மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 19 ஜூன், 2019

'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை

கோதரர் முனைவர் நௌஷாத்கான் அவர்கள் நான்கு புத்தகங்கள் (2 கவிதை, 2 சிறுகதை) வெளியிட்டிருக்கிறார்கள். இத்துடன் 25 புத்தங்கள் வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். இந்தக் கடினமான சூழலிலும் அவர் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்துக்கும் எடுக்கும் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள். தன் எழுத்துக்கென தான் 12 மணி நேர உழைப்புக்கு வாங்கும் சொற்ப சம்பளத்தில் பெரும் பணத்தை செலவு செய்வதற்கு அதன் மீதான காதல்தான் காரணம். அவருக்கு வாழ்த்துக்கள்.

அவர் எழுதிய 'தடீச்சா பிரதா' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு நான் எழுதிய அணிந்துரை. இந்த அணிந்துரையில் நான் வாசிப்பாளனே என்று ஆரம்பித்த முதல் பாராவுக்கு நண்பர்கள் மத்தியில் பெருத்த எதிர்ப்பு எழுந்தது என்றாலும் அதுதானே உண்மை. கதைகளைவிட நௌஷாத்தின் எழுத்து இன்னும் பலமானதாக மாற வேண்டும் என்பதையும் அவசரப்படாமல் நிதானமாய் நகரும் பட்சத்தில் அவர் நினைத்த, தான் விரும்பும் தனக்கான இடத்தை அடையலாம் என்பதே என் எண்ணம் என்பதையும் அணிந்துரையிலும் சொல்லியிருக்கிறேன்.

புத்தகங்களை வாசித்து எழுதச் சொன்னார். தற்போது கரன் கார்க்கியின் மரப்பாலத்தில் நின்று கொண்டிருக்கிறேன். அது முடித்தபின்னர் நௌஷாத்தின் புத்தக வாசிப்பும் அதன் தொடர்ச்சியாய் மனசின் எண்ணமும் எழுத வேண்டும்.

படத்தைக் CLICK செய்து பெரிதாக்கி வாசிக்கவும்.



வாசித்து இருப்பீர்கள்...  தங்கள் மனதில்பட்ட கருத்தைச் சொல்லுங்கள். நன்றி.

-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு அணிந்துரை. சில வரிகள் ஏற்கெனவே படித்ததுதானோ?

'பரிவை' சே.குமார் சொன்னது…

அவரைப் பற்றி இங்கு எழுதிய பகிர்வில் இருந்திருக்கலாம் அண்ணா.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல அணிந்துரை. நௌஷாத் பற்றி நீங்கள் இங்கு முன்பு அவரது கதை பற்றிச் சொல்லுகையில் சொல்லியிருந்தீங்க. நினைவிருக்கிறது

கீதா