மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 3 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...1

வன் அறைக்குள் நுழையும் போது மாற்றம் கொண்டு வருவோம் என்று சொல்லும் கட்சியின் தேர்தல் பிரச்சார நிகழ்வின் தொகுப்பை பார்த்துக் கொண்டிருந்த அவர், ஹெட்செட்டைக் கழற்றி வைத்து விட்டு பேச்சை ஆரம்பித்தார். பேச்சின் ஊடே.... "அவங்க நல்ல செயல்திட்டம் வச்சிருக்காங்க தெரியுமா..?" என்று எப்பவும் போல் அந்தக் கட்சிக்காக வரிந்து கட்டிப் பேச ஆரம்பித்தார்.

"யாரு அந்த சாதிக் கட்சியா..?" என்றான் அவன்.

"எதுக்குங்க சாதிக் கட்சி... சாதிக் கட்சியின்னு சொல்றீங்க... எல்லாக் கட்சியுமே அப்படி ஆரம்பிச்சி வளர்ந்தவைதாங்க..."

"எதை வச்சி அப்படிச் சொல்றீங்க... அவங்களுக்குப் பின்னால வந்த விஜயகாந்த் தமிழகம் எங்கும் கட்சியை வளர்த்து வச்சிருக்கும் போது இவங்க சில மாவட்டங்களில் மட்டும்தானே இருக்காங்க... எங்க மாவட்டத்துல எல்லாம் சுத்தமாவே இல்லீங்க.."

"விஜயகாந்தை விடுங்க... அவனெல்லாம் ஒரு தலைவன்... இங்க பாருங்க... இப்படி சாதி சாதியின்னு பேசித்தான் ரெண்டு ஊழல் கட்சியை ஆட்சியில அமர்த்தி அடிமையாக் கிடக்கோம்... தெரிஞ்சிக்கங்க..."

"அது சரி... இப்பச் சொன்னீங்களே அது வாஸ்தவமான பேச்சு... உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... சாதிக் கட்சியான உங்க கட்சி...."

"ஏங்க அந்தக் கட்சியோட கொள்கை பிடிக்கும்ங்க... அதுக்காக எங்க கட்சியின்னு சொல்லிட்டீங்க... நமக்கெல்லாம் கட்சி எதுக்குங்க...?"

"சரி... சாரி... சாதிக்கட்சியான அந்தக் கட்சி வேரூன்றி இருக்கிற மாவட்டங்களில் கண்டிப்பா ஜெயிக்கும் இல்லையா... ஆனா எங்க மாவட்டத்துல எங்க சாதிக்காரனுக்கு ஒரு கட்சியிருக்கு... சொந்தக்காரனை நிப்பாட்டுனானுங்க... எங்க சாதிப் பயலுக ஒட்டுப் போட்டிருந்தா ரெண்டாவது இடத்துலயாச்சும் வந்திருப்பான்... மொத்தமா 51 ஓட்டு டெபாசிட் காலி... எவனும் போடலையே... அது தாங்க நாங்க... நாங்கன்னு இல்லை எல்லாச் சாதிக்காரனும் அப்படித்தான்... எங்களுக்கு சாதியை வச்சி அரசியல் பண்ண வேண்டாங்க... நல்லவங்க வந்தாப் போதும்..."

"இவ்வளவு சொல்றீங்க... அப்ப மாற்றம் கொண்டு வாறேன்னு செயல் திட்டம் வச்சிருக்கிற அவருக்கு ஓட்டுப் போடுறதுல என்ன வந்திருது... தமிழகத்தில் ஒரு மாற்றம் வரட்டுமே..."

"என்ன மாற்றங்க வரும்... வாரிசு அரசியலை திட்டிக்கிட்டு வாரிசு அரசியலை வளர்க்குறாரே அந்த மாற்றமா...?"

"உங்களுக்கு அவரைப் பிடிக்கலைங்க... அதான் விடுங்க... உங்களை மாதிரி படிச்ச ஆளுங்க... சாதிக்கட்சி சாதிக்கட்சியின்னு பேசும் போது... வேற என்னத்தைச் சொல்ல... மறுபடிக்கும் அம்மாக்கிட்டயோ ஐயாக்கிட்டயோ கொடுத்துட்டு குத்துதே... குடையுதேன்னு சொல்லிக்கிட்டு இருங்க... வேற என்ன நான் சொல்ல முடியும்..."

"கோபப்படாதீங்க... அப்ப உங்க கட்சியை அரியணையில் ஏற்ற லீவு போட்டுட்டு ஊருக்குப் போறீங்க... அப்படித்தானே...?"

"லீவா... லீவெல்லாம் கொடுக்க மாட்டானுங்க...அது போக நமக்கெல்லாம் ஏதுங்க கட்சி... எது நல்ல கட்சியின்னு தெரியுதோ அதுக்கு ஓட்டுப் போட வேண்டியதுதான்... ஒரு மாற்றம் வரட்டுமே...."

"என்னங்க... எப்ப பார்த்தாலும் அந்த கட்சித் தலைவரோட பேச்சை மட்டுமே கேக்குறீங்க... ஊர்ல இருக்க ஆளுங்களுக்கு எல்லாம் இணையத்துல அந்தக் கட்சி தொலைக்காட்சி எப்படிப் பாக்குறதுன்னு சொல்றீங்க... உங்க பொண்ணுக்கு கூட படிப்பை பற்றிய இணையதளம் குறித்துச் சொல்றதை விட்டுட்டு இதுல போயி அவரோட ஸ்பீச் கேளு... அருமையாப் பேசுறாருன்னு சொல்றீங்க... பேசும் போது திராவிடத்துக்கு மாற்றுன்னு சொல்றீங்க... ஆனா அது உங்க கட்சியின்னு சொன்னா ஏத்துக்க மாட்டீங்க... ஓட்டுப் போடுவீங்களான்னு கேட்டா... அதுக்கும் மழுப்புறீங்க... அப்புறம் எதுக்குங்க அரசியல் பேசுறீங்க..."

"ஆமா... நான் என்ன பேசினாலும் நீங்க சாதிக்குள்ள கொண்டாந்து நிப்பாட்டுறீங்க..."

"இங்க பாருங்க... எனக்கு உங்களுக்கெல்லாம் பிடிக்காத விஜயகாந்தைப் பிடிக்கும்... அவரைப் பற்றி விமர்சனம் அதிகம் இருக்கலாம்... ஆனாலும் எனக்கு பிடிக்கும்ன்னு நான் சொல்லும் போது நீங்க ஏன் மழுப்புறீங்க... தைரியமாச் சொல்லுங்க மாற்றத்துக்கான கட்சி எங்க கட்சியின்னு..."

"...."

"என்ன மௌனமாயிட்டீங்க..."

"இல்லீங்க... உங்ககிட்ட பேச முடியாதுங்க... எதாச்சும் சொன்னா சாதிக் கட்சியின்னு சொல்வீங்க..."

"என்னங்க நீங்க நான் சொன்னாலும் சொல்லாட்டியும் அது சாதிக் கட்சிதானே...?"

"......"

"என்ன மறுபடியும் மௌனம்... மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிதானே..."

"அப்படியில்லைங்க... இந்தா எங்க கட்சியின்னு சொல்றீங்க பாருங்க..."

"சரி விடுங்க... அந்த சாதிக்கட்சிக்கு... அதாவது மாற்றம் கொண்டு வரப்போற, திராவிடத்துக்கு மாற்றான அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட நினைக்கிற சாதாரண தமிழன்தான் நீங்கன்னு நான் நம்புறேன்.... நீங்களும் மாற்றம் வரணுமின்னு ஓட்டுப் போட நினைக்கிறீங்க... ஆனாலும் கம்பெனி லீவு கொடுக்காது... அப்படித்தானே...?"

"....."

"என்னங்க இதுக்கும் பேச்சைக் காணோம்.... சரி விடுங்க... எங்க கட்சிங்க இதுன்னு உங்களாலே சொல்ல முடியலை... ம்... ஆமா போன தேர்தல்ல ஓட்டுப் போட்டீங்களா?"

"இல்லைங்க..."

"அதுக்கு முந்தின தேர்தல்...?"

"இல்லைங்க..."

"நான் ஒண்ணு சொல்லட்டுமா...?"

"என்ன..."

"உங்களுக்கு பிடிச்ச கட்சியோட டிவி பாருங்க.... மீட்டிங் பாருங்க...பேட்டி பாருங்க... பத்திரிக்கை செய்தி வாசிங்க... அது உங்க உரிமை... சுதந்திரம்... ஆனா அதெல்லாம் உங்க காதுல மாட்டியிருக்கிற இயர் போனைத் தாண்டி வெளியில வராம பாத்துக்கங்க... மாற்றம் வேணுமின்னு சொல்ற நீங்க முதல்ல ஓட்டுப் போடணும்.... பின்னே இதுதான் என் கட்சியின்னு சொல்ற மனப்பாங்கு வேணும்... இந்த மாற்றம் உங்களுக்குள்ள முதல்ல வரணும்... எதுவுமே இல்லாம சும்மா சீமான் மாதிரி கத்திக் கத்தி என்னையும் டென்சனாக்காதீங்க.... சரியா...?"

"..........."

"இப்ப இருக்கீங்க பாருங்க... இதையே தேர்தல் முடியிற வரைக்கும் கடைபிடிங்க... மாற்றம் முதல்ல நம்ம ரூமுக்குள்ள வரட்டும்... சரிங்களா..? சும்மா அப்படி இப்படின்னு எல்லாம் பேசாதீங்க... செயல்ல காட்டாத கட்சியும்... இதுதான் என் கட்சி... இவர்தான் என் தலைவன்னு சொல்லாத ஆளுகளும் பேசாம இருக்கதே நல்லது...  சரிங்களா...? "

அவர் ஹெட்செட்டை மாட்ட, "இப்பவே மாட்டிட்டீங்க... சரி விடுங்க... நாம இங்க இருந்து பேசி என்னாகப் போகுது... வாங்க காபி சாப்பிட்டுட்டு அப்படியே ஒரு சாமான் வாங்கணும்... வாங்கிட்டு வருவோம்... கிளம்புங்க" என்றான்.

"வேண்டாங்க... நீங்க போங்க... எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு..." என்றபடி அவர் கணிப்பொறியில் அந்தக் (சாதிக்) கட்சி தலைவரின் வீரதிரப் பேச்சை மீண்டும் கேட்க ஆரம்பித்தார்... மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில். 

'இனி இந்தாளு நமக்கிட்ட அரசியல் பேச வரமாட்டான்... எப்பப்பாரு... மாற்றம் வருது... மக்களுக்கு மலர்ச்சி வருதுன்னு... அம்புட்டுப் பயலும் நாந்தேன் முதலமைச்சருன்னு ஆசையோட அலையிறானுங்க... இவரு மாற்றம் வருது... நாற்றம் வருதுன்னு... இனி மனுசன் ரூமுக்குள்ள கத்த மாட்டான்... இப்பத்தான் நிம்மதியா இருக்கு... நாளைக்கு மேப்பெட்டுக்காரனுங்கு ஒரு ஆப்படிக்கணும்... சாதிக்கு சம்மட்டி அடிச்சாச்சு... இனி இனத்தை இடத்தைவிட்டு நகரவிடமாப் பண்ணனும்...' என்று மனசுக்குள் நினைத்தபடி லிப்டுக்காக காத்திருந்தான் அவன்.

-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

Avargal Unmaigal சொன்னது…

அலப்பறை மிக அருமை.........

ஸ்ரீராம். சொன்னது…

மாற்றங்கள் நம்மிலிருந்தே வரவேண்டும் என்பது சரிதான். ஆனால் தமிழ் நாட்டுக்கு நல்ல ஒரு மாற்றுக்கட்சி, வலிமையானதாக இப்போதைக்கு இல்லை என்பதுவும் நிஜம்.
தம +1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல மாற்றம் ....

KILLERGEE Devakottai சொன்னது…

நல்லதொரு அலசல் மாற்றம் வருமா.... பார்ப்போம்.

துரை செல்வராஜூ சொன்னது…

தங்களின் கை வண்ணம் அருமை..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னத்த சொல்லி என்ன பிரயோஜனம் ? எப்பிடியும் அந்த ரெண்டுல ஒன்னுதான் வரப்போகுது...மாற்றம் நம்மகிட்டே இருந்தே ஆரம்பமாவது நல்லது.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல அலப்பறை...மாற்றுக் கட்சி இருக்கா குமார். இருப்பதாகத் தெரியவில்லையே. ம்ம்ம்ம் நம்மிலிருந்து மாற்றம் வந்து ஆட்சியும் மாறுதானு பார்ப்போம் காத்திருப்போம்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மாற்றுக் கட்சி இருப்பதாக எனக்கும் தெரியவில்லை. பார்க்கலாம் - இன்றைக்கு தேர்தல் நாள் என்று என்ற அறிவிப்பும் வந்துவிட்டது.

ezhil சொன்னது…

திடமான மாற்றுக் கட்சி உருவாகாதவரைக்கும் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது....