மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

2010...2011

என்ன தோழர்களே... எல்லாருக்கும் 1-1-11 ரொம்ப சந்தோஷமான பொழுதுகளை அள்ளிக் கொடுத்ததா? கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை. அறைக்கு நண்பர்கள் வருகை, பிரியாணி விருந்து என சந்தோஷத்தில் கழிந்ததால் வலைப்பூவை வாசம் பிடிக்க நேரமில்லை. எல்லாரும் அமர்ந்து பேசும்போது கணிப்பொறியை எடுத்தால் எப்பப் பார்த்தாலும் அதுகிட்டே இரு என்ற குரல்கள் பலத்து ஒலிக்க நட்புக்காக கணிப்பொறிக்கு விடுமுறை கொடுத்தாச்சு. (அதுவும் மிகவும் சந்தோஷப்பட்டிருக்கும் என்பது நேற்றிரவு நண்பர் ஒருவருடன் உரையாடும் போது எந்தப் பிரச்சினையும் இன்றி சீராக இயங்கியதில் தெரிந்தது).


நிறைய நண்பர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லியிருந்தார்கள். மின்னஞ்சலில் வாழ்த்திய நட்புக்களுக்கு பதில் வாழ்த்து அனுப்பியாச்சு. வலைப்பூவில் வாழ்த்திய நண்பர்களுக்கு இந்த 2011ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

2010 நமக்கு என்ன செய்தது? சந்தோஷங்களை அள்ளிக் கொடுத்ததா? சங்கடங்களை மட்டுமே தனித்துக் கொடுத்ததா? நாம் சாதித்தது என்ன? செய்ய நினைத்து செய்தவைகள் எத்தனை? செய்யாதவைகள் என்னென்ன? இன்னும் நிறைய கேள்விகள் எல்லாருக்குள்ளும்...

என்னைப் பொருத்தவரை கவிஞன் சொல்வது போல் 'ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்.' என்று கவிஞன் சொன்னது போல் நமக்கும் வயது வாய்ப்பும் போகும் அவ்வளவுதான்... மற்றபடி புத்தாண்டு சபதங்களோ... கொண்டாட்டங்களோ... எனக்கு பிடிப்பதும் இல்லை... செய்ய நினைப்பதும் இல்லை.

ஒவ்வொரு நாள் விடியலும் நமக்கு புதிய தினம்தான்... புதுத்தினம் என்று கொண்டாடிக் கொண்டா இருக்கின்றோம். அன்றைய வேலைக்குள் நம்மை திணித்துக் கொண்டு இயங்கும் உலகில் இயந்திரமாய்தானே இருக்கின்றோம்.

கடந்து சென்றவைகளை கடத்திக் கொண்டு வரமுடியுமா நம்மால்... கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும்... இனி நம்மை கடக்க இருப்பவைகளை கவனித்துக் கடப்போம். அப்படிக் கடந்தாலே நல்லன எல்லாம் நம் கையில் வரும்.

வாழ்க்கை என்பது சந்தோஷங்கள் என்ற ஒரு வட்டத்துக்குள் இருந்தால் கண்டிப்பாக இனிக்காது. அதனால்தான் அதற்குள் கஷ்டங்கள், துக்கங்கள் என எல்லாம் கலந்து இருக்கின்றது. இன்றைய கஷ்டம் நாளைய சந்தோஷம் என்று எடுத்துக் கொள்வோம்.

சென்ற ஆண்டு நமக்கு எப்படியிருந்தால் என்ன வருங்காலங்கள் இனியதாக அமையட்டும்.

என்னைப் பொருத்தவரை 2010 எனக்கு மிகச்சிறப்பாக இருந்தது. பொருளாதார ரீதியாக இதுவரை கடந்து சென்ற காலங்கள் ஒண்ணும் சந்தோஷத்தைக் கொடுத்துவிடவில்லை என்றாலும் கடந்த வருடம் வலைப்பூவினால் எனக்கு கிடைத்த நட்புக்கள்... அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, சகோதரி, நண்பன் என எத்தனை உறவுகள். சந்தோஷங்களைப் பகிரவும் துக்கங்களை தாங்கிக் கொள்ளவும் ஆன அருமையான நட்புக்கள்.

வலைச்சரத்தில் திரு.சீனா ஐயா அவர்களின் அன்பால் ஒரு வாரம் ஆசிரியனாய் இருந்த அனுபவம். எனது சில கதைகள் பத்திரிக்கைகளில் வெளிவந்த சந்தோஷம், நான் பலவற்றை என் பாணியில் கிறுக்கினாலும் எனது கதைகளை விரும்பிப் படித்து என்னை உற்சாகமூட்டும் தமிழ்க்காதலன், ஆசியாக்கா, சகோதரி ஆனந்தி போன்ற பல உறவுகளின் அன்பும் பாசமும் எனக்குள் வரக் காரணமாக இருந்தது மனசுதான் என்பதே ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது.

சென்ற மே மாதம் விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது அந்த ஒரு மாதங்கள் எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்த மே மாத விடுமுறையை எதிர் நோக்கி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நாட்கள் இப்போது வர ஆரம்பித்து விட்டன.

எங்கள் பெங்களூர் சார் அவர்களின் மகளின் மரணம், என் அத்தை பையனின் குழந்தை மரணம் போன்ற நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்தன.

சில வலை நண்பர்களுடன் போனிலும் , சாட்டிலும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இடையில் சில நாட்கள் கால் வலியால் அவதிப்பட்டதும், குழந்தைகள மற்றும் மனைவியின் உடல்நல்க் கோளாறுகள் என கஷ்டங்களும் இருக்கத்தான் செய்தன.

மொத்தத்தில் கடந்த காலங்கள் எல்லாமே சந்தோஷம் துக்கம் கவலை என கலந்துதான் கொடுத்துச் சென்றுள்ளன.

இந்த வருடம் என் சில கனவுகளை நனவாக்கிச் செல்லும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. இறையருளும் முயற்சியும் இருந்தால் கண்டிப்பாக அடைய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

சென்ற வருடத்தின் கடைசி பதிவா சில நண்பர்களை வைத்து ஒரு பதிவு எழுதினேன். நண்பர் சி.பி.செந்தில்குமார் கூட இதுக்கு நிறைய கல்லாக் கட்டலாமுன்னு சொன்னார். ஆனா பாருங்க நம்ம நண்பர்களுக்கு நீயெல்லாம் இப்படி எழுதினா யார்டா படிப்பான்னு ஓட்டே போடலைங்க... கதை, கவிதையின்னா 20க்கு மேல ஓட்டு விழும். இதுக்கு என்னடான்ன (மூணு நாளா இடுகையே போடலை) ஓட்டே போடமா நம்மளை ராமதாஸ் நிலைக்குத் தள்ளிட்டாங்க... இதுல இருந்து என்ன தெரியுது நமக்கு ஒரு முத்திரை குத்தியாச்சு... அதை விட்டு வெளியே வந்தே மவனேன்னு சொல்லாம சொல்லிப்புட்டாங்க... சரி... எப்பவாவது எழுதினாலும் தெரிஞ்சதை எழுதுவோமுன்னு... அட எல்லாருக்கும் சந்தோஷமா இருக்குல்ல இந்த எப்பவாவது வார்த்தை... புத்தாண்டுல சந்தோஷமா இருங்க...

சரி நம்ம புராணம் மட்டுமே பேசினால் உங்களுக்கு கோபம் வரும்... இவங்களுக்கும் கடந்த ஆண்டு இப்படித்தான் போச்சாம்... அவங்க சொல்றதை கேட்டுட்டு போங்க... மேல என்னமோ சொன்னேன்னு சொல்லக்கூடாது... மனசுக்குள்ள இருக்கதை மட்டும் மனசுல போட்டுட்டு அடுத்த பதிவுல இருந்து நம்ம கொள்கைய கடைப்பிடிக்கலாமுன்னுதான்...



கருணாநிதி: குடும்ப பிரச்சினைகள், பாராட்டுவிழா, ஜெயலலிதாவின் சீண்டல்களுக்கு பதில்கள், அப்ப அப்ப செம்மறி ஆடு... மக்களுக்கு இலவசங்களை கொடுத்து மரியாதையை தக்க வைத்துக் கொள்ள ஆடு புலி ஆட்டம்.

ஜெயலலிதா : கொடநாட்டில் தங்கிய நாட்களே அதிகம், கருணாநிதி எதிர்ப்பு, மாதம் ஒரு முறை மக்களுக்காக குரல்.

ராமதாஸ்: நகைச்சுவை பேச்சுக்கள், யாரும் அழையா விருந்தாளி, ஏமாளி மக்களை ஏமாற்றும் கொள்கை, மெகா நகைச்சுவையாக 2011 ஜ 2016ஆக மாற்றியது.

விஜயகாந்த : விருதகிரி கைய கடிக்கவில்லை, கட்சிப் பணி பரவாயில்லை, கூட்டணி ஆசை.

திருமா : இலங்கை மக்களை மட்டும் நம்பி அரசியல், ஐயாவை விட்டு விலகினால் இருக்கும் இடமும் போய்விடுமோ பயம்.

சீமான் : ஆவேசமான பேச்சு, புதிய கட்சி ஆரம்பம், சிறைவாசம்.

ரஜினி : இந்திய சினிமாவை மட்டுமல்ல உலக சினிமாவையே ஆட்டிப் படைத்த எந்திரன், மகளின் திருமணம். இன்னும் ஹீரோ.

கமல் : சறுக்காத மன்மதன் அம்பு, மருத நாயகம் ஞாபகத்தை சில நாட்கள் தூசி தட்டிப் பார்க்க வைத்தது, வசைபாடிகளின் வசவு.

விஜய் : எழுந்திரிக்க முடியாத அடி.

அஜீத் : படு தோல்விக்கு போகாத படங்கள், பலரை கோபப்பட வைத்த பேச்சு, தொடரும் ரஜினியின் ஆசி.

நித்யானந்தா : இதற்கு மேல் பட என்ன இருக்கிறது என்று நினைக்க வைத்த வருடம்.

சரி இரண்டு நாட்களுக்குப் பிறகு சொன்னாலும்

"2011 எல்லோருக்கும் சிறப்பான வாழ்க்கையை கொடுக்கட்டும்..."

மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்...

-"பரிவை" சே.குமார்.

போட்டோ : தினமலர்

21 எண்ணங்கள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

தத்துவக் கோர்வையாய் தங்கள் எண்ணங்களின்
சிதறல் + மொக்கை என்று சிறப்பாய் ஆரம்பப்
பதிவு. வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

//என்னைப் பொருத்தவரை கவிஞன் சொல்வது போல் 'ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்...' அவ்வளவுதான்.//

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்
(கூடிவிடும்) என்றுதானே வாக்கியம்
வரவேண்டும்?(!?) ஏன், 'போகும்'
என்று எழுதினார் கவிஞர்?

Pavi சொன்னது…

லேட்ட வந்தாலும் லேட்டஸ்டா சொன்னீங்க
தொடரட்டும் இந்த ஆண்டு உங்கள் அதிரடி சரவெடி

தினேஷ்குமார் சொன்னது…

வணக்கம் அண்ணே ஓட்டு போட்டுட்டேன் சரியா பார்த்துக்குங்க
எதிர்கொள்ளும் ஆண்டு சிறப்பாக தங்களுக்கு அமைய வாழ்த்துக்கள்

Asiya Omar சொன்னது…

அருமையான பெரிய பகிர்வு.லேட்டாக புது வருஷ பதிவு போட்டாலும் வித்தியாசமாய் இருக்கு.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நேசமித்ரன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வைகை சொன்னது…

உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! நானும் இரண்டு நாள் விடுமுறை! இப்பொழுதுதான் வருகிறேன்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாமுதீன்...
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
போகும் என்பது நம் எண்ணத்தில் தோன்றியது. தட்டச்சு செய்யும் போது மாறிவிட்டது. தவறை சுட்டியமைக்கு மிக்க நன்றி. திருத்தம் செய்தாச்சு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பவி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தினேஷ்...
வாழ்த்துக்கு நன்றிங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஆசியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஜலீலா அக்கா...
விருதைப் பெற வருகிறேன், விருதுக்கும் வருகைக்கும் நன்றி அக்கா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்பர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நேசமித்ரன் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வைகை...
அப்படியா. சந்தோஷ கொண்டாட்டாட்டங்கள் எப்படி?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Philosophy Prabhakaran சொன்னது…

கலர் கலரா எழுதியிருந்த கடைசி பத்தி அருமை... ரசிக்கும் வண்ணம் அமைந்திருந்தது...

vanathy சொன்னது…

உங்களுக்கு மட்டுமல்ல இப்ப நிறைய பதிவுகளுக்கு ஓட்டுக்கள் வருவது குறைவாகவே இருக்கு.
எதார்த்தமா எழுதி இருக்கிறீங்க. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

//சென்ற ஆண்டு நமக்கு எப்படியிருந்தால் என்ன வருங்காலங்கள் இனியதாக அமையட்டும்//

நல்ல பாசிட்டிவ் அப்ரோச்.. தொடருங்கள் உங்கள் எழுத்துப்பயணத்தை..

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஸாதிகா சொன்னது…

கடந்த ஆண்டின் நிகழ்வுகளை யதார்த்தமாக எழுதி இருகின்றீர்கள்.வி ஐ பிகளைப்பற்றைய கமெண்ட் “நச்”.ஓட்டும் போட்டு விட்டேன்.உஙக்ளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் குமார்..:))

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள் குமார்

ஹேமா சொன்னது…

தொடரும் வருஷங்களும் சிறப்பாகவே அமையும் குமார்.நம்புவோம்.வாழ்த்துகள் !