மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 11 செப்டம்பர், 2013

மனசு பேசுகிறது: மகாகவி பாரதி

"தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"


மகாகவி பாரதியின் நினைவு நாள் இன்று. அந்த மகாகவிஞனை எத்தனை பேர் இந்த நாளில் நினைக்கிறோம் என்பதை அவரது இறப்புக்கு வந்தவர்களைப் போல் விரல் விட்டு எண்ணிவிடலாம். 

சின்னச்சாமி ஐயர் - லட்சுமி அம்மாளின் மகனான சுப்பிரமணிய பாரதி, 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் - 11 ஆம் தேதி எட்டையபுரத்தில் பிறந்தார். சுப்பையா என்று அழைக்கப்பட்ட பாரதி தனது 11 வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார்.  தமிழ் மீது தீராத காதல் கொண்ட பாரதி 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்' என்று பாடியவர் பாரதி. 

1904ஆம் ஆண்டு சுதேசிமித்திரனில் உதவியாசிரியராக பணியாற்றிய பாரதி 1906ஆம் ஆண்டு அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். பின்னர் தான் மறைவதற்கு முன்னர் சில மாதங்கள் மீண்டும் உதவியாசிரியராக பணியாற்றினார்.மேலும் சக்கரவர்த்தினி, இந்தியா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் போன்ற பத்திரிக்கைகளிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

பொருள், யாப்பு, அணி என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு பாரதி எழுதிய பாடல்களே புதுக்கவிதைகளுக்கு முன்னோடி எனலாம். எல்லாரும் படிக்கும்படியான வசனகவிதைகளை எழுதியர் பாரதி.

பெண்ணுரிமையைப் பற்றி பேசிய முதல் தமிழன் பாரதிதான் என்றும் சொல்லலாம். 'பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே' என்று பெண்ணுரிமை வேள்விக்கு தீமுட்டிய பாரதி, பெண்கள் படிக்க சட்டங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக 'சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள்' என்று உரக்கக் கூவியவர் பாரதி.

சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம் மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்ற பாரதி இந்த மொழிகளில் சிறப்பு மிக்க படைப்புக்களை மொழியாக்கம் செய்து தமிழுக்குத் தந்தார். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தீராத காதல் கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனையும் கொண்ட ஒரு ஒப்பற்ற புலவனான பாரதி, தேசிய கவி என்று அழைக்கப்பட்டார்.

'நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்' - என்று பாடிய பாரதி, 1921 - செப்டெம்பர் 11 ஆம் நாள் இந்த உலகிற்கு நல்ல பல கவிதைகளைக் கொடுத்துவிட்டு மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்றார்.

பாரதியின் பாடல் காணொளிகள் சில...

காணி நிலம் வேண்டும்...




தூண்டிற் புழுவினைப் போல...




தீராத விளையாட்டுப் பிள்ளை...




மோகத்தைக் கொன்று விடு...



மனசு மீண்டும் மற்றுமொரு தலைப்பில் பேசும்...

-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

r.v.saravanan சொன்னது…

பாரதியின் நினைவை போற்றும் பகிர்வு நன்றி குமார்

கதம்ப உணர்வுகள் சொன்னது…

பாரதியின் நினைவு நாளையொட்டி நீங்கள் எழுதிய கட்டுரை பாரதியை நினைவுப்படுத்தும் விதமாகவும் அவரைப்பற்றி அறிந்துக்கொள்ள கிடைத்த ஒரு அற்புத வாய்ப்புக்காகவும் அவருடைய பாடல் வரிகள் அனைத்தும் அருமை.. அற்புதம்.. அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.

Unknown சொன்னது…

அதிகம் எழுதாமல் பாரதி நினைவுப் பகிர்வு அருமை!

Unknown சொன்னது…

'சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள்'\\\\\\\

அருமை..

கோமதி அரசு சொன்னது…

பாரதியின் நினைவு நாளுக்கு நீங்கள் கொடுத்த கட்டுரை பாடல் பகிர்வு அற்புதம்.
அவர் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

அம்பாளடியாள் சொன்னது…

சிறப்பான பகிர்வு அருமையான பாடல் தேர்வுகளுடன் வாழ்த்துக்கள் சகோ !!

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு எனது வாழ்த்துக்கள்
http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_12.html?showComment=1378981093122#c3253265906579873749

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மாதேவி சொன்னது…

சிறப்பான பகிர்வு. வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மஞ்சுபாஷினி அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க சக்கரகட்டி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கோமதி அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்பாள் அடியாள் அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தவரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மாதேவி அக்கா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.