மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 24 ஜனவரி, 2011

பாரதி நட்புக்காக லியோனியின் நெல்லிக்கனி (பட்டிமன்றத் தொகுப்பு பகுதி-1)



வார விடுமுறையான வெள்ளிக்கிழமை அபுதாபியில் ஒரு மழை நாள் என்று சொல்லும்படியாக காலை முதல் வானம் அவ்வப்போது விட்டுவிட்டு தூறிக் கொண்டே இருந்தது. என் மரியாதைக்குரிய சுபஹான் அவர்கள் பாரதி நட்புக்காக அமைப்பின் மிக முக்கியமான நண்பரைக் காண வருமாறு வியாழன் அன்று இரவே அழைத்திருந்தார். போகமுடியாத காரணத்தால் காலையில் போக நினைத்திருந்தேன். ஆனால் மழையும் மதிய உணவு சமைக்க வேண்டிய கட்டாயமும் என்னைச் சுற்றிக்கொண்டதால் போக முடியவில்லை.

மாலை நடக்கும் விழாவில் அவரைச் சந்தித்து நிலமையை விளக்கி கொள்ளலாம் என்று நினைத்து மதியம் சாப்பாட்டுக்குப் பின் சிறிது தூக்கம், பின் ஊருக்கு போன், நண்பர் தமிழ்க்காதலனுடன் சாட்டிங் என்று கழித்து மாலை விழாவுக்கு செல்ல நினைக்கையில் நல்ல மழை பெய்கிறது எப்படிச் செல்வது என்ற யோசனை வேறு... இருந்தும் மழையோடு எங்கள் அருள் அண்ணன் காரில் கிளம்பினோம். மாலை நேர மழையில் அபுதாபி இன்னும் அழகாகத் தெரிந்தது. மழையோடு விழா மேடையை அடைந்தோம். யாருடனோ பேசியபடி எதிர்ப்பட்ட சுபஹான் அவர்கள் கை கொடுத்து விலகிச் செல்ல, சரி அவர் கூப்பிட்டதுக்கு மதிப்பளிக்கவில்லை என்று நினைத்து கோபமாக இருக்கிறார் போலும் என்று நினைத்தபடி நாளை அண்ணனை சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன். எதோ விழா என்கிறான் என்னவென்று சொல்லவில்லையே என்று யோசிக்கிறீர்கள்தானே வாங்க விழாவுக்கு சேர்ந்தே போவோம்.

சில வாரங்களுக்கு முன்னர் வார விடுமுறையை பொன்மாலைப் பொழுதாக மாற்றிய பாரதி நட்புக்காக அமைப்பினர் இந்த மழைநாளை சிரிப்பு மாலையாக ஆக்கியிருந்தார்கள். ஆம்... திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் தலைமையில் ஒரு அழகான பட்டிமன்றத்தை ஆர்ப்பாட்டமில்லாமல் நடத்தி அசத்தினார்கள்.

பட்டி மன்றத்தின் தலைப்பு "மகிழ்ச்சியான வாழ்க்கை - திருமணத்திற்கு முன்பே / திருமணத்திற்கு பின்பே".

"முன்பே" என்ற அணியில் திருமதி. சித்ரா, திரு.செந்தில் வேலன், கோவையிலிருந்து வந்திருந்த ஆசிரியர். தனபால் ஆகியோர் பேசினார்கள். "பின்பே" என்ற அணியில் திருமதி. பொற்செல்வி, திரு. சங்கர், பத்திரிக்கையாளர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசினார்கள்.

மழை நேரம் என்றாலும் விழா அரங்கத்தில் நம் தமிழர் வெள்ளம் நிரம்பி இருந்தது பார்க்க சந்தோஷமாக இருந்தது. திருமதி. சசிகலா, திருமதி. சங்கீதா கடவுள் வாழ்த்துப் பாட, அவர்களைத் தொடர்ந்து பேச வந்த முருகப்பன் அவர்கள் பாரதி நட்புக்காக அமைப்பின் பெருமைகளைச் சொல்லி அவர்கள் இணையதளத்தில் நிறைய பேர் உறுப்பினர்களாகி இருப்பதாக சந்தோஷத்துடன் தெரிவித்தார்.

அதற்குப் பின் திருமதி. மீரா நாயர் அவர்களின் நடனக் குழுவினரின் நடனம் நடத்தப்பட்டது.

முதலில் நம்கவி பாரதியின் 'நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி...' பாடலுக்கான நடனத்தில் ஆடிய அந்தப் பெண் பார்வையாளர்களைக் கவர்ந்தார். அதன் பின் அந்தக்காலப் பொங்கலுக்கான பாடல் தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்...' பாடலுக்கு ஆடியவர்கள் கலக்கினார்கள் என்றால் அதன்பின் இந்தக்கால பொங்கலுக்கான பாடலாக போக்கிரிப் பொங்கல் ஆடிய அனைத்தும் குட்டீஸ், அதில் விஜயாக வந்தவர் போன விழாவில் பரதம் ஆடியவர் என்று நினைக்கிறேன்.

பாவம் குழந்தைகள் மேடையேற்றிய பின்னர் கையை நீட்டியபடி நிற்க பாடல் போடுவதில் பிரச்சினை, பிரச்சினையை மறைக்க ஒருவர் புதுப் பொங்கலை அவ்வளவு சீக்கிரமா அனுபவிக்க விட்டுடுவோமா என்று சமயோகிதமாக திரைமறைவில் இருந்து பேசினாலும் குழந்தைகள் கை வலித்து கையை தொங்கப் போட்டபோது நம் மனது வலிக்கத்தான் செய்தது. பின்னர் பாடலுக்கான ஆட்டத்துக்கு கைதட்டலில் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து பிளாப் படங்களைக் கொடுத்தாலும் விஜய்க்கு இன்னும் மாஸ் குறையவில்லை. அரசியலுக்கு போக வேண்டாம் விஜய்... பிளாப் கொடுத்தாலும் உன்னைக் கண்டால் பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்தான்.

அதன்பின் இந்த விழாவுக்கு உதவி புரிந்த தொழிலதிபர் திரு. லெட்சுமணன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். ஒரு தமிழன் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை வெற்றிகரமாக அரசுடன் இணைந்து நடத்துகிறார் என்கிறபோது நமக்கெல்லாம் சந்தோஷமே. அவர் சில நொடிகள் மேடையில் பேசினார் அதுவும் அழகு தமிழில்... ஆங்கிலமே பேசி பழகும் அவரால் சரவெடியாக வெடிக்க முடியாவிட்டாலும் அவர் பேசிய தமிழில் சந்தோஷம் கொண்டிருப்பாள் நம் தமிழ்த்தாய்.

பின்னர் பட்டிமன்றம் தொடங்கியது. பேச்சாளர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட இறுதியில் நடுவர் லியோனி குறித்து சிறு விளக்கம் சொன்னதுடன் இன்னும் அதிக விவரம் தேவைப்பட்டால் 'www.dindugal.com' -ல் போய் தெரிந்து கொள்ளுங்கள் என்றதும் கூட்டத்தில் சிரிப்பலை அடங்க அதிக நேரமானது.

அழைப்பைத் தொடந்து பார்வையாளர்கள் வரிசையில் இருந்த லியோனி அவர்கள் மேடையேறினார். மேடையில் வைத்திருந்த பேனரில் சிவப்புச் சட்டை போட்டிருந்தார். நேரிலும் அதே சிவப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார். எதேச்சையாக நடந்ததா இல்லை அந்தக் கலர் அவருக்கு ராசியா என்பது தெரியவில்லை. மேடையில் இருந்து கூட்டத்தைப் பார்த்து கையசைத்தார். அவருக்கு பூச்செண்டு மற்றும் சால்வை மூலம் மரியாதை செலுத்தப்பட்டது.

லியோனி தன் பேச்சை 'மனதில் உறுதி வேண்டும்...' என்ற பாரதி பாடலுடன் ஆரம்பித்தார். நானும் உலகெங்கும் பட்டிமன்றத்துக்கு சென்றிருக்கிறேன், எல்லா இடத்திலும் தமிழ் அமைப்பு, தமிழ் சங்கம் என்ற பெயர்களில்தான் இருக்கும், இங்கு பாரதி நட்புக்காக என்று வைத்திருக்கிறார்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார். மழை பெய்யுது கூட்டம் வருமா என்று நினைத்தேன். ஆனால் இங்கு வந்திருக்கும் நம் தமிழர்களைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

அவர் பேச்சில் சிரிப்புக்கள் சரவெடியாக வந்து கொண்டிருந்தன. என்னைய கூட்டியாந்து வச்சி எப்படி தலைப்பு கொடுத்திருக்காங்க பாருங்க... முன்னேன்னு சொன்னா கல்யாணமானவங்களும் பின்னேன்னு சொன்னா ஆகாதவங்களும் சண்டைக்கு வருவாங்க... சிக்கல்தான் என்றவர், இளமைப் பருவத்தைப் பற்றி சிலாகித்தார்.

அவர் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருபாலர் பள்ளியில் படித்தாராம். அதன் பின் கல்லூரி முடிக்கும் வரை பசங்க மட்டுதான்... நிறைய மிஸ் பண்ணியிருப்பார் போல மேடையில் சோகத்துடன் சொன்னார். அந்த அஞ்சாவதுக்குள்ள அவரு பெரிய ஆளா இருந்திருக்கிறார். அவரோட ஒரு பொண்ணு திக் பிரண்டாம். அந்தப்புள்ளை (இப்ப திருமதியா இருப்பாங்க) கையில அஞ்சு காசு வச்சிருந்தா டேய் லியோனி வாடான்னு சொல்லி பள்ளைக்கூட வாசல்ல இருக்க கடையில நெல்லிக்காய் வாங்குமாம். சரி கொடு நான் கடிச்சித்தாரேன்னு லியோனி கேட்டா ம்... ஓ எச்சிய நாந்திங்கணுமாக்கும் , சரி நீ கடிச்சிக்கொடுன்னா எ... எச்சிய திங்கணுமுன்னு உனக்கு அம்புட்டு ஆசையாக்கும்ன்னு கேட்டுட்டு இரு வாரேன்னு சொல்லிட்டு பாவடையில வச்சி கடிச்சுக் கொடுக்குமாம். அந்தப் பாடவை தொவச்சி ஒரு மாதம் இருக்குமாம். இருந்து அந்த சுவை இன்னும் இனிக்கிறதாம். எல்லா மேடையிலும் அந்தப்புள்ளையப் பத்தி சொல்லிக்கிட்டே இருக்காராம். எத்தனை புள்ளை பெத்து எங்கிட்ட கஷ்டப்படுதோ அதை எப்படியாவது பாக்கணுமின்னு நினைவுகளில் நீந்தினார்.

அப்புறம் 14,15 வயசுதான் கவனிச்சுப் பாக்க வேண்டிய என்றவர், அப்பதான் பயலுகளுக்கு குரல் மாறும் அதுவரைக்கும் அப்பா சரிப்பான்னு கீச்சுக்குரல்ல பேசுவாங்களாம். அப்புறம் பாத்தா 'என்னன்னு...' கரகர கொரல்ல பேச ஆரம்பிச்சிட்டா அப்பங்காரன் சரியின்னு ஒதுங்கிறனுமாம். மேலும் டாய்லெட் குறித்து பேசும்போது ஒருமுறை மாமா ஒருவருடன் வெளிநாட்டுக்கு பேச சென்றிருந்தேன். அங்கு தங்கியிருந்த வீட்டில் டாய்லெட்டுக்கு போனார், போனவர் சிறிது நேரத்தில் கதவை தட்டினார். என்ன மாமா என்று கேட்க, தண்ணியில்ல மாப்ளே என்றார். பேப்பர் இருக்கும் பாருங்கன்னு சொல்ல, சரியா தொடக்க முடியலைன்னாராம். நல்லா தொடச்சுக்கங்கன்னு சொன்னதும் வச்சிருந்த பேப்பரையெல்லாம் காலி பண்ண வீட்டுக்காரன் தண்ணியும் வாளியும் கொண்டு வந்து வைத்தானாம்.

அதே நம்ம ஊரில் நடந்த கதை ஒன்று சொன்னார், வெளிநாட்டில் இருந்து மகங்களுடன் வந்த ஒருவனிடன் மகன் அப்பா டாய்லெட் போகணும் என்றதும் நம்ம டைப் டாய்லெட்டில் கொண்டு போய்விட, இதில் எப்படி என்று அவன் ஆங்கிலத்தில் கேட்க, அப்பா சொன்னாராம் ' put your left leg left side, right leg right side sit middle..........' அப்படின்னு சொல்லிக்காட்டினானாம். பையனும் போனானாம் பேண்டைக் கழட்டாமல்.... அப்புறம் எப்படி அலசினார்கள் என்பதை நகைச்சுவையுடன் கூறினார். அவரது நகைச்சுவைகளில் முகம் சுளிக்க வைத்த முதரலிரவு நகைச்சுவைகளே அதிகம் இருந்தன. மேடையில் இருந்த பேச்சாளர்களில் பெண் பேச்சாளர்கள் இருவரும் மிகவும் தர்ம சங்கடத்துடன் இருந்தார்கள் என்பது அவர்கள் அங்கும் இங்கும் பார்வையை ஓட விட்டதிலேயே தெரிந்தது. நகைச்சுவையாய் நிறைய பேசினார்.

நானே பேசிக்கொண்டிருந்தால் என்னடா இவனே பேசுறான்னு முணுமுணுக்க ஆரம்பிச்சிருவீங்க அப்படின்னு பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினார். 'முன்பே' அணியின் திருமதி. சித்ராவை அறிமுகப்படுத்தும் போது அவர் நெற்றி நிறைய பொட்டு வைத்துக் கொண்டு திருமணத்துக்கு முன்பு சந்தோஷமாக இருந்ததாக பேச வந்திருக்கிறார் என்றவர் உங்க வீட்டுக்காரர் வந்திருக்கிறாரா என்று கேட்க, முதல் வரிசையில் இருந்தவரை கைகாட்ட, திருமணத்துக்கு முன்னாலதான் சந்தோஷமா இருந்தேன்னு பேசுறதை கேட்க முன்வரிசையில வந்து உக்காந்திருக்கார் பாருங்க என்று நகைச்சுவையாய் கூறினார். திரு. செந்தில் வேலனை அறிமுகப்படுத்தும் போது சிறந்த பேச்சாளர் என்னுடன் சில மேடைகளில் பேசியிருக்கிறார் என்றார். திரு. கோவை தனபாலை அறிமுகம் செய்யும் போது கல்லூரியில் வேலை பார்ப்பதாகவும் கோவை தமிழில் பேசி அசத்துவார் என்றார். அப்ப எல்லா மாவட்டத்து பேச்சு வழக்கையும் ஒரு பிடி பிடித்தார் அதில் மதுரைக்காரன் பிரசன் டென்ஸ், பாஸ்டென்ஸ், பியூச்சர் டென்ஸ் எதுவுமே இல்லாம பேசுவாங்க, சாப்பிட்டியாடான்னா சாப்பிடுவோமுல்ல என்பான் சாப்பிட்டான்னா, இல்லையான்னே தெரியாது என்றார் அதேபோல் நாம சைக்கிளை ஓட்டினா திருநெல்வேலிக்காரங்க சமட்டுவாங்க என்று சொன்னது ஹைலைட்.

'பின்பே' அணியின் திருமதி.பொற்செல்வி கண்ணன் அவர்களை அறிமுகப்படுத்தும் போது பேரை மாற்றிச் சொன்னார். திரு. சங்கர் அவர்களை துபாயில் தமிழ் வளர்ப்பவர்களில் இவரும் ஒருவர் என்றார். திரு.மதுக்கூர் ராமலிங்கம் அவர்களை அறிமுகம் செய்யும்போது சிறந்த பத்திரிக்கையாளர், நல்ல பேச்சாளர், இவரது கட்டுரைகளை அரசியல் தலைவர்கள் விரும்பிப் படிப்பார்கள் என்றார்.

பேச்சாளர்கள் சரவெடியாய் களத்தில் இறங்கினர்.

தொடரும்....

-"பரிவை" சே.குமார்.

30 எண்ணங்கள்:

Asiya Omar சொன்னது…

உங்கள் மூலமாக விழாவை நேரில் ரசித்த திருப்தி.தொடருங்க.என் பிள்ளைங்க அந்த ஸ்கூலில் தான் நான்கு வருடம் படித்தாங்க,அப்ப நடக்கிற அனைத்து தமிழ் விழாவிற்கும் போய் விடுவோம்,இப்ப முடியலை.உங்க மூலமாக அங்கு வந்த திருப்தி.

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

பட்டிமன்ற நடுவர்களிலே எனக்கு மிகவும் பிடித்தவர் லியோனி அவர்கள். நல்ல பகிர்வு.

சுசி சொன்னது…

விழாவுக்கு எங்களையும் கூட்டி போனதுக்கு நன்றிங்க.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

good post kumar

Unknown சொன்னது…

தொடருங்க ...

Thenammai Lakshmanan சொன்னது…

நிஜமாவே விழாவுக்கு வந்ததுபோல் இருந்தது குமார்.. நன்றி

மாணவன் சொன்னது…

நடந்த நிகழ்வுகளை அருமையாக பகிர்ந்துகொண்டு எங்களையும் விழாவினூடே பயணிக்க வைத்துவிட்டீர்கள் சார் சூப்பர்...

பகிர்வுக்கு நன்றி

vanathy சொன்னது…

லியோனி மிகவும் நகைச்சுவையானவர். முன்பு பார்ப்பதுண்டு இங்கு வந்த பிறகு இதெல்லாம் எட்டாக்கனி தான். நல்ல பதிவு.

shabi சொன்னது…

programmkku varanumnu irunthen mazhai yal vara mudiyala neenga enga abudhabila irukkinga mail panrannu sonneenga pannaliye

shafiullah76@gmail.com

r.v.saravanan சொன்னது…

நல்ல பகிர்வு நன்றி

Sriakila சொன்னது…

லியோனியின் பட்டிமன்றம் எப்போதும் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைக்கும். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

Menaga Sathia சொன்னது…

நேரில் சென்றதுபோல் உணர்வு..தொடருங்கள்...

செங்கோவி சொன்னது…

நல்ல பதிவு...வீடியோ இல்லையா?

சிவகுமாரன் சொன்னது…

20 வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊரில் பட்டிமண்டபம் பேசும்போது லியோனி பற்றி உலகத்துக்கு தெரியாது. கண்ணதாசனா பட்டுக்கோட்டையா என்று பேசினார். கேசட் போட்டு விற்றார்கள். இப்போது பணக்கார பேச்சாளர் ஆகிவிட்டார். அப்பாயின்மென்ட் கிடைப்பதில்லை.
வாழ்க.

Riyas சொன்னது…

நல்ல தொகுப்பு.. நீங்க அபுதாபியிலா நானும் அங்கேதான்...

நம்ம பிளாக் பக்கமும் வாங்க

ஹேமா சொன்னது…

தொகுத்துத் தந்தமைக்கு நன்றி குமார் !

தமிழ்க்காதலன் சொன்னது…

பட்டிமன்றத்தை அப்படியே பதிவுலக்கு நேரடி ஒளிபரப்பு செய்து எங்களையெல்லாம் காணச் செய்த "தமிழ் நேசன்" குமார், உங்களை பாராட்ட வார்த்தைகள் தேடி அலைகிறேன்... இப்படி ஒரு தத்ரூப எழுத்துக்களை உங்களுக்கு தமிழ் வரமென வாரி வழங்கி இருக்கிறது. ம்ம்ம்ம்.... தொடருங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆசியாக்கா...
அப்படியா..? இப்ப அபுதாபி வருவதில்லையா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ராஜ்மோகன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சி.பி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தேனம்மை அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மாணவன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஷபி...
சாரி நண்பா... வேலைப் பளுவின் காரணமாக மறந்து விட்டது. கண்டிப்பாக தொடர்பில் வருகிறேன். மன்னித்தருளுக.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஸ்ரீஅகிலா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகாக்கா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க செங்கோவி...
போட்டோவே கிடைக்கவில்லை,வீடியோ கிடைத்தால் பகிர்கிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சிவகுமாரன்...
உண்மைதான், கேசட் மூலமாகத்தான் வந்தார். பாப்பையாவுக்கு மாற்று என்றார்கள். எனக்கென்னவோ பாப்பையாவின் சிந்திக்க வைக்கும் பேச்சுக்கு முன் சிரிக்க வைக்கிறேன் என்று இரட்டை அர்த்த பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் லியோனியின் பேச்சு நிறைவாகத் தெரியவில்லை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரியாஸ்...
நான் அபுதாபியில் ஹம்தான் ரோட்டிலிருக்கிறேன். உங்கள் வலைக்கு வந்தாச்சு...அடிக்கடி வருவேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ்...
அய்யா இந்தப் பட்டிக்காட்டானுக்குப் பட்டமெல்லாம் வேண்டாமய்யா... எதோ மனசுன்னு தலைப்புக்கு தகுந்தமாதிரி மனசுக்குள்ள இருக்கது வருகிறது.... பட்டத்தைக் கொடுத்து படுக்கப் போட்டுறாதீங்க (தமிழ்நேசன்.... ஹி...ஹி... நல்லாத்தான் இருக்குப்பு...)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

சே.குமார், அழகான பதிவு--நான் நேரில் பார்ததை அப்படியே எழுதிஉள்ளீர்கள். லியொனீ நான் பார்த்த அத்தனை மேடைகளிலும் அதே சிகப்பு சட்டைதான்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க waga guru...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

Mr.Kumar,

Arumaiyana valai. Pattimandrathai appadiye thirumba kandathil magizhchi.

Nanri