மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : ஒரு சிறு இசை

ஒரு சிறு இசை...

வண்ணதாசன் இசைத்திருக்கும் அழகான புல்லாங்குழல் இசைதான் இந்தச் சிறுகதைத் தொகுப்பு. கவிஞராய் அவர் எழுதும் கவிதைகள், சின்னச் சின்னச் செய்திகள் என முகநூலில் வாசித்திருக்கிறேன்... ரசிக்க வைக்கும் எழுத்து அது... ஆனால் சிறுகதை வாசித்ததில்லை... இதில் இருக்கும் எழுத்தோ அழுத்தம் கொடுக்கும் எழுத்து... ஆர்ப்பாட்டமில்லாத அன்பைச் சொல்லும் எழுத்து.

புதன், 8 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது : கொரோனாவும் கதைகளும் ஒரு உதவியும்

உலகெங்கும் தலைவிரித்தாடும் கொரோனா வைரஸால் அடுத்து என்னாகுமோ என்ற பயம் மனசுக்குள் எப்போதும் மையம் கொண்டிருக்கிறது... வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் தற்போதைய சூழலில்... ஆனால் கொரோனா சுத்தமாக அழிகிறதோ அல்லது அழிக்கப்படுகிறதோ அல்லது மனித இனம் படும் பாட்டைப் பார்த்து அதுவாகவே தொலைந்து போகிறதோ... எது எப்படியோ இந்தப் பீதியிலிருந்து நாமெல்லாம் இறையருளால் மீண்டு வரும் போது மிகப்பெரிய பொருளாதாரச் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்... எகிறும் விலைவாசி, வேலை இன்மை, பசி, பஞ்சம், பட்டினி என மிகப்பெரிய சுழலில் மாட்ட வேண்டியிருக்கும்... அப்போதுதான் உண்மையான உயிர்ப் பிரச்சினை மேலோங்கும்... அதை நினைக்கும் போதுதான் இன்னும் மனசுக்குள் வருத்தமும் அழுத்தமும் பயமும் கூடுகிறது.

திங்கள், 6 ஏப்ரல், 2020

மனசு பேசுகிறது: கொரோனாவும் முகநூலும் சினிமாவும்

கொரோனா வைரஸ் சீனாவால் திட்டமிட்டு ...

கொரோனாவின் கோரத்தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் எல்லாருமே பாதுகாப்பாய் இருங்கள். அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிருங்கள். அசைவம் சாப்பிடவில்லை என்றால் செத்துவிடுவேன் எனக் கடைகளில் காத்து நின்று நோயை விலை கொடுத்து வாங்காதீர்கள். அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதை விடுத்து அவர்கள் கேட்டுக் கொள்வதைப் போல் வீட்டுக்குள் இருங்கள்... உங்கள் உயிர் மட்டுமின்றி வீட்டார்.... அக்கம் பக்கத்தாரின் உயிரும் முக்கியம் என்பதை உணருங்கள்.

சனி, 4 ஏப்ரல், 2020

மனசின் பக்கம் : மதம் மறந்து மனிதம் பேணுங்கள்

மதம் பிடித்து ஆடும் மனிதர்களைப் பற்றி எழுதும் எண்ணத்துடன்தான் அமர்ந்தேன். இவர்களைப் பற்றி என்ன எழுதுவது என்ற அயற்சியுடன் எழுதும் மனநிலையும் அற்றுப் போய் அமர்ந்தவன் பஹத் பாசில் நடித்த டிரான்ஸ் படத்தைப் பார்க்கலாமென ஆரம்பித்தால் ஏனோ படத்துடன் ஒட்ட முடியவில்லை... இவ்வளவுக்கு பஹத் என்னும் நடிப்பு ராட்சஸனின் இதில் அடித்து ஆடியிருக்கிறான் என்று எல்லாருமே சிலாகித்து எழுதியிருந்தும் மனநிலை ஒட்டவில்லை என்றால் அது எப்படிப்பட்ட படமாகினும் நம்மை ஈர்க்காது.

சனி, 28 மார்ச், 2020

மனசு பேசுகிறது : எழுதும் மனநிலையா இருக்கிறது..?

இரண்டு நாட்கள் இரவு நேர ஊரடங்கு என்றாலும் பகலிலும் வெளியில் செல்ல மனமில்லை... அறையில்தான்... பழனி ஐயா கொடுத்த வண்ணதாசனின் ஒரு சிறு இசை வாசித்து முடித்தாச்சு, ட்ரைவிங் லைசென்ஸ் என்னும் மலையாளப் படம், ஒரு சிறுகதை,  ஆரம்பித்திருக்கும் புதிய நாவலில் அடுத்த பாகம் என ஏதாவது ஒன்றை எழுதலாம் என்ற எண்ணம் மனதளவிலேயே நிற்கிறது. நிகழ்வுகளின் தீவிரம் இன்னும் கூடுமோ என்ற அச்சமே மனமெல்லாம் நிறைந்து நிற்கிறது.

சனி, 21 மார்ச், 2020

மனசு பேசுகிறது : ஆசான் அல்ல அப்பா


பழனி ஐயா...

இந்தப் பெயர் என்னுடன் இறுதிவரை பயணிக்கும் பெயர்... அவரின் மாணவர்களில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர்.