மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 31 டிசம்பர், 2015

மனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்

(எங்க ஊர் மாரியம்மன்)

லகெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகின்றன... சில நாடுகளில் புத்தாண்டு பிறந்து விட்டது. பல நாடுகள் புத்தாண்டை எதிர்நோக்கி நிமிடங்களை கடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பதிவராய் இருக்கும் எல்லாரும் தங்களுக்கு கடந்து செல்லும் ஆண்டு என்ன செய்தது என்றும் வரும் ஆண்டில் நான் என்ன செய்ய இருக்கிறேன் என்று பதிவுகளைத் தட்டிய வண்ணம் இருக்கிறார்கள். நானும் இந்த ஜல்லிக்கட்டில் கலந்துக்கவில்லை என்று வரலாறு நம்மை பேசும் அல்லவா..? அதனால நாமளும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

கடந்து சென்ற வருடங்களில் சில நல்லவைகள் நடந்திருக்கின்றன... சில கெட்டவைகள் நடந்திருக்கின்றன. இருப்பினும் வாழ்க்கையில் வலிகளும் சந்தோஷங்களும் கொடுத்துத்தான் அனைத்து ஆண்டுகளும் கடந்து செல்கின்றன.  மேலும் வயதும் கூடிக்கொண்டே போகிறது ஆனால் சாதித்து விட்டோம் என்றெல்லாம் சந்தோஷிக்க முடியவில்லை என்றாலும் இன்னும் நம் வாழ்வை நாம் அழகாய் கடந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதே சந்தோஷம்தான். சரி வாங்க எனக்கு 2015 செய்தது என்ன... வாழ வைத்ததா... அல்லது வீழ்த்தியதா என்பதைப் பார்ப்போம்.


சந்தோஷங்கள்:

முதலில் சொல்ல வேண்டியது நிறைய நட்புக்களைப் பெற்றுத் தந்தது இந்த 2015.

இங்கு வந்தது முதல் மனைவி, குழந்தைகளை இங்கு கூட்டிவர வேண்டும் என்ற ஆவலை ஒரு மாத விசிட் மூலமாக நிறைவேற்றி வைத்தது இந்த 2015.

பல வருடங்களாக எழுதி வந்தாலும் என்னை எழுத்தாளனாய் பலருக்கு அடையாளம் காட்டியது இந்த 2015.

என்னுடைய சிறுகதைகளுக்கு ஒரு அங்கிகாரத்தைப் பெற்றுத் தந்தது 2014 என்றால் மிகையானது. அப்படியிருக்க கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்று என்னை இன்னும் வளர வைத்தது இந்த 2015.

என்னாலும் கட்டுரைகள் எழுத முடியும் என்று காட்டி, அதற்கு தொடர்ந்து பரிசுகளைப் பெற வைத்தது இந்த 2015.

கஷ்டப்பட்டாலும் கவலைப்பட்டாலும் எங்கள் ஊரில் வீட்டுப் பணி ஆரம்பிக்க வைத்தது  இந்த 2015.

பாக்யா வார இதழில் ஏழெட்டு மாதங்களாக மக்கள் மனசு பகுதியில் எனது கருத்துக்களும் தொடர்ந்து வர வைத்தது இந்த 2015.

'வேரும் விழுதுகளும்' என்ற கிராமத்து தொடர்கதைக்கும் 'கொலையாளி யார்?' என்ற திகில் குறுநாவலுக்கும் சிறப்பான வரவேற்ப்பை பெற்றுக் கொடுத்து நானும் தொடர்கதைகள் எழுதலாம் என்று நினைக்க வைத்தது இந்த 2015.

வெள்ள அரசியலில் வெகுண்டெழுந்து அரசியல் கட்டுரைகள் எழுத வைத்து, அது நல்லாயிருக்கு தொடர்ந்து  எழுது என்று நண்பர்கள் சொன்னதால் நாமு ம்எழுதலாமோ என்று சிந்திக்க வைத்த இந்த 2015.

எங்கள் பகுதி குறைகள் குறித்து என் மனைவி சொன்ன கருத்தை போட்டோவுடன் பத்திரிக்கையில் வர வைத்தது இந்த 2015.

பதிவர் எழுத்தாளர் மகேந்திரன் அண்ணனை சந்திக்க வைத்து அவருடன் தம்பியாய் நட்போடு இருக்க வைத்தது இந்த 2015.

அண்ணன் கில்லர்ஜி அவர்களை சென்ற வருடத்தின் இறுதியில் சந்தித்தாலும் என் குடும்பத்தில் ஒருவராய் என்னோடு ஒருவராய் இணைத்து வைத்தது இந்த 2015.

அன்பின் ஐயா திரு. துரை. செல்வராஜ் அவர்களையும் அவர்களின் மகள், மாப்பிள்ளை, பேத்தி  என ஒரு அன்பான குடும்பத்தினை சந்திக்க வைத்து அந்த அன்பு நட்பை தொடர வைத்தது இந்த 2015.

அன்பு ஐயா முத்துநிலவன் அவர்களை சந்திக்கவில்லை என்றாலும் அவரின் மகனைச் சந்திக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது இந்த 2010

வசீகரமாய்... கவித்துவமாய்... வாசிப்போரை ஈர்க்கும் விதமாய்  எழுதும் துபாயில் இருக்கும் தேவா சுப்பையா அண்ணன் அவர்களுடன் சென்ற ஆண்டில் பழகியிருந்தாலும் நேரில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த 2015.

சேனையில் இணைந்து அங்கிருப்பவர்களுடன் உறவாய் நட்பு மலர்ந்த போது உடன் பிறந்தவர் போல் நேசங்கொண்ட நிஷா அக்காவைக் கொடுத்தது இந்த 2015.

பாரதி நட்புக்காக அமைப்பில் 2012-ல்  திரு. டெல்லி கணேஷ் அவர்களின் பேசியதை பகிர்வாக்கியிருந்தேன். அவருக்கும் அது தெரிய வர எனக்கு அப்போதே மின்னஞ்சல் அனுப்பி பாராட்டினார். இந்த முறை பாரதி விழாவுக்கு வந்தவர் என்னைக் குறிப்பிட்டுக்  கேட்டு என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வைத்தது இந்த 2015. 

மேலும் அபுதாபியில் இருக்கும் முகநூலில் எழுத்தில் பன்முகம் காட்டும் அண்ணன் கனவுப்பிரியன், அகல் ஆசிரியர் நண்பர் சத்யா, 'பாக்யா' எஸ்.எஸ்.பூங்கதிர் சார், பிரதிலிபி நண்பர்கள் என எழுத்து வட்டத்தை விரிவுபடுத்தியது இந்த 2015.

உறவுகளைப் புரிந்து கொள்ள வைத்தது இந்த 2015.

உண்மையான நட்புக்களை எனக்கு அளித்தது இந்த 2015.

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்தும் பிஸியான நிஷா அக்காவின் கருத்துக்கள் எல்லாமே அருமையாக இருக்கும். அதை வைத்து அவரை நச்சரித்து வலைப்பூவுக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்க வைத்தது இந்த 2015.

(எங்க ஊர் முனியய்யா)

வலிகள்:

குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் வாழ்க்கையை தொடர வைத்தது இந்த 2015.

கடன்களின் பிடியில் இன்னும் இன்னுமாய் தொடர வைத்தது இந்த 2015.

சிறுகதைத் தொகுப்பு, தொடர்கதையை புத்தகமாக்கும் முயற்சி என 2014 ஆசைகளை நிராசையாகவே ஆக்கி வைத்தது இந்த 2015.

வேலை மாற்றம் தொடர்பான ஆசையைக் காட்டி அதை அப்படியே விட்டு வைத்தது இந்த 2015,  (வருடக் கடைசியில் மீண்டும் நட்பின் மூலமாக துளிர்க்க வைத்துச் செல்கிறது...  பூக்கிறதா... அல்லது புஸ்வானமாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்)

எனது கதையை குறும்படம் ஆக்க வேண்டும் என்று குடந்தையூர் சரவணன் அண்ணன் அவர்கள் சொல்லிக் கொண்டே இருக்க, 2014ம் போய் 2015ம் கடந்து விட்டது.

விஷாலின் சேட்டைகளை ரசிக்க வைத்தாலும் அவன் விழுந்து தலையில் தையல் போட வைத்த நிகழ்வைக் கொடுத்தது இந்த 2015.

யாரோ வைத்த தீ-க்கு நாங்கள்தான் நெருப்புக் கொடுத்தோம் என்று சொல்லி எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, எல்லாரும் வேண்டும் என்று நினைக்கும் எங்களை இவர்கள் வேண்டாம் என்று ஒதுங்க வைத்தது இந்த 2015.

உறவுகளின் கேலிப் பேச்சுகளால் மனவலியை அவ்வப்போது அளித்துக் கொண்டே வந்தது இந்த 2015.


நனவாக விரும்பும் எண்ணங்கள்....

சிறுகதைத் தொகுப்பு அல்லது வேரும் விழுதுகளும் தொடர்கதையை நாவலாக்குவது என்ற எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவல்.

இன்னும் நிறைய கதைகள் நிறைவாய் எழுத வேண்டும்.

எங்கள் மண்வாசனையுடன் கதைகள் எழுத வேண்டும்.

மனசு தளத்தில் எப்பவும் போல் தொடர்ந்து எழுத வேண்டும்.

நான் விரும்பியபடி இப்போது முயற்சிக்கும் அந்த வேலை தடையில்லாமல் கிடைக்க வேண்டும்.

கடன்கள் அடைந்து நாட்கள் சந்தோஷமாய் நகர வேண்டும்.

என் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் காயத்ரி அக்கா, என்னைப் பிரதிபலிக்கும் என் அன்பு நண்பன் தமிழ்க்காதலன் மற்றும் நான் தொடரும் என்னைத் தொடரும் நட்புக்கள் அனைவரின் அன்பும் இன்று போல் என்றும் தொடர வேண்டும்.

சில கனவுகள் இன்னும் நனவாகாமலே வருடாவருடம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன... அவை இந்த வருடத்திலாவது நனவாக வேண்டும் என்பது ஆவா... ஆசை உயிர்ப்பெறுமா... அல்லது 2017க்கு நகர்த்தி வைக்கப்படுமா என்பதை வரும் ஆண்டின் வசந்தங்கள்தான் சொல்ல வேண்டும்.


அனைவருக்கும் 
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 
மலரும் ஆண்டு மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் தரும் ஆண்டாக அமையட்டும். 
-'பரிவை' சே.குமார்.

41 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.. த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே.
நலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வளம் சேர்க்கும் நலம் நிறைந்த ஆண்டாக இவ்வாண்டு அமைய இறைவனை உளமாற பிராத்திக்கிறேன்.
தங்களின் இப்பதிவில் கடந்த வருட தங்கள் மனதின் சந்தோஷங்களையும், வலிகளையும், கனவுகளையும் விவரித்திருக்கிறீர்கள். இவ்வருடம் அவ் வலிகளின் கணம் மறைந்து, கனவுகள் நிறைவேறி, சந்தோஷங்கள் தாமாகவே தங்களை வந்தடைய மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

நான் வலையில் வாரா நாட்களில் விட்டுப்போன தங்கள் பதிவுகளையும், மற்ற அனைவரின் படைப்புகளையும் படித்து வருகிறேன். என் தாமதக் கருத்துக்களுக்கு மன்னிக்கவும்.

நன்றியுடன,
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தங்கள் வலிகள் எல்லாம் மறைந்து, தங்கள் கனவுகள் எல்லாம் மலர்ந்திட, குடும்பத்தாரின் கனவுகளும் நனவாகிட எங்கள் பிரார்த்தனைகளும். இந்த வருடம் தங்களுக்கு எல்லா நன்மைகளையும், மகிழ்வையும் தந்திட வாழ்த்துகின்றோம்!

Yarlpavanan சொன்னது…

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

ஸ்ரீராம். சொன்னது…

வலிகள் மறையட்டும். எண்ணிய எண்ணங்கள், கனவுகள் ஈடேறட்டும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தம +1

Yaathoramani.blogspot.com சொன்னது…

வலிகள் அனைத்தும் அடியோ டழியும்
வளமும் புகழும் தொடர்ந்து வளரும்
வாழ்த்துக்களுடன்..

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்ல அலசல். நல்லனவே நடக்கட்டும். வாழ்த்துகள். மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கனவுகள் நனவாகட்டும்...!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

KILLERGEE Devakottai சொன்னது…

இந்த ஆண்டும் நலமாகிட தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...

(திங்கள் பிறந்த நாள் ஞாபகம் இருக்கட்டும்)

கரூர்பூபகீதன் சொன்னது…

பிறக்கும் இனிய புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்! என்றும் அன்புடன் கரூர்பூபகீதன்!

Unknown சொன்னது…

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் த-ம 6

சிவகுமாரன் சொன்னது…

கனவுகள் நனவாகட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

துரை செல்வராஜூ சொன்னது…

எம்மையும் நினைவு கூர்ந்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

எல்லா நலமும் பெற்று வாழ்க நலமுடன்..
அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

unmaiyanavan சொன்னது…

இந்த ஆண்டு தங்களது வலிகளுக்கு எல்லாம் மருந்தாக அமையும். கவலைப்படாதீர்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ezhil சொன்னது…

வலிகளை மறந்து விடுங்கள்... வரும் வருடம் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

மனோ சாமிநாதன் சொன்னது…

அனைத்து கனவுகளும் இந்த ஆண்டில் உன்னதமாய் நிறைவேற இனிய வாழ்த்துக்கள் குமார்!!
அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

இளமதி சொன்னது…

வணக்கம் சகோ!

தங்கள் வாழ்த்திற்கு நன்றிகூறி என் அன்பு வாழ்த்தினையும்
இங்கு கூறிக்கொள்கின்றேன்!

வலிகளும் மகிழ்வுகளும் இரவு பகல் போன்றவைகளே!
நனவாக விரும்பும் கனவென்பது விடியலுக்கான காத்திருப்பு!
விடியாத பொழுதென்று ஏதுமில்லை!
நம்பிக்கையுடன் நடைபோடுங்கள்!
வாழ்த்துக்கள்!

மகிழ்நிறை சொன்னது…

அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி.

நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கவிஞரே....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.
தங்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

கண்டிப்பாக மறக்கவில்லை அண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பாரே....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சார்....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சார்....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

கோமதி அரசு சொன்னது…

கனவுகள் நனவாகட்டும்.
வலிகள் மறைந்து வசந்தம் மலரட்டும்.
வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இன்பமும் துன்பமும் வாழ்வின் இருபக்கங்கள்! இந்த புத்தாண்டு சிறக்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஹிஷாலி சொன்னது…

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..

படைப்பும் அருமை