மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 22 நவம்பர், 2020

மனசு பேசுகிறது : எதிரொலி முதல் கறுப்பி வரை

Bharatwriters.com என்னும் தளத்தில் எனது இரண்டாவது சிறுகதை வெளியாகியிருக்கிறது.  Mini Stories  என்னும் தலைப்பின் கீழ் இருக்கும் ஐந்து கதைகளில் ஐந்தாவது கதையாக வெளியாகியிருக்கிறது. 'எதிரொலி' என்னும் தலைப்பில் இருக்கும் கதையை வாசித்து, மறக்காமல் விருப்பக்குறி இடுங்கள்... வரும் விருப்பக்குறிகளைப் பொறுத்து அந்தக் கதைக்கான சன்மானம் அமையும்...

இப்பத்தான் எழுதும் கதைக்கு ஏதோ பணம் கொடுக்கிறேன்னு சொல்றாங்க... அது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது என முன்பே ஒரு பதிவில் சொல்லியிருந்தேன்... அதேதான் இப்பவும் சொல்றேன்... என்றாலும் தனியாக இவ்வளவு தொகை வந்திருக்கிறது. இந்த வரம்பை அடைந்தால் தாங்கள் பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம்... அதில் 18% வரி பிடித்தம் செய்தது போக மிச்சம் கிடைக்கும் முதல் கதை வெளியாகி ஒரு வாரத்துக்குப்பின் கதைக்கு கிடைத்த மதிப்பெண்கள் மற்றும் பண விபரத்தை தளத்தில் பகிர்ந்த பின் எனக்கும் மின்னஞ்சல் செய்திருக்கிறார்கள்.  முதல் கதைக்கு 2000 ரூபாய் என அதில் சொல்லியிருந்தார்கள். குறைந்தது 3000 கணக்கில் வந்தால் எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். சிறுகதையை வாசிக்க கீழிருக்கும் இணைப்பைச் சுட்டுங்கள்.

எதிரொலி

மேசானில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது... அதில் கூட கிட்டத்தட்ட நூறு ரூபாய் உங்கள் கணக்கில் போடப்பட்டிருக்கு என்பதாய்ச் சொல்லியிருக்கிறார்கள்... எனக்கு அமேசான் கணக்கு வழக்குப் புரியவில்லை... அதில் போட்ட ஒரு நாவல் மற்றும் கவிதையைத் தவிர வேறொன்றும் ஏற்றவில்லை... ஏனோ அதில் எப்படித் தொடர்வதென யோசனையுடனேயே கழிகிறது. அமேசான் விபரம் தெரிந்த ஜோதிஜி அண்ணன்  போன்றோர் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

ஹானா இணைய இதழில் தீபாவளிக்கென மறக்க முடியாத தீபாவாளி என்றொரு போட்டி... சரி எழுதலாமே என அதற்க்கும் எழுதி அனுப்பினேன்... விழும் விருப்பக்குறியைப் பொறுத்துத்தான் வெற்றியாளர் தேர்வு என்பது இன்று தளத்தின் உரிமையாளர் சகோதரி. திருமதி கோவிந்த் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் மூலமே தெரிந்து கொண்டேன்... முடிந்தவர்கள் அங்கு சென்று வாசித்து தங்கள் கருத்துக்களைச் சொன்னால் மகிழ்வாக இருக்கும்... செய்வீர்களா...?

மறக்க முடியாத தீபாவளி

மிழ்டாக்ஸ் இணைய தளத்தில் தொடர்ந்து எழுதும் வாய்ப்புக் கிடைத்திருப்பது உண்மையில் மகிழ்ச்சியே... பிக்பாஸ் எழுத ஆரம்பித்து அதற்கென தனித்திரி உருவாக்கிப் பகிரும் வேளையில் இங்கு எழுதிய கட்டுரைகள், கவிதைகள் என வாங்கிப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இணையாசிரியரான சகோதரர் கவிஞர் சிவமணி. பிக்பாஸ் பதிவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எழுதுவதற்கு அதொரு நல்ல வாய்ப்பு என்பதால் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். விருப்பமிருந்தால் பிக்பாஸ் பதிவுகளை வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

பிக்பாஸ்

தேன்சிட்டு தீபாவளி சிறப்பு மலரில் எனது சிறுகதையான 'அப்பாவுக்காக தீபாவளி' வெளியாகியிருக்கிறது. கதை கேட்டு வாங்கி, அதற்கு தனது இதழில் இடமும் கொடுத்த சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.

தேன்சிட்டு தீபாவளி மலர்

றுப்பி பதினேழு பகுதிகளும் முடிவடைந்த நிலையில் அடுத்து என்ன தொடங்கலாம் என தசரதன் கேட்டதுடன் கறுப்பிக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்றும் சொன்னார். அங்கு கருத்து இடும் வசதி முடக்கப்பட்டிருப்பதால் அது குறித்தான கருத்தை அறிய முடியாமல் போனது என்றாலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது 2000 என்றிருந்தது மகிழ்வைக் கொடுத்தது. அடுத்து ஏதாவது தொடங்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. பேச்சின் போது வேரும் விழுதுகளும் நாவலை புத்தகம் ஆக்கும் பணியைத் தொடங்கிவிடலாம் அண்ணா என்றார். விரைவில் வேரும் விழுதுகளும் நாவல் வெளிவரும் என்று நம்புகிறோம். என் மீது நம்பிக்கை வைத்து நகரும் தசரதனுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

எதிரொலி கதை அப்பிடித்தேன்.  அருமை குமார்.  மனைவிக்கு பாடம் அந்நேரத்தில் தானாகக் கிடைத்திருக்கிறது.

தேன்சிட்டு கதையும் அருமை.  ராதிகா நடுவில் ராதாவாகிப் போனாள்!  கதை நல்ல கதை.  ஆனால் இறந்தவர் வீட்டில் பண்டிகை கொண்டாடாதது மூட நம்பிக்கை என்று சொல்ல மாட்டேன்.  அவரவர் மனோபாவம்.  இங்கு அவர் தந்தைக்காற்றும் கடமை.

சஹானா கட்டுரையும் வாசித்தேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் சஹானா வில் கருத்து போட்டுள்ளேன் ஆனாஅல் தாமதமாகிவிட்டது சாரி குமார்.

கறுப்பி முடிந்துவிட்டதா...விட்டதிலிருந்து தொடர்ந்து வாசித்து முடிக்கிறேன் குமார்.

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அடுத்தடுத்து தொடர் சாதனைகள். இலக்குகள்...மகிழ்ச்சி, வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கருத்துரை வந்ததா குமார்?

கீதா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதுபோல் அனைத்திலும் ஈடுபடுத்திக் கொள்வது தன்னை மெருகேற்க வைக்கும் குமார்...! பாராட்டுகள்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள்