மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 28 டிசம்பர், 2010

மனசின் பக்கம் 28/12/2010


ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் நடத்திய சங்கமம் 2010 மிக அருமையானதொரு நிகழ்வாக அமைந்ததாக பதிவுகள் மூலம் அறிய முடிந்தது. நிகழ்ச்சிக்கு போய் வந்த உடன் பதிவிட்ட ஜாக்கி சேகர் அவர்களின் பதிவை முதன் முதலில் படித்ததும் விழாவின் சிறப்பை அறிய முடிந்தது. ஒரு அருமையான நிகழ்வை பலர் வாய்ப்பிருந்தும் தவறவிட்டிருந்தாலும் கையெழுத்து இடாதவர்கள் பலர் இருக்க பதிவேட்டில் 80க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்து இட்டிருந்தார்கள் என்பதை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சங்க வலைப்பூவில் பார்த்து மகிழ்ந்தேன். எங்களுக்கும் கலந்து கொள்ள ஆசைதான். என்ன செய்வது... பரவாயில்லை விழா போட்டோக்களையும் பகிர்வையும் பார்க்கும் போது நாங்களும் அங்கு இருந்தது போல் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி.. இந்த ஆரம்பம் அமர்க்களமாகட்டும்.

************

கமலின் மன்மதன் அம்பு படம் நன்றாக வந்திருப்பதாகத்தான் அபுதாபியில் படம் பார்த்த நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் பதிவர்கள் மத்தியில் மன்மதன் அம்பு படத்திற்கான விமர்சனத்தில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நண்பர்கள் நல்லாயில்லை என்பதாகவே எழுதியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ரஜினியும் கமலும் இரு விருட்சங்கள். இருவரின் நடிப்புப்பாணி வேறு.

எந்திரன் எப்படியிருந்தாலும் ஆஹா ஓஹோவென்று எல்லோரும் எழுதினார்கள். ஆனால் கமல் என்று வரும்போது அப்படி எழுத பதிவர்களுக்கு மனமில்லை என்பது விமர்சனத்தில் தெரிகிறது. நீங்கள் எழுதும் விமர்சனங்கள் தற்போது படங்கள் மீதான பார்வையை விசாலப்படுத்தியிருக்கின்றன என்பது உண்மை. எனவே பொய்யான கருத்துக்களைத் தவிர்த்து உண்மையான விமர்சனங்களை எழுதுங்கள். நீங்கள் இதுபோல் எழுதும் விமர்சனங்களால் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் வரிசையில் நீங்களும் இணையும் காலம் தூரமில்லை.

************

கடந்த மாதம் வரை உக்கிரமான வெயிலால் தகித்துக் கொண்டிருந்த பாலைவனப் பூமியில் இந்த மாதம் முதல் குளிர் ஆரம்பமாயாச்சு. இப்ப குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பு இருபத்து நாளு மணி நேரமும் குளிர்சாதனப் பெட்டியின் இயக்கம் தேவைப்பட்டது. இப்போது இரவில் அதுவும் எங்களுடன் சேர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறது.

காலையில் சுடு தண்ணீரை ஊற்ற வேண்டுமே என்று நினைத்த நாட்கள் கடந்து ஐஸ் தண்ணியில குளிக்கணுமா என்ற நாட்கள் நகரத் துவங்கிவிட்டன. அறையில் இருந்து கார் ஏற நான் போகும் இடம் செல்லும் போது குளிரில் உடம்பு ஆட்டம் எடுப்பதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் மூன்று நான்கு மாதங்கள் இப்படித்தான் போகும். அதன் பின் இத்தனை நாட்களாக எரியாத சூரியன் பதவியில் வந்தமர்ந்தால் மீண்டும் உக்கிரத்தின் பிடியில்தான் வாழ்க்கை.

************

பெரும்பாலான பதிவர்கள் நல்லா இருக்கு என்று எழுதியதால் விருதகிரி படம் பார்த்தேன். ஸ்காட்லாந்து போலீசுக்கு தமிழக போலீசின் வீரத்தையும் விவேகத்தையும் காட்டும்போதே தூங்கியிருக்கலாம். பதிவர்கள் பக்கத்தில் நின்று கொண்டு நல்லாயிருக்கு என்று சொல்லிக் கொண்டிருப்பது போல் தோன்ற பார்த்தேன்... பார்த்தேன்... ஒரு கட்டத்தில் முடியலை... தூக்கம் ஜெயிச்சிருச்சு.

இதுல என்ன விசேசமுன்னா எங்க அண்ணன் டாக்டர் விஜயகாந்தோட தீவிரமான ரசிகர். எப்பவும் படம் போட்டுவிட்டு தூங்கும் அவர் அன்று உட்கார்ந்து கடைசி வரை படம் பார்த்தார். படம் பார்க்கும் போது நண்பர் ஒருத்தர் 'விஜயகாந்த்தும் ராஜேந்தரும் படம் பூராம் அவங்க மட்டும்தான் திரைய அடச்சிக்கிட்டு வருவாங்க' என்றார். அது உண்மைதான் அனைத்துப் பிரேமிலும் அவர் இருந்தார் உப்பிலியப்பனாக.

************

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அரசு விடுதியில் உணவு, பராமரிப்பு சரியில்லை என்று மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை நேற்று தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நமக்கான போராட்டம் அதன் எல்லைக்குள் இருந்தால்தான் நல்லது. சாலைகளில் அமர்ந்து பல மணி நேரங்கள் போராட்டம் நடத்தும் மாணவர்கள் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை ஏன் யோசிப்பதில்லை. அவசர சிகிச்சைக்கோ, பிரசவத்திற்கோ, அவசர வேலை நிமித்தமோ செல்ல வேண்டியவர்கள் பல மணி நேரம் உங்கள் போராட்டடத்தால் காத்திருக்க முடியுமா? போராட்டங்கள் தேவைதான் அதற்காக சாலைகளை மறித்து பொதுமக்களுக்கு இடையூறாக போராட வேண்டும் என யார் சொல்லிக் கொடுத்தார்கள். இதில் என்ன ஒரு கூத்து என்றால் போராடியவ்ர்களுக்கு தலைமை தாங்கி தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்கும் மாணவர்கள் இல்லை என்பது அவர்களின் முகத்தில் தெரிந்தது.

அமைச்சர் வரவேண்டும் என்று போராடி ஆதி திராவிட நலத்துறை அமைச்சரும் வந்தாச்சு. அந்த அம்மாவிடம் விடுதி உணவைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள். அந்த அம்மா ரெண்டு சோத்தை எடுத்து கிளி போல கொறிக்குது. உடனே ஒரு மாணவன் நல்லா சாப்பிடுங்க என்றார். கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு அதை திருப்பிக் கொடுத்தது. எதோ பேசியது. ஆனால் மாணவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அமைச்சர் கிளம்பிச் செல்ல, மீண்டும் போராட்டம்... தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்ட மாணவர்கள் ஓரிடத்தில் மீண்டும் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம். பொறுமை இழந்த போலீஸ் களத்தில் இறங்க பல புலிகள் காட்டுக்குள் ஓட... ஐம்பது மட்டும் ஆடுகளத்தில். அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள்.

அப்ப ஒரு மாணவர் சொல்கிறார். அமைச்சரும் வந்து எதுவும் சொல்லாமல் பொயிட்டார். காவல்துறையும் பாத்துக்கிட்டு இருக்கு. பொதுமக்களுக்கு இடையூரில்லாம அவங்க நினைச்சா செஞ்சிருக்கலாம்ன்னு... உனக்கு எங்கய்யா புத்தி போச்சு. அரசு விடுதி தானேன்னு சுத்தமா வச்சிக்க நமக்கு மனசில்லை... நம்ம வீட்டை நாம சுத்தமா வச்சிக்கிட்டா பிரச்சினைகளை தவிர்க்கலாமே. உணவு சரியில்லையா போராடு... உள்ள இருந்து போராடு.. நீ ரோட்டுல கெடந்து ஆட்டம் போட அப்பாவி பொதுஜனம் ஏன் பாதிக்கப்படனுங்கிறேன். மாணவர்கள் போராட்டம் வீதிக்கு வந்தால் தக்க நடவடிக்கை எடுக்க சட்டங்கள் திருத்தப்பட்டால் தப்பில்லை என்பதே என் எண்ணம்.

************



என்னடா 'அங்காடிதெரு' அஞ்சலி படத்தைப் போட்டிருக்கானே... இங்க இருக்க செய்திக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு நினைக்கிறீங்கதானே... எனக்கென்னமோ அஞ்சலிய பிடிக்கும். இன்னைக்கு "பிரபாகரனின் தத்துப்பித்துவங்கள்" வலைப்பூவில் கனவுக்கன்னி 2010 படித்தப்போ போட்டோ பார்த்தேன். அங்கயிருந்து சுட்டுக்கிட்டு வந்து இங்க போட்டாச்சு... இப்படி போட்டாவாவது ஹிட்ஸ் குவிஞ்சு அந்த 20க்குள்ள வரலாமேன்னு சத்தியமா நப்பாசையெல்லாம் இல்லைங்க... ஆமா... நம்புங்க...

-'பரிவை' சே.குமார்.

24 எண்ணங்கள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

இன்னிக்கு வடை எனக்கு...

Jackiesekar சொன்னது…

நன்றி குமார்

பா.ராஜாராம் சொன்னது…

நல்ல பகிர்வுகள் மகன்ஸ்! மனசென்றால் இப்படித்தானே.. எல்லா முக்குக்கும் போய் திரும்பும். அப்படி இருந்தது. அந்த போட்டோ மிக அருமை. (ஹி..ஹி.. சித்தி முகவரி உங்களிடம் இல்லைதானே?) :-)

Thenammai Lakshmanan சொன்னது…

பகிர்வுகள் எல்லாம் அருமை குமார்.. பாரா என்னது இது..:))

ஹேமா சொன்னது…

குமார்...இந்தப் போட்டோ பதிவில போட்டிருக்கிறதை வீட்ல பாத்தாங்களா?

பாரா அண்ணா என்கிட்ட
போன் நம்பர் இருக்கு !

Vidhya Chandrasekaran சொன்னது…

நல்ல பகிர்வு...

விருதகிரி - அநியாயத்துக்கு தைரியம் உங்களுக்கு:)

செங்கோவி சொன்னது…

என்ன பாஸ்..மனசு கொதிச்சுப் போச்சு போல..ரிலாக்ஸ்...இவிங்க எப்பவுமே இப்படித்தானே பாஸ்.
----செங்கோவி
நானா யோசிச்சேன் (டிசம்பர்-2010)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சங்கவி...
ஈரோட்டுல சாப்பிட்டு வந்தும் வடைக்கு சண்டை போட வந்தாச்சா... பரவாயில்லை... வடை உங்களுக்குத்தான்... எடுத்துக்கங்க.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜாக்கி அண்ணா...
எதுக்குன்னா நன்றியெல்லாம்... உங்கள் வருகைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்தப்பா...
உங்கள் வருகையே எனக்கு மிக்க மகிழ்ச்சி... சித்தி முகவரி வேண்டாம். ஊருக்கே போயி சொல்லிட்டு வந்திட்டா போச்சு... ஹா... ஹா.... நீங்க ரசிங்க சித்தப்பா... அதான் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சாச்சில்ல...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தேனம்மை அக்கா...
ரொம்ப நாளாச்சு... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சித்தப்பா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கப் பார்க்கிறார் விடுங்க... பெரிசு படுத்தாம...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா...
போட்டா போட்டதை வீட்டுக்கே போய் போட்டுக் கொடுத்துட்டு வந்துடுவீங்க போலவே... இப்ப வீட்ல இணைய இணைப்பு வாங்கியாச்சு... என்னோட பதிவுகள் தீவிரமா கண்காணிக்கப்படுறதா உலவுத்துறைத் தகவல்... ஹா...ஹா...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சித்தப்பாவ விடுங்க... மனசுல உள்ளத சொன்னது தப்பா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வித்யாக்கா...
வார விடுமுறை வீட்ல போட்டாச்சு. நல்லாயிருக்குன்னு சொன்னாங்கன்னு பாத்தேன். விடுங்க... அந்தக் கொடுமையை மறுபடியும் நினைக்க வேண்டாம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செங்கோவி...
என்ன செய்ய... யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு என்ன அக்கிரமம் பாருங்க... சரி ரிலாக்ஸ் ஆகிடலாம் விடுங்க...

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மனசின் பக்கங்களை படித்தது மனதிற்கு இதம்.

பொதுவாகவே திரைப்பட விமர்சனங்கள் அவரவர் பார்வையை பொருத்தது. (இப்போது நீங்கள் விருதகிரியை எழுதியுள்ளது போல). உங்களுக்கு பிடித்த விசயத்தை நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது எனது பணிவான கருத்து.

Philosophy Prabhakaran சொன்னது…

நீங்கள் அஞ்சலி ஸ்டில் போட்டது சூப்பர்... ஆனா ஒரு சின்ன தப்பு பண்ணிட்டீங்க... அதாவது பதிவின் ஆரம்பத்தில் அஞ்சலி படத்தை போட்டிருக்கணும்... ஒருவேளை அப்படி போட்டிருந்தால் இன்ட்லியில் அஞ்சலி படத்தோடு உங்கள் பதிவு வெளிவந்திருக்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

பகிர்வுகள் அருமை..

வேலன். சொன்னது…

நீங்கள் வரும் சமயம் சொல்லுங்கள் அருமையான பதிவர் சந்திப்பை சென்னையில் அனைவரையும்அழைத்துப்போட்டுவிடலாம்.

வாழ்கவளமுடன்.
வேலன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்பர்...
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி.
நான் பொதுவான விமர்சனங்களை குற்றம் சொல்லவில்லை. ரஜினி படங்களுக்கு எழுதும் விமர்சனங்களுக்கு இணையாக நல்ல படங்களுக்கு எழுதுவதில்லையே என்பதுதான் என் வருத்தம். மைனாவுக்கு நல்ல விமர்சனம் கொடுத்த நாம் யாரும் மகிழ்ச்சி, தா போன்ற படங்களுக்கு கேபிள் அண்ணா போன்ற விரல் விட்டு என்னக்கூடிய சினிமா விமர்சனப் பதிவர்கள் தவிர வேறு யாரும் விமர்சனம் எழுதவேயில்லையே என்பது உங்களுக்கும் தெரியும் அல்லவா... இது கோபமல்ல... மனசின் ஆதங்கமே...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரபாகர்...
இந்த சூட்சமம் தெரியாமப் போச்சு பாத்தியலா... படிச்சவுக படிச்சவுகதான்... படம் கொடுத்ததற்கு நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் மற்றும் ஒரு நன்றி. (இனி போட்டோ முதல் இடத்தில்தான்)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜெயந்த அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வேலன் சார்...
கண்டிப்பாக.... ஆனா காரைக்குடி, மதுரை என்றால் ஓகேதான்... சென்னை என்பது ஒரு மாத விடுமுறையில் எட்டக்கூடிய இடமா தெரியவில்லை. முயற்சிக்கலாம்...
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

பதிவர் சந்திப்புக்கு போகணும்னு ரொம்ப ஆசையா இருந்தேன்! ஆனா கொஞ்ச வேலை காரணமாக
என்னால் செல்ல இயலவில்லை. இது தான் நான் தங்களுக்கு இடும் முதல் பின்னூட்டம்.தொடாந்து வருவேன்

எம் அப்துல் காதர் சொன்னது…

எல்லா இடங்களையும் சுற்றி பார்த்தது போல இருந்தாலும், அந்த போட்டோ ஸ்டைலோ ஸ்டைலுங்கோ!! :-))))