மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 25 ஜனவரி, 2017

2. 'என்னைப் பற்றி நான்' - மீரா செல்வக்குமார்

ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்பவர் அன்பு அண்ணன் கவிஞர் மீரா செல்வக்குமார்  அவர்கள். இவர் 'நான் ஒன்று சொல்வேன்' என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இவர் 'அன்பின் சக்தி' என்று ஆரம்பித்து எழுதும் கட்டுரைகள் தன் மகளுக்கு எழுதுவதாய் சமூகம் குறித்து இன்றைய நிலை குறித்து மிக அழகாய், அருமையாய் இருக்கும். மிகச் சிறந்த கவிஞர்... அருமையான சிந்தனையாளர்... அவருடன் ஒரு முறை பேசியிருக்கிறேன். புதுக்கோடைக்கு எப்ப வருவீங்க என்று கேட்கும் நட்புக்களில் இவரும் ஒருவர். அவரைப் பற்றி நாம் அறிய அவர் தருவது என்ன... பார்ப்போம் வாங்க...



"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்"

து ஆலைத்தொழிலாளர்கள் நிறைந்திருந்த காலனியின் பூமி..

தமிழகத்தின் எல்லா திசைகளிலிருந்தும்..பஞ்சம் பிழைக்க வந்தேறிய ஒரு ஈச்சம்புதர்களின் முன்னால் காடு..

மதுரையை பூர்வீகமாக கொண்ட ஒரு கும்பல் குடும்பம் குடும்பமாய் நடந்து வந்து சேர்ந்தது 80 ஆண்டுகளுக்கு முன்னால்...

ஆலை அடிக்கடி சீக்குப்பிடிக்க ஆரம்பித்த 1970 களில் நான் ஒரு குடும்பத்தின் மூத்தவனாக பிறந்தேன்...

அடுத்தடுத்து ஆறு பிள்ளைகள் பிறக்குமளவுக்கு பொழுது போக்கும்,அறிவும் இருந்த நாட்கள்..

உள்ளூரின் தொடக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி என கல்விக்கடன் கழிந்தது..

ஆலை என்றால் சங்கம் இல்லாமலா?

வழுவழு தாளில் சோவியத் நாட்டின் புத்தகங்களில் படம்பார்க்க நுழைந்த கால்கள்...வாசிக்கவும் ஆரம்பித்த நாள்கள்.

பள்ளி முடிந்ததும் வேலைக்கான தேடல்..

ஒரு பெட்ரோல் நிலையத்தில் 6 ரூபாய் தினக்கூலி..

பில் போட அழைத்துச் சென்றவர்கள்..ஒரு துடைப்பத்தை கையில் கொடுத்து வீதியே கூட்டச்சொன்னார்கள்..

பெட்ரோல் நிலையத்தில் ஆரம்பித்த அம்பானிக்கனவு அம்போவென ஒரு நாள் முடிந்தது..

பண்டக சாலையொன்றில் வேலையிருக்கிறது எனச்சொல்லி கொஞ்ச நாள் அவர் கடையில் வேலை பார்க்க சொன்னார் ஒரு பெரியவர்..

சம்பள உயர்வு 8 ரூபாயானது..

காலையில் 100 லாட்டரி சீட்டு கொடுப்பார்கள் பேருந்து நிலையத்தின் ஒவ்வொரு பேருந்தாய் ஏறி சத்தம்போட்டு விற்கவேண்டும்..விற்றுமுடியவில்லை எனில் முதலாளி முறைப்பார்..சில நாள் சம்பளம் குறைப்பார்..

இந்த கோடைகாலத்தில் நான் என் துணையை சந்தித்தேன்..

அழகாகவும், ஆசிரியையாகவும் ஆகிவிட்டிருந்தார். என் ஆசை அவரை ஹெலிகாப்டர் வைத்தாலும் எட்ட முடியாத அளவில் தான் இருந்தது..

1986 களில் கலை இலக்கிய பெருமன்ற  மாதாந்திர கூட்டங்களில் அவர் கலந்து கொள்வார் என்ற துப்பு கிடைத்ததும்..சில வரிகளை கவிதை என்ற பேரில் எழுதிக்கொண்டு நல்ல கைலியை கட்டிக்கொண்டு காலையிலேயே போய்விடுவேன்.

கூட்டம் முழுவதும் ஒரு சொப்பன உலகில் உலவினானும் சம்பளம் கிடைக்காத சோகமும் இருக்கும்..

முக்கியமாய் என் வரிகளை சிலாகிக்கும் சில இதயங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்.

வாழ்க்கைக்கான தேடலை விட என் துணையை அடைய வேண்டும் என்ற ஆவலாதியில் 21 ரூபாயுடன் வெளிநாடு போகும் உற்சாகத்தில் திருப்பூர் போய்விட்டேன்..

எனக்கான நேரம் எனக்கு முன்னே அங்கே சென்று காத்திருந்து என்னை கைபிடித்து அழைத்துப்போய் ஒரு பிரிண்டிங் ஆலையில் விட்டது..

வாரம் 50 ரூபாய் சம்பளம்.அதற்குள்ளே சாப்பாடு..எல்லாம்..

கண்ணின் அவளை பார்த்துவிட்ட நாள்களில் என்னை நரகத்துக்கு அனுப்பி வேலை செய்யச்சொல்லியிருந்தாலும் பார்த்திருப்பேன்.

முழுக்கையிலும் தேங்காய் எண்ணெய் தடவி விட்டு சாயம் கலக்கச்சொல்வார்கள். சரியான நிறம் எடுக்கும் அவரின் மூடுக்கேற்ப சில சமயம் ஐந்து நிமிடத்திலும் பல நாள்கள் பலமணி நேரங்களும் கை கலக்கிக்கொண்டிருக்கும். 

ஒரு வருடம் கழித்து ஒரு கம்பெனியில் கணக்கப்பிள்ளை என அழைத்து டீவாங்கித்தரும் வேலை...சம்பளம் 75 ரூபாய் வாரத்திற்கு..

சக்கையாய் விழும் இரவெல்லாம் கனவுகளில் காதலிக்க ஆரம்பித்து விடுவேன்..

இடையில் காதலி 5 புத்தகங்கள் போட்டு ஹெலிகாப்டர் தூரத்தை இன்னும் அதிகப்படுத்தி இருந்தார்..

நான் இன்லேண்ட் கடிதம் 10 எழுதினால் ஒரு அஞ்சலட்டையில் நன்றி என ஒரு பதில் வரும்.. அவர் நூல் வெளியிடும் நாள்களை நான் ஊருக்கு வரும் நாளாய் அமைத்துக்கொண்டு கம்பீரமாய் வந்து தலைகாட்டிவிட்டு கிளம்பி வருடம் முழுவதும் வைத்து சாப்பிடுவேன்.

நாள்கள் ஓடிய வேகத்தில் நான் சூப்பர்வைசர் ஆகி என் தம்பிகள், குடும்பம் என எல்லாரையும் திருப்பூர் அழைத்துச்சென்று விட்டேன்..

ஒரு தம்பி கணினி பயின்றான்...மற்ற தம்பி வேலைக்குப்போனான்..

குடும்பம் கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்த வேளையில் தம்பி நல்ல பழக்கங்களை மேம்படுத்தி ஒரு நிலைக்கு வந்துவிட்டான்..

வெறுமென விசாரிப்புகளாய் இருந்த என் கடிதங்களில் நான் என்னை உறுத்தாத அளவுக்கு வெளிப்படுத்தும் அளவில் வளர்ந்திருந்தேன்..

அவரை சந்தித்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தேவகணத்தில் என் நேசத்தை சொன்னேன்..

மறுத்து..பின் நீண்ட யோசனைக்குப் பிறகு சம்மதித்த அந்த நிமிடங்களின் நினைவு எப்போதும் மறக்க முடியாது.

அப்புறம் என்ன போராட்டம் தான்...

வீட்டில் மறுப்பு...திருமண எதிர்ப்பு எல்லாம் கடந்து கைபிடித்த நாளும் வந்தது..

தம்பி ஒரு திரைப்பட தயாரிப்பாளனாகி விட்டிருக்கிறான். இரண்டு தங்கைகள் மணமுடித்து விட்டார்கள்.

கடைசி தம்பி மாதம் 2 லட்சம் தரும் கணினிப் பணியில் இருக்கிறான்..

தங்கை சி.ஏ.முடித்து விட்டார்.

இரண்டு பெண்கள் எங்கள் தோளுக்கு வளர்ந்து விட்டார்கள்..

எழுத்துகளை கிட்டத்தட்ட மறந்திருந்த வேளைகளில் முத்துநிலவன் அய்யாவின் தொடர்ந்த தூண்டுதலால் எழுத ஆரம்பித்தேன்.

வலைப்பூவில் எழுத எழுத என் நட்புகள் விரிய ஆரம்பித்தது.

நான் உண்டு என் வேலை உண்டென உருண்ட நேரங்களை மாற்றிவிட்டது அன்பின் வலிமை.

முன்பு சில நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளனாய் போகும் போது எந்த அடையாளமுமில்லாத ஒரு ரசிகனாய் இருந்து வந்த என்னை, இப்போதெல்லாம் சிலரேனும் பார்த்து முறுவலிக்கிறார்கள்.

பரிசோதனையாய் சிலர் விழாக்களில் பங்குபெறவும் வைக்கிறார்கள்..

**மிக நீளமாய் எழுத வைத்திருந்த என் இதயக்குளத்தில் எறியப்பட்ட கற்களை சின்ன தூண்டில் மூலம் வளையங்களை ஏற்படுத்தி இருக்கிறார் .பரிவை.சே.குமார்.

சொல்வதற்கும்..வெல்வதற்கும் ஆலோசனைகள் ஏதுமில்லை என்னிடம்..

பிடித்தமான ஒரு குறள் உண்டு..

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்"

முடியாதென எதையும் நினைக்காதீர்கள்... எல்லாம் முடியும்..

அன்புடன்..
மீரா செல்வக்குமார்.
www.naanselva.blogspot.com

செல்வக்குமார் அண்ணன் அவர்களின் 'என்னைப் பற்றி நான்' வாழ்க்கையை எதார்த்தமாய் பேசியது... நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் மனசுக்குள் சுழலவைத்தது.

நன்றி செல்வக்குமார் அண்ணா.
-'பரிவை' சே.குமார்.

32 எண்ணங்கள்:

மீரா செல்வக்குமார் சொன்னது…

நன்றி குமார்

Anuprem சொன்னது…

எத்துனை போராட்டங்கள்....அனைத்து வலிகளும், வேதனைகளும் அவரின் வெற்றி படிகட்டுகள் போல்...

இத்தகைய சாதனையாளர் மேலும் பல வெற்றிகள் பெற எம் வாழ்த்துக்கள்...

Avargal Unmaigal சொன்னது…

செல்வக்குமாரின் கடிதங்கள் அல்லது கவிதைகள் மனதை தொட்டு செல்லும் என்றால் அவரை பற்றிய பதிவும் மனதை தொட்டு செல்லுகிற்து சொல்வதை எவ்வளவு அழகாக எளிமையாக சொல்லி செல்லுகிறார். என்னைக் கவர்ந்த பதிவர்களில் இவரும் ஒருவர் இவரது கவிதைகளை எனது தளத்தில் மறுபதிவு செய்ய அனுமதி கொடுத்தவர்,

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

செல்வா உங்கள் வாழ்க்கை மனதை என்னவோ செய்தது என்றாலும் ஒரு பாடம் எனலாம். ஹேட்ஸ் ஆஃப்!! இன்னல்கள் இல்லாத வெற்றிகள் இல்லையே! எங்கள் இருவரின் அவரவர் வாழ்க்கையையும் நினைவுபடுத்தியதுதான். ஒவ்வொரு விதமாக.

குமார் இப்படி ஒவ்வொருவரின் என்னப் பற்றியை அறுமுகப்படுத்துவதற்கு நன்றி. ஒவ்வொன்றும் ஒரு பாடம். ஆம் அனுபவப் பாடம் இல்லையா..மிக்க நன்றி குமார்.

KILLERGEE Devakottai சொன்னது…

மனம் கனத்தது நண்பரே...
த.ம.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான சிந்தனை சொந்தக்காரருக்கு பாராட்டுகள்...

Unknown சொன்னது…

Ayya Meera. Selvakumar avargalin ezhuthu eppodhum thanithuvam niraidhe irukum. Pirappu mudhal padippu, uzhaipu, kadhal, kadhalil vetri, vazhkaiyil vetri magudam ena athanaiyum solliya nerthi miga miga arumai. Neengalum, ungal kudumbamum niraivaay vazha en vazhthukkal. idhai ungal padhivil veliyiteergal Kumar sir ungalukkum vazhthukkal.

Nagendra Bharathi சொன்னது…

அருமை

ஸ்ரீராம். சொன்னது…

போராட்ட வாழ்க்கையை போராட்டத்தினாலேயே வெற்றி கண்டிருக்கிறார் நண்பர். வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நண்பரின் பூத்த முகத்திற்குப் பின்னால்
இவ்வளவு பெரிய உழைப்பு முயற்சி இருக்கிறதா
மனம் கணத்தாலும்
முயற்சியால் முன்னேறிய நண்பருக்குப்பாராட்டுக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனதைத் தொட்ட பகிர்வு. வாழ்த்துகள் செல்வா.....

வைசாலி செல்வம் சொன்னது…

வித்தியாசமான பதிவு ஐயா.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் நல்வாழ்த்துகள்.. வாழ்க நலம்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் மதுரைத் தமிழன் அண்ணாச்சி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் நேசம்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நிஷா சொன்னது…

ம்ம்ம்ம் இந்தப்பதிவை படிக்க முன்னரே ட்ரெய்லர் கேட்டதனால் பதிவு போட்டதும் படிக்கவில்லை.பதிவை படித்து அழுது விட்டேன் அக்கா என சொல்லி எக்கச்சக்க எதிர்பார்த்தை கூட்டி விட்டீர்கள்.

உண்மை தான், வீட்டின் தலைமக்கள் வாழ்க்கை போராட்டமானது என்பதை மீராசெல்வக்குமார் சார் வாழ்க்கையும் சொல்கின்றது.

அனைத்து தடைகளையும் தாண்டி தொடர்ந்து வெல்க செல்வகுமார் சார்.

பதிவுக்கு பின்னூட்டத்தில் கருத்திட்டால் அதற்கு பதில் பதிவு இட வேண்டும் என செல்வக்குமார் சாருக்கு சொல்லி விடுங்க குமார். அவர் வலைப்பூவிலும் சரி இங்கும் சரி அவருடைய பின்னூட்டங்களை காண முடிவதில்லை. ஏதேனும் கேட்டாலும் அவர் பின்னூட்டப்பதில் தருவதில்லை.

சின்ன சின்ன பதிவுகளாக் இட்டவரை பொன்னியின் செல்வன் வாழ்க்கைப்பதிவு எழுத வைத்தமைக்காக குமாருக்கும் மனசு தளத்துக்குள் பெரிய சல்யூட்.

தொடர்க.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

செல்வா சகோவின் எழுத்துகள் அருமையாய் இருக்கும். மகளுக்கு அன்புடன் சொல்லும் விசயங்களில் கருத்துகள் இருக்கும். யதார்த்தமாய் தன்னைப் பற்றிப் பதிவு செய்திருக்கிறார். அவருக்கும் அவருடைய இனிய குடும்பத்திற்கும் என் அன்பான வாழ்த்துகள். வெளியிட்ட உங்களுக்கும் நன்றி சகோ.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கடந்த சிலஆண்டுகளாக செல்வகுமார் அவர்களை வலைபதிவுகளின் மூலம் அறிவேன்.அவருக்குப் பின்னால் இப்படி ஒரு பெரிய போராட்டம் இருந்துள்ளது என்பது எதிர்பாராதது. தன்னைப் பற்றி பதிவு செய்த விதம் அருமை.அவருடைய இன்னும் முழுமைஒயாக வெளிப்பட்டு சிகரங்களை எட்ட வாழ்த்துகள்.
சக பதிவர்களா அவர்கள் பதிவுகளில் கூட சொல்லாததை சொல்ல வைத்த குமார் உங்களுக்கு நன்றி

Unknown சொன்னது…

kudumpama blog elthuthuvathu ivaga kudumpamagathan irukum. pudalvigal eluthukal athrkum mela chinavaga eluthin rasikan naan vaalthukal. tirupathi payanam, pali vidumurai plus 2 negalaga apa apa ena eluthu. thagal padivuku kaathu irukan.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

கவிஞர் கண்ணதாசனிடம் தமிழ் துள்ளி விளையாடும். அதுபோல நண்பர் மீரா செல்வக்குமார் கவிதைகளில் தமிழ்ச் சொற்கள் வந்து கொஞ்சும். இந்த பதிவினில் அவரது வெளிப்படையான எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

Geetha Sambasivam சொன்னது…

அதிகம் பழக்கமில்லா நண்பர் குறித்துப் படித்து அறிந்தேன்.