மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 ஆகஸ்ட், 2011

திருமகள் முதல் அஞ்சலி வரை...

தெய்வத் திருமகள் படம் பார்த்தோம். ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக படம் நகர ஆரம்பித்தது. 'என்னடா இது ரொம்ப பொறுமை வேண்டுமோ?' என்ற எண்ணம் மனதிற்குள் ஓடிய போது எனது நண்பர் அப்பா சாமி நமக்கு இது சரியா வராது... கதை இருக்கோ இல்லையோ வேங்கை மாதிரி சும்மா விறுவிறுன்னு போகணும்... செத்தவன் கையில வெத்தலை பாக்க கொடுத்த மாதிரி... சவச்சவன்னு போகுது... நான் தூங்குறேன்னு படுத்துவிட்டார்.

கதையின் நேர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக படத்தோடு ஐக்கியமாக்கியது. படத்தின் இறுதியில் நீதிமன்றத்தில் நிலாவும் விக்ரமும் தங்களது பாவனை மூலமாக பேசிக்கொள்வது மொத்த படத்தையும் ஒரே இடத்தில் நிறுத்திவிட்டது. அதுவும் நிலாவின் பாவனைகளும் அந்த அப்பாவித்தனமான முகமும் கண் கலங்க வைத்துவிட்டது.

'ஐ ஆம் சாம்' என்ற படத்தின் அப்பட்டக் காப்பிதான் தெய்வத் திருமகள் என்பது எல்லாரும் அறிந்ததே. விக்ரம் கஷ்டப்பட்டிருக்கிறார்... நல்ல உழைப்பாளி... தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது எல்லாரும் அறிந்ததே. ஆனால் இந்தக் கதையின் அசல் பதிப்பில் சாம் வாழ்ந்திருப்பதை பார்த்துப் பார்த்து தன்னை தயார் படுத்தியிருந்தாலும் அவரது செய்கைகள் நமக்கு சில நேரங்களில் எரிச்சலைத்தான் தருகின்றது.

நிலாவாக வரும் சாரா தனது கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார், அழகான நடிப்பு... கடைசிக் காட்சியில் தனது முகத்தில் அவர் காட்டும் பாவங்கள் சூப்பர். அவர் அளித்த தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் நீதிமன்றக் காட்சியை அப்படியே நடித்துக் காண்பித்தார். படத்தில் எல்லாரையும் பின்னுக்கு தள்ளி தானே முதலாவதாய் நிற்கிறார்.

அனுஷ்காவுக்கு சற்றே வித்தியாசமான கதாபாத்திரம்... 'விழிகளில்...' பாடலில் மழைத்துளிகளுக்கு இடையில் அனுஷ்காவை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். சந்தானம், அமலாபால் என எல்லாரும் அளவாய் நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் விஜய் நல்லதொரு படைப்பை கொடுத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது... ஏனென்றால் ஒரு படத்தின் ஒரு சில காட்சிகளை உருவினால் பரவாயில்லை. படத்தையே உருவி இருக்கிறார். ஒரு சில காட்சிகளை உருவினாலே அங்கயிருந்து திருடியிருக்கான்... இங்கயிருந்து திருடியிருக்கிறான்னு எல்லாரும் பேசுவோம். ஆனா மொத்தமா திருடுனவனுக்கு தேசிய விருது கிடைக்குமுன்னு சொல்லிக்கிட்டு திரியுறோம். என்ன கொடுமை சார் இது.

***

ராகவா லாரன்ஸின் காஞ்சனா, பேய்க்கதை என்றால் பயமுறுத்தல்கள் மட்டுமே இருக்க வேண்டும்... நகைச்சுவை கலந்தால் படத்தின் சுவராஸ்யம் கெட்டுவிடும் என வரும் விட்டாலாச்சாரியா வகை படங்களுக்கு மத்தியில் நகைச்சுவையை எப்படிப் பயன்படுத்தினால் பேய்க்கதையையும் சுவராஸ்யமாக கொண்டு செல்லலாம் என்பதை புரிய வைத்திருக்கும் படம்.

படம் முழுவதும் நகைச்சுவை... நகைச்சுவை... நகைச்சுவை... பல நாட்களாக காணாமால் போன தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை அரசி கோவை சரளா இந்தப் படத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார். மருமகள் தேவதர்ஷினியுடன் அடிக்கும் லூட்டியாகட்டும், இரவில் தூக்கத்தில் எழுந்து சிரித்துவிட்டு படுப்பதாகட்டும், லாரன்ஸின் பேய்ச் சேட்டைகளின் போது ஒரு ஓரமாக உக்காந்து ரசிப்பது போல் பயத்தோடு சிரிப்பதாகட்டும்... கலந்துகட்டி அசத்தியிருக்கிறார். ஆச்சிக்குப் பிறகு நகைச்சுவை அரசியென்றால் அது கோவை சரளாதான்.

நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் திருநங்கையாக வந்து வில்லன்களால் கொல்லப்பட்டு பேயாக மாறுகிறார். அளவாக கொடுத்த வேடத்தில் அருமையாக நடித்திருக்கிறார். படத்தின் கடைசிப் பாடலில் ராகவா லாரன்ஸின் நடனமும் பாடலின் வேகமும் இதயத்துடிப்பை எகிற வைக்கின்றன.

***

மானாட மயிலாட புகழ் மச்சான் நடிகை நமீதா, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் குறித்து பெரிய பேட்டி கொடுத்திருக்காக... அதுவும் எப்படி அவுக காந்தி பொறந்த ஊர்ல இருந்து வந்திருக்காங்களாம். அதான் அவரு கோவணம் கட்டின மாதிரி அம்மணி உடை உடுத்துது போல... அவரு கவர்ச்சியா நடிடி பேத்தின்னு சொல்லி அனுப்பி வச்சாரோ...

சரி...விஷயத்துக்கு வருவோம், போராட்டம் பண்ற எல்லாரும் காந்தியாக முடியாதாம். ஊழலை ஒழிக்க முடியாதாம்... மொத்தத்தில் இது தேவையில்லாத வேலையின்னு சொல்லியிருக்கு அம்மணி... இளைஞர் சமுதாயமே அன்னா ஹாசாரே பின்னாடி நிக்கிறத பாத்து நம்ம மார்க்கெட் (இருந்தாத்தானே) இளைஞர்களை நம்பித்தானே இருக்கு அவங்களும் அவரு பக்கம் பொயிட்டா என்ன ஆகுறதுன்னு பயப்படுதோ என்னவோ தெரியலை.

***

மங்காத்தாவும் வேலாயுதமும் ஒரே நாளில் வருமான்னு ரசிகர்கள் எதிர்பார்ப்பு. ஆனால் எப்ப வருமுன்னே இன்னும் தெரியாத நிலையிலதான் இருக்கு. தல அஜீத்துக்கு அம்பதாவது படம், அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் மங்காத்தா, பாடல்கள் நல்லா வந்திருக்கு... தளபதி விஜய்க்கு தொடர் தோல்விகளை மறக்கச் செய்யும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் படம் வேலாயுதம். ஜெயிக்கப் போவது தலயா... தளபதியா... என்பதை விரைவில் பார்க்கலாம்.

முக்கியமான விஷயம் என்னான்னா, மங்காத்தா பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும், அஜீத்தும் வரவில்லை. இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு பண்பலை வானொலியில் வைத்து பாடல்களை வெளியிட்டார். ஆனால் வேலாயுதம் பாடல்கள் மதுரையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் வெளியிடப்படுகின்றனவாம். விமான நிலையத்தில் இருந்து விழா மேடைக்கு வரும் விஜயின் காருக்குப் பின்னால் நூற்றுக் கணக்கான கார்கள் வர ஏற்பாடாம். அம்மாவுக்கு ஆதரவா பேசினதுக்காக ரொம்பத்தான் அலப்பறை பண்ணுறாங்க... ம்ம்ம்.... ஆடட்டும்... ஆடட்டும்...

***

கலைத்தாயின் மைந்தர்கள்... (போட்டோ மட்டும்)


***
ச்ச்ச்ச்ச்சும்மா....


***
இப்ப புரிஞ்சிருக்குமே தலைப்பு எப்படி வந்துச்சின்னு.... என்ன பண்றது எதாவது மொக்கை போட்டாத்தானே மனசுங்கிற பேர்ல ஒருத்தன் கிறுக்கிக்கிட்டு இருக்கான்னு எல்லாருக்கும் ஞாபகம் வருது.

-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி

11 எண்ணங்கள்:

Chitra சொன்னது…

னா மொத்தமா திருடுனவனுக்கு தேசிய விருது கிடைக்குமுன்னு சொல்லிக்கிட்டு திரியுறோம். என்ன கொடுமை சார் இது.


..... என்னத்த சொல்ல? I AM SAM பட டீம் கண்ணில் இந்த படத்தை காட்டாமல் எத்தனை நாட்களுக்கு இருக்கிறாங்களோ, அத்தனை நாட்களுக்கு அப்படி பேசிக்க வேண்டியதுதான்.... :-(

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

தெய்வத்திருமகளுக்குப் பின்னால் இப்படியொரு கதையிருக்குன்னு எனக்கு இன்றைக்குத் தான் இவ்விடுகை வழி தெரியும் நண்பா.

எது எப்படியோ..

சதையை நம்பும் தமிழ்த்திரையுலகில்
இப்படியொரு கதையை நம்பி படம் எடுத்தற்காகவே வாழ்த்துசொல்லலாம் என்பது என் கருத்து நண்பா.

சுசி சொன்னது…

ஹஹாஹா.. நல்ல மொக்கைதான் போங்க..

ரசிக்கும்படியா எழுதி இருக்கீங்க :)

Unknown சொன்னது…

மொக்கை ச்ச்ம்ம்ம் அஞ்சலி கொஞ்சம் ஆறுதல்

சக்தி கல்வி மையம் சொன்னது…

அட, நீங்களுமா?

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வித்யாசமான விமர்சனங்கள்.சுவாரசியாமான பதிவு.பகிர்வுக்கு நன்றி.

r.v.saravanan சொன்னது…

வித்யாசமான பதிவு

ஆமினா சொன்னது…

விமர்சனமா? நீங்களுமா?

கலக்குங்க

நல்லாயிருக்கு.......

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ada அட !!!!

வேலன். சொன்னது…

காஞ்சனாவில் கோவைசரளா-தேவதர்ஷினி நடிப்பு பற்றிய விமர்சனம் அருமை.
வாழ்த்துக்கள்.
வாழ்கவளமுடன்.
வேல்ன.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா அக்கா

வாங்க முனைவரே...

வாங்க சுசி அக்கா...

வாங்க பிரகாஷ்...

வாங்க கருன்...

வாங்க ரமா அக்கா...

வாங்க சரவணன்...

வாங்க சகோதரி ஆமினா...

வாங்க சிபி அண்ணா...

வாங்க வேலன்...

உங்கள் அனைவரின் பின்னூட்டக் கருத்துக்கு நன்றிகள் பல.
எனது பதிவுகளை மேம்படுத்த உதவும் உங்கள் பின்னூட்டங்கள் தொய்வில்லாமல் தொடரட்டும்.