மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 20 ஜூன், 2011

உறவுகள் சுகந்தானே...



வணக்கம். எல்லாரும் நலம்தானே..? சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. உடல் நலம் மற்றும் சில காரணங்களால் நீண்ட விடுமுறை. நலம் விசாரித்த நட்புக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உடல் நலம் தொடர்பாக ஊருக்குப் போய் வந்த நிலையில் மனம் எதிலும் நாட்டமின்றி இருக்கின்றது.

சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று எழுதி வந்த நான் இனி அடிக்கடி எழுதுவேன் என்று தோன்றவில்லை... அப்படி ஒரு எண்ணமும் எனக்குள் உதிக்கவில்லை. எனவே இனி இடைவெளியின் பின்னணியில் இயன்றவரை தொடருவேன். விரைவில் வருகிறேன்... எனது படைப்புடன்...



நட்புடன்,

சே.குமார்.

10 எண்ணங்கள்:

r.v.saravanan சொன்னது…

வாருங்கள் குமார் நலம் தானே முடிந்த போது எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறோம்

ஹேமா சொன்னது…

குமார்...சுகம் சுகம்தானே.
முடிந்தவரை எழுதுங்கள்.
காத்திருக்கிறோம் உங்கள் இயல்பான சிறுகதைகளுக்கு !

மனோ சாமிநாதன் சொன்னது…

அன்புச் சகோதரர் குமார்!

உடல் நலம் சற்று அதிகமாய் பாதிக்கப்படும்போது மனம் தளர்ந்து விடுதல் இயல்பானது. அதுவும் குடும்பத்தை விட்டு இத்தனை தூரம் பிரிந்திருக்கும்போது மனம் எதிலும் நாட்டமற்றுப்போவதும் இயற்கையே! இந்தப் பாலையில் வாழும் பலரது நிலையும் அது தான்.

ஆனால் வாழ்க்கையின் ஏற்ற இற‌க்க அலைகளிலிருந்து மீண்டெழ ஏதாவது ஒரு துடுப்பு எல்லோருக்குமே ஒரு கட்டத்தில் தேவைப்படுகிறது. வாரத்தில் ஒரு முறையாவது பதிவிட்டு உங்களுக்கு நீங்களே புத்துணர்ச்சி கொடுத்துக்கொள்வதன் மூலம் மெல்ல மெல்ல மகிழ்வும் ஆறுதலும் உற்சாகமும் உங்களுக்கு விரைவில் கிடைக்க வேண்டுமென நான் பெரிதும் விரும்புகிறேன்!

செங்கோவி சொன்னது…

வெல்கம் பேக் குமார்..மீண்டும் நல்ல படைப்புகளைத் தாருங்கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

நேரம் அனுமதிக்கையில் தொடருங்கள் குமார். காத்திருக்கிறோம்.

சத்ரியன் சொன்னது…

வணக்கம்,

வாங்கோ....வாங்கோ!

Asiya Omar சொன்னது…

தம்பி குமார் நலமா? உடலையும் மனசையும் சோர்ந்து போகவிடக்கூடாது,மனோ அக்கா சொல்வது போல் உங்களை ரெஃப்ரெஷ் செய்து கொள்ளுங்கள்.என் நிலைமையும் அது தான் என்றாலும் அப்ப அப்ப பதிவுலகை எட்டிப்பார்க்கிறேன் அது நிச்சயம் புத்துணர்ச்சியை தரும்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வணக்கம் குமார். என் பதிவிர்க்கு வந்து கருத்து இட்டதற்க்கு நன்றி. இன்று தான் உஙகள் பதிவிர்க்கு வருகிறேன். கதைகள் சுவாரசியமாக உள்ளது.விறைவில் உங்கள் பழைய பதிவுகளையும் படித்து பார்க்கிறேன்.

Karthick Chidambaram சொன்னது…

வாருங்கள் குமார் நலம் தானே.

vidivelli சொன்னது…

அண்ணா இப்ப சுகமா?
பதிவுக்காக காத்திருக்கிறேன்