நலமா நண்பரே... உங்கள் வருகை என் வலைப்பூவை மலரச் செய்யட்டும்.... உங்கள் கருத்து என் எழுத்தின் நிறை குறைகளை சுட்டட்டும்... உங்கள் வாக்கு என் இடுகைகளை பலரிடம் கொண்டு செல்லட்டும்... நன்றி... அடிக்கடி வாங்க.... நட்புடன் உங்கள்... சே.குமார். மனசு: நீ வருவாயென...

Thursday, November 10, 2011

நீ வருவாயென...



(நன்றி : இளையராஜா)

எப்போதோ நீ சொன்னது
இப்போதும் மனசுக்குள்...

எப்போதோ நீ கொடுத்தது
இப்போதும் பாதுகாப்பில்...

எப்போதோ நீ கேட்டது
இப்போதும் ஞாபகத்தில்...

எப்போதோ நீ பார்த்தது
இப்போதும் குறுகுறுப்பாய்...

எப்போதோ நீ சிரித்தது
இப்போதும் காதுக்குள்...

எப்போதோ...
எப்போதோ...
எல்லாமே எப்போதோ...

விட்டுச் சென்றாய்...
விலகிச் சென்றாய்...
விலகாத உன் ஞாபகங்களை
எனக்குள் விதைத்துச் சென்றாய்...

பசுமையாய் எனக்குள்
பாதுகாப்பாய் எல்லாமே...

அப்போது வருவாய்...
இப்போது வருவாய்...
என எப்போதும்
நம்பிக்கையாய்...

-‘பரிவை’ சே.குமார்




19 எண்ணங்கள்:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

விலகாத உன் ஞாபகங்களை
எனக்குள் விதைத்துச் சென்றாய்...// அருமையான வார்த்தை பிரயோகம்..

செங்கோவி said...

ஃபாரின்ல போய் உட்கார்ந்துக்கிட்டு, வா வான்னா எப்படி வருவாங்க..நீரு ஊருக்குப் போரும்யா.

r.v.saravanan said...

விலகாத உன் ஞாபகங்களை
எனக்குள் விதைத்துச் சென்றாய்...


ரசித்தேன் குமார்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நம்பிக்கைகள் எப்போதும் வீண் பேவதில்லை..

காத்திருங்கள் நினைவுகளுடன்...

MANO நாஞ்சில் மனோ said...

விலகிச் சென்றாய்...
விலகாத உன் ஞாபகங்களை
எனக்குள் விதைத்துச் சென்றாய்..//

வலியான சூப்பர்ப் வரிகள் வேதனையாக வெளியே வருகிறது அருமை மக்கா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

அந்தப்படம் செம கலக்கல்...!!!

தமிழ்வாசி - Prakash said...

நினைவுகள் எப்போதுமே சுகம் நண்பா...


நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

சுசி said...

இந்தப் பொண்ணுங்களே இப்டித்தான் குமார் :)

கவிதை ரொம்ப அழகா இருக்குங்க.

ராஜா MVS said...

கவிதை மிக அருமை...

vanathy said...

super. well written.

NIZAMUDEEN said...

இரசித்தேன் கவிதையை!

S.Menaga said...

கவிதையை ரசித்தேன்....

மாய உலகம் said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல எழுத்து நடை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்களுக்காக இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்

சென்னை பித்தன் said...

அருமை குமார்.

சத்ரியன் said...

குமார்,

எப்போதும் “மனசு”க்குள் வந்தபடி தானே!

அருமை.

ஹேமா said...

எப்போதோவானாலும் மனதிற்குள் இப்போதுபோலத்தான் காதல் !

Rishvan said...

nice kavithai... please read my tamil kavithaigal in www.rishvan.com