மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 27 ஜனவரி, 2017

அனிதாவை வாழ்த்துவோம்

னிதா ராஜ்...

எண்ண ஓவியம் என்ற வலைப்பூவில் எழுதி வந்தவர்... (கவனிங்க) ஆமா இப்ப எழுதுவதில்லை. சிங்கப்பூரில் இருக்கும் போது எண்ணச் சிதறல்களை எல்லாம் எண்ண ஓவியமாய் பகிர்ந்து கொண்டவர். குட்டிக் குட்டியாய்... அழகாய்... அருமையாய்... கருத்துள்ளதாய் பதிவுகள் எழுதுவார். ஸ்கைப் மூலமாக அவருக்கு தெரிந்த ஒரு ஆசிரியரை வைத்து உலகம் முழுவதும் இருக்கும் நட்புக்களை இணைத்து வாராவாரம் வகுப்பெடுக்க வைத்தவர். நானும் சில வாரங்கள் அந்த ஜோதியில் இணைந்திருந்தேன். மிகச் சிறந்த இலக்கியவாதி. இவரின் கதைகள் மிகவும் அருமையானவை... ஆனால் அதிகம் கதைகள் எழுதுவதில்லை... சின்னச் சின்னதாய் நம்மைக் கவரும் கவிதைகள்தான் இவரின் ஸ்பெஷல்.

'வலைச்சர ஆசிரியராய்' ஒரு வாரம் சீனா ஐயாவின் அழைப்பில் எழுதிய போது முதல் பதிவான அவரைப் பற்றிய அறிமுகத்தில்....

”ஸ்ங்கீத் ராஜ் அம்மா நான்”. இதை சொல்லிக்கொள்வதில் அத்தனைப் ஆனந்தம் எனக்கு. எனது முழு உலகம் அவனை சுற்றி மற்றுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்புறம்  ஒரு புத்தகப் புழு. பசியே எடுக்காது புத்தகத்தை கையில் கொடுத்துவிட்டால் போதும். பரிட்சைக்கு முன்னால் கூட நாவல் படிச்சுட்டு போகற ஆளு நான்…  எதிர் கேள்வி கேட்டே பொழப்ப ஓட்டும் ஆள்... சோம்பேறித்தனத்தால் நிறைய எழுதாமல் விட்ட ஜீவன் நண்பர்களைப் பாடாய் படுத்தும் இராட்சசி(”கொடூர“ சேர்த்துக்க சொல்லி  மனுதாக்கல் பண்ணியதை தள்ளுபடி செய்துட்டேன்) இப்படி என்னைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை நன்றாக தெரிந்தவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை ”பாவம் மோகன்”...

என்பதாய்த் தொடரும்... இதில் மோகன் யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். முழுப்பதிவும் படிக்க வலைச்சரம் போங்க. இங்க முழுப்பதிவும் போட்டா நான் எழுத நினைத்ததை எழுத முடியாமப் போயிடும்.

நண்பன் தமிழ்காதலன் மற்றும் காயத்ரி அக்கா மூலமாக என்னை அறிந்து இணைய அரட்டையில்தான் தொடர்பில் வந்தார். குமார் என்று அழைத்து தன் அன்பை.... பாசத்தை... நேசத்தை... முதல்நாளே எனக்குத் தெரிய வைத்தவர். வலைச்சரத்தில் நண்பர்களுக்கான பதிவில் அவர் என்னை தனது அண்ணனாகச் சொல்லியிருப்பார். இதைவிட வேறென்ன வேண்டும் இந்த எழுத்துக்கு... சொல்லுங்க... உலகம் முழுவது உறவுகளால் நிரப்பி வைத்திருக்கிறது அல்லவா இது.

சிங்கப்பூரில் இருக்கும் வரை எழுதிக் கொண்டிருந்தார் என்றாலும் அவர் சொல்லியிருப்பது போல் பெரிய சோம்பேறிதான்... முகநூலில் எழுதிய மௌனச் சிதறல்களை எல்லாம் தொகுத்துத் தரச் சொன்னார்... நானும் ரொம்பப் பொறுமையாத் தொகுத்துக் கொடுத்தேன். புத்தகமாகக் கொண்டு வரணும் குமார் என்று சொன்னார்... சொன்ன ஆண்டு 2013. பாத்துக்கங்க... என்னோடு சேர்றவங்க எல்லாம் என்னைப் போலவே சோம்பேறியாவே இருக்காங்க அதுதான் ஏன்னு தெரியலை... நிஷா அக்கா போன்ற சிலர் இதில் விதிவிலக்கு. சிங்கப்பூரில் இருந்து  சென்னைக்கு சென்ற பின்னர் முகநூலிலும் வலையிலும் அதிகம் காண முடிவதில்லை. சல்லிக்கட்டு போராட்டத்தின் போது முகநூலில் ஒரு பகிர்வு பார்த்தேன்.

சிங்கப்பூரில் 'சிங்கப்பூர் கிளிஷே' என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த போது எனது கதையையும் ஒரு முறை அதில் பிரசுரித்தார். எனது கதைகள் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பல கதைகள் குறித்து பெரிய விவாதமே செய்திருக்கிறார். சிறந்த படைப்பாளி என்பதைவிட மிகச் சிறந்த படிப்பாளி... எதாவது வாசித்துக் கொண்டே இருப்பார்... அப்பல்லாம் நான் புத்தக வாசிப்பின் பக்கமே செல்வதில்லை. அதை வாசித்தேன்... இதை வாசித்தேன் என்று சொல்லி, நீங்களும் வாசிங்க என இணைய முகவரி எல்லாம் அனுப்புவார்... நான் அதெல்லாம் வாசிப்பதில்லை என்பதைத் சொல்லியா தெரியவேண்டும். அதேபோல் இப்பவும் வாசிப்பில்தான் இருப்பார் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்னை வந்தியத்தேவன் மூலம் வாசிப்பிற்குள் அழைத்து வந்தவர் சகோதரர் தமிழ்வாசி. இப்ப நிறைய வாசிக்கிறேன் என்பது அவருக்குத் தெரியாது.

ஈரோடு கதிர் அண்ணன் அவர்களின் 'அப்பா' சிறுகதையை தனது குரலில் கதைக்கு ஏற்ப, ஏற்ற இறக்கத்தில் மிக அழகாக ஒலிப்பதிவு செய்திருப்பார். அதைக் கேட்டுவிட்டு ரொம்ப அருமையா இருக்கு என்ற போது உங்களது கருத்தப் பசு கதை என்னை ரொம்ப கவர்ந்திருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதையும் ஒருநாள் ஒலிப்பதிவு செய்து அனுப்புறேன்னு சொன்னார்.... சொன்னார்தான்... அதிகமில்லை ஒரு ஐந்து வருடத்துக்குள்தான் இருக்கும்... இன்னும் ஆவலாய்த்தான் இருக்கிறேன். அனுப்பத்தான் காணோம்.

இப்ப எப்பவாவது முகநூலில் பதிவு போடுவார்... லைக் பண்ணுவதுடன் சரி... சிங்கையில் இருக்கும் போது நிகழ்ந்த விவாதங்கள் எல்லாம் இல்லை என்றாலும்...  தற்போது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தாலும் ... இன்னும் அன்புத் தங்கையாய் என் மனசுக்குள்... நானும் அண்ணனாய் அவர் மனசுக்குள் இருப்பேன் என்பது மட்டும் உண்மை.

இன்று அந்த அன்புத் தங்கை அனிதா ராஜ் அவர்களுக்கு பிறந்தநாள்.

என் இனிய வாழ்த்துக்களுடன்... உங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் அவருக்குச் சொல்லுங்கள் என்று அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.

அனிதாவிடம் ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும்... அது மீண்டும் எழுதுங்கள் என்பதே...


சாதாரணமானது கூட அதீத
அழகுடன் திகழ்கிறது அன்பெனும்
கண்ணாடி வழி காணும் போது
                                                                 -அனிதா ராஜ்

வாழ்க வளமுடன் நலமுடன்....
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

அன்புத்தோழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். �� என்றும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்து நீள் ஆயுளுடன் எல்லா வளமும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் ����
������������

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

புதியதோர் அறிமுகம் உங்கள் பிறந்த நாள் வாழ்த்துகள் மூலம் அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி குமார். அனிதா ராஜ் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

KILLERGEE Devakottai சொன்னது…

எமது வாழ்த்துகளும் - கில்லர்ஜி

அனிதா ராஜ் சொன்னது…

குமார்.....எதிர்பார்க்கவேயில்லை. ரொம்ப நன்றி

நிஷா சொன்னது…

அனிதாவுக்கு வாழ்த்துக்கள். எனக்கும் புதியவர் தான்.

அதாருப்பா உங்கள் லிஸ்டில் இருக்கும் சோம்பேறிகள்? வரிசையில் கொண்டு வாங்க.

நல்ல வேளை குமார் தப்பிச்சிடிங்க. பிறந்த நாள் வாழ்த்துப்பதிவு அசத்தல் குமார். இப்படியே தொடருங்கள்.

குமாரின் மனசிலிருந்து வரும் பிறந்த நாள் வாழ்த்தை படிக்க நான் ஒக்ரோபர் வரை காத்திருக்கணும். வருடத்தில் நான்கு தடவை பிற்ந்த நாள் கொண்டாடலாம் என சட்டம் கொண்டு வந்தால் என்ன?

நிஷா சொன்னது…

உங்களுக்கு ஒன்றுமே தெரியாது குமார். உங்கள் நிஷாக்கா உலகமகா சோம்பேறியாக்கும், உங்களுக்கு அது தெரியவே இல்லை. தூங்கு மூஞ்சி அக்கா நிஷாக்கா. இனியாவது புரிந்துக்கணும். இப்பூடி வெளுத்ததெல்லாம் பால் என நம்பக்கூடாது தம்பி சார்.

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு அறிமுகம். அவருடைய பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகளும்...

Avargal Unmaigal சொன்னது…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்களது வேண்டு கோளை ஏற்று மீண்டும் எழுத வருவார் என நம்புவோம்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் நண்பரே

துரை செல்வராஜூ சொன்னது…

இனிய பதிவு.. அன்பின் நல்வாழ்த்துகள்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு அறிமுகம்....

அவருக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சகோதரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

ஆகா!! அப்போ நான்?? :-)

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

அனிதாவிற்கு வாழ்த்துகள்.

நிஷா சொன்னது…

இதுக்குமா போட்டி? தேர்வு வைக்காமல் தேர்ந்து எடுத்து விடலாம் கிரேஸ். இல்லல்ல உங்களுக்கு தான் முதலிடம் தேவை எனில் அதையும் தந்து விடலாமே.