கறுப்பிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தசரதன் சொன்னார்... வரவேற்பு இருக்கு... இல்லை என்பது முக்கியமல்ல... சில நிகழ்வுகளை வைத்துப் பிண்ணப்பட்ட ஒரு கதைதான் அது... அதில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நிகழ்கால மனிதர்களே...
யாவரும்.காம் நடத்திய க.நா.சு. நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல், இரண்டாம் இடம் என்றெல்லாம் இல்லாமல் மொத்தம் பத்துக்கதைகள் தேர்வு செய்யப்பட்டன... அதில் எனது கதையும் ஒன்று.... கொரோனாவை வைத்து எழுத வேண்டுமெனச் சொன்ன போட்டி இது... கடைசி நாளில் எழுதி, கடைசி நேரத்தில் அனுப்பப்பட்ட கதை அது... யாவரும்.காம் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சி.
போன முறை நூறு நாளும் பிக்பாஸ் எழுதுனீங்க... இந்த முறை எழுதலையா என்ற கேள்வி பலரிடம் இருந்து வந்தாச்சு... இதுவரை பார்த்ததில் எல்லாருமே கஞ்சிக்கு கஷ்டப்பட்டு வந்த பயலுகன்னு அழுது சொல்லுங்க... கொரோனாவுல வீட்டுக்குள்ள இருக்கவங்க கொரவளையை இறுக்குற மாதிரி இருக்கனும்ன்னு பிக்காளிபாஸ் சொல்லிட்டாரு போல... ஆளாளுக்கு அள்ளி விட்டானுக... வேல்முருகன் தவிர அம்புட்டுப் பேரும் நெய்யில போட்ட பாதம் மாதிரி இருந்துக்கிட்டு பச்சத்தண்ணி குடிச்சி வளந்த கதை சொன்னப்ப பச்சையாத் திட்டத் தோணுச்சு... அப்ப வாழ்க்கை பூரம் கஷ்டப்படுற நம்மள மாதிரி ஆளுங்கள்ல்லாம் தங்க ஸ்பூன்ல சாப்பிடுறோம் போல... அது ஒருத்தன் சூப்பர் சிங்கர் வின்னராம்... ஊர்ல இருந்து பெட்டி படுக்கைய எடுத்துக்கிட்டு அம்மாவோட சென்னைக்கு வந்து தெருவுல நின்னுக்கிட்டு போனுல வீடு தேடி உடனே புடிச்சானாம்... அடேய் உங்க கதைக்கு ஒரு அளவில்லையான்னு தோணுச்சு... மய்யம் நல்லாப் பேசுமேன்னு சனிக்கிழமை பார்த்தா, அவரும் ஆளில்லா டீக்கடையில டீ ஆத்தும் போது வெளங்கலைதான்.... வாரம் ஒருநாளாச்சும் எழுதுங்கன்னு சொல்றாங்க... இப்ப எழுதும் எண்ணமில்லை...
இப்ப இருக்க பதினாறுல ரம்யா பாண்டியன்தான் நல்ல மனசோட விளையாடுது... சனம் அம்புட்டுச் சனத்தோடயும் மல்லுக்கட்டுது... அனிதாவையெல்லாம் எப்படி நியூஸ் ரீடராக்குனானுங்கன்னு தெரியல... தொறந்த வாயை மூட பிக்பாஸ்தான் வரணும் போல.... சுரேஷ் செம வில்லன்... ஷிவானி, கேப்பிரியாவெல்லாம் அழகுப் பொம்மைகள்... ரியோ நானே நாயகன் என்ற எண்ணத்துடன் அலைகிறான்... ஆரி அட்வைஸில் கொல்லுறான்... வேல்முருகன் பாடிக்கிட்டாச்சிம் இருந்திருப்பாப்புல... படாதபாடு படுறார்... நிஷா கடுப்படிக்கிது... ஆஜீத் மொள்ளமாரித்தனத்தை முழுவதுமாக மறைத்து வைத்திருக்கிறான்... பாலா உலகத்துல நான் மட்டுமே நல்லவன்னு சொல்லிக்கிட்டுத் திரியிறான்... ரேகா மேக்கப் போடவே நேரம் பத்தலை... ரமேஷ் எதார்த்தமாய் நகர்வது போல் தெரிகிறது... அப்புறம் மத்ததெல்லாம் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில்தான்... அம்புட்டுத்தான்.
ஒரு நாவலை, எழுத்தாளர் எழுதி இன்னும் திருத்தாத, பதிப்புக்குச் செல்லாத நிலையில் வாசித்தல் என்பது எப்படிப்பட்ட மனநிலையைக் கொடுக்கும் என்பதை எனக்குக் காட்டியது எழுத்தாளர் ஒருவரின் 'சட்டைக்காரி'. தலைப்பைச் சொல்லிட்டீங்க எழுத்தாளர்...? அது புத்தகமாய் வரும்போது தெரியட்டுமே... அம்பதுகளுக்குள் நம்மை அழைத்துச் செல்லும் வடசென்னை எழுத்து... சென்னையும் அதன் சுற்றுப் புறமும் கண் முன்னே காட்சியாய்.... கதையில் வாழும் பாத்திரங்களுடன் நம்மையும் அமர வைத்து கதை சொல்லும் எழுத்து... அருமை... அருமையானதொரு நாவலை இப்படி வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது எப்படின்னு யோசிக்கத்தான் சொல்லுது... அருமை... அருமை.... புத்தகம் வெளிவந்து சக்கைப் போடு போடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...
-'பரிவை' சே.குமார்.
4 எண்ணங்கள்:
அருமை... அனைத்தையும் சுருக்கமாய்...
எண்ணங்களின் தொகுப்பு நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கதம்பம். பலவற்றைக் கூறும் விதம் அருமை.
அருமை
கருத்துரையிடுக