மாணவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியை...
வீரமங்கை வேலு நாச்சியாரின் மீது கொண்ட பற்றுதலால் வேலுநாச்சியார் (velunatchiyar.blogspot) என்பதை தன் வலைப்பூவில் நுழைவு வாயிலாக்கி தென்றல் (THENDRAL) என்னும் தளத்தில் எழுதி வருபவர்...
கவிதைகளில் பெண்ணியக் கருத்துக்களை முன் வைப்பவர்...
பெண் விடுதலை மட்டும் போதாது பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் புதுமைகள் படைக்க வேண்டும் என தன் எழுத்தில் எப்பவும் எழுதிக் கொண்டிருப்பவர்...
ஒரு கோப்பை மனிதம், விழி தூவிய விதைகள், கே.ஜீவபாரதியின் வேலு நாச்சியார் நாவலில் பெண்ணிய சிந்தனைகள் என்ற மூன்று புத்தகங்களின் ஆசிரியர்...
புதுவையில் நடக்கும் வீதி கலை இலக்கியக் கூட்டம், இணையத் தமிழ் பயிற்சி முகாம் என எல்லா நிகழ்வுகளிலும் தோழர்களோடு தோள் கொடுத்து நிற்பவர்...
சென்ற வருடம் புதுகையில் நடந்த வலைப்பதிவர்கள் மாநாட்டில் முத்து நிலவன் ஐயா, தனபாலன் அண்ணா, செல்வக்குமார் அண்ணா, ஜெயா அக்கா.... எல்லாருடைய பேரும் ஞாபகத்தில் வரலை... என்ன நாலு பேரை மட்டும் சொல்லியிருக்கேன்னு நினைக்க வேண்டாம்... விழா நிகழ உறுதுணையாக நின்ற எல்லாருடன் இணைந்து செயலாற்றியவர்...
முகநூலில் தேவதா தமிழ் என்றால் எல்லாருக்கும் தெரியும்...
புரட்சிகர சிந்தனையாளர்...
புதுமைக் கவிஞர்...
இவர் யாரென்று தெரிகிறதா..?
தெரியாமலா இருக்கும்... ஆமா அவங்கதான்...
கவிதாயினி கீதா அக்கா.
இவருடன் நேரடிப் பரிட்சயம் இல்லை... பேசியது இல்லை... முகநூல் அரட்டையில் மணிக்கணக்கில் நிஷா அக்காவோடும் காயத்ரி அக்காவோடும் அரட்டை அடிப்பது போல் இவரிடம் ஒரு முறை கூட அரட்டை அடித்ததில்லை.
ஒருமுறை தேவகோட்டை, முருகானந்தா என்றெல்லாம் எழுதியபோது என் பதிவில் நீங்க தேவகோட்டையாப்பா... முருகானந்தாவுலயா படிச்சீங்க... என்னோட பொண்ணை சுந்தரம் சார் பையன் சாக்ரடீஸ்க்குத்தான் கொடுத்திருக்கு என்றார்கள். முருகானந்தாவில் படித்த போது சுந்தர வாத்தியாருக்கு பயப்படாத மாணவர்களே கிடையாது. அந்தளவுக்கு மனுசன் மிரட்டி வச்சிருப்பார். எட்டாப்பு சார்க்கிட்ட சொல்லவான்னுதான் எங்க தமிழ் ஆசிரியை விஜி (முதன் முதலில் எங்களுக்குத்தான் தமிழ் வகுப்பெடுத்தாங்க) மிரட்டுவாங்க... ஒரு ஆசிரியையே இன்னொரு ஆசிரியர் பேரைச் சொல்லி மிரட்டுனா அவர் எப்படிப்பட்டவரா இருப்பாரு... ஆனா அவர் ரொம்ப நல்ல மனுசன்னு அந்தப் பள்ளியை விட்டு வந்த பிறகு பழகும் சந்தர்ப்பம் கிடைத்த போது அரிய முடிந்தது. அவரும் ஞான சம்பந்தம் ஐயாவும் முருகன் சாரும் எங்கு பார்த்தாலும் எப்படி இருக்கே... நல்லாயிருக்கியா என்று நின்று பேசிச் செல்வதுண்டு. அதுதானே ஒரு மாணவனுக்கு வேணும். எனக்கு அக்காவோட மகள் குடும்பத்தில் அனைவருடனும் நல்ல பழக்கம்... அவர்களின் உறவான வி.சி.வில்வம் அவர்களுடன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் நண்பன் முருகன் மூலமாக நல்ல நட்பு இருந்தது.
ஊருக்கு வரும்போது புதுக்கோட்டைக்கு வாங்க என்று ஒரு முறை கருத்து இட்டிருந்தார்... ஆனால் நான் தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்ல முடியாத சூழலில் ஒரு மாத விடுமுறையை முடித்துக் கொண்டு வந்து விடுவேன். இந்த முறையாவது எல்லாரையும் பார்க்கணும்... பார்க்கலாம் அப்படி ஒரு வாய்ப்பு அமைகிறதா என்று...
அக்காவின் ஒரு கோப்பை மனிதம் புத்தகத்திற்கு அடியேனும் விமர்சனம் என்ற பெயரில் எழுதியிருக்கிறேன். ஆமா எதுக்கு இப்ப அவங்களைப் பற்றி சொல்றேன்னுதானே கேக்குறீங்க... அதாவது இன்னைக்கு அவங்களுக்கு பிறந்தநாளாம்... எல்லாரும் வாழ்த்துங்க...
புதுவருடத்துக்கு அவங்க மாணவர்கள் கொடுத்த அன்புப் பரிசு என்ன தெரியுமா? மாதக் காலண்டர் வடிவமைத்து அதில் அவர் போட்டோ போட்டுக் கொடுத்திருக்காங்க..
கீதா அக்காவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
குறிப்பு : பிறந்தநாளே முடிஞ்சிருச்சு... இப்ப பதிவு போடுறேன்னு நினைக்க வேண்டாம்... இங்க இன்னும் நாள் முடியலை... அலுவலகம் சென்று திரும்பி வந்த போது பயங்கர தலைவலி, இரண்டு நாள் முன் தனபாலன் அண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லிட்டு பந்தாவா இனி நட்புக்களின் பிறந்தநாள் எனக்கு தெரிய வந்தால் வாழ்த்து சொல்லப்படும்ன்னு அறிக்கை விட்டுட்டு பன்னீரு மாதிரி படுத்துட்டா சரியில்லை என்பதால் ஏதோ எழுதியிருக்கிறேன் என்றாலும் மனம் நிறைந்த வாழ்த்துக்களைச் சொல்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.
35 எண்ணங்கள்:
கீதா அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எனக்கு தென்றல் கீதா என்றால் மட்டும் தெரியும் வேலு நாச்சியார் வேதா தமிழ் என்றால் தெரியாது இப்படி பல பேர் இருந்தால் குழப்பமாகவே இருக்கிறது எல்லா இடத்திலும் ஒரு பெயர் இருந்தால் வசதியாக இருக்கும்
தம்பி வணக்கம்.பிறந்தநாள் வாழ்த்துக்கு ஓரு பதிவா?என்ன சொல்ல....அன்பால் திணறடிக்கும் உறவுகளைத் தந்த இணையத்திற்கும் உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.
எங்கள் வாழ்த்துகளும்.
அன்புச் சகோதரிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
உங்கள் தளத்தின் வாயிலாகவும் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன்....
மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் கீதா ஜி!
மகிழ்வாயிருக்கிறது சகோ. நீங்கள் சொல்வது போல் கீதா பன்முகத் திறமைசாலி.. அன்பான அவர்
நட்பு கிடைத்தது என் பாக்கியமே..கீதாவிற்கு என் வாழ்த்துகள்.
அங்கே முக புத்தகத்திலும் நேற்று வாழ்த்தியாச்சு ..இங்கும் வாழ்த்துகிறேன்
அவங்க பள்ளி மாணவிகள் வகுப்பறை படங்களை பார்த்தாலே போதும் கீதா எவ்வளவு அன்பான ஆசிரியை வழிகாட்டி என்பது அப்பிள்ளைங்க happy முகம் வாயிலாக தெரியும் ..அழகான வாழ்த்துக்கள் சகோ
சகோ/தோழி கீதா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகளும்!
கீதா: மிக மிக அன்பானவர்! என்பது அவரைப் புதுகையில் சந்தித்த போதும், அலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அறிந்து கொண்டோம். பிறந்த நாள் வாழ்த்துகளை மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்...
மனம் நிறைந்த நன்றி..சார்.
உண்மைதான் முதன்முதலாக வலைப்பூ ஆரம்பித்த போது ஏற்பட்ட குழப்பம் தான் வேலுநாச்சியார் முகவரியில் தென்றல் தலைப்பூ...முகநூலில் தேவதா தமிழ் என்பது எனக்கு மிகவும் பிடித்த பெயர் என்பது இத்தனைக்கும் காரணம்..மன்னிக்கவும் என்றும் நான் கீதா மட்டுமே...
மனம் நிறைந்த நன்றி சகோ..
மனம் நிறைந்த நன்றி அண்ணா
ஆஹா நன்றி சகோ...
மனம் நிறைந்த அன்பு மா..இத்தனை உறவுகளும் தந்த இணையத்திற்கு தான் நன்றி.
மனம் நிறைந்த நன்றி மா...குழந்தைகள் தானே என் உலகம்..
மனம் நிறைந்த நன்றி சகோ..எங்கிருந்தோ வரும் அன்பான வாழ்த்துகள் என்னை மேலும் அன்பானவளாக மாற்றுகின்றது மிக்க நன்றியும் அன்பும்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
எப்போது வருகிறீர்கள்...? இருவரும் சேர்ந்து புதுக்கோட்டைக்கு செல்வோம்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி!:)
மனம் நிறைந்த நன்றி சகோ.
மனம் நிறைந்த நன்றி சகோ.
மனம் நிறைந்த நன்றி சகோ.
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ஆமாம் தளத்தின் பெயர் தென்றல்...
முகநூலில் தேவதா தமிழ்...
@கீதாக்கா
இதில் மன்னிக்க என்னக்கா இருக்கு... என் தளம் மனசு, அதன் நுழைவு முகவரி வயலான்... முகநூலில் நான் நித்யா குமார்....
உங்கள் எழுத்துக்கள் அருமை... பெயர் எப்படியிருந்தால் என்ன...
வணக்கம் அக்கா...
முன்னர் போட்டதுதான்... மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறேன்.
பார்க்கலாம் எவ்வளவு தூரம் போகுதுன்னு... :)
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் துளசி சார் / கீதா மேடம்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் கவிஞரே...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக