"தமிழன் என்று சொல்லடா..!
தலை நிமிர்ந்து நில்லடா..!!"
தலை நிமிர்ந்து நில்லடா..!!"
நாங்கள் தமிழர்கள்... நாங்கள் வாழ்வதைவிட பலரை வாழ வைப்பவர்கள்... என்றுமே நாங்கள் உயரத்தில் இருக்க ஆசைப்பட்டதில்லை... உயரத்துக்கு கொண்டு செல்லும் ஏணியாய்த்தான் இருந்திருக்கிறோம்... இன்னும் இருப்போம்...
எங்கள் சாதனைகளை... மன்னிக்கவும் நாங்கள் எதையும் சாதித்ததில்லை அப்புறம் எப்படி சாதனைகள் என்று வரும். அதனால்... எங்கள் செய்கைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.... எனவே சற்றே உரக்கச் சொல்லுங்கள்...
"தமிழன் என்று சொல்லடா..."
* எங்கிருந்து வந்தார்கள் என்று நாங்கள் யோசிப்பதே இல்லை... அவர்களை வாழ வைத்து வேடிக்கை பார்ப்பது மட்டுமே எங்கள் வாடிக்கை...
* ஐயாவின் குடும்பம் ஆனந்தமாய் ஆள அடிப்பொடிகளாய் கொடிபிடித்து கோட்டைக்கு வெளியே கோவணத்துடன் பிரியாணி சாப்பிடும் பிரியமானவர்கள் நாங்கள்.
* அம்மா கொடநாடு போனால் என்ன கொலரடோ போனால் என்ன எப்போது வந்து எழுதி வைத்து படித்தாலும் மொட்டை வெயிலில் அமர்ந்து பள்ளிக் குழந்தைகளாய் பாடம் கேட்கும் பாசக்காரர்கள் நாங்கள்.
* இலங்கையில் தமிழன் செத்தால் என்ன... வாழ்ந்தால் என்ன... அதனால் அரசியல் நடத்தும் கதர் துண்டுகளின் காவடி சுமக்கும் பக்தர்கள் நாங்கள்.
* அம்பேத்கர் என்ற திரைப்படம் வந்ததா என்று வாய் பிளக்கும் நாங்கள் எந்திரன்களின் வெள்ளிவிழாவில் அபிஷேகம் செய்யும் அர்ச்சகர்கள் நாங்கள்.
* கோவிலுக்குப் போக நினைக்காதவர்கள்... ஆனால், குஷ்புவின் பெரிய மனசுக்காக கோவில் கட்டிய கொத்தனார்கள் நாங்கள்.
* பெற்றோரை எண்ணிப் பார்க்க நேரமின்றி நடிகனை காண காத்திருந்து அவன் பின்னே ஓடி உயிரைக் கொடுக்கும் வள்ளல்கள் நாங்கள்.
* கேரளத்து சேட்டன்களையும் பைங்கிளிகளையும் தலையில் தூக்கி வைத்து ஆடும் தாயுள்ளம் கொண்டவர்கள் நாங்கள்.
* தமிழன் கிறுக்கன் என்று சொன்னாலும் சிரித்துக் கொண்டே சொன்னவனை தூக்கி ஆடும் பரமாத்மாக்கள் நாங்கள்.
* கோடிகள் செலவழித்து சோறு போட்டால் யார் வீட்டுக் காசு என்று யோசிக்காமல் இன்னும் கொஞ்சம் ரசம் என்று கட்டுபவர்கள் நாங்கள்.
* ஊழல் செய்தவனை சாதியின் பெயரால் காப்பாற்ற நினைக்கும் கூட்டத்தில் குந்தி அமர்ந்து குதிப்பவர்கள் நாங்கள்.
* காவிரித் தண்ணீருக்காக ஐயா எழுதும் கடிதமும் அதற்குப்பின் முரசொலி கவிதையும் கண்டு சந்தோஷத்தில் கூத்தாடும் கூத்தாடிகள் நாங்கள்.
* காவிரி பிரச்சினையை வருண பகவான் தீர்த்தாலும் கடித்தத்தின் பலனால் தண்ணீர் திறக்கப்பட்டது என்றால் அடைமழையிலும் குடை மறந்து கை தட்டுபவர்கள் நாங்கள்.
* பாஸ்மார்க் வாங்கவில்லை என்றாலும் டாஸ்மாக் விடுமுறை என்றால் சந்துக்குள் சரக்கு வாங்க வரிசையில் நிற்கும் வல்லவர்கள் நாங்கள்.
* சிம்ரனின் இடையில் சிலகாலம்... தமன்னாவின் நடையில் சிலகாலம்... என காலத்தை கழிக்கும் கயவர்கள்... மன்னிக்கவும் கவிஞர்கள் நாங்கள்.
* குடும்பத்தை நினைக்க நேரமில்லாமல் மாதவனை மேடியாகவும் சிம்புவை சொம்புவாகவும் சுமப்பவர்கள் நாங்கள்.
* காசுக்கும், பிரியாணிக்கும் ஓட்டை விற்கும் உலகமகா அயோக்கி... மன்னிக்கவும்... மறுக்கா தப்பா டைப்பிட்டேன்... உலகமகா உத்தமர்கள் நாங்கள்.
* பக்கத்து வீட்டுக்காரருடன் நட்புறவு என்றால் என்ன என்று தெரியாத போதிலும் ஓபமா, மன்மோகன் நட்பு குறித்து ஓசி டீயில் ஒரு மணி நேரம் விவாதிப்பவர்கள் நாங்கள்.
* ஹாக்கியை நோக்காமல் கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாய் ஆக்கிய பெருமையில் அதிக பங்குதார்கள் நாங்கள்.
* எவனுக்காகவோ இறக்கும் இளைஞனுக்கு அவன் கொடுக்கும் பிச்சைக்காசை நோட்டீஸ் அடித்து விளம்பரப்படுத்தும் பொதுச்சுவர் நாங்கள்...
'எம் பெருமை இம்புட்டுத்தான்... எங்கப்பன் பெருமை கப்பல்ல வருது' அப்படின்னு எங்கள் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம். அதெற்கெல்லாம் நேரமில்லை... வள்ளுவர் சிலைக்குப் பக்கத்தில் அனுஷ்காவிற்கு சிலை வைப்பதற்கும் அதன் திறப்பு விழாவிற்கு வருகை தர தானே முன்வந்து ஒத்துக் கொண்ட தானைத் தலைவர் தமிழகத்தின் நிரந்தர.... அவரிடம் விழா நிகழ்வில் பாராட்டு விழா ஒன்றை இணைப்பது குறித்து பேசவும் வேலையிருப்பதால் தமிழர்களின் சார்பாக சிறு குழுவை தலைமை ஏற்று அழைத்துச் செல்ல இருப்பதால் விடை பெறுகிறேன்....
அட அங்க யாருப்பா... அதுகுள்ள நோட்டீஸை எடுத்துக்கிட்டு அடை மழையில ஒட்டப் போறது.... மழை விடட்டுமப்பா... பாசக்கார பயபுள்ளங்க.... என்னைக்குத்தான் திருந்தப் போகுதே தெரியலை...
அப்ப வரட்டுங்களா....? தேர்தலப்போ பணம் வாங்க பக்கத்து பக்கத்துல நிக்கிற மாதிரி இருந்தா மத்ததை பேசிக்கலாம்... மறுக்கா ஒரு தடவை எல்லாரும் சத்தமா சொல்லுங்க...
"தமிழன் என்று சொல்லடா.... தலை குனி..."
அட யாருப்பா பாட்டை மாத்துறது... தேசிய கீதம் பாடும் போது தெரியலைன்னா வாய மட்டும் தொறந்து வச்சிருக்க மாதிரி நில்லுப்பா... மத்த ஆளுங்க கரெக்டா சொல்லுங்க...
நேரமாச்சி... ஐயா... அனுஷ்கா வூட்டுக்கு வேற போகனுமின்னாரு மறந்துட்டேன்... குவாட்டா... என்ன எளவு இது அடிக்கடி மன்னிக்க போட வைக்கிது... வரட்டாடாடா.....
-'பரிவை' சே.குமார்.
படங்கள் உதவிய கூகிளுக்கு நன்றி
16 எண்ணங்கள்:
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
நெத்தியடி
ஃஃஃஃஇலங்கையில் தமிழன் செத்தால் என்ன... வாழ்ந்தால் என்ன... அதனால் அரசியல் நடத்தும் கதர் துண்டுகளின் காவடி சுமக்கும் பக்தர்கள் நாங்கள்ஃஃஃஃ
சரியாகச் சொன்னீர்கள் சகோதரம்...
செம காரம்..
//காசுக்கும், பிரியாணிக்கும் ஓட்டை விற்கும் உலகமகா அயோக்கி... மன்னிக்கவும்.//
தப்பே இல்ல பாஸ்.. அயோக்கியன்னே சொல்லுங்க ;)
கலக்கல்.....
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்னு சும்மாவா சொன்னாங்க,சூப்பரப்பூ!
உண்மை சுடுகிறது:(
என்னத்தச் சொல்லி:(
தமிழன்டா! :-(
வாங்க ம.தி.சுதா....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க எல்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாலாஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வெங்கட் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆசியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வித்யாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹரிஸ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானம்பாடிகள் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சிவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ம்ம்....உறைக்கணுமே சம்பந்தப்பட்டவங்களுக்கு !
அத்தனையும் உண்மை குமார். தமிழன் என்று சொல்லடா! தலை குனிந்து நில்லடா!
செவிட்டில் அறைந்தார் போல் உள்ளது..
என்ன தான் சொன்னாலும் திருந்தவா போறாங்க.. ஐயையோ.. பாருங்க இங்கே கமெண்ட் டைப் பண்ணிட்டிருக்கேன்.. சீக்கிரம் போகணும் பக்கத்து தெருவில "முட்டாள் நாடும் மக்களும்" அப்படீன்னு ஒரு படம் சூட்டிங் நடக்குதாம்..
தமிழன்???
கருத்துரையிடுக