மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 26 ஜனவரி, 2013

குடியரசு தினம்



ஊழல்களை உறங்கப் போட
மக்கள் நலனில் அக்கறையின்றி
சுமைகளை நமக்களித்து சுகமாய்
ஆளும் மத்திய அரசும்...

ஓட்டுப் போட்டவர்கள் ஓடெடுத்தாலும்
எனக்கெனவென்று பழிவாங்கலே
தனது தலையாய கடனென
ஆளும் மாநில அரசும்...

மீன் பிடிக்க செல்பவர்களை
சுட்டு வீழ்த்தும் இராவண பூமியினருக்கு
மாலை மரியாதை தரும் அரசும்...

பொய்த்த விவசாயமும்
காணாமல் போன மின்சாரமும்
புரட்டிப் போட்ட வாழ்க்கையில்
புண்ணாகிப் போன மக்கள்
நலனில் அக்கறையில்லா அரசும்...

ஆளும் பூமியில்
காவிரியும் முல்லையும்
காலமெல்லாம் அறிக்கை...கடிதத்தில்
அரசியல் கூத்தாகிப் போக...

மக்கள் பிரச்சினைகளுக்காக
அன்றைய முதல்வர்
கடிதம் போட்டார்..
இன்றைய முதல்வர்
வழக்கு தொடுக்கிறார்...

எல்லாவற்றையும் பார்த்து
பழக்கப்பட்ட நாமும்
பாட்டில் விற்பனைகளை
கோடிகளாக்கி மகிழ்கிறோம்...

சிலிண்டர் விலை உயர்வும்
பொருட்களின் தட்டுப்பாடும்
வால் மார்ட்க்களின் வரவும்
நமக்கு பெரிதல்ல...

டாஸ்மாக்கின் மூன்று நாள்
விடுமுறையே மூச்செல்லாம்
பேச்சாகிப் போகிறது...

தன் வாரிசுகளுக்காகவே வாழும்
தமிழினத் தலைவரின் கூற்றுப் போல்
இதுவும் ஒரு விடுமுறை தினமே...!


அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்..

-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! கடைசி வரிகள் நச்சென்று உரைத்தன! நன்றி!

Yoga.S. சொன்னது…

வணக்கம்,குமார்!!!இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.///நச்சுன்னு இருந்திச்சு!

ராமலக்ஷ்மி சொன்னது…

நன்று குமார்.

குடியரசு தின வாழ்த்துகள்!

Kayathri சொன்னது…

நல்லாருக்கு தம்பி..ஒவ்வொரு குடிமகனின் உள்ளக்கொந்தளிப்பே இது..இதையெல்லாம் விட நமக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் காண இன்னொரு விடுமுறை குடியரசு தினம்...வாழ்க ஜனநாயகம்..!!!

அம்பாளடியாள் சொன்னது…

பார்க்க வேண்டியவர்கள் இந்தக் கவிதை வரிகளைப் பார்க்க மாட்டார்களா என
ஏக்கம் உள்ளுர வாட்டுகின்றது .மிகவும் கச்சிதமாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
மென்மேலும் தொடரட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

RAMA RAVI (RAMVI) சொன்னது…

இதுவும் ஒரு விடுமுறை தினமாகிப்போனதுதான் வருத்தமாக இருக்கு.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் குமார் - ஆதங்கம் புரிகிறது - காலம் மாற ( மாறுமா ? ) நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா