மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 9 ஜூலை, 2010

பாஸான கூட்டமுங்க... தொடர் பதிவுங்க..!




நண்பர் நாடோடி இலக்கியன் அவர்கள் (உங்க தலைப்பையே அடிச்சிட்டோமுல்ல... எப்பூடி...நம்ம பிட்டூடூடூ.........டூ) நான் இந்தியாவிற்கு விடுப்பில் சென்றிருந்த போது பள்ளி முதல் கல்லூரி வரையிலான தேர்வு பயம் குறித்து தொடர் எழுதும்படி அழைத்திருந்தார். இது எனக்கு முதல் தொடர்பதிவு உண்மையில் தேர்வு பயத்தைவிட இதை எழுதுவதற்குத்தான் பயமாய் இருக்கிறது.

நானாக எழுதும் பகிர்வில் மனதில்பட்டதை எழுதிவிடுவேன். தலைப்புக் கொடுத்து எழுதச் சொன்னால் பள்ளியில் தலைப்புக் கொடுத்து கட்டுரை எழுதுவது போலத்தான். எழுதுகிறேன்... படித்து வாத்தியார் மாதிரி மார்க் போடாமல் கொஞ்சம் நல்லாவே ஓட்டுப்போடுங்க... சரி தலைப்புக்குள்ள போவோமா...

நாம படிச்ச ஆரம்பப் பள்ளி கிராமத்துப் பிள்ளைங்களையே நம்பி நடத்தப்பட்ட பள்ளி. பள்ளி தலைமையாசிரியர் முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் நம்ம குடும்பத்தை பற்றி தெரியும். ஏன்னா, நம்ம குடும்பம் பெரியது. நாங்க மொத்தம் ஏழு பேருங்க. அக்கா, அண்ணன் எல்லாம் அதே பள்ளிதான்.

நம்ம ஆறாவது ஆளு, அதனால எல்லாருக்கும் நம்மளை நல்லா தெரியும். எனக்கு வந்த ஆசிரியர்கள் எல்லாம் நம்ம பேரை சொல்லி கூப்பிடுறது அரிது. கண்ணா (அண்ணன் பெயர்) என்றுதான் அழைப்பார்கள். நாமும் கொஞ்சம் நல்லா படிப்போமுங்க, அதனால மரியாதையானவங்க வரிசையில நாமக்கும் கொஞ்சம் இடமுண்டு. அப்ப தேர்வு பயமெல்லாம் இல்லைங்க, ஏன்னா எட்டாவது வரை தேர்ச்சி போடுற பள்ளி அது. அப்புறம் ஏங்க பயப்புடணும்?.

ஒன்பதாம் வகுப்புக்கு தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் நுழைவுத்தேர்வு எழுதி சேர்ந்தாச்சு. எங்க பள்ளியில் எட்டாம் வகுப்பு வரைக்கும் தேர்ச்சி போடுவதால் அடுத்த பள்ளிக்குப் போனதும் எல்லாருமே நல்ல அஸ்திவாரம் போட்டுதான் போவாங்க. எங்க ஊர்ல 10க்கு 9 அப்படித்தான்... அதுக்கு மேல போகமாட்டாங்க... அப்பதான் நமக்கு புளியக் கரைக்க ஆரம்பிச்சிருச்சு.

பள்ளிக்கூடத்துக்கு போன ரொம்பப்பேரு நல்லா படிக்கிறாங்க... ஆத்தாடி இவங்ககிட்ட நம்ம வண்டி ஓடாதோன்னு நினைச்சுதான் படிச்சேன். பரிட்சை மார்க்கை வகுப்பில் தலைமையாசிரியர் வந்து வாசித்து வீட்டுக்கு மார்க் அனுப்பி அதெல்லாம் பெரிய கதை... இது குறித்து மனசுல ஆரம்பத்துலயே பள்ளிப்பருவம்-III அப்படின்னு பதிவு போட்டிருக்கேன்.

இங்கிலீஷ் கொஞ்சமில்லை நிறையவே காலை வாரியது. அப்ப கண்டிப்பா 10க்கு 9ல நாம இருப்போமுன்னு நினைச்சு படிச்சேன். ஆனா பிட்டு பக்கமே போறதில்லை என்ன தெரியுமோ அது கூட நமக்கு தெரிஞ்சதையும் சேர்த்து எழுதிட்டு வந்திடுறது. இதை பெருமையா சொல்லலை நமக்கு அந்தளவுக்கு தைரியம் இல்லை அதான் உண்மை. எப்படியோ வண்டி ஓடி 10,11,12 தேறிடுச்சு. அதுக்கு அப்புறம் ஊருக்குள்ள தனி மரியாதைதான் போங்க.

நாமளும் காலேசு படிக்கணுமின்னு சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் சேர்ந்தாச்சு... வகுப்பு ஆங்கிலத்தில் எடுத்தார்கள், பரிட்சை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதலாம். நண்பர்கள் பெரும்பாலானோர் தமிழ்தான் நல்லது என்ற முடிவுக்கு வர, நானும் சிலரும் ஆங்கிலத்தில் எழுதிப் பார்ப்போம்... இந்த செமஸ்டர் ரிசல்டைப் பார்த்து மாறிக்கலாம் என்று முடிவெடுத்தோம். ஆனா, என்ன எழுதினோம் என்று எங்களுக்கே தெரியாது இருந்தும் கௌரவமான மதிப்பெண் பெற்றதால் ஆங்கிலத்துலேயே தொடர்ந்தோம். அங்குதான் எழுதும் ஆர்வம் வந்தது, அதனால் கையெழுத்துப் பிரதி அது இது என்று கல்லூரிக்குள் சுற்றியதால் பெரும்பாலான ஆசிரியர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

பரிட்சைக்கு போகும் வரை படித்தாலும் அறைக்குள் போனதும் எல்லாம் மறந்துவிடும் இருந்தும் எதாவது எழுதுவது வாடிக்கையாகிவிட்டது. நண்பர்கள் பரிட்சை என்றால் வேஷ்டியும் ஹவாய் செருப்புமாய் வருவார்கள் உடம்பிலும் செருப்பின் மேல் புறத்திலும் அவசர உதவிக்கு எழுத்துக்கள். நமக்கு அங்கயும் பயம்தான். இருந்தும் நல்ல மதிப்பெண் கிடைக்கும். முதல் மூன்று பேருக்குள் நாங்கள் மூவர் மாறிமாறி வருவோம். அதனால் கல்லூரியிலும் பரிட்சை பயம் போயாச்சு.

பிட்டே அடிக்கலைன்னு சொன்னா அது உண்மையில்ல, பெரிய திருவடி சார்கிட்ட ஆங்கிலத்திற்கு தனிப்பயிற்சி எடுத்தபோது முதல் நாள் ஒரு கட்டுரை (Essay) கொடுத்து அடுத்த நாள் எழுதிக் காண்பிக்கச் சொல்வாரு. அது எப்படிங்க முடியும்... நாம என்ன இங்கிலீஷ்காரங்களா..? மொட்டை மாடியில எழுதச் சொல்லிட்டு கீழ போயிடுவாரு... அப்ப நானும் என் நண்பனும் நோட்டை பார்த்து எழுதி நல்ல பேரு வாங்கிக்கிறதுதான்.

பிசிடிசிஏ முடிச்சிட்டு ரெண்டு மூணு கணிப்பொறி நிறுவனத்துல வேலை பார்த்த்துட்டு தனியா கணிப்பொறி நிறுவனம் அமைத்தப்ப முதுகலை பட்டம் படிக்கலாம் என்று ஆசைப்பட்டதன் விளைவு எம்.சி.ஏ. சேர்ந்தாச்சு.. முதல் செமஸ்டர்ல ஒரு பாடம் தவிர எல்லாத்துலயும் ஊத்திக்கிச்சு. முதல் அரியர் அதுவும் ஒண்ணுதவிர எல்லாத்துலயும்... தேவையில்லாத வேலையோ என்று நினைக்க வைத்தாலும் நம்ம நண்பர்கள் சிலர் இரண்டாம் ஆண்டில் இருந்தார்கள். அவர்கள் கொடுத்த டிப்ஸ்படி தேர்வெழுதி ஒரு வழியா படிச்சு 70%க்கு மேல வாங்கி வெளிய வந்துட்டோம்.

எப்படியோ நாம படிச்ச கதையை சொல்லியாச்சு... நீங்களும் படிச்சாச்சு... என்ன உங்க படிப்புக் கதையையும் சொல்லலாமே... என்ன நண்பர்களே எல்லாரும் ரெடியாயிட்டிங்க போல... ம்... ஆரம்பமாகட்டும் உங்கள் அதிரடி.


(மறக்காம பிட் ... சாரி வாக்களியுங்கள்... மற்றவர்களும் தொடர வாய்ப்பாய் இருக்கும் அல்லவா..?)


நட்புடன்,
'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

soundr சொன்னது…

//அப்ப தேர்வு பயமெல்லாம் இல்லைங்க, ஏன்னா எட்டாவது வரை தேர்ச்சி போடுற பள்ளி அது//

:)

http://vaarththai.wordpress.com

மங்குனி அமைச்சர் சொன்னது…

அது எப்படிங்க முடியும்... நாம என்ன இங்கிலீஷ்காரங்களா..?////


அப்படி நறுக்குன்னு கேளுங்க

'பரிவை' சே.குமார் சொன்னது…

@Chidambaram Soundrapandian said...
//அப்ப தேர்வு பயமெல்லாம் இல்லைங்க, ஏன்னா எட்டாவது வரை தேர்ச்சி போடுற பள்ளி அது//

ஆமாங்க... முதல் வருகைக்கு நன்றிங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@மங்குனி அமைச்சர் said...
////அது எப்படிங்க முடியும்... நாம என்ன இங்கிலீஷ்காரங்களா..?//

அப்படி நறுக்குன்னு கேளுங்க//

ஆமா... நாங்க சொல்லிப்புட்டமுல்ல... என்ன பயமுன்னேன் அமைச்சரே..!

ஊக்கமிடும் பின்னூட்டத்திற்கு நன்றிங்க.

க.பாலாசி சொன்னது…

இடுகை முழுவதும் நல்ல சுவாரசியம் அப்பிக்கொண்டுள்ளது..

வாத்தியாரு கீழப்போனப்பிறவு அடிக்கறதுக்கு பேரு பிட்டுங்களா? வாத்தியாரு கண்ணுல மண்ணத்தூவிட்டு அவருக்கு நேராவே தெரியாம அடிக்கறதுதாங்க பிட்டு..ஹய்யோ..ஹய்யோ...

குடும்பமே ஒரே ஸ்கூல்ல படிக்கிறது நல்லாயிருக்காதே... காடு பதுங்க முடியாது.. அடுத்த நாள் அண்ணங்காரன் வீட்லபோயி வத்தி வச்சிடுவான்... இந்த மாதிரி நிறைய இருக்குங்க...

Thenammai Lakshmanan சொன்னது…

//அப்ப தேர்வு பயமெல்லாம் இல்லைங்க, ஏன்னா எட்டாவது வரை தேர்ச்சி போடுற பள்ளி அது//

ஹிஹிஹி அப்பிடியா..

Unknown சொன்னது…

காப்பி அடிச்சு படிக்கிறதெல்லாம் நம்ம மாதிரி தில்லான ஆளுங்க செய்யிறது ...

'பரிவை' சே.குமார் சொன்னது…

@க.பாலாசி said...
//இடுகை முழுவதும் நல்ல சுவாரசியம் அப்பிக்கொண்டுள்ளது.. //

ரசித்துப் படித்தமைக்கு நன்றி.

என்னங்க பண்றது... எங்க ஊருக்கு அருகில் இருந்த ஒரே பள்ளி. அதனால் குடும்பம் மட்டுமல்ல ஊரே அங்கதான் கல்வி கற்றது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@தேனம்மை said...
//அப்ப தேர்வு பயமெல்லாம் இல்லைங்க, ஏன்னா எட்டாவது வரை தேர்ச்சி போடுற பள்ளி அது//

ஹிஹிஹி அப்பிடியா..//


ஆமா உண்மைங்க... யாரையும் பெயிலாக்கியதில்லை...
ரசித்து படித்து சிரித்து மகிழ்ந்தமைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

@கே.ஆர்.பி.செந்தில் said...
//காப்பி அடிச்சு படிக்கிறதெல்லாம் நம்ம மாதிரி தில்லான ஆளுங்க செய்யிறது ...//

அது சரி... தில்லா சொல்லிப்புட்டீங்க....

நமக்கு எப்பவுமே தெனாலி நிலமைதான்.

Unknown சொன்னது…

Maanavaparuvam eppadi irukum endrum bit adipathai cut adipathai maravaamal ninaivukollum vitham arumai.
Dr.R.Senthilkumar.
Devakottai

'பரிவை' சே.குமார் சொன்னது…

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செந்தில்.