மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 5 டிசம்பர், 2014

மனசின் பக்கம் : போட்டிகளும் எண்ணங்களும்

பிரச்சினை

னது வலைப்பூவில் ஏதோ பிரச்சினை... பதிவு போடும் போது எப்படியோ எடுத்துக் கொள்கிறது. ஆனால் மற்றவர்களுக்கு பின்னூட்டம் இடும்போது வேறு விண்டோ திறந்து பிரச்சினை இருப்பதாகச் சொல்கிறது. ஒரு சிலருக்கு மட்டும் பின்னூட்டம் போகிறது. கில்லர்ஜி அண்ணாவுக்கு போட்ட இரண்டு பின்னூட்டமும் போகவில்லை. இன்று ஜெயக்குமார் ஐயா வேலுநாச்சியார் குறித்த தொடர் ஆரம்பித்திருப்பதைப் படித்ததும் நம்ம சிவகங்கை சீமையின் வீரமங்கையின் கதையல்லவா என சந்தோஷித்து நீண்ட கருத்தை டைப் செய்து ஓகே பண்ணினால் எல்லாம் போயே போச்... இப்படித்தான் இரண்டு மூன்று நாட்களாகக் கழிகிறது. எல்லாருடைய பகிர்வுகளையும் படிக்கிறேன்... பின்னூட்டம் இடும்போதுதான் இடிக்கிறது. தினேஷ் கூட இதே பிரச்சினை இருப்பதாகச் சொன்னார். நானும் மால்வேர் பைட்ஸ் அட்டாக் வந்திருக்கலாம் என்று அதை தரவிறக்கம் செய்து மூன்று முறை சுத்தம் பண்ணியாச்சு... அண்ணனிடம் இருந்து ஒரிஜினல் மெகாப்பீ வைரஸ் சாப்ட்வேர் வாங்கி அதிலும் சுத்தம் பண்ணியாச்சு... ஆனால் இன்னும் பிரச்சினை என்னும் சூறாவளி சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. வலைச் சித்தர் அண்ணன் தனபாலன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்... அவரும் சரி செய்யும் முயற்சியில் இருக்கிறார். விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன்.

தமிழ்க்குடில் போட்டி

மிழ்க்குடில் நடத்தும் கதை, கட்டுரை, கவிதைப் போட்டிகளுக்கான அறிவிப்பை மனசில் தனிப் பகிர்வாகப் பகிர்ந்திருந்தேன். அதற்கான தேதி நண்பர்களின் வேண்டுதலுக்கு இணங்க டிசம்பர் 5-ல் இருந்து டிசம்பர்-7 ஆக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நமது நட்புக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். குறிப்பாக சகோதரிகள் அனைவரும் பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். இந்தப் போட்டியினை மிகச் சிறப்பானதொரு போட்டியாக மாற்றிக் காட்டுங்கள்.

பதிவுகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் :  tamilkkudil@gmail.com 

சிறுகதைப் போட்டி

சிறந்த சிறுகதை எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னணிப் படைப்பாளிகளில் ஒருவருமாக இருந்த திரு. கந்தர்வனின் நினைவாக ஆண்டுதோறும் சிறுகதைப் போட்டி சிறப்பாக நடத்தப்படுகிறது என்பதை நம்மில் பலர் அறிவோம்.  ஆறாவது ஆண்டாக இந்த வருடமும் போட்டி நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். சிறுகதைப் போட்டிக்கான பரிசு விவரங்கள்... 

முதல்பரிசு ரூ.5000 
இரண்டாம் பரிசு ரூ.3000 
மூன்றாம் பரிசு ரூ.2000 
சிறந்த சிறுகதைகளுக்கு ஆறுதல் பரிசு

விதிமுறைகள்: ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். கதை எழுதியவர், அது தனது சொந்த கற்பனையே என்பதையும், ஏற்கனவே வெளியிடப்படாதது என்பதையும் உறுதிமொழிக் கடிதத்துடன் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு தனித் தாளில் அனுப்ப வேண்டும். குறிப்பாக கதைப் பக்கங்களில் எழுதியவர், பெயர், முகவரி இருத்தல் கூடாது. 

கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 30.1.2015.
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் மின்னஞ்சல்: ரமா.ராமநாதன், மாவட்டச் செயலர், தமுஎகச, 2-435, பாரதிநகர், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.:622 301. ramabharhi29@gmail.com , mathipdk1@gmail.com, 

விவரங்களுக்கு 98655-66151, 98429-10383 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மகிழ்ச்சி

புதாபி வந்ததில் இருந்து வலைப்பூவில் எழுத ஆரம்பித்து எத்தனையோ உறவுகளைப் பெற்றிருந்தாலும் ஊரில் சீனா ஐயா தவிர வேறு யாரையும் நேரில் சந்தித்ததே இல்லை. இங்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்றாலும் எல்லாமே இணைய வழி விசாரிப்புக்கள்தான்... எனது முதல் சந்திப்பு அண்ணன் கில்லர்ஜி அவர்களுடந்தான்... அது பற்றி முன்னமே சொல்லிவிட்டேன். இப்போது இரண்டாவது ஆளாக நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்த மிகச் சிறந்தவரான மகேந்திரன் அண்ணன் அவர்களைச் சந்தித்தேன்... இல்லை... சந்தித்தோம்... ஆம் கில்லர்ஜி அண்ணாவும் நானும் அவரைச் சந்தித்தோம். முப்பெரும் பதிவர் சந்திப்பு குறித்த பகிர்வு அந்தப்பக்கம்... அதாங்க கில்லர்ஜி அண்ணா அல்லது மகேந்திரன் அண்ணா  (மனுசன் ஊருக்குப் போயாச்சு... இன்னும் கனவில் வந்த காந்தியே கிடப்பில் இருக்கு... அதனால டவுட்டுத்தான்) விரிவாக எழுதுவார்கள் என்ற நம்பிக்கையில் சுவராஸ்யத்தைக் கெடுக்க விரும்பாமல் சந்தித்ததை மட்டுமே சொல்லியிருக்கேன் (கில்லர்ஜி அண்ணா கவனிக்க) அவரைச் சந்தித்தது மிக மகிழ்ச்சியான நிகழ்வு.

மாற்றம்

ண்பனின் பேச்சை மதித்து(?) சிறுகதைகளில் வரலாற்றையும் கொஞ்சம் கொண்டு வந்து எழுதலாம் என்ற எண்ணம் உதயமாகி இருக்கிறது... இது பிரகாசமாகவும் ஆகலாம் பீஸூம் போகலாம்... இருப்பினும் முயற்சி என்னும் பந்தை அடித்துப் பார்க்கும் முடிவுக்கு வந்தாச்சு. அது ஆறாவதும்... நாலாவதும் ... அல்லது அவுட்டாவதும் அவன் கையில் இருக்கு. அவன்னு சொன்னதும் நண்பன்னு நினைச்சிடாதீங்க... என்னப்பன் முருகனின் கையில் இருக்குன்னு சொல்ல வந்தேன். அதேபோல் நாட்டுப்புறப் பாடல்கள் குறித்த பகிர்வுக்கும் தேடலில் இறங்கியாச்சு... மனசில் சினிமா, அது இதுன்னு போட்டு வருவதை என் நட்பு வன்மையாகக் கண்டித்ததால் இனி கொஞ்சம் நல்ல பகிர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்ற எண்ணம்... முடிந்தவரை செயல்படுத்த முயற்சிக்கணும்.

முயற்சி

நானும் எனது சகோதர நட்புக்கள் இருவரும் இணைந்து மூவரின் படைப்புக்களையும் ஒரே புத்தகத்தில் கொண்டு வரலாம் என பலமுறை பேசியிருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன்னர் தீவிர பேச்சு வார்த்தை நடத்தி திட்டத்தை அமல்படுத்தும் விதமாக ஒரு நண்பர் படைப்புக்களை எங்களில் மூத்த சிறந்த படைப்பாளிக்கு அனுப்பியாச்சு... வேலைகள் ஆரம்பிச்சாச்சு... அதற்கான வேளைதான் வர வேண்டும். அதேபோல் சிறுகதை தொகுப்பு ஒன்று கொண்டு வரும் முயற்சியின் ஆரம்பமாக எனது அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு கதைகளின் இணைப்பு முகவரி கொடுத்து வாசித்து நல்லதை எடுக்கச் சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம் இறைவன் சித்தம் இருந்தால் விரைவில் இரண்டு புத்தகங்களையும் அச்சில் பார்க்கலாம்.

மீண்டும் மனசு பேசும்.
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரைவில் நூல்களை எதிர்ப்பார்க்கிறேன்...

மற்றபடி தங்களுக்கு மின்னஞ்சல் செய்து உள்ளேன்...

ராமலக்ஷ்மி சொன்னது…

வரவிருக்கும் நூல்களுக்கு நல்வாழ்த்துகள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அனைவரையும் சிறுகதை எழுதத் தூண்டும் முயற்சி பாராட்டத்தக்கது. நூல் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விரைவில் தங்களின் நூல்கள் அச்சாக்கம் பெறட்டும்
வாழ்த்துக்கள் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 3

துரை செல்வராஜூ சொன்னது…

தங்களின் கணிணி சீராக வேண்டும்..
தங்கள் கைவண்ணங்கள் தொடர வேண்டும்!..

தொல்லைகள் எதுவும் கடந்து போகும்!..

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

வாழ்த்துகள் தம்பி. பரிவை. பாரதிராஜா...நாட்டுப்புறபாடலில் இறங்கவிருப்பது மகிழ்ச்சி. தம்பியை வரலாறு, நாட்டுப்புற பாடல் என சகலகலாவல்லவனாக்க விரும்பும் நண்பருக்கு பாராட்டும், வாழ்த்தும்.

தமிழ்க்குடில் போட்டிகளில் அனைவரும் வாழ்த்து தெரிவிப்பதோடு நின்றுவிடாமல் பெருமளவில் பங்குகொள்ள வேண்டுகிறோம். :)

KILLERGEE Devakottai சொன்னது…

விரைவில் நூல்களை எதிர்ப்பார்க்கிறேன்... தங்களது கணினி விரைவில் குணமடைய கூகுல் ஆண்டவரை பிராத்திக்கிறேன்.
நண்பரே தாங்கள் பதிவிடுவீர்கள் என்று நினைத்தே தங்களுக்கு புகைப்படங்கள் அனுப்பினேன் ஆகவே தாங்களே பதிவிடுங்கள். நன்றி
தமிழ் மணம் 4

Geetha சொன்னது…

வாழ்த்துகள் சகோ.. விரைவில் தொகுப்பு வெளிவர

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்கள் படைப்புகளை அச்சில் பார்க்கும் ஆசையுடன் நானும்......

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வாழ்த்துக்கள் கலக்குங்கள் குமார்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கருத்திடும்போது நீங்கள் உங்கள் பிளாக்கர் மெயில் அக்கௌண்டில் லாக் இன் செய்திருந்தீர்கள் என்றால் உங்கள் பின்னூட்டம் சேர்ந்து விடும். ஆனால் அப்போதுதான் லாக் இன் செய்வதற்கு முன் பின்னோட்டம் இடும்போது கருத்தை டைப் செய்து விட்டு பப்ளிஷ் பட்டனை அழுத்தினால் லாக் இன் செய்யக் கேட்கும் . நீங்கள் கடவு சொல்லை கொடுத்து லாக் இன் செய்திருப்பீர்கள். கம்மென்ட் சேர்ந்திருக்குக்கும் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் கம்மென்ட் வெளியாகாது.கம்மென்ட் மாடரேஷன் வைத்திருந்தால் நமத்து கருத்து சேர்ந்ததா இல்லையா என்பதை அவர்கள் வெளியிட்ட பின்பே அறிந்து கொள்ள முடியும்.
இதைப்பற்றி விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே! தங்கள் நூல் வெளிவருவதற்கு.

பின்னூட்டம் இடுவது குறித்து நண்பர் முரளிதரன் சொல்லியிருப்பதை நாங்களும் வழிமொழிகின்றோம்....ஆனால் விரிவாக எழுதுவது அவர்தான்...அந்த டெக்னாலஜி எல்லாம் எங்களுக்துக் தெரியாதே...எல்லாம் வலைசித்தரின் அருள்தான்.....அதாங்க நம்ம டிடி....அவர்கிட்ட கொடுத்திட்டீங்கல்ல....தீர்த்துடுவாருங்க.....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நண்பரே ! நாங்கள் பொதுவாகச் செய்யும் ஒன்றையும் இங்கு சொல்லிட்விடுகின்றோம். பின்னூட்டம் அடித்தவுடன் அதை காப்பி பேஸ்ட் செய்துவிட்டுத்தான் வெளியிடு வை அழுத்துவோம். பல சமயங்களில் நமது கருத்து போகிறதா என்று தெரியாது. திரும்பவும் அடிக்க வேண்டும் என்றால் மிகவும் கஷ்டமாகி விடுவதால் இந்த முறை. அப்படியும் போக வில்லை என்றால் நாங்கள் வேர்டில் அடித்து வைத்து, அது யாருடைய வலைத்தளம் எந்தப் பதிவு என்பதையும் குறித்து அதன் கீழ் அடித்து வைட்த்துவிட்டு சேமித்து வைத்து பின்னர் கூகுள் ப்ளாகர் அருள் புரியும் போது அதை காப்ப் பேஸ்ட் செய்து வெளிட்யிடும் வழக்கத்தையும் கொண்டுள்ளோம்.