மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

சொல்ல மறந்த கவிதைகள் - III




கண்மாயில் குளிக்கும்போது
நீரெடுக்க வரும் நீ...
இப்பொதெல்லாம் வருவதில்லை...
கண்மாயும் காய்ந்து கிடக்கிறது
என் மனம் போல..!


கடலில் குதூகலமாய் குழந்தை...
ஓடிவரும் அலையாய்
எத்தனை சந்தோஷங்கள்...
மனசுக்குள் சாரலாய்
உன் நினைவுகள் ..!



இப்போதெல்லாம் நீ
வருவதைத் தவிர்த்தாய்..
நான் வாழ்வதையே
தவிர்க்க நினைக்கிறேன்..!

-'பரிவை' சே.குமார்.

Thanks - Photos from Google

25 எண்ணங்கள்:

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ஏக்கங்களை சுமந்துக்கிட்டு இருக்கும் ஒவ்வொண்ணும் ரொம்ப அழகாருக்கு..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

யதார்த்தமான காதல் கவிதை...

ஏக்கத்தோடும் இருக்கிறது...

செங்கோவி சொன்னது…

கடைசி பஞ்ச் சூப்பர் மாமே..

சக்தி கல்வி மையம் சொன்னது…

அந்த கண்மாய்... இன்றைய கிராமங்களின் அவல நிலையை படம் பிடிக்கிறது,,

சத்ரியன் சொன்னது…

அடடா!

காதல்-னா சும்மாவா?

ஆமினா சொன்னது…

nice !!!

சுசி சொன்னது…

நல்லா இருக்குங்க குமார்.

Chitra சொன்னது…

அருமை. :-)

மனோ சாமிநாதன் சொன்னது…

ஏக்கத்தை சுமந்த வரிகள் மனதைத் தொட்டன!

RAMA RAVI (RAMVI) சொன்னது…

ரொம்ப அழகான கவிதை,குமார்.

ஹேமா சொன்னது…

குமார்...ரொம்பக் காலத்துக்கு அப்புறம் உங்க பக்கத்தில காதல் !

r.v.saravanan சொன்னது…

முதல் கவிதை சூப்பர் குமார்

நேசமித்ரன் சொன்னது…

ஹேமா சொன்னது போல் மீண்டும் ஈரக் காத்து

vidivelli சொன்னது…

இப்போதெல்லாம் நீ
வருவதைத் தவிர்த்தாய்..
நான் வாழ்வதையே
தவிர்க்க நினைக்கிறேன்..!/


ஆகா அருமையான கவிதை...
அன்புடன் பாராட்டுக்கள்...

மோகன்ஜி சொன்னது…

குமார்! ஆஜர்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அமைதிச்சாரல் அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சௌந்தர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செங்கோவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கருன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சத்ரியன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஆமினாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசிக்கா...
நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மனோ அம்மா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ரமாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா...
காதல் இருந்தாத்தானே சுகம்...
எப்பவும் கண்ணைக் கசக்குற கதைகளே கொடுத்த யாருமே கடைக்கு வரமாட்டீங்களே...
அதான் அப்போ அப்போ இதமான சாரல்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நேசமித்திரன் அண்ணா...
ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களோட அன்புக்காத்து வீச இந்த ஈரக்காத்துதானே காரணம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. விடிவெள்ளி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மோகன் அண்ணா...
நீங்க எப்பவும் நம்ம பக்கம் லீவு போடுறதில்லையே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vetha (kovaikkavi) சொன்னது…

''....இப்போதெல்லாம் நீ
வருவதைத் தவிர்த்தாய்..
நான் வாழ்வதையே
தவிர்க்க நினைக்கிறேன்..!''
சேச்செச்செச்சே...அப்படியெல்லாம் செய்ய வேண்டாம்...உலகம் ரெம்பப் பெரிசு....தாரானமாய் மனிதர் மகிழ்வாக இருக்க இடம் இருக்கு......வழியிருக்கு...... வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Unknown சொன்னது…

சுகமான கவி
ரணமான வலி-அதனால்
ஆயிரம் உயிர் பலி....
நன்று