வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராஜா மந்திரியெல்லாம் எல்லாரும் பார்த்திருப்பீங்க... விரிவா எழுதுறதுக்கு ஒண்ணுமில்லை... ராஜா மந்திரி அண்ணன் தம்பி கதை அண்ணனின் காதல் பிரச்சினையாக, தம்பியின் காதலியை அண்ணனுக்கு நிச்சயம் பண்ணி விடுகிறார்கள்... அண்ணனின் காதலி மீண்டும் வந்தாளா? தம்பியின் காதல் என்னாச்சு..? என்பதை நகைச்சுவையாய் சொல்கிறேன் என.... இழுத்து முடிக்கிறார்கள். சும்மா ஜாலிக்காக பார்க்கலாம்... மகன்களின் பாசத்தைப் பார்த்து கண்ணீர் விடும் தந்தை நம் கண்களில் எரிச்சலை புகுத்துகிறார். மெட்ராஸ் படத்தில் அறிவழகனாக வாழ்ந்த கலையரசனா இது என்று கேக்க வைத்திவிடுகிறார் நாயகன்.... ஜெய் நடித்திருக்கலாம் எனத் தோன்ற வைத்துவிட்டார். அண்ணனாக வரும் கருணாகரன் கலக்கியிருக்கிறார். மொத்தத்தில் பொழுது போகலை... கொஞ்சம் நகைச்சுவை இருந்தாப் போதும் என்று நினைப்பவர்களுக்கான படம்.
வே.வ.வெ... உவ்வே... சூரியும் ரோபோவும் காப்பாற்றியிருக்கிறார்கள். புஷ்பா புருஷன் சூரியை... 'அன்னைக்கு காலையில பொழுது கொக்கரக்கோன்னு விடிஞ்சிச்சா...' என்று அடித்து ஆடும் காட்சியில் ரோபோ தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார். மற்றபடி விஷ்ணு விஷால் போலீஸ் ஸ்டேசனில் காதலியை மிரட்டுவது, 500 கோடி விவகாரம் எல்லாமே ஆவ்... இதுக்கு மேல சொல்ல ஒண்ணுமில்லை... லாஜிக் பார்க்காமல், கதை என்னன்னு யோசிக்காமல் பார்க்கிற படங்களின் வரிசையில் இந்த உவ்வவ்வே.. சேச்சே... வே.வ.வெ.
இறைவி... எனக்குப் பிடித்த நடிக்கத் தெரிந்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் ரொம்பப் பிடித்த நடிப்பு ராட்சஸி அஞ்சலியும் நடித்த படம். அவர்களுக்காகவே பார்த்த படம். வயசு காலத்தில் மனைவியை மதிக்காத ராதாரவி, அவர் கோமாவில் விழுந்த பின் உருகி உருகி பார்த்துக் கொள்கிறார். அவரின் மூத்த மகன் எஸ்.ஜே.சூர்யா, இயக்கிய ஒருபடம் வெளிவருவதில் பிரச்சினை எனவே குடிக்கு அடிமையாகி பிரச்சினைகளை இழுத்துக் கொள்கிறார். அன்பான மனைவி, அழகான குழந்தை இருந்தும் அவர்களை நேசிக்கும் மனிதராக இருந்தாலும் குடியின் பிடியில் கிடக்கிறார். இரண்டாவது மகன் பாபி சிம்ஹா கல்லூரியில் படித்துக் கொண்டு சிலை திருட்டில் ஈடுபட்டு வருகிறார். இவர்களின் குடும்பத்தில் ஒருவனாக, பாபி சிம்ஹாவின் சிலை திருட்டில் உதவுபவனாக விஜய் சேதுபதி என பயணிக்கிறது கதை.
இதில் பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் விஜய் சேதுபதி அப்படியான பெண் ஒருத்தியின் அன்பினால் அவளை திருமணம் செய்து கொள்ள நினைக்க அவள் மறுத்து விடுகிறாள். அதன் பின்னர் சித்தப்பா பேசி முடிக்கும் பெண்ணான அஞ்சலியை திருமணம் செய்து கொள்கிறார். அஞ்சலி மீது பாபி சிம்ஹாவுக்கு ஆசை... அதற்காக விஜய் சேதுபதியை ஒரு சிலை திருட்டில் வைத்து போலீசில் மாட்டிவிடுகிறார். பாபி சிம்ஹாவிடம் இருந்து தப்பிக்க எங்கு செல்கிறேன் என்று சொல்லாமலே அஞ்சலி குழந்தையுடன் கிளம்பி விடுகிறார். குடியில் இருந்து மீண்ட சூர்யா, விவாகரத்துப்பெற்ற தன் மனைவிக்கு நடக்க இருக்கும் இரண்டாம் திருமணத்தைத் தடுத்து மீண்டும் அவளுடன் வாழ நினைக்கிறார் இப்படி பயணிக்கும் கதையின் முடிவு வித்தியாசமாய்...
ஒரு குழந்தையின் தாயாக அஞ்சலி, தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விஜய் சேதுபதி தனி ஓருவனாய் ஜொலிப்பதை விடுத்து இரண்டு மூன்று நாயகர்கள் கதையில் வருவதை தவிர்க்கலாம் என்றாலும் அவருக்கான இடத்தை எப்பவும் போல் நடிப்பால் நிறைத்திருக்கிறார். பாபி சிம்ஹா பரவாயில்லை. 'இருக்கு... இல்லை... இருக்க மாதிரி இருக்கு... இல்லாத மாதிரியும் இருக்கு...' என்றெல்லாம் பேசி நம்மைக் கொலை பண்ணின சூர்யாதான் இதில் செண்டம் அடித்திருக்கிறார். குடிகாரனாக படம் முழுவது பட்டையை கிளப்பியிருக்கிறார். இறுதிக் காட்சியில் மனைவியிடம் குடிகாரன் போல் கேவலமாகப் பேசும் போது நெஞ்சில் நிற்கிறார்.
மொத்தத்தில் இறைவி... மெதுவாக நகர்ந்தாலும் நல்லபடம்தான்... பார்க்கலாம்.
தனிக்காட்டு ராஜா... ரஜினி, ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா நடித்த படம்... விவசாயிகளை ஏமாற்றி பிழைக்கும் பணக்கார வர்க்கத்தை எதிர்க்கும் இளைஞனின் கதை. விஜயகுமாரைக் கொன்ற வழக்கில் சிறை செல்லும் ரஜினியைக் காப்பாற்ற அவரின் காதலி ஸ்ரீதேவி, ஜெய்சங்கரின் மனைவி ஆகிறார். ஜெய்சங்கருக்கும் ரஜினிக்கும் பிரச்சினை... ஜெய்சங்கரின் தம்பி ராஜேஸ்க்கு ரஜினியின் தங்கை மீது காதல்... பொட்டுக்கட்டி தேவதாசியாக இருப்பவரின் தங்கை ஸ்ரீப்ரியாவையும் அந்தத் தொழிலில் இழுக்க நினைக்கும் மனிதர்கள் மத்தியில் அவளைக் காப்பாற்றி மனைவி ஆக்கிக் கொள்கிறார் ரஜினி. விவசாயிகள் பிரச்சினை தீர்ந்ததா..?ஸ்ரீதேவியின் நிலை என்ன..? ரஜினியின் தங்கை ஜெய்சங்கர் வீட்டில் வாழ்ந்தாரா..? வில்லன்களின் சூழ்ச்சியை முறியடித்தாரா...? என்பதை விசி.குகநாதன் மிக அருமையாக படமாக்கியிருக்கிறார். ராஜாவின் இசையில் அருமையான பாடல்கள். ரஜினியின் பழைய படங்களை பார்க்கலாம் போல என தோன்ற வைத்த படம்... நல்லாத்தான்யா நடிச்சிக்கிட்டு இருந்திருக்காரு... இந்த எஸ்.பி.முத்துராமன் வந்துதான் குண்டை உடம்பில் கட்டி, காரை காலில் கட்டி நிறுத்த வைத்து... சின்னப்பிள்ளைத்தனமாக என்னென்னவோ பண்ணி நடிப்பைக் காலி பண்ணி கெடுத்து வச்சிப்புட்டாரு.
அடுத்து பார்த்தது.. ரொம்ப நாளாக பார்க்க நினைத்த புதுநெல்லு புதுநாத்து... படத்தோட பாட்டு எல்லாமே எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள்... விரும்பிக் கேட்பவை. படம் ஆரம்பிச்சி... கருத்த மச்சான் பாட்டு வரும் போது போதும் மச்சான்னு முடிச்சிக்கிட்டேன்... பாரதிராஜாவின் கிராமிய மணம் கமழும் படமென்றாலும் அறிமுக சுகன்யாவின் பேச்சும்... அறிமுக நாயகன் ராகுலின் நடிப்பும் அவரின் அம்மா 'மவனே... இந்த வீடு நானும் உங்கப்பாவும் வாழ்ந்த வீடு... மவனே.....' எனப் பேசுவது அப்பா.............. முடியல. தென் மாவட்டங்களில் அப்படி பேசுறாங்களா என்ன.. நானும் தென் மாவட்டத்துக்காரந்தான்... எனக்கு இப்படி பேசுவாங்கன்னு தோணலை... சுகன்யா வயதேயான பெண்ணை கண்ணுக்கு கீழே கருப்பாய் மேக்கப் போட்டு அம்மா ஆக்கியிருக்கிறார்கள். ஒருவேளை படம் வெளிவந்தப்போ, பள்ளிக்கூட வயதில் பார்த்திருந்தால் பிடித்திருக்கும் போல...
-'பரிவை' சே.குமார்.
10 எண்ணங்கள்:
புதுநெல்லு புதுநாத்து... இப்படியா போகுது?...
அது சரி .. படம் பார்த்தால்ல தெரிஞ்சிருக்கும்!..
ஹாஹாஹா தனிக்காட்டு ராஜா... விமர்சனம் இவ்வளவு சீக்கிரம் எழுதி விட்டீர்களே....
வாங்க ஐயா...
ஹா...ஹா.... உண்மைதான் ஐயா... என்னால பாக்க முடியல...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அண்ணா...
கபாலிக்கு விமர்சனம் எழுதுனா... நம்மள உண்டு இல்லைன்னு பண்ணீருவானுங்க... ஏன்னா நல்லாயில்லைன்னுதானே நம்ம சொல்லிக்கிட்டு இருக்கோம்...
அதான் தனிக்காட்டு ராஜாவுக்கு எழுதியாச்சு... எழுதி ஒரு மாசம் ஆச்சு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
குமார் ..பழைய ரஜனி படங்கள் நன்றாக இருக்கும் உங்களுக்கே தெரிந்திருக்கும். சில பழைய படங்களை இக்காலக்கட்டத்தில் பார்க்கும் போது ஏனோ பிடிக்காமல் போகிறதுதான்..நம் எண்ணங்களும், பார்வையும் மாறிவருவதால் இருக்கலாம்....
நீங்கள் குறிப்பிட்ட படங்கள் எதுவுமே பார்த்ததில்லை! :)
உங்கள் மூலம் நானும் இப்படங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டேன். நன்றி குமார்.
அருமையான பதிவு
தொடருங்கள்
தொடருகிறோம்
வணக்கம் துளசி சார்....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
வணக்கம் அண்ணா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
வணக்கம் ஐயா....
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...
கருத்துரையிடுக