விளைந்த வயலில்
நெல் மணி எடுத்து...
மாடுகளை குளிப்பாட்டி
புதுக்கயிறு கட்டி...
புதுப்பானையில்
புத்தரிசியிட்டு...
பொங்கலோ பொங்கல்
சொல்லும் தாத்தா...
மாடுகளுக்கு சோறு
தீட்டும் மாமா...
திட்டிக்குழி தீச்சட்டி
தூக்கும் பெரியப்பா...
என சந்தோஷத்தில்
திளைத்த என்
கிராமத்துப் பொங்கலின்
வாசம் துளிகூட இல்லை
மனைவி வைக்கும்
சிலிண்டர் பொங்கலில்..!
************
கருவேல மரங்களின்
பிடியில் கதிர் சுமந்த
வயல்கள்..!
காட்சிப் பொருளாய்
கசாலைகள்..!
வாழ்விழந்த
வைக்கோல் படப்புக்கள்..!
வெறுமையாய்
கோழிக்கூண்டுகள்..!
கூடி பொங்கல் வைத்த
கருப்பர் கோவிலில்
கூடாமல் நிற்கும் உறவுகள்...!
என இன்றைய மாற்றத்தில்
இனிக்கவில்லை
மாட்டுப் பொங்கல்....
***************
ஏக்கங்கள் இருந்தாலும் தமிழர் திருநாள் நம் திருநாள் எனவே எல்லோருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
உங்களுக்கான என் பொங்கல் வாழ்த்தைப் பார்க்க இங்கே போங்க...
எல்லாரும் சந்தோஷமா கொண்டாடுங்க.
பொங்கலுக்கு நம்ம வீட்டுக்கு வந்தவங்க அப்படியே நம்ம கருத்தப்பசுவை (பாக்கலையின்னா) ஒரு எட்டு பாத்துட்டுப் போங்க...
போட்டோ உதவி : கூகிள்
-'பரிவை' சே.குமார்.
12 எண்ணங்கள்:
உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் குமார்.
கிராமத்துப் பொங்கலின்
வாசம் துளிகூட இல்லை
மனைவி வைக்கும்
சிலிண்டர் பொங்கலில்..
உண்மையான, அர்த்தமுள்ள வரிகள் .
உங்களுக்கும் எனது தை பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் குமார். ;-)
இனிய பொங்கல் வாழ்த்துகள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.கவிதைகள் அருமை சகோ.
பொங்கல் வாழ்த்துகள் நண்பா..
உங்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். கவிதைகள் ரொம்ப நல்லாருக்கு குமார். வாழ்த்துகள்.
பொங்கல் வாழ்த்துகள்!
nice kavithai.
உங்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் குமார்.
இனிய பொங்க்ல் வாழ்த்துக்கள்
விறகு பற்றி அடுப்பு எரிப்பதுபார்த்து ரொம்ப நாட்கல் ஆகுது.
ஆமா! வீட்ட விட்டு வெளில இருக்க தைரியத்துல மனைவி வச்ச பொங்கல் ருசிக்கலன்னு எழுதீட்டீங்க.
கருத்துரையிடுக