மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

மனசின் பக்கம் : குலசாமி காத்தாயி

வெட்டிபிளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டியின் முடிவுகள் தாமதம் ஆனாலும் நேற்று வெளியாகியிருக்கிறது. இந்த முறை நான் மிகுந்த சிரத்தையிலான கதையை எழுதவில்லை.... எழுதும் சூழலும் இல்லை... அப்பாவை மையப்படுத்தி எழுத வேண்டும் என்றதால் நானும் அப்பாவை மையப்படுத்தி ஒரு கதை எழுதினேன்... அந்தச் சமயத்தில் வீடு வேலை, பணச் சிக்கல் என நிறைய விஷயங்களால் சிதறடிக்கப்பட்ட மனசு ஒட்டாமல் இருந்த நிலையில்தான் கதை எழுதினேன். கதை குறித்து சொன்ன போது கூட நிஷா அக்கா இப்படி ஒரு கரு எதற்காக எடுத்தாய் என்றும் சொன்னார்கள். நான் எழுதி அனுப்பிய பிறகு கூட அது குறித்தான எண்ணமெல்லாம் இருக்கவில்லை. சென்ற முறை வெட்டிபிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் எனது 'நினைவின் ஆணிவேர்' சிறுகதை முதல் பரிசு பெற்றிருந்தது. இந்த முறை எழுதும் எண்ணமில்லாவிட்டாலும் அனுப்புவோமே என எழுதியதுதான் 'குலசாமி'. 

அண்ணன் கில்லர்ஜி அவர்கள் ஒரு கதை எழுதியிருந்தார்கள்.... மிகவும் நல்ல கதை... அவர் சொல்லாமலே அவரின் எழுத்தை வைத்தே கதையை பிடித்தேன். அவர் கதை பகிரப்பட்ட பத்துப் பதினைந்து நாளில் நான் அனுப்பினேன். என் கதையை அவர் கண்டுபிடித்து கேட்பார் என்று பார்த்தேன்.... அவர் கேட்கலை... நானும் சொல்லலை. அவரின் கதைக்கு பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்... ஒருவேளை அவர்கள் சொல்லிய வார்த்தைகள் கணக்கைவிட அதிகமாக இருந்ததால் தேர்வாகவில்லையோ என்னவோ...? எனக்கு மிகவும் பிடித்திருந்த கதை அது. என்னோட 'குலசாமி' ஆறுதல் பரிசுக்கு தேர்வாகியிருக்கு.  என்னோட கதைகளும் மற்றவர்களை கவரும் விதமாக இருப்பதில் சந்தோஷமே... இன்னும் சிறப்பாய் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுக்கின்றன இது போன்ற தருணங்கள்... வெட்டிபிளாக்கர்ஸ் குழுமத்துக்கும் நடுவர்குழு உறுப்பினர்களுக்கும் எனது நன்றி. கதையை விரைவில் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

******
சிகரம் 3 என்ற தளத்தில் எழுதும் சிகரம் பாரதி அவர்கள் சிகரம் வலைமின்னிதழ் என்ற பகிர்வை அவ்வப்போது பகிர்வார். அதில் அவரைக் கவர்ந்த பதிவுகளை கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தரம் பிரித்து அவற்றின் இணைப்பைக் கொடுத்து பகிர்வார். சொல்லப் போனால் நமது வலைச்சரம் போன்றதொரு பணி... வலைச்சரம் மீண்டு(ம்) வர வேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகம்... அதற்காக தமிழ்வாசியிடம் கூட பேசியிருக்கிறேன்... சரி விஷயத்துக்கு வருவோம்... சிகரம் 3 வலைமின்னிதழ் இந்த வார பகிர்வில் அக்டோபர் (1-15) அகல் மின்னிதழில் வெளிவந்து இங்கு பகிர்ந்து கொண்ட காத்தாயி சிறுகதைக்கு இடமளித்திருக்கிறார். சிறுகதையில் என்னுடன் 'சும்மா' வலையில் நல்லா எழுதும் தேனக்காவும் இடம் பிடித்திருக்கிறார். கவிதைகள் கட்டுரைகளில் எல்லாம் நான் விரும்பி வாசிக்கும் பதிவர்கள்... அவர்களுடன் எனக்கும் இடமளித்த பாரதி சாருக்கு நன்றி.

******
ரலாற்று புதினங்கள் வாசிப்பு அனுபவம் நல்லாத்தான் இருக்கு... அதுவும் இது குறித்து முகநூலில் தமிழ்வாசி, தினேஷ், கணேஷ்பாலா அண்ணா, நிஷா அக்கா மற்றும் முகநூல் உறவுகள் உள்ளிட்ட பிரபலங்களுடன் கருத்துப் பரிமாற்றம் என்பது நிறைய அறியத் தருகிறது. வரலாற்று புதினங்கள் பின்னால் போவதால் ஒன்றும் ஆகிவிடாது... உன் தேடல்களும் அது குறித்த விவாதங்களும் கற்பனை வரலாற்றில் சுழன்று கொண்டிருப்பதில் என்ன லாபம்..? உண்மையான வரலாற்றுத் தேடலில் இறங்கு என்றும் அது குறித்த நிறைய விளக்கங்களையும் கேள்விகளையும் முன் வைத்தான் என் நண்பன் தமிழ்க்காதலன்... உண்மைதான்... புதினங்கள் சுவைக்காக நாயகிகளை அதிகமாக்கி நகர்வலம் வருகின்றன... வரலாறுகளைத் தேடிப்படித்தால் என்ன என்ற எண்ணம் வந்திருக்கிறது. இங்கு எப்படி தேடுவது...? இணையத்தில் அதற்கான சாத்தியங்கள் இருக்கா...? என்ற யோசனையும் ஓடுகிறது.

******
நேற்று (15/10/2016) மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள்... அவரை நினைவில் நிறுத்தி... அதே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் அன்பின் ஐயா வலைப்பதிவர்களில் வித்தியாசமான எழுத்தால் கவரும் கரந்தை திரு. ஜெயக்குமார் அவர்களுக்கும் அன்புத் தம்பியும் கலியுகத்தில் கவிதையால் கலக்குபவருமான தினேஷ் குமார் அவர்களுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். முகநூலில் நேற்றே வாழ்த்தியாச்சு என்றாலும் 'மனசார' வாழ்த்த இங்கும் பகிர்ந்தாச்சு. 

-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

நிறைய விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது..

வாழ்க நலம்!..

ஸ்ரீராம். சொன்னது…

ஆறுதல் பரிசுக்கு வாழ்த்துகள். பழைய பரிசுப்பணம் வந்து விட்டதா?!!

ராமலக்ஷ்மி சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துகள் குமார்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
பழைய பரிசுத்தொகையா... அது வரவேயில்லை
போட்டிகளுக்கு எழுதும் எண்ணமில்லாமல் இருந்தது... நண்பர்களின் வற்புறுத்தலுக்காகவே எழுதினேன்...
பரிசைப் பற்றி யோசிப்பதில்லை.... வந்தால் வரட்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Yarlpavanan சொன்னது…

வாழ்த்துகள்
தொடர்ந்து வெற்றி நடை போடுங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

KILLERGEE Devakottai சொன்னது…

நண்பருக்கு நான் இந்தக்கதையை படித்து விட்டேன் ஆனால் உங்களுடையது என்று கணிக்கவில்லை இன்று மீண்டும் படிக்கும் பொழுது உங்களது நடை புரிந்து விட்டது
பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துகள்

எனது கதை பரிசு பெறவில்லை ஆனால் அந்தக்கதையில் எனக்கு மனதிருப்தி கிடைத்தது உண்மை இந்தக்கதையை எழுத தூண்டிய தங்களுக்கு நன்றி.

நண்பர் திரு. கரந்தையார் அவர்களுக்கும், திரு. தினேஷ்குமார் அவர்களுக்கும் எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Mrs.Mano Saminathan சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள் குமார்!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார்.