாட்டாங்கன்னு தன்னம்பிக்கையான்னு தெரியலை... ஆனாலும் ஷெரின் கவினைப் போல் பயந்து அனத்திக்கிட்டு இருக்காமல் ,ஊரில் சொல்வது போல் 'வந்தா மலை போனா மயிரு'ன்னு ஷெரின் எப்பவும் போல் செம ஜாலியாக இருந்தார்.

அப்புறம் ஷெரின், கவின், சாண்டி, தர்ஷன் பேசிக்கிட்டு இருந்தாங்க... நாங்க இன்னைக்குப் போயிருவோம்ன்னு கவினும் ஷெரினும் சொல்ல, அய்யோ இவனுக சாவடிக்கிறானுங்களேன்னு தர்ஷன் கத்தினார்... கவினைப் பொறுத்தவரை நான்தான் இலக்கு என்பதை நாமினேசன் ஆன மறுநொடியே மனதில் பதிய வைத்துவிட்டதால்தான் லாஸ்லியாவிடமிருந்து 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையைப் புடுங்க சிவாஜி ஆகியிருக்கிறார். 'சுவாமி' என்றோ 'பிராணநாதா' என்றோ லாஸ்லியா இதுவரை சொல்லாததால் புன்னகை மன்னன் கமலாக சோகமாகத் திரிகிறார்.

கவின், லாஸ்லியா, ஷெரின் மூவரும் சிறைக்கு அருகே மழைக்குச் சூடா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க... அப்ப ஷெரின் தன்னோட் பஜ்ஜியில் பாதியைக் கொடுத்து நீ இப்ப இதைச் சாப்பிடு அப்புறம் எனக்குத் திருப்பிக் கொடு எனச் சொல்லிக் கொடுக்க, லாஸ்லியாவுக்குள்ள நெருப்பு... தன் கண் முன்னே அவ கொடுக்கிறதை வாங்கித் திங்கிறதான்னு கடுப்பு... இந்தா இதை முழுசா எடுத்துச் சாப்பிடுன்னு கொடுத்துட்டு தர்ஷனை வேற கூப்பிட்டுக் (ஷெரினை சூடாக்குறாங்களாம்) கொடுத்துட்டு எனக்குப் பிடிக்காது அதான் என வேறு சொன்னார். அரை பிளேட் பஜ்ஜி அல்ரெடி காலியாகி இருந்தது. மேலும் கவினுக்கு யார் பஜ்ஜி இல்லைன்னு சொன்னது நான் போய் கொண்டு வாரேன்னு கிளம்ப, இது நடக்கும்ன்னு தெரிஞ்ச ஷெரின் சாரி மச்சான்னு சொல்லிட்டுப் பொயிட்டாங்க.

தொத்திக்க ஒரு கிளை கிடைத்தால் பத்தாதா குரங்குக்கு அடுத்தடுத்த மரங்களுக்கு அப்படியே தாவிப் போயிரும்தானே... லாஸ்லியாவின் கடுப்பை தனக்குரிய கிளையாக்கி தன் வேலையை ஆரம்பித்தார் கவின், உனக்குள்ள உனக்கு மட்டுமே நான் சொந்தம்ங்கிற எண்ணம் வந்தாச்சுல்ல... அதுதான்... அதேதான்... இதுக்குப் பேருதான்... இப்ப நாம எதிருக்கு எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கலாம்.. நம்ம மகன் இந்த பிக்பாஸ் சீசன் 23ல கலந்துக்கும் போது நாம அதைப் பார்த்து ரசிப்போமுல்ல... அப்ப உன்னோட அன்பெல்லாம் என்மேலயா... நம்ம மகன் மேலயான்னு பிராண்ட ஆரம்பிச்சாச்சு... இப்பல்லாம் லாஸ்லியா முகத்தைக் காட்டினாலே அடுத்த காட்சி எப்போது வரும்ன்னு மனசு கேக்க ஆரம்பிச்சிருது... இவங்க ரெண்டு பேரும்தான் இப்போது ரொம்ப எரிச்சலூட்டும் மனிதர்கள்.

தனது உடமைகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார் ஷெரின்... அருகிருந்து அவரைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள் தர்ஷன், சேரன் மற்றும் சாண்டி. எல்லாவற்றையும் சிரிப்போடும் போலி அழுகையோடும் ஏற்றுக் கொண்டு தர்ஷனுடன் துணியைத் தூக்கிப் போட்டு பிடிச்சாப்பிடி பிடிக்காட்டிப் போவென விளையாடிக் கொண்டிருந்தார் ஷெரின். உடைகளை அடுக்கணும்... பெட்டி கட்டணுமுல்லன்னு சேரன் வேறு சீண்டினார். சேரனைப் பொறுத்தவரை லாஸ்லியாவைவிட எல்லாமும் பேச பிக்பாஸ் இல்லத்திற்குள் கிடைத்திருக்கும் ஒரே ஜீவன் ஷெரின்தான். எனக்குக் கூட யார் பிரபலம் என்ற வரிசையில் சேரன் ஷெரினுக்கு ஆறாவது இடம் ஏன் கொடுத்தார் என்றே தோன்றியது... ஆனாலும் சேரனின் விளக்கம் தெளிவாக்கியது... ஆமா என்ன விளக்கம்... அப்புறம் சொல்றேன்.

அதன் பிறகு ஷெரின், சாண்டி, கவின், தர்ஷன் நால்வரும் வெளியே போனதும் கேட்கப்படும் கேள்வி, அதற்கான பதில் என ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஷெரின் பொயிட்டா எனக்கு யார் முடிவெட்டுவது என சாண்டி சொல்ல, அவர்கள் பேசிக்கொண்டிருந்த சில நிமிடங்கள் கவின் லாஸ்லியா காட்சிகள் கொடுத்த கடுப்பை கரைத்துச் சிரிக்க வைத்தது.

விளக்கணைத்ததும் கடலைக் கோஷ்டி கிச்சனில் நின்றது... அப்போது சாண்டி பேசியது அருமை...நீ இங்க நடந்துக்கிற விதம் எப்படிப்பட்ட மனநிலையை உங்க அம்மா அப்பாவுக்குக் கொடுத்திருக்கும் என்பதை உன்னால் இப்போது உணர முடியாது... அவங்க இதை ஏற்றுக் கொள்வார்களா இல்லையா... இதனால் வரப்போகும் பிரச்சினை என்ன... என்பதெல்லாம் வெளியில் போனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்... இதைதான் அவனுக்கிட்டயும் சொன்னேன்... எப்பவும் நீங்க ரெண்டு பேருமே திரியிறதை நிறுத்துங்க... பேச்சைக் குறைங்க... விளையாட்டில் கவனம் செலுத்துங்க என லாஸ்லியாவிடம் அறிவுரையாக இல்லாமல் அன்பாய்ச் சொன்னார். ஆனால் லாஸ்லியா இப்ப என்ன அவரு கூட பேசக்கூடாதுங்கிறே அதானே... நாளையில இருந்து பேசலை என்றார். பேச வேண்டாம்ன்னு சொல்லலை குறைச்சிக்கன்னு சொல்றேன் என்றார் சாண்டி. காதல் கண்ணை மறைக்கும்ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.

அகம் டிவி வழியே அகத்துக்குள் போனார் ஆண்டவர் நாட்டுப்புறக் கலைஞர்களை அருகில் வைத்துக் கொண்டு...

இவர்களில் யார் கலையை சிறப்பாக செய்தார்கள் என்று கேட்டதற்கு, சாண்டி என்ற பெரியவர் அவர் அர்பணிப்புடன் செய்தார்... மீசையெல்லாம் எடுத்தார் என்றார்... ஆமா சாண்டி எப்பய்யா மீசை வைத்திருந்தார்..? ரெண்டு நாள் சேவிங்க் பண்ணலைன்னு பண்ணியிருப்பார்... உடனே அர்ப்பணிப்புன்னு சொல்லிட்டாங்க... கமல் கூட நானும் மீசை எடுத்துட்டேன் எனக் காட்டினார். 

ஒவ்வொருத்தரைப் பற்றியும் ஒருவரி சொன்னார் பெரியவர் விஸ்வநாத ஐயா... அது...

சாண்டி - கோபுரமா நிக்கிறாரு அழகான சொலவடையால்...

கவின் - திங்கிறவன் தின்னுட்டுப் போக திருப்பத்தூரான் தண்டம் கட்டினான்...

முகன் - ஒரு கரண்டி மாவுல ஊருக்கெல்லாம் தோசை...

வனிதா - வாக்கப்படவும் ஆசை... வளவி போடவும் ஆசை... கொண்ட உன்னக் காக்கையில கொடலைப் புரட்டுது...

ஷெரின் - ஒட்டடைக் குச்சிக்கு பட்டுக்குஞ்சம்...

தர்ஷன் - ஊராளும் மகராசாவுக்கு வாராறாம் சொம்பு தூக்கி...

சேரன் - ஊரும் சபையோரே... உலக சபையோரே ஒண்ணாக் கூடுனா ஏ அறிவு கூடும்...

லாஸ்லியா - கூத்து நடக்கப் போகுது... உங்க குடும்பக் கதையைப் பற்றி நீங்க பேசாதீங்க...

எல்லா வரிகளுக்கும் விளக்கம் கொடுத்தார் பெரியவர். அப்புறம் கமல் வில்லுப்பாட்டுப் பாடினார்... கமலின் மய்யத்தின் கிராமசபைக் கூட்டத்துக்கு வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் மூலமாக ஒரு விளம்பரமும் தேடிக் கொண்டார் கமல்.

கலைஞர்கள் போனதும் நான் ஏன் வெற்றியாளனாய் இறுதிப் போட்டிக்குச் செல்ல வேண்டும் என்பதை சக போட்டியாளர்களிடமும் மக்களிடமும் சொல்வதற்கான வாய்ப்பு மீண்டும்.. முகன் தன் அப்பாவைப் பற்றி பேசியதும் தான் ஏன் வெற்றி பெற வேண்டும் எனச் சொன்னதும் அருமை...  கவின் நானில்லை என் நண்பர்கள் வெற்றிபெற்றாலும் மகிழ்வேன் என்றார். மற்றவர்கள் எல்லாம் பேசினார்... ஆம் பேசினார்கள் அவ்வளவே... சேரன் பேசியது சற்றே அதிகமாகத்தான் தெரிந்தது...இருந்தாலும் அவரின் பார்வை சரியானதே... நீட்டி முழக்கிப் பேச வேண்டிய அவசியமில்லை.

அடுத்து தலைவர் பதவிக்காய் நம்பர் போட்டது குறித்த பேச்சில் சேரன், இங்கு ஒவ்வொருத்தரும் தனியா ஒரு இடத்தைப் பிடிக்கத்தான் வந்தாங்க... அவங்களுக்குச் சப்போர்ட் பண்ணனும் இவங்களுக்குச் சப்போர்ட் பண்ணனுங்கிறதைவிட நான் வரணும்ன்னு ஒரு எண்ணம் வரணும் அதான் எனக்கு நானே முதலில் கொடுத்துக் கொண்டேன். ஷெரினுக்கு ஆறாவது கொடுத்ததைப் பற்றிச் சொல்லும் போது ஷெரின் நேர்த்தியாகவும் அன்பாகவும் இருக்காங்க... போட்டியில் மட்டும் யாருக்காவது சப்போர்ட் பண்றாங்க அதனாலதான் அந்த இடம் என்றார். முகனுக்கு முதல் எட்டு வாரத்தில் கவனம் சிதறியிருந்ததால் அந்த இடம், தன்னோட இடத்தை வேறு பாதைக்கு மாற்றிக் கொண்டு அதிலிருந்து அவர் மீளாததால் கவினுக்கு எட்டாவது இடம் என்றார். சேரனின் பார்வையை கமலும் பாராட்டினார்.

வெளியில் கிடைத்திருக்கும் பிரபலத்தை நீங்க எப்படி அறிந்து கொண்டீர்கள் எனக் கமல் கேட்டதும் இந்த இடத்தில் நான் இயக்குநர் என்பதை சொல்லிக்கிறேன் சார் எனச் சேரன் சொன்னதும் எங்கயும் சொல்லலாம்... தில்லியிலிருந்து சென்னை வரைக்கும் கூட நீங்க சொல்லலாம் என்றார் கமல். வெளியில இருக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இவங்க கூட அருகில் இருந்து பார்க்கும் போது நான் தெரிந்து கொண்டேன் சார் என்ற சேரனிடம் அதானே இவங்க யாரும் கைதட்டி காட்டிக் கொடுக்கலையே... ஏன்னா இவங்களோட கைதட்டலில் வித்தியாசமிருக்கும் என்றார்.

முகன் எட்டுதான் சார் பெரிசு அதான் அக்காவுக்கு கொடுத்தேன் என்றார்... ஓஹோ எட்டுத்தான் பெரிசு இல்லையா என்றார். வனிதாவிடம் பேசும் போது ஒரு எட்டு வச்சி வாங்க என்றார்  நகைச்சுவையாய் கமல். வனிதா பின்னால் இருந்து பாருங்க சார்... அதிகமாக இங்க பர்னிச்சர் உடைக்காத ஆட்களைப் பின்னால் சொல்லியிருக்கிறேன் என கதைவிட்டார்.

அடுத்து யாரை வெளியேற்றுவீர்கள் என்ற போது கவின்,முகன்,சாண்டி, தர்ஷன் நால்வரும் வனிதா என்றார்கள். ஷெரினும் லாஸ்லியாவும் அவங்கதான் சமைச்சிப் போடுறாங்க... அவங்களும் பொயிட்டா பூவாவுக்கு என்ன பண்ணுவீங்கன்னு ஆதரவா நின்னாங்க.... வனிதா, லாஸ்லியா தங்களையே சொல்லிக் கொள்ள, ஷெரினும் சேரனும் கவினைச் சொன்னார்கள்... லாஸ்லியாவின் முகம் மழைகானாத இராமநாதபுரத்து வயல் போலானது.

அடுத்ததாய் பொம்மலாட்டப் பொம்மையை வைத்து வெளியே போக இருப்பவர்கள் உள்ளிருப்பவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீங்கன்னு கமல் கேட்க, முகன் எல்லாருக்கும் சில வரிக்கள் ஜாலியாய்ச் சொன்னார். சேரனைத் தன் தந்தையுடன் ஒப்பிட்டு சேரனின் தன்னம்பிக்கை பிடிக்கும் என்றார். 

ஷெரின் பேசும் போது வனிதா திரும்ப வந்தது மகிழ்ச்சின்னாங்க... தர்ஷனைப் பார்த்து தர்ஷ் என்று சொல்லி நிப்பாட்ட, சேரன் அவ்வளவுதான் சார் நிகழ்ச்சி முடிந்தது... இப்படித்தான் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டே இருப்பாங்க... பேசமாட்டாங்க எனச் சொல்ல, ஏண்ணே போட்டு விடுறே என்றார் தர்ஷன். சேரனிடம் இங்கு நான் அதிக விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது உங்களிடம்தான்... வெளியில் என் தோழிகளுடன் பேசியதைவிட இந்த 70 நாளில் உங்களிடம் பேசியிருக்கிறேன் என்றார்.

வனிதா பேசும் யாருக்கும் தனியாக எதுவும் சொல்லாமல் மொத்தமாக ஒரு சின்ன உரையே நிகழ்த்தினார். அவர் ஆத்தி முடித்ததும் பாருங்க... இப்பக்கூட அவங்க பொம்மையைப் பேசவிடலை என கிரேஸி டச்சைக் கொடுத்தார் கமல்.

கவின் சாண்டிக்கு மட்டும் வெற்றிபெற ஒரு பாடலைப் பாடினார். சாண்டியும் எதிர்ப்பாட்டு பாடினார். லாஸ்லியாவுக்கு ஒன்றும் சொல்லாமல் போனதில் சின்ன வருத்தம் என்பது முகத்தில் தெரிந்தது.

சரி வெளிய போனதுல யாரை உள்ள கொண்டு வரணும்ன்னு நினைக்கிறீங்க... இது விளையாட்டுத்தான் என கமல் சொன்னதும் நைனாவுக்கு பசங்க குடை பிடிக்க, ஷெரின் சாக்சி வேண்டுமென்றார்... லாஸ்லியா அபியே போதுமென்றார். வனிதா யாருமே வேண்டாம்... நான் வந்தது பத்தாதா... என்னய வெளிய அனுப்பிடுங்க சார் என்றார். சேரனை மதுவைச் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது... அது மட்டும் காட்டப்படவில்லை.

வனிதாவை பேச விடாமல் கத்த, பாருங்க சார்... உங்ககிட்ட பேச விட மாட்டேங்கிறாங்க... உங்ககிட்ட பேச ஒரு வாரம் காத்திருந்தேன்... எங்கிட்ட பேச நீங்க விரும்புறீங்க.. அதை நான் விரும்புறேன் என்றெல்லாம் பேசினார். முன்னால் ஒரு பதிவில் சொன்னது போல் கமல் வீட்டுக்குள் புயல் வீசாமல் விடாது போல வனிதாக்கா... கமலும் பதிலுக்கு எமதர்மராஜா... எட்டு பெரிசு... எட்டு வச்சி வாங்க... இப்பத்தான் பேசுறாங்க... என வச்சிச் செஞ்சார்.

கமல் போனதும் பிரியாணி வந்தது... ஒரு பிடி பிடித்தார்கள்... ஷெரின் மட்டும் பிரியாணி தவிர்த்து ப்ரூட்டி குடித்தார்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.