நலமா நண்பரே... உங்கள் வருகை என் வலைப்பூவை மலரச் செய்யட்டும்.... உங்கள் கருத்து என் எழுத்தின் நிறை குறைகளை சுட்டட்டும்... உங்கள் வாக்கு என் இடுகைகளை பலரிடம் கொண்டு செல்லட்டும்... நன்றி... அடிக்கடி வாங்க.... நட்புடன் உங்கள்... சே.குமார். மனசு: எது சுதந்திரம்..?

Sunday, August 14, 2011

எது சுதந்திரம்..?



ரயில் நிலையம்...
பேருந்து நிலையம்...
விமான நிலையம்...
என எல்லா இடத்திலும்
தொடரும் பாதுகாப்பு
சோதனைகள்...

இந்தியத்
தொலைக்காட்சிகளில்
முதல் முறையாக
போட்டி போடும்
சினிமாக்கள்...

சுதந்திர போராட்டத்
தியாகிகளாம்
கதாநாயகன்
கதாநாயகியின்
பேட்டிகள்...

சமச்சீர் கல்வியால்
வகுப்பறையில்
தூங்கிய மாணவருக்கு
விடுமுறையுடன்
சாக்லெட்டு கொடுக்கும்
கொடியேற்றம்...

இவற்றிற்கெல்லாம்
முத்தாய்ப்பாய்...
குண்டு துளைக்காத
கூண்டுக்குள் இருந்து
சுதந்திரக் கொடியேற்றும்
பிரதமர்...

இப்படிப்பட்ட
சூழலில் தியாகிகளை
நினைக்க நமக்கு
நேரமிருக்கிறாதா..?

இதில் எங்கே
இருக்கிறது சுதந்திரம்...?

-'பரிவை' சே.குமார்.





படம் உதவிய கூகிளுக்கு நன்றி




11 எண்ணங்கள்:

செங்கோவி said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

கோவை நேரம் said...

தெளிவான தீர்க்கமான கவிதை...போலீஸ் , ராணுவம் இவைகளின் உதவிகளுடன் கொண்டாடுவது தான் சுதந்திரமா ...?வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வாழ்த்து

கலாநேசன் said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நிகழ்சிகள் பார்க்காமல் சுதந்திரமாய் இந்திய சுதந்திரத்தைச் சிந்திக்கலாமே...

RAMVI said...

//இவற்றிற்கெல்லாம்
முத்தாய்ப்பாய்...
குண்டு துளைக்காத
கூண்டுக்குள் இருந்து
சுதந்திரக் கொடியேற்றும்
பிரதமர்...//

நம் நாட்டின் நிலைமையை அழகாக சுட்டிக்காடியிருக்கீங்க.
இதையெல்லாம் மீறி சுதந்தர தினம் என்கிற போது மனதில் ஒரு சந்தோஷம் வருகிறது, அதை மறுக்க முடியாதே?

r.v.saravanan said...

சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

ஆமினா said...

உண்மை
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

பிரகாஷ் சோனா. said...

நேற்றைய சுதந்திரம் உரிமைக்காக
இன்றைய சுதந்திரம் விடுமுறைக்காக
நாளைய சுதந்திரம்........?

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

சே.குமார் said...

வாங்க செங்கோவி...

வாங்க கோவை நேரம்...

வாங்க சிபி அண்ணா...

வாங்க பிரதர் கலா நேசன்...

வாங்க ரமா அக்கா...

வாங்க சரவணன்...

வாங்க சகோதரி ஆமினா...

வாங்க பிரகாஷ்...

வாங்க மாய உலகம் அவர்களே...

உங்கள் அனைவரின் பின்னூட்டக் கருத்துக்கு நன்றிகள் பல.
எனது பதிவுகளை மேம்படுத்த உதவும் உங்கள் பின்னூட்டங்கள் தொய்வில்லாமல் தொடரட்டும்.